வெற்றிவலவன் பதிவுகள்

மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு
Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Friday, 26 September 2025

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு: ‘தினமலர்’, பா.ஜ.க. கும்பலின் புரட்டு அம்பலம்!

 viduthalai


பிற இதழிலிருந்து...

தந்தை பெரியார் படத்தை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகத்தில் 04.09.2025 அன்று நடக்கும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி திறந்து வைக்கிறார்.

பிற இதழிலிருந்து...

இது குறித்து  ‘‘ரூ.25,000 வாடகை செலுத்தி ஈ.வெ.ரா. படத் திறப்பு’’ என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்டுள்ள செய்தி  கீழே தரப்பட்டுள்ளது.

‘‘ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு என முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை கண்டதும், அப்பல்கலை. பி.ஆர்.ஓ., மற்றும் நண்பர்களிடம் விசாரித்தேன். ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலை அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஸ்டாலினை அழைக்கவில்லை; ஈ.வெ.ராமசாமி படத்திறப்பும் இல்லை’’ என தெரிவித்தது. ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் நடத்த, சிறிய அரங்குகள், 210 பவுண்டுக்கு வாடகைக்கு கிடைக்கும்.

பிற இதழிலிருந்து...

அப்படி சிறிய அரங்குகளை வாடகைக்கு எடுத்து யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் வருவதால், தி.மு.க.,வினர் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில், சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் தான் ஈ.வெ.ராமசாமி படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’’

இவ்வாறு ஒருவர் சொன்னதாக தினமலர் செய்தி வெளி யிட்டுள்ளது.

‘உண்மையின் உரை கல்’ என்று தன்னுடைய பத்திரிகையை விளம்பரம் செய்யும் அந்தப் புரட்டு மலர், குறைந்தபட்சம் இந்தச் செய்தியைப் பதிப்பிக்கும்முன் இணையதளத்தில் தேடியிருக்கலாம். ஆனால், ‘உண்மை ஒரு முறை சுற்றி வருவதற்கு முன்னால் வதந்தி நூறு முறை சுற்றி வந்துவிடும் என்பதையே ‘தாரக மந்திரமாகக்’ கொண்டு செயல்பட்டு வரும் தினமலரும்,  இந்துத்துவ கும்பலின் ‘அய்.டி. விங்’குகளும் சமூக ஊடகத்திலும், பத்திரிகையிலும் பொய்யை, புரட்டைப் பரப்புவது என முடிவெடுத்து நேற்று (30.8.2025) முதலே இந்தப் பொய்ச் செய்தியைப் பரப்பி தந்தை பெரியாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் இழிவு செய்ய வேண்டும் என நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர்.

பிற இதழிலிருந்து...

உண்மை இதுதான்! இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின்  செயின்ட் ஆண்டனி மற்றும் பெல்லியோல் கல்லூரி இணைந்து நடத்தும் நிகழ்வு ஆகும்.

இதுகுறித்து செயின்ட் ஆண்டனி கல்லூரியின் இணையதளத்திலும்,

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் விவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. (அவற்றின் இணைப்புச் சுட்டியும் படமும் இங்கே தரப்பட்டுள்ளது.)

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆக்ஸ்போர்டு டாக்ஸ் (OXford Talks) பகுதியில் இடம் பெற்றுள்ள இணைப்பக்கங்களில் நிகழ்வை ஒருங்கிணைப்பது St
Antony’s College, 62 Woodstock Road OX2 6JF என்பதும், அதன்  Asian Studies Centre துறை ஒருங்கிணைப்பதும், ஒருங்கிணைப்பாளர்கள் பெயர்கள் Jim Mallinson (University of
Oxford), Faisal Devji (St Antony’s College) என்பதும், துறையின் அலுவல் பூர்வ மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டனவும் கொடுக்கப்பட்டு, நிகழ்வில் பங்கேற்பதற்குப் பதிவு செய்ய இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதே போல் செப்.4 மாலை  தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான இணைப்பும், மறுநாள் நடக்கும் கருத்தரங்கு தொடர்ச்சிகான இணைப்பும் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளன.

