Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Tuesday, 28 October 2025

ஜாதிப்பெயர் ஒழிப்பு’ பெரியார் பாதையில் ‘திராவிடமாடல்’ அரசின் பயணம்

 


கட்டுரை, ஞாயிறு மலர்

ாதிப்பெயரை ஒழிப் பதில் தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்த அரசாணை,  நீதிக்கட்சி, தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியாகும். சமூக சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இவை ஆற்றிய பணிகள் மகத்தானவை.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை நீக்கி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிக்கும் பெயர்களை அகற்றவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையானது,  தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த ஜாதி ஒழிப்பு சமத்துவச் சிந்தனையின் விளைவு
ஆகும்.

தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டார். அவர் தொடங்கிய நூற்றாண்டை கடந்த சுயமரியாதை இயக்கம், பின்னாளில் உருவான திராவிடர் கழகம் ஆகியவை ஜாதி ஒழிப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தன.

பெரியாரின் ஜாதி ஒழிப்பு உத்தி:

பெரியார், மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களைச் சேர்ப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில் மக்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவர், தான் காங்கிரசில் சேருவதற்கு முன்பே 1917 இல் ஈரோடு நகரமன்றத் தலைவராக இருந்தபோது, ‘கொங்குப் பறத்தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதன் மூலம், தெருப் பெயர்களில் இருந்த ஜாதிப் பெயர்களை ஒழிக்கும் பணியைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பல இடங்கள் பெயர் மாற்றம் பெற்றன. எடுத்துகாட்டாக மதுரைப் புதூரில் உள்ள ‘காலனி தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதைக் கூறலாம்

கடவுள், மதம், சாஸ்திர மறுப்பு: ஜாதி முறைக்கு அடிப்படையாய் இருக்கும் மதம், சாஸ்திரங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.

சடங்குகள், மதகுருமார்கள் இன்றி நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்களை அறிமுகப்படுத்தி, ஜாதி மறுப்பு மற்றும் கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக் கோரி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்.

நீதிக்கட்சி (Justice Party)

1916-இல் பார்ப்பனர் அல்லாதோருக்காகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை (இட ஒதுக்கீடு) வலியுறுத்திப் போராடியது. இது பார்ப்பனர் அல்லாத சமூகத்தினருக்கு அரசியல் மற்றும் சமூக அதிகாரத்தைப் பெற முதல் அடித்தளமிட்டது.

தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் ஜாதி ஒழிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டமாகவும், புரட்சிகர இயக்கங்களின் விளைவாகவும் அமைந்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றியிருந்தபோது, தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் ஜாதி முறையை வேரறுத்து, சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை முன்னெடுத்தன. இதில் தந்தை பெரியார்  அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான புரட்சிகர போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மேலும், தமிழ்நாடு அரசின் சமீபத்திய அரசாணைகள் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றன.

‘ஆதி திராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான்குளம்’ போன்ற ஜாதிப் பெயர்களைக் கொண்டுள்ள ஊர் மற்றும் குடியிருப்புப் பெயர்களை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட பெயர்களுக்குப் பதிலாக திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன்,
தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழ் தலைவர்களின் பெயர்களையும், நீர்நிலை
களுக்குப் பூக்கள், மரங்கள் அல்லது இயற்கை அமைப்புகளின் பெயர்களையும் சூட்ட அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்த மாற்றங்களைச் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் ஜாதி அடிப்படை யிலான பிரிவினைகளை நீக்கியது. ரயில் நிலையங்கள், உணவகங்கள், பொது போக்கு வரத்து போன்ற இடங்களில் ‘பார்ப்பனர்களுக்கு மட்டும்’ என்ற பிரிவினைகள் அகற்றப்பட்டன.  மேலும், தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை 1929இல் நிறைவேற்றியது, இது ஜாதி அடிப்படையிலான பாலியல் சுரண்டலை எதிர்த்தது. கோயில்களில் பிராமணரல்லாதோரை பூசாரிகளாக நியமிக்கும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் ஜாதி மேலாதிக்கத்தை சவால் செய்து, சமூக சமத்துவத்தை நோக்கிய முதல் அடிகளாக அமைந்தன.  இருப்பினும், நீதிக்கட்சி பிரிட்டிஷ் ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டதால், சில விமர்சகர்கள் இதை ‘ஆங்கிலேயர்களின் கைப்பாவை’ என்று விமர்சித்தனர்.

