Tuesday 21 February 2017

நீங்கள் பொருள்களை வாங்கவில்லையா?

ரேசன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கவில்லையா? கொஞ்சம் கவனியுங்கள்.

ரேசன் கடைகளில் உணவுப் பங்கீட்டு அட் டையின் அடிப்படையில் உணவு பொருள்கள் வழங் கப்படுகின்றன. நீங்கள் வாங்காத பொருள்களைக்கூட வாங்கியதாக உங்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப் பப்படுகின்றன. 

அப்படிப்பட்ட பொருள்கள் வேறு யாருக்கோ விற்கப்படுகின்றன. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் தெரி விக்கலாம். PDS  Space N எனப் பதிவு செய்து 9980904040 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

-விடுதலை,21.2.17

Monday 20 February 2017

தொலைபேசி வழியே நீங்கள் கண்காணிக்கப்படுகின்றீர்களா?

*பயனுள்ள தகவல்*

தங்களது செல்பேசியில் *#62# என டயல் செய்யுங்கள். Not forwarded என செய்தி வந்தால் நலம்.

மாறாக, call forward என்ற வாசகத்தின் பின்னர் ஒன்றிரண்டு தொலைபேசி இலக்கம் வந்தால், உங்கள் தொலைபேசி வழியே நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்று பொருள்!

Call forwarding வசதியை நிறுத்த, *##002#* என்று டயல் செய்தால் போதும்!

*_இதனை பகிர்தல் அனைவருக்கும் நலன் பயக்கும்._* Share with society care.

Tuesday 14 February 2017

டிஎன்பிஎஸ்சி தேர்வு : புதிய விதிமுறைகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு களை எழுதுபவர்களுக்காக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

ஆண் விண்ணப்பதாரார், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் பெண்ணாக இருப்பின், ஏற்கெனவே மனைவியுடன் வாழும் ஒருவரைத் திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது.

விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா, கிரேயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.

வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்ட பெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல்போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது.

விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சிக்கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்குத் தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக்கூடாது.

கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச், மோதிரம், கம்யூனிக்கேஷன்சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டு-மானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக்கூடாது. விதிகளை மீறுவோர், அய்ந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, முந்தைய விதிகளில் இருந்தது. திருத்தப்பட்ட புதிய விதிமுறை-களின்படி, எந்தக் காலம்வரை தடை என்பதை, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்யும்.

தேர்வுக் கூடத்தில் மட்டுமின்றி தேர்வு மய்ய வளாகத்திலும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்தி விட்டு வரக்கூடாது. தேர்வுக்கூடத்தில் புகை பிடிக்கக்கூடாது.

தேர்வுக்கூட கண்காணிப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர் அல்லது தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்களுடன் தேர்வுக்கூடத்திலோ அல்லது தேர்வுமய்ய வளாகத்திலோ தேர்வு நடைபெறுவதற்கு முன்னரோ, பின்னரோ அல்லது தேர்வு நடைபெறும்போதோ முறைதவறி நடக்கும் விண்ணப்பதாரர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். அவர்கள் மீது குற்றவியல் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பட்டம் அல்லது பட்டத்தின் தற்காலிக சான்றிதழின் (Provisional Certificate) நகல்கள் மட்டுமே கல்வித் தகுதிக்குரிய சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். மதிப்பெண்கள் பட்டியல் அல்லது மதிப்பெண் நிலைச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் போதுமான ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தேர்வுக் கூடத்திற்கு உள்ளே தேநீர், காபி, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்-பட்ட பதிவு எண் எழுதப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர வேண்டும். இடம் மாறி அமரக்கூடாது.

தேர்வுக்கூடத்தில் மற்ற விண்ணப்பதாரர்-களுடன் கலந்து ஆலோசிப்பது, மற்றவர்களின் விடைத்தாளைப் பார்த்து எழுதுவது, குறிப்புகள் கொண்டு வருவது, தேர்வுக்கூடக் கண்-காணிப்பாளர் அல்லது மற்றவர்களின் உதவியை நாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.  இதனை மீறுவோர், தேர்வுக்கூடத்தை விட்டு வெளியேற்றப்படுவர். அவர்களது விடைத்தாளும் செல்லாத தாக்கப்படும். எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளிலும் கலந்துகொள்ள முடியாது.

தேர்வுக்குரிய நேரம் முடிவதற்கு முன்னதாக, தேர்வு எழுதுவோர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியே செல்ல முடியாது.

நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட பால் பாயிண்ட் பேனா தவிர, வேறு நிற மை கொண்ட பேனாவைப் பயன்படுத்தக் கூடாது. பென்சிலால் விடைகளை நிரப்பக் கூடாது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விருப்பப் பாடத்தில் தேர்வு எழுதாமல் வேறு பாடத்தில் மாற்றி எழுதக் கூடாது. செல்போன், நினைவூட்டு கட்டமைப்பு குறிப்புகள் அடங்கிய கடிகாரம், மோதிரம், மின்னனு சாதனங்கள், புத்தகம், குறிப்புகள், கைப்பைகள், டிசைன் டேட்டா புக் ஆகியவற்றை தேர்வுக்கூடத்திற்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கக் கூடாது.

வினாத்தாள் வரிசைக்கான கட்டம் நிரப்பப்  படாமல் விடப்பட்டிருந்தாலும் அல்லது தவறாக நிரப்பப்பட்டிருந்தாலும் எந்த எண் கொண்ட வினாத்தாளைப் பயன்படுத்தினார் என்பதைக் கண்டறிய இயலாத விடைத்தாள் செல்லாத தாக்கப்படும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தேர்வுக் கூடத்திற்கு எடுத்துச் செல்லத் தவறுவது இரண்டு மதிப்பெண் குறைத்தல் அல்லது விடைத்தாளை செல்லாததாக்குதல் போன்ற-வற்றிற்கு வழிகோலும். அவ்வாறான ஒவ்வொரு நேர்விலும் தேர்வாணையம், தகுதியின் அடிப்படையில் எது சரியெனப்படுகிறதோ அவ்வாறு முடிவெடுக்கும்.

பதிவு எண் வரிசைக்கான கட்டம் தவறாக நிரப்பப்பட்டிருந்தாலோ / நிரப்பப்படாமல் விடுபட்டிருந்தாலோ இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

வினாத்தாள் வரிசைக்கான கட்டம் தவறாக நிரப்பப்பட்டிருந்தாலோ / நிரப்பப்படாமல் விடுபட்டிருந்தாலோ இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 29.9.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஒருமுறை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், ஏற்கெனவே அவர்கள் பெற்றுள்ள பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி, புதியதாக மீண்டும் ஒருமுறைப் பதிவு (One time Registration System)  முறையில் தங்களின் தன் விவரப் பக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக்-கணக்கை உருவாக்க அனுமதி இல்லை.

விண்ணப்பம் சமர்ப்பித்தல் மற்றும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுப் பெறுதல் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கும் பொதுவான தகவல்களைப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 044_25332833, 25332855 மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-_425_1002 என்ற எண்ணிலோ வேலைநாட்களில் 10 மணிமுதல் 5.45 மணிவரை தொடர்புகொள்ளலாம்.
-உண்மை இதழ்,1-15.2.17

 


