பார்ப்பன அடிவருடியாகவும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கைக்கூலியாகவும் ஆகிவிட்ட சீமான் சில காலமாக தந்தை பெரியாரைப் பற்றி அவதூராகவும் ஆபாச வார்த்தைகளாலும் பேசி வருகிறார்.
அண்மைக்காலமாக தந்தை பெரியார் சொல்லாத ஆபாசமான வார்த்தைகளை கூறி அதை தந்தை பெரியார் தான் சொன்னார் என்று பேசி வருகிறார்.
ஆதாரத்தை கேட்டால், ஆதாரமான நூல்களை மறைத்து வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறுகிறார்.
"ஏதோ ஒரே ஒரு நூல்தான் இருக்கிறது அது திராவிடர் கழகத்திடம் பத்திரமாக உள்ளது"என்பது போல் கூறுகிறார்.
தந்தை பெரியாரை வேண்டுமென்றே சிறுமைப்படுத்துவதற்காக ஆர்.எஸ். எஸ்., பி.ஜே.பி பார்ப்பன கும்பல் பல காலமாக இது போன்ற செய்திகளை பரப்பிவருகிறது.
அப்படிப்பட்ட எழுத்துக்களை படித்துவிட்டு வேண்டுமென்றே அதையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு அடாவடித்தனமாக பேசிவருகிறார்.
'செந்தில் மள்ளர்'என்பவன் தனது நூலில், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். காரர்களின் பதிவை ஆதாரமாக எடுத்துக் கொண்டு அதில் குறிப்பிட்டுள்ள ஆதாரமாக 'விடுதலை நாளேடு 11.05.1953' எனக் குறிப்பிட்டுள்ளான்.
அந்த நாளில்(11.05.1953)வெளிவந்த 'விடுதலை நாளேடு' நான்கு பக்கங்களைக் கொண்டதாகும்.
அந்த பக்கங்களில் எங்கேயும் இது போன்ற செய்தி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நான்கு பக்கங்களை ஆதாரமாக இங்கே தருகிறோம்:
- (11.05.1953, விடுதலை நாளேடு, நான்கு பக்கங்கள்)
இது குறித்து 'விடுதலை நாளேடு' அப்போதே பதில் கொடுத்துள்ளது.
--------------++++++++++++++--------------
அவதூறுகளை அடியுரமாக்கி அகிலமெங்கும் கிளைத்தவர்!
தந்தை பெரியார மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்க வெண்டும் என்பதற்காகவே ஆரிய பார்ப்பார்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வரு கின்றனர்.
அண்மையில் இணைய வெளியில் ஓர் அயோக்கியத்தனமான அவதூறு பரப்பினர்.
"ஒருவன் காம உணர்வு மிகும்போது தன் மகளை அல்லது தன் தாயையும் கூட புணர்ந்து இச்சையைக் தணித்துக் கொள்ளலாம்' என்று பெரியார் கூறியிருக்கிறார்."(ஆதாரம்: 11.05.1953-'விடுதலை)
என்று அப்பட்டமான ஒரு பொய்பை ஆதாரத்தோடு கூறுவதாய் பொய்யான ஆதாரத்தைக் கூறி மோசடியாக, அயோக்கியத்தனமாக இணையவெளியில் பரவவிட்டனர்.
உடனே பெரியார் தொண்டர்கள், 11. 05.1953 விடுதலையேட்டைத் தேடியேடுத்து இந்த அயோக்கியதனமாக அவதூறாகப் பரப்பிய அச்செய்தி 'விடுதலை' எட்டில் எத்தப் பக்கத்திலும் இல்லை யென்பதை எடுத்துக்காட்டி அவர்களின் மோசடிப் பிரச்சாரத்தைத் தகர்த்தனர்.
பெரியார் இருந்தபோதும் அவதூறு பரப்பியவர்கள், பெரியார் இறந்த பின்னும் அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
அய்யா பெரியார் ஒரு அனல் நெருப்பு; அவதூறு குப்பைகள் எவ்வளவு போட்டாலும் அவை சாம்பல் ஆகும்!
அய்யாவின் புகழ் மேலும் மேலும் உயரும் என்பதை இது உறுதி செய்கிறது.
தந்தை பெரியார் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும். நாணயத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடியவர். மளித நேயத்தின் மறுவடிவம்.
----------------------------++++++++++++--------------
இந்த புரட்டுச் செய்தி முகநூல் பதிவுகளில் வெளிவந்த போதே முகநூல் உண்மை அறியும் குழு ஆய்வு செய்து இது பொய்யான செய்தி என்று அறுதியிட்டு கூறியுள்ளது.
அதைப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மோசடியான குற்றச்சாட்டை பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
11.01.2025ஆம் நாள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உள்ள துணை ஆணையாளரிடம் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதேபோல் பல அமைப்புகளும், கட்சிகளும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர்.
கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment