Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Thursday, 21 May 2020

குமரிக்கண்டமா! சுமேரியமா? -நூல் திறனாய்வு


தற்போது நான் படித்து முடித்த நூல் ''குமரிக்கண்டமா! சுமேரியமா!'' என்பதாகும்.
தமிழர்களின் தாயகம் 'சுமேரியா' என்றும், சுமேரியாவிலிருந்து தான் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர் என்றும், குமரிக்கண்டம் என்பது 'சுமேரியா' தான் என்றும், 'சுமேரியா' குறிப்புகளில் சொல்லப்படும் 'தில்முன்' தான் தமிழ் நாடு என்றும் மெய்ப்போலாக்க, பார்ப்பன கருத்தை நிலைனாட்ட இலாவகமாக கையாண்டு இதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.
-17.5.2014

Sunday, 10 May 2020

'தமிழ்வாணன் எழுதி வெளியிட்ட தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு


'பெரியார்' என்ற பெயரில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1965 ஆம் ஆண்டு 'தமிழ்வாணன்' அவர்கள் மணிமேகலைப் பிரசுரம் என்ற தமது பதிப்பகத்தின் மூலம் கேள்வி பதில் வடிவில் எழுதி வெளியிட்டார்.
இந்நூலில் 14 ஆம் பக்கத்தில் உள்ள கேள்வி பதில் நடையில் உள்ள பகுதி வருமாறு
கே: பெரியாரிடம் உள்ள சிக்கனத்தை நீங்கள் விரும்புகிறீர்களா?
ப: பெரியார் பெரும் செலவாளியாக இருந்திருப்பாரானால் , இன்று திருச்சியில் பெரியார் கல்லூரி என்று ஒன்று உருவாகியிருக்கிறதே . அதை கண்ணால் கண்டிருக்கவே முடியாது ! மற்ற தலைவர்களிடம் இந்த சிக்கன புத்தியில்லாததால் தான் தங்கள் சொந்தப் பொறுப்பில் , ஒரு தண்ணீர் பத்தல்கூட அமைக்கமுடியாத நிலையிலிருக் கிறார்கள் !
கே ; பெரியார் எப்போதாவது பணத்தைப் பணம் என் பாராமல் வழங்கியதுண்டா ?
ப : இவ்வளவு நீண்ட வரலாற்றில் , ஒரே ஒரு நிகழ்ச்சிதான் குறிப்பிட்டுச் சொல்ல இருக்கிறது கலைவாணர் என் . எஸ் கிருஸ் கிருஷ்ணன் சிறையிலிருந்த பொழுது வழக்கு நடத்த ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது . அப்போது , பெரியார் ஆயிரக்கணக்கில் பணம் கடனாகக் கொடுக்க முன்வந்தாரே!
இந்த வகையில் நூல் முழுக்க தந்தை பெரியாரை ஒரு சிறந்த தலைவராக வெளிக்காட்டியுள்ளார்.
பக்கங்கள் 68
1994ல் விலை ரூ 9.50