ஜாதிப் பட்டப் பெயர்களைக் கைவிடுதல்

சுயமரியாதை இயக்கம் மக்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குமாறு வலியுறுத்தியது, பலரும் இயக்க மாநாட்டுப் பந்தலிலேயே தங்களது ஜாதிப் பெயர்களைத் துறந்தனர்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு

தந்தை பெரியார் தலைமையிலான ‘சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு’ 1929 ஆம் ஆண்டு ‘பிப்ரவரி 17 மற்றும் 18’ ஆகிய தேதிகளில் ‘செங்கல்பட்டில்’ நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களில் ஒன்று, மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டம்’ அல்லது ஜாதிக் குறியீடுகளை நீக்க வேண்டும் என்பதாகும். ஜாதிய ஒடுக்குமுறையையும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்தத் தீர்மானத்தை  இராமச்சந்திர (சேர்வை) என்பவர் முன்மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனே, மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய ஊ.பு.அ.சவுந்தரபாண்டிய (நாடார்) மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டங்களை மேடையிலேயே நீக்கி அறிவித்தனர். இதற்கு முன்னதாகவே, பெரியார் தனது பத்திரிகையான ‘குடிஅரசு’ ஆசிரியராக இருந்தபோது, தனது பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் என்ற ஜாதிப் பெயரை நீக்கி, ஈ.வெ.ராமசாமி என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தார். இந்தச் செயல்பாடு, ஜாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு வலுவான தொடக்கத்தை அளித்ததுடன், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதைக் கைவிடும் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டது.  இன்றும் சமூகவலைதளங்களில் ஜாதிப்பெயரை போட்டுக்கொள்ளும் துடுக்குக்கார இளசுகள் தங்கள் பள்ளியிலோ அல்லது இதர ஆவணங்களிலோ ஜாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதில்லை. இதற்கு காரணம் சுயமரியாதை இயக்கம் விதைத்த ஆழமான கொள்கை ஆகும்

திராவிடர் கழகம் (Dravidar Kazhagam – DK):

1944 இல் நீதிக்கட்சியின் பெயரை மாற்றியமைத்து திராவிடர் கழகம் உருவானது.  இது பெரியாரின் தலைமையின் கீழ் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இயக்கமாகத் தொடர்ந்தது. 1952-1954 இல் இராஜாஜி கொண்டு வந்த ‘குலக்கல்வித் திட்டத்தை’ (ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) கடுமையாக எதிர்த்து, இத்திட்டம் கைவிடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 1967 க்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் பெரியாரின் கருத்தை மய்யமாக கொண்டே இயங்கியது.   ‘குடிஅரசு’ போன்ற இதழ்கள் மூலம் இயக்கம் தனது கருத்துக்களை பரப்பியது, ஜாதி ஒழிப்பை சமூக மாற்றத்தின் அடிப்படையாக்கியது.

பெரியார், உணவகங்களில் ‘பார்ப்பனர் களுக்கு மட்டும்’ என்ற பெயர்ப்பலகைகளை அகற்ற போராட்டங்கள் நடத்தினார், இது ஜாதி பாகுபாட்டை நேரடியாக சவால் செய்தது. இயக்கம் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்தது, ஜாதி அடுக்குகளை உடைத்தது. இன்றும் இயக்கத்தின் கொள்கைகள் சமூக நீதியின் அடித்தளமாக உள்ளன.