Sunday 12 February 2017

‘அரசு அருங்காட்சியகம்’ சென்னை1846 ஆம் ஆண்டில் மதராஸ் கல்விக் கழகம்(Madras Literary Society)  தென் னிந்தியாவின் வரலாற்று நினைவுச் சின் னங்களைப் பட்டிலிட்டு பார்வைக்கு வைக்கும் வகையில் சென்னையில் அருங் காட்சியகம் ஒன்று வேண்டும் என அன் றைய பிரிட்டீஷ் இந்திய அரசின் ஆளுநர் சர் ஹென்றி பாட்டிங்கர் என்பவரிடம் கோரிக்கை வைத்தது, சர் ஹென்றி பாட் டிங்கர் தொல்பொருள் ஆய்வாளரும் கூட. அதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபாடு கொண்டவர்
அவர் உடனே லண்டனில் இருந்த பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியன் தலைமை நிர்வாகியிடமிருந்து இதற்கான அனுமதி யைப் பெற்று அருங்காட்சியகம் அமைக் கும் பணியைத் துவங்கினார்.  இந்த அருங்காட்சியகத்தின் முதல் பொறுப்பா ளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர்(Edward Balfour) என்பவரை நியமித்தார்.
1851 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அரசு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படுவது பற்றிய அரசு ஆணை முதன்முதலாக வெளியிடப்பட்டது. மத ராஸ் கல்விக் கழகத்தின் 1100 நிலவியல் மாதிரிகளுடன், கல்லூரிச் சாலையில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல் லூரியின் முதலாம் மாடியில் இந்த அருங் காட்சியகம் அமைக்கப்பட்டது. அருங் காட்சியகம் விரிவடைந்து வந்த நிலையில், அந்தக் கட்டிடத்தில் இட வசதி இன்மை யால் எழும்பூர் பாந்தியன் பில்டிங் என்ற கட்டிடத்தில் 1854 ஆம் ஆண்டு இடம் மாற்றப்பட்டது.
1854 ஆம் ஆண்டில் ஒரு புலியும், சிறுத்தையும்  மக்கள் பார்வைக்காக அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இதனால் அருங்காட்சியகத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மருத்துவர் பல்ஃபர், கர்நாடக நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத் துக்கு அனுப்புமாறு கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
1856 ஆம் ஆண்டு முதல் அரைப் பகுதியளவில் அருங்காட்சிய கத்தில் விலங்கினக் காட்சிச் சாலையில் 360 விலங்குகள் இருந்தன. 1863 ஆம் ஆண் டில் மாநகரசபை பொறுப்பேற்று விலங்கினக் காட்சிச்சாலையை  வேறி டத்துக்கு மாற்றியது.
1909 ஆம் ஆண்டு அக்டோபரில் நீர்வாழ்விலங்குகள் காட்சியகமும் (Aquarium) அரசு அருங்காட்சியகத்தின் கீழ் திறந்துவைக்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இக் காட்சியகத்தை 1910 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீன்வளத்துறை பொறுப்பேற்றுக் கொண் டது. உலகப்போர் நடைபெற்ற காலத்தில் பராமரிப்பு இன்றிப் போன வனவிலங்கு காட்சிச்சாலை மூடப்பட்டு, மீண்டும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது,
எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த  அருங்காட் சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன.
தென் இந்தியாவின் நூற்றாண்டுக்கால கல்வெட்டு, செப்பேடு மற்றும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பல்வேறு பழங்கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன. அமராவதி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன.
சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் எலும்புப் படிமங்கள்!
இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன. தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள்ள பொருட்கள் மட்டுமல்லாமல் இந்தக் கட்டடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.
1984 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி சமகால ஓவியங்களுக்கான புதிய கட்டடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருப் பனவற்றுள் ராஜா ரவிவர்மாவின் ஓவி யங்களும் அடங்கும். 1988 ஆம் ஆண்டில் ஒரு சிறுவர் அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.இங்குள்ள தலைமைக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் சிற்பங்கள், இந்துச் சிற்பங்கள், அமராவதி, சமணம், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள்,
ஊர்வன, பற வைகள், பாலூட்டிகள், பொது நிலவியல் போன்றவற்றுக்கான 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்தளத்தில் தபால்தலைகள், முறைமைசார் தாவரவியல், பொருளாதாரத் தாவரவியல், பவழப் பாறைகள், முதுகெலும்பிலிகள், மீன்கள், பறவைகள், பொருளாதார நிலவியல், கல்வெட்டியல், சிந்துவெளி நாகரிகம், சிற்பம் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
முன் கட்டடத்தில், மானிடவியல் பகுதி யில் படைக்கலங்கள், வரலாற்றுக்கு முந்தி யகாலம், இனவியல், இசைக்கருவிகள், நாட்டார் கலைகள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும்,தொல்லியல் பகுதியில் தொழில்துறைக் கலைக்கான காட்சிக் கூடமும் அமைந்துள்ளன.வெண்கலக் காட்சிக்கூடக் கட்டடம் தொல்லியல், நாணயவியல், வேதிக் காப்பு ஆகிய பிரிவுகளில் வைணவ, சைவ, பவுத்த, சமண மதங்களைச் சார்ந்த வெண்கலச் சிற்பங் களுக்கான காட்சிக்கூடங்களும், நாண யங்கள், பதக்கங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும் உள்ளன.
சிறுவர் அருங்காட்சியகத்தில் நாகரிகம், சிறுவர் பகுதி, அறிவியல், போக்குவரத்து, தொழில்நுட்பம், பல்வேறுவகை ஆடை களுடன் கூடிய பொம்மைகள் ஆகிய வற்றுக்கான காட்சிக் கூடங்கள் காணப் படுகின்றன.
தேசிய ஓவியக் காட்சிக்கூடக் கட்டடத்தில், இந்திய மரபு ஓவியப் பிரிவில் இந்தியச் சிற்றோவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், பிற இந்திய மரபு ஓவியங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
சமகால ஓவியக்காட்சிக்கூடக் கட்டடம் பிரித்தானிய ஓவியங்களுக்கும், தற்கால ஓவியங்களுக்குமான காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.
-விடுதலை ஞா.ம.,31.12.16

வெற்றி! வெற்றி!! (வைக்கம் சத்தியாக்கிரகப்போர் வெற்றி)


வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொது ரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்ட தாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவி தாங்கூரில் எத்தனையோ சீர்திருத் தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
தேவதாசி ஏற்பாட்டை முதன்முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி இந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப் பட்டது.
நாயர்களுக்கு மட்டும் பிர வேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் ஜாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவி தாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.
குடிஅரசு - பெட்டிச் செய்தி - 31.05.1936
-விடுதலை ஞா.ம.,6.9.14

உணவு வழங்குக் கடைகளில் முறைகேடா? பறக்கும் படைக்கு தொடர்பு கொள்க!-விடுதலை ஞா.ம.,6.9.14