நவபாரத சிற்பிகள் வரிசையில் சி என் அண்ணாதுரை


இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பப்ளிகேஷன் டிவிஷன் நவபாரத சிற்பிகள் என்ற தலைப்பில் முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டு வருகிறது, அந்த வரிசையில் சி என் அண்ணாதுரை என்ற பெயரில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை பி.சி கணேசன் என்பவரை கொண்டு எழுதி நூலாக வெளியிட்டு உள்ளது.
நூலாசிரியர் காங்கிரசை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல வண்ணமே நீதிக்கட்சி திராவிடர் இயக்கம் பெரியார் அண்ணாவைப் பற்றி எழுதியுள்ளார்.
ஈ.வெ.கி. சம்பத் பெரியாரின் தம்பி மகன் என்று எழுதியுள்ளார். அவர் தந்தை பெரியாரின் அண்ணனான கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஆவார்.
இந்த நூலில்
"பெரியார் முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்த வாதி முரட்டு சுபாவம் உடைய பகுத்தறிவு வாதியான அவர் மனிதர்களையும் செயல்களையும் கணிக்கும் போது மனித உறவுகளில் காரண காரியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை மாறாக ஒவ்வொரு பிரச்சனைகளையும் மனிதாபிமான கோணத்திலேயே அண்ணா பார்த்தார். அண்ணாவும் பகுத்தறிவுவாதி தான் ஆனால் ஓர் இயக்கத்தை வளர்க்கும் போது மனித உறவுகளுக்கும் இருதரப்பு அன்பிற்கும் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் நம்பினார். நாத்திகவாதியான பெரியார் இடத்தில் கலைக்கும் இலக்கியத்துக்கும் இடம் இருந்ததில்லை. தொன்மையான கலை இலக்கியங்களை தூக்கி எறியும் அளவிற்கு அவரின் பகுத்தறிவு தீவிரவாதம் அமைந்து இருந்தது. ஆனால் அண்ணாவோ இலக்கிய மாணாக்கரும் கலைகளின் ரசிகரமாக எல்லா உயர்ந்த விஷயங்களையும் விரும்பினார்.
பெரியாரைப் பொருத்தவரை மதமும் கடவுளும் வெறுமனே சுண்டல் கருவிகள். மக்களின் சொந்த சுகங்களுக்காக சூழ்ச்சி நிறைந்த பூசாரிகளும் இவற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததாக அவர் நம்பினார். இந்த சுரண்டலுக்கு முடிவு கட்ட கடவுள் கருத்துக்களையும் மதக்கோட்பாடுகள் ஒழிக்க வேண்டும் என்பது அவசியம் என்று பெரியார் கருதினார். எனவே இவைகளின் மேல் உள்ள பெரியாரின் எதிர்ப்பு நேரடி ஆனதும் தீவிரமானதுமாகும். ஆனால் இலக்கிய கல்வியாலும் வரலாற்று அறிவிலும் நன்கு பதப்படுத்தப்பட்ட அண்ணா ஆக்கப்பூர்வமாக இப் பிரச்சினையை அணுகினார். கடவுள் மதம் கலை இலக்கியம் மூலமாக உயர்ந்த குலத்தவர் சமுதாயத்தை தமது இறுக்கமான பிடியில் வைத்துக் கொள்ளும் போது அது சமண படுத்துவது என்பது அதே கலை இலக்கியம் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று அவர் கருதினார். அதே நோக்கோடு வரலாற்றின் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு தொடர்பான வரலாற்று பதிவுகளை கண்டெடுத்து பிறகு சமுதாய அமைப்பை தங்களின் கட்டுக்கோப்பில் வைத்து கொண்டு அதற்கு மேல் குடியினர் எத்தனை வழிமுறைகளை மேற்கொண்டார்கள் என்பதை மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகங்களாக உருவாக்கினார். அண்ணாவிடன் பிரச்சார உத்திகளை வெளிப்படையாகவே பெரியார் விமர்சித்தார். இருவரும் ஒத்துப் போகாத சூழ்நிலை உருவாகும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.
கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன பெரியாருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்கிறார். முரட்டுசுவாபம் உள்ளவர் என்கிறார். இயக்கத்தின் தலைவர் பெரியார். அனைத்திற்கும் பொறுப்பு அவரே ஆவார். கம்பிமேல் நடப்பது போன்றது.
பெரியாரிடம் இருந்த காலமே வசந்த காலம் என்று அண்ணாவே கூறியுள்ளார்.
பெரியாருக்கு இலக்கிய ரசனை இல்லை என்கிறார். நல்ல இலக்கியம்தான் தேவையென்றார். திருக்குறளை மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார்.
இன்னொரு இடத்தில் பெரியாரை சர்வாதிகாரி என்கிறார். அண்ணா ஜனநாயகவாதியாம்.
கொள்கைக்கு தலைவரும் அவரே இயக்கத்திற்கு தலைவரும் அவரே நிர்வாக செலவுக்கும் தலைவர் அவரே அப்படி இருக்கும் போது அவர் சொல்வதை தானே கேட்கவேண்டும்!
தொண்டர்கள் இடத்தில் அன்பு இல்லாதவர், பாரதிதாசனுக்கு கூட உதவி செய்யாதவர், அண்ணாதான் உதவி செய்தார் என்று கூறுகிறார். உதவி செய்ததை கூட பெரியார் கண்டித்ததாக கூறுகிறார்.
ஆனால் திராவிடர் கழக மாநாட்டில் பாரதிதாசனுக்கு நிதி திரட்ட வேண்டும் என்று தீர்மானம் போட வைத்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் ஏற்பாட்டில் தான் அண்ணா மூலமாக பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்பட்டது என்பது உண்மை.
இப்படி பல இடங்களில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இருந்த முரண்பாட்டை விமர்சித்து எழுதியுள்ளார்.
நூலின் விலை : ரூ 215.00
பக்கங்கள் : 226

சிந்தனையாளர் வரிசையில் "எபிகூரஸ்'