தமிழ்நாடு அரசின் ஜாதிப்பெயர் ஒழிப்பு அரசாணைகள்

தமிழ்நாடு அரசு, ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான 2025 அக்டோபர் 8ஆம் தேதி வெளியான அரசாணை, கிராமங்கள், தெருக்கள், பொது சொத்துக்களில் ஜாதி சார்ந்த பெயர்களை (‘ஆதி திராவிடர் காலனி’ போன்றவை) நீக்க உத்தரவிட்டது. நவம்பர் 19, 2025க்குள் இதை செயல்படுத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை, பெரியாரின் ஜாதிப்பெயர் ஒழிப்பு இயக்கத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. இருப்பினும், சிலர் இதை திமுக அரசின் அரசியல் சூழ்ச்சி என்று விமர்சிக்கின்றனர். ஆனால், இது சமூக சமத்துவத்தை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாகும். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்பை ஒரு சமூக இயக்கமாக மாற்றின. இவை இட ஒதுக்கீடு, சமத்துவம், பெண் உரிமைகள்,  சுயமரியாதைத் திருமணங்கள் போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்தன. பெரியாரின் புரட்சிகர இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தது. எனவே இது இன்று அரசு அரசாணைகளில் எதிரொலிக்கிறது. இருப்பினும், இன்னும் ஆங்காங்கே ஜாதிப் பாகுபாடுகள் இன்னும் இருப்பதால், இந்த போராட்டம் தொடர வேண்டியது அவசியம். இவை தமிழ்நாட்டை சமூக நீதியின் முன்மாதிரியாக்கியுள்ளன.

தேவதாசி முறை
ஒழிப்பதும், ஜாதி ஒழிப்பும்

தேவதாசி முறை என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகங்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டதாக இருந்தது. இந்த அமைப்பு, பெண்களை கோவிலுக்கு “அர்ப்பணிப்பது” என்ற பெயரில் மதத்தின் பெயராலும், ஜாதி அமைப்பின், மேலாதிக்கத்தின் கீழும் அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் உட்படுத்தியது.

தேவதாசி முறை ஒழிப்பு என்பது சுரண்டல், அடிமைத்தனம், பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை விடுவிப்பதுடன் தொடர்புடையது. ஜாதி ஒழிப்பின் முக்கிய நோக்கமும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும், பிறப்பின் அடிப்படையில் எவரும் உயர்ந்தவரோ  – தாழ்ந்தவரோ இல்லை என்பதையும் நிலைநாட்டுவதாகும். இரண்டு போராட்டங்களும் மனித மாண்பு மற்றும் சமத்துவத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டவை.

தேவதாசி முறை ஒழிப்புக்கான போராட்டத்தில், தந்தை பெரியார், டாக்டர். முத்துலட்சுமி (ரெட்டி), மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் போன்றவர்கள் முக்கியப் பங்காற்றினர். இவர்களில் பலர் ஜாதி ஒழிப்பு மற்றும் சுயமரியாதை இயக்கங்களின் முன்னோடிகளாகவும் இருந்தனர். சுயமரியாதை இயக்கம், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் நிலவும் மூடநம்பிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தன. தேவதாசி முறை, மதத்தின் சடங்கு நடைமுறையுடன் இணைந்திருந்ததால், அது ஜாதி ஒழிப்புக்கான ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.

1930இல் முத்துலட்சுமி (ரெட்டி) “தேவதாசி ஒழிப்பு மசோதா”வை மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெரியார் அதற்கு தீவிர ஆதரவு அளித்தார். அவர் குடியரசு பத்திரிகையில் (30.03.1930) “தேவதாசி முறை தடுக்கவல்லது மட்டுமல்ல, அறவே ஒழிக்கும்” என்று எழுதினார். மதராஸ் தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு கடிதங்கள் எழுதி, முறையை ஒழிக்க அழுத்தம் கொடுத்தார்

