தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான 'ஞா.தேவநேயப் பாவாணர்' அவர்களை 'மொழிஞாயிறு' என அழைக்கின்றோம்.
அறிஞர் பாவாணருக்கு மொழிஞாயிறு பட்டம் , எந்த ஆண்டு, எந்த அமைப்பால் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முயன்றபோது, புதிய செய்தி ஒன்று கிடைத்தது. 4.10.1957 ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் பாராட்டு விழா நடத் திப் பாவாணருக்கும், பொன்னம்பலனாருக்கும் விரு துகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இருவருக்குமான விருதுகள் மற்றும் பொற்கிழிகளைத் தந்தை பெரியார் வழங்கியுள்ளார். அவ்விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கியுள்ளார். பொன்னம்பலனாருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம்தான் "தமிழ் மறவர்" என்பது. இச்செய்திகள் அனைத்தும், பாவாணரின் இளைய மகனார் மணி என்ற தே.மணிமன்றவாணன் எழுதியுள்ள, பாவாணர் நினைவலைகள் (பக்.197) என்னும் நூலில் உள்ளன.
இவற்றுள் ஒரு செய்தி முதன்மையானது. அறிஞர் பாவாணருக்கு அன்று வழங் கப்பட்ட பட்டம் திராவிட மொழிநூல் ஞாயிறு என்பதுதானே அன்றி மொழி ஞாயிறு என்பதன்று. சுருக்கம் கருதி திராவிட என்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. மூதறிஞர் ராஜாஜி நகர் என்பது, எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால் தியாகராயர் நகர் என்பது தி.நகர் என்றும், கலைஞர் கருணாநிதி நகர் என்பது கே.கே.நகர் என்றும் சுருங்கிவிடுகின்றது. திராவிட மறைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனி நாம் பாவாணரைக் குறிப்பிடும்போதெல்லாம் திராவிட மொழிநூல் ஞாயிறு என்றே எழுதுவோம். சுருக்கம் தேவைப்படின் திராவிட ஞாயிறு என்போம்.
- தேவநேய பாவாணர் நினைவு நாள் (ஜன. 15)சிந்தனை
- விடுதலை ஞாயிறு மலர், 11.1.20
No comments:
Post a Comment