அப்படியிருக்க திமுகவில் இருந்து  ஓடி போய் அண்மையில்  பாஜகவில் இணைந்த ‘இவர் தாவாத கட்சியில்லை தரணியிலே’ என்ற சிறப்புக்குரிய ஒருவரது புரளிப் பேச்சை செய்தியாக்கி வெளியிடுவதுதான் அவாளின் பத்திரிகா தர்மமா?

 - விடுதலை நாளேடு, 31.08.25

Posted by parthasarathy r at 09:40 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை, தந்தை பெரியார், தினமலர், படம்

Thursday, 10 March 2022

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?


'தினமலருக்கு'ப் பதிலடி!
  November 01, 2021 • Viduthalai

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?

கவிஞர் கலி. பூங்குன்றன்

தந்தை பெரியார், பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிடர் கழகம் - இவர்களின்மீது புழுதிவாரி இறைப்பது - பிம்பத்தை உடைப்பது எனும் ஒரு செயலில் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு இருப்பதாகவே தெரிகிறது!

தினமலர், தினமணி, துக்ளக்கோடு, தமிழ் இந்துவும் ஜோடி சேர்ந்திருக்கிறது போலும்!

வரட்டும் - ஒரு வகையில் நன்மைக்குத்தான் - இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கூட்டத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதற்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு அல்லவா - அந்த வகையில் நிரம்பவே வரவேற்கிறோம் - எதிர்பார்க்கிறோம்.

நேற்றைய (31.10.2021) 'தினமலர்' ஏட்டில் யாரோ எழுத்தாளராம் - அவர் பெயர் எஸ். ராமசுப்பிரமணிய னாம். கட்டுரையின் தலைப்பு "குலக்கல்வியும்  - தொழிற் கல்வியும்!" என்பதாகும். என்ன சொல்ல வருகிறார்கள்?

"கடந்த 1953 ஏப்ரல் 16இல் ராஜாஜி சென்னை மாகாணத் தின் முதல் மந்திரியாக இருந்தபோது ஒரு சீர்திருத்த முயற்சியை மேற்கொண்டார்.

அதன்படி மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை மாணவியர், பட்டியல் ஜாதியை சேர்ந்த மாணவர்களும் தினமும் மூன்று மணி நேரம் பள்ளிக்கு வந்தால் போதும்.

மற்ற நேரம், பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்க லாம் என்று ஒரு சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

அதாவது, தச்சர் மகனுக்குத் தச்சுத் தொழில் நுட்பமும், தட்டார் மகனுக்கு நகை செய்யும் நுணுக் கமும், சிற்பக் கலைஞர் மகனுக்கு சிற்ப வேலைப் பாட்டு நேர்த்தியும், சமையல் கலைஞர் மகனுக்கு நளபாகமும் பிறவியிலேயே வாய்த்திருக்கும்.

அந்த பண்பு அவரவர் 'ஜீன்' எனப்படும் உடல் மூலக் கூறிலேயே உறைந்திருக்கும்! அந்தப் பண்புகளை தகப் பனார் கூடவே இருந்து மெருகேற்றினால் மேலும் மிளிரும்.

அந்த கோணத்தில், அந்த உயர்ந்த நோக்கத்தில் தான், சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார்" என்று கூறுகிறது தினமலர்.

இது தொழிற் கல்வி திட்டம் தானாம். முதல்அமைச்சர் ராஜாஜி தொழிற் கல்வி என்பதற்குப் பதிலாக குலக்கல்வி என்று 'நா' குழறி சொல்லி விட்டாராம்.

உடம்பெல்லாம் மூளை என்று தம்பட்டம் அடிப் பார்களே  - ராஜாஜி பற்றி பார்ப்பனர்கள்! அப்படிப்பட்ட ராஜாஜிக்கா நா குழறி விட்டது? சரி. ஒரு முறைதான் நா. குழறியது - தவறைத் திருத்தி சொல்ல வேண்டியது தானே - அவரைத் தடுத்தது யாராம்....? உண்மை என்னவென்றால் அவர்கள் தொழிற்கல்வி என்று முக்காடு போட்டுக் கொண்டு வந்த திட்டத்தை - குலக் கல்வி என்ற ஒரே  ஒரு வார்த்தை மூலம், அவர்களின் முகமூடியைக் கிழித்து சுக்கல் நூறாக்கி விட்டார் தந்தை பெரியார். மக்களும் விழிப்புணர்வு பெற்றனர் என்பது தான்உண்மை.