1947 அக்டோபர் 9இல் “மதராஸ் தேவதாசி (அர்ப்பணம் தடுப்பு) சட்டம்” நிறைவேறியது. இது பெண்களுக்கு திருமண உரிமை அளித்து, கோயில் அர்ப்பணத்தை தடை செய்தது. பெரியார் இதை “பெண்கள் உரிமைகளுக்கான வெற்றி” என்று கொண்டாடினார்.   வந்தனா தேவி போன்றவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, 1927இல் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேறியது.  பெரியாரின் போராட்டம் வெறும் சட்டம் மட்டுமல்ல, சமூகத்தில் பாலின சமத்துவத்தையும்,ஜாதி ஒழிப்பையும் வலியுறுத்தியது. தந்தை பெரியாரின் பார்வை “பெண்களின் சுதந்திரம் இல்லாமல் சமூகம் முன்னேறாது” என்றது. இது தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாற்றில் இன்றவும் நிலைத்து நிற்கிறது. இதுமேலும் இது நிலைக்கும்.

-விடுதலை ஞாயிறு மலர், 18.10.25

Tuesday, 8 June 2021

ராமதாஸூம், ஜாதியும்...⁉️


கவுண்டர் பட்டத்தால்‌, ராமதாஸூக்கு, பறிபோன, 
"அரசு மருத்துவர்" பதவி.
ராமதாஸை, வன்னியர் என்று, ஏமாந்த வன்னியர்கள்.
ராமதாஸின் தந்தை, சஞ்சீவிராய கவுண்டர் என்று, குறிப்பிடப்பட்ட‌, "Medical Registaton Certificate" எண்: 18318/ 22.01.1968 தேதியிட்ட, ஆவணம்.
ராமதாஸ் அரிஜன கோட்டாவில் தான், MBBS  படித்தார் என்ற உண்மை, வெளிக்கொணரப்பட்டுள்ளது.
ராமதாஸ் எப்படி, அரிஜன கோட்டாவில்‌, MBBS படித்தார் என்பதை, விசாரித்த போதுதான் ராமதாஸின் தாயார் அரிஜன வகுப்பை சார்ந்தவர் என்ற உண்மை தெரியவந்துள்ளது.
ராமதாஸின் ஜாதி ரகசியத்தை, அரசாங்கத்துக்கு புகாராக தெரிவித்தவர், திண்டிவனத்தை சார்ந்த,  K.S.B.பூபதி உறவுக்காரர் தான்.
தமிழக அரசால், நடத்தப்பட்ட விசாரணையில், ராமதாஸ்,  அரிஜன நலத்துறையால் நடத்தப்பட்ட,  அரிஜன மாணவர்கள் மட்டுமே, தங்கி படிக்கக்கூடிய, M.C.ராஜா மாணவர் விடுதியில் தங்கி படித்தது முதல், அரிஜன கோட்டாவில், ‌‌MBBS படித்ததற்க்குண்டான, அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில், ராமதாஸூக்கு தண்டத்தொகை விதிக்கப்பட்டு, 
அரசு மருத்துவர் பதவியிலிருந்தும், விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ராமதாஸ், தன் தாயார் அரிஜன வகுப்பை சார்ந்தவர் என்பதை, விசாரணையில் தெரியவந்துள்ளது.மனிதாபிமானத்தின் அடிப்படையிலும், தண்டத்தொகை செலுத்தப்பட்டதாலும், மற்றும் அரசு மருத்துவர் என்ற, பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டும், ராமதாஸின் மீதான விசாரணையை, அரசு, முடித்துக்கொண்டுள்ளது.
ராமதாஸின் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள, "கவுண்டர்" பட்டம், ராமதாஸின் பிறப்பின் ரகசியத்தை, சந்தைப் படுத்தியுள்ளது.
ராமதாஸின், "இரட்டை ஜாதி சான்றிதழ்" தில்லுமுல்லு வாழ்க்கை, 
படிக்கும் பொதிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை தொடர்கிறது.
ராமதாஸை, வன்னியர் என்று, ஏமாந்துகொண்டிருக்கும் சமூகம், வன்னியர் குல சத்திரியர்கள்
- கட்செவி வழியாக வந்த செய்தி

Wednesday, 10 March 2021

பார்ப்பனரின் ஜாதித்திமிரும், புல்லாங்குழல் வித்வான் திரு.சாமிநாதப் (பிள்ளை) அவர்களின் சுயமரியாதையும்

2011 உண்மை இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 

குடியரசு

Friday, 12 February 2021

இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -






 கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை வருமாறு:

Backward Classes, Most Backward Classes and Minorities Welfare - Issuance of Community Certificate of the children bor to the parents belonging to two different castes - Clarifications - Issued.