'பிரேமா பிரசுரம்' வெளியிட்ட சிந்தனையாளர் வரிசையில் "எபிகூரஸ்" என்ற நூலை இன்று படித்து முடித்தேன்.
மலர்மன்னன் என்பவர் இந்நூலை எழுதியுள்ளார்.
பெரும்பகுதி இயற்பியல் நூலை படித்தது போலிருந்தது. வானியலும், அணுவியலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் மெட்டீரியலிசம் அல்லது பிருகிருதிவாதம் என்ற நூலின் ஒரு பகுதியையும் படித்தது போன்று இருந்தது.
2360 ஆண்டுகளுக்கு முன்பாக (கி.மு. 341) கிரேக்கத்தில் சுவர்ல சாமோஸ் என்கிற சின்னஞ் சிறு தீவில் பிளாட்டோ மறைந்து ஐந்து ஆண்டுகள் கழித்து அரிஸ்டாட்டில் காலத்தில் எபிகூரஸ் பிறந்துள்ளார்.
இவரது தாயார் மந்திரம் தந்திரம் என்ற பெயரில் நோய்களை தீர்க்கும் போது உடன் இருந்ததால் மந்திரம் என்பதெல்லாம் பொய் என்பதை புரிந்து கொண்டார்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்பில்லை; கடவுள் அவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார், நம்மை பார்க்க அவருக்கு நேரமில்லை நாம் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கடவுளின் பேரால் நடப்பதாக சொல்லப்படுபவை அனைத்தும் இட்டுக்கட்டபட்டவைகளே!
கோள்கள், விண்மீன்களால் மனித வாழ்க்கையில் எந்த விளைவும் உண்டாகாது!
விதி என்றும் மறுபிறப்பு என்றும் எதுவும்கிடையாது!
இந்த வாழ்க்கையே உண்மை; இன்பமாக வாழவேண்டும்; எளிமையாக வாழவேண்டும்; தேவையான அளவே உண்ணவேண்டும்; மது அருந்துவது கூடாது, மிதமிஞ்சிய கேலிக்கை கூடாது. இன்பமாக இருந்தால் உடலும் இன்பமாக(நல) இருக்கும்! என அறிவுரைகளை கூறியுள்ளார்.
இந்த உலகமும் கோள்களும் விண்மீன்களும் பேரண்டமும் அணுக்கலாளும் அணுக்களின் திரட்சியாளுமே உண்டாகியுள்ளன என்கிறார்.
நாம் காணும் பொருள்களும் உயிரினங்களும் ஏன் மனிதனும் கூட அணுக்களின் கூட்டணியினால் உண்டானது என்கிறார்.
பேரண்டம் முழுக்க கண்ணுக்கு தெரியாத அணுக்களால் நிரப்பப்பட்டுள்ளது.
அனைத்து பொருள்களும் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களுக்குள்ளுள்ள அணுக்கள் ஒரு வரையரைக்குள் இயங்குகின்றன.
எந்த பொருளும் தடை இல்லாதவரை இயங்கிக்கொண்டே இருக்கும். அப்படியே தடையுண்டானாலும் மறுதிசையில் பயணிக்கும்.
அணுக்கள் சிதைந்தாலும் வேறு வடிவத்தில் தோன்றும், இல்லாததிலிருந்து எதுவும் தோன்றாது.
நம் புவியைப் போல் வேறு புவிகளும் இருக்கக்கூடும், அதில் இங்குள்ள உயிரினங்கள் போலவோ அல்லது வேறுவகையிலே கூட இருக்கலாம்.
இப்படி பல கொள்கைகளை எந்த கருவிகளும் இல்லாத நிலையில் ஆய்ந்துணர்ந்து கூறியுள்ளார்.
தனியாக பயிற்சி கூடம் அமைத்து இக் கொள்கைகளை பயிற்றுவித்துவந்தார்.
தமது 72வது வயதில்(கி.மு. 270) முதுமையாலும் சிறுநீரக கல் நோயாலும் எபிகூரசு மறைவுற்றார்.
நூலின் விலை ரூ 25/-
பக்கங்கள் - 125

நவபாரதச் சிற்பிகள் என்ற வரிசையில் 'பி.ஆர். அம்பேத்கர்



நடுவண் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் "பப்ளிகேசன் டிவிசன்" சார்பில் நவபாரதச் சிற்பிகள் என்ற வரிசையில் 'பி.ஆர். அம்பேத்கர்' என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டுள்ளது.
டபிள்யு.என். குபேர் என்பவர் மூலம் எழுதப்பட்டு தமிழில் ச.வீரமணி என்பவர் மொழிமாற்றம் செய்துள்ளார்.
இன்நூலை நான் இன்று படித்து முடித்தேன்.
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டிருந்தாலும் அம்பேத்கரின் அரசியல் அலுவல் பயணமும் சமூக நீதி போராட்டமும் என்ற தலைப்பில் எழுதியது போல் உள்ளது.
265 பக்கங்கள், விலை ரூ165/-

நூல் " தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?"



தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட நூல் " தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?"
26 தலைப்புகளில் 272 பக்கங்களை கொண்டது.
நன்கொடை - ரூ180/-
தந்தை பெரியார் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் ஆற்றிய பணிகளை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.
போலி தமிழ்தேசிய வாதிகளின் முகத்திரையையும் கிழிக்கிறது.