Backward Classes, Most Backward Classes & Minorities Welfare (BCC) Department

G.O. (Ms) No.08

Dated 09.02.2021

Thiruvalluvar Aandu 2052 Charvari, Thai 27. Read:

G.O(MS)No. 477, Social Welfare Department, dated

27.06.1975.

ORDER:

Vide G.O read above, Government have been extending certain concessions to the members of Scheduled Tribes, Scheduled Castes and Backward classes from time to time and orders were issued stating that children born out of Inter-caste marriages, shall be considered to belong to either the community of the father or the community of the mother according to the declaration of the parents

2) Various requests have now been received by the Government to issue community certificates to children bom out of inter caste marriages, based on the caste of either the father or the mother.

3) The Government after careful examination hereby clarifies that the children born out of marriage between parents of two different castes shall be considered to belong to either the case of the father or the caste of the mother based on the declaration of the parent/s.

4) Based on this declaration of the parentis, Revenue authorities are hereby instructed to issue appropriate Community Certificates (Backward Classes/Most Backward Classes/ Denotified Communities Other Backward Classes! Scheduled Caste / Scheduled Tribe for Government of Tamil Nadu Government of India) to such children according to their eligibility, by virtue of belonging to such a caste.
5) The Commissioner of Revenue Administration is requested to give suitable instructions to the Community Certificate issuing Authorities as per the clarification issued in para 4 above.

(BY ORDER OF THE GOVERNOR)

Dr. CHANDRA MOHAN.B PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

TO

The Principal Secretary to Government, Revenue and Disaster Management Department,

Secretariat, Chennal 9 The Additional Chief Secretary /Commissioner

Revenue Administration, Disaster Management and Mitigation, Chepauk, Chennai -5

The Director of Backward Classes Welfare, Chennal -5. The Commissioner of Most Backward Classes and Denotified

Communities, Chennal -5.

The Member Secretary, Tamil Nadu Backward Classes

Commission, Chennai - 4. The Director of Minorities Welfare, Chennai-2.

All Department of Secretariat. All District Collectors.

All Head of Departments All Public Sector Undertakings

The Director of Technical Education, Chennai- 25. The Director of Medical Education, Chennai-6

The Director of Adi Dravidar and Tribal Welfare, Chennai -5.

The Director of School Education, Chennai-6.

The Hirector of Collegiate Education, Chennal 6.

The Secretary, Tamil Nadu Public Service Commission,

Chennai -3. The Registrar, High Court, Chennai -104

All District Magistrates and District Judges

The Registrar, University of Madras / Annamalai University Chidambaram/Madural - Kamaraj University, Madural/ Bharathlyar University, Coimbatore / Tiruchirapalli/

Tamil University, Thanjavur / Alagappa University, Karaikudi / Mother Theresa University, Chennai -35 /

Anna University, Guindy, Chennal -25. The Registrar, MGR Medical University,

Chennai,

The Registrar, Manonmaniam Sundaranar

Tirunelveli

University,

The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Chennai -7.

The P& AR Department, Chennai-9. The Principal Secretary II to Hon'ble C.M., Chennai -9. Copy to

The Chief Minister's Office, Secretariat, Chennai - 9.

Special Personal Assistant to Hon'ble Minister for Backward Classes & Minorities Welfare, Chennal-9 Senior Private Secretary to Principal Secretary to Government, Backward Classes, Most Backward Classes and

Minorities Welfare Department, Chennai-9.

Stock file/ Spare copy

// Forwarded by Order //

Section Officer

பின்தங்கிய வகுப்புகள், மிகவும் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலன் - சமூக சான்றிதழ் வழங்கல் இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சமூக சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் - வழங்கப்பட்டது.

 பின்தங்கிய வகுப்புகள், மிகவும் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலன்புரி (பி.சி.சி) துறை

 G.O. (MS) எண் 08

  09.02.2021நாளிட்ட

 திருவள்ளுவர் ஆண்டு 2052 சார்வாரி, தய் 27. படிக்க:

 G.O (MS) எண்:  477, சமூக நலத்துறை நாளிட்டது

 27.06.1975.

 ஆணை:

 மேலே படித்த GO ஐக் காண்க, பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது சில சலுகைகளை வழங்கி வருகிறது, மேலும் சாதி-திருமணங்களில் இருந்து பிறந்த குழந்தைகள், இரண்டையும் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  பெற்றோரின் அறிவிப்பின்படி தந்தையின் சமூகம் அல்லது தாயின் சமூகம்

 2) தந்தை அல்லது தாயின் சாதியின் அடிப்படையில், சாதியினருக்கு இடையிலான திருமணங்களில் இருந்து வெளியேறும் குழந்தைகளுக்கு சமூகச் சான்றிதழ்களை வழங்குமாறு அரசாங்கத்தால் இப்போது பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன.

 3) கவனமாக பரிசோதித்த பின்னர், இரண்டு வெவ்வேறு சாதிகளின் பெற்றோருக்கு இடையேயான திருமணத்திலிருந்து பிறந்த குழந்தைகள் பெற்றோர் / கள் அறிவிப்பின் அடிப்படையில் தந்தையின் வழக்கு அல்லது தாயின் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுவார்கள் என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறது.

 4) பெற்றோரின் இந்த அறிவிப்பின் அடிப்படையில், வருவாய் அதிகாரிகள் தகுந்த சமூக சான்றிதழ்களை (பின்தங்கிய வகுப்புகள் / மிகவும் பின்தங்கிய வகுப்புகள் / குறிக்கப்பட்ட சமூகங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்! இந்திய அரசு தமிழக அரசுக்கு பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடியினர்) வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  குழந்தைகள் தங்கள் தகுதிக்கு ஏற்ப, அத்தகைய சாதியைச் சேர்ந்தவர்கள்.
 5) மேலே உள்ள பாரா 4 இல் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தலின் படி சமூக சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு பொருத்தமான வழிமுறைகளை வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

 (அரசாங்கத்தின் ஆணைப்படி)

 டாக்டர் சந்திரா மோகன்.பி அரசாங்கத்திற்கான முதன்மை செயலகம்

 TO

 அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர்,

 செயலகம், சென்னல் 9 கூடுதல் தலைமை செயலாளர் / ஆணையர்

 வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு, செபாக், சென்னை -5

 பின்தங்கிய வகுப்புகள் நல இயக்குநர், சென்னல் -5.  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையாளர் மற்றும் குறிக்கப்பட்டவர்

 சமூகங்கள், சென்னல் -5.

 உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்

 கமிஷன், சென்னை - 4. சிறுபான்மையினர் நல இயக்குநர், சென்னை -2.

 அனைத்து செயலகம்.  அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்.

 அனைத்து துறைத் தலைவர்களும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும்

 தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், சென்னை- 25. மருத்துவக் கல்வி இயக்குநர், சென்னை -6

 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல இயக்குநர், சென்னை -5.

 பள்ளி கல்வி இயக்குநர், சென்னை -6.

 கல்லூரிக் கல்வியின் இயக்குநர், சென்னல் 6.

 செயலாளர், தமிழ்நாடு பொது சேவை ஆணையம்,

 சென்னை -3.  பதிவாளர், உயர் நீதிமன்றம், சென்னை -104

 அனைத்து மாவட்ட நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதிகள்

 பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம் / அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் / மதுரல் - காமராஜ் பல்கலைக்கழகம், மதுரல் / பரத்ல்யார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் / திருச்சிராப்பள்ளி /

 தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் / அழகப்பா பல்கலைக்கழகம், காரைகுடி / அன்னை தெரசா பல்கலைக்கழகம், சென்னை -35 /

 அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னல் -25.  பதிவாளர், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்,

 சென்னை,

 பதிவாளர், மனோன்மணியம் சுந்தரநார்

 திருநெல்வேலி

 பல்கலைக்கழகம்,

 பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை -7.

 பி & ஏஆர் துறை, சென்னை -9.  முதன்மை செயலாளர் II மாண்புமிகு சி.எம்., சென்னை -9.  நகலெடுக்க

 முதல்வர் அலுவலகம், செயலகம், சென்னை - 9.

 பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் சிறப்பு தனிப்பட்ட உதவியாளர், சென்னல் -9 மூத்த தனியார் செயலாளர், அரசாங்கத்தின் முதன்மை செயலாளரின், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும்

 சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை -9.

 பங்கு கோப்பு / உதிரி நகல்

 // ஆணை மூலம் அனுப்பப்பட்டது //

 பிரிவு அலுவலர்

Thursday, 22 October 2020

சாதியும் வர்ணமும்

செட்டியார், முதலியார் என்பது வெறும் சாதிப் பெயர்கள் தான். ஆனால் பிராமணன், சூத்திரன் என்பது வர்ணப் பெயர்கள். பிராமணன் என்று ஒருவனை குறிப்பிட்டால் மற்றவன் சொல்லாமலே சூத்திரனாகிறான்.
சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (வேசி மகன்) என்று மனுஸ்மிருதி (மனு தர்மம்) அத்யாயம் 8,சுலோகம்-415 கூறுகிறது. சூத்திரன் பிரம்மாவின் காலில் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி (அத்யாயம் 1,சுலோகம்-87 ) யும் ரிக் வேதம், புருஷ சுக்தமும், யஜுர் (அத்யாயம் 31,சுலோகம்-11 ) வேதமும் கூறுகிறது..
 வேதப்படி பிராமணன் என்று எழுதி, வேதப்படி எங்களை இழிவு படுத்த 
எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது!
--செ.ர.பார்த்தசாரதி
- 22.10.2012, முகநூல் பதிவு

Monday, 20 May 2019

கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை வெற்றி பள்ளி மாற்றுச் சான்றிதழில் ஜாதிப் பெயர் குறிப்பிட வேண்டாம் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை, மே 15- பள்ளிகளில் மாற்று சான் றிதழ் வழங்கும்போது ஜாதிப் பெயரை தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடாமல் அந்த பகுதியில் வருவாய்துறை வழங் கிய ஜாதிச் சான்றிதழை பின்பற்றுமாறு குறிப்பிட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் (டி.சி) வழங்கும்போது அதில் ஜாதி குறித்து குறிப்பிடுவது சார்பான அறிவுரைகள் வழங்கி அர சாணை ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல் முறைகளில் பள்ளிகளில் மாற்றுச் சான்று வழங்கும்போது ஜாதி என்ற பகுதியில் எந்த ஜாதியையும் குறிப் பிடாமல் வருவாய்துறை அளித்த ஜாதிச் சான்றிதழை பின்பற்றவும் என்று குறிப் பிடுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக் குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தக்க வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் வருவாய்துறை வழங்கும் ஜாதிச் சான்றே இறுதியானதும், ஏற் றுக்கொள்ளத்தக்கதும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவ லர் விருப்பப்பட்டால் அந்த மாணவர் களின் பள்ளி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ்களில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ அல் லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ மனு தாரர் விரும்பினால் சம்பந்தப்பட்ட வரின் விருப்ப கடிதத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் விருப்பப்படி சான்று வழங்கலாம் என தெரிவிக்கப் படுகிறது.

ஏற்கனவே பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு 2018--2019ஆம் கல்வியாண் டில் முடிந்து வெளியே செல்லும் மாணவ மாணவியர்களின் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் இது தொடர்பாக தக்க அறிவுரைகள் வழங்க அனைத்து மாவட்ட முதுன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படு கின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

 - விடுதலை நாளேடு, 15.5.19