சரி... தினமலர் கட்டுரையாளரின் கூற்றுக்கே வருவோம். தச்சர் மகனுக்கும், தட்டார் மகனுக்கும், சமையல்காரர் மகனுக்கும் அந்தத் திறன் தந்தை 'ஜீன்' வழி வருமாம். அதனால்தான் அத்தகைய கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தாராம்.

முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் காலடி எடுத்து வைக்கும் (அதுவும் இன்றைக்கு 68 ஆண்டு களுக்குமுன் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!) பிள்ளைகள் அரை நேரம் அதுவும் வெறும் மூன்று மணி நேரம் படிப்பு! மீதி நேரம் அப்பன் தொழில் என்றால் அந்தப் பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக் கல்வி நிலை எந்த அளவுக்கு இருக்கும்?

அந்த வயதிலேயே அப்பன் தொழிலைக் கற்று, நாலு காசைக் கையில் பார்த்து விட்டால், அவர்களின் மனநிலையும், நாட்டமும் எந்தப் பக்கம் சாயும்?

இது சாதாரண பொது அறிவு உடையவர்களுக்குக் கூடத் தெரிந்த சின்ன விஷயம் - இது மெத்தப் படித்த "தினமலர்" வகையறாக்களுக்குத் தெரியாமல் போயிற்று என்று சொல்ல மாட்டோம் - எப்படியாவது அவர் களின் குலகுருவான ராஜாஜியை விட்டுக் கொடுக்க முடியாதே - காப்பாற்றியாக வேண்டுமே - அந்தப் பூணூல் இனவுணர்வுதான் 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அவாளை ஆட்டிப் படைக்கிறது.

தச்சர் மகன், தட்டார் மகன், சமையற்காரர் மகன் என்று பட்டியல் போடும் பார்ப்பன எழுத்தாளர் புரோகிதர் மகன், கருமாதி மந்திரத்தையும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே ஏன்?

கருமாதி பார்ப்பான் மகன் மட்டும் காலையில் மூன்று மணி நேரம் பள்ளியில் படிப்பு; பிற்பகலில் - அக்கிரகாரத்து மாமி, பாட்டி கூடப் படித்தவர்கள் ஆதலால், அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். இந்தப் பார்ப்பனர் அல்லாதார் கல்வி வாய்ப்பை இந்தக் 'கண்ணி வெடி' மூலம் தகர்க்க வேண்டும் என்பது தானே ஆச்சாரியாரின் நோக்கம்.

அதுவும் போகட்டும்; அவர்கள் சொல்லும் தொழிற் கல்வியாகவே இருந்து தொலையட்டும் - அரை நேரம் பள்ளிப் படிப்பு என்பதோடு நிறுத்த வில்லையே! 6000 பள்ளி களை இழுத்து மூடினாரே ஆச்சாரியார் அதன் நோக்கம் என்ன?

1953இல் மட்டுமல்ல; 1937இல் ஆச்சாரியார் சென்னை மாநில முதல் அமைச்சராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியவர்தானே!

இவற்றை எல்லாம் அறியாத்தனத்தால் ஆச்சாரியார் செய்துவி டவில்லை. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம் - பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கோட்பாடு!

அதிலே ஆச்சாரியார் உறுதியாக இருந்த காரணத் தால்தான் அந்த வேலைகளை மிக சூட்சமமாக அவருக்கே உரித்தான நரித்தனத்தோடு செய்தார் என்பதுதான் உண்மை- உண்மையிலும் உண்மை!

'பிராமணர்' மற்றும் ஜாதிபற்றி ஆச்சாரியாரின் அழுத்தமான எண்ணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் 1953 குலக்கல்வித் திட்டம் எந்த அடிப்படையில் அவர் மூளையில் உருவானது என்பதை எளிதில் உணர முடியும்.

Infact in one occasion Rajaji proudly said that he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan April (1) 1978 Gandhiji's crusade Against Casteism).

முதல்அமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக பெருமையாக நேசிக்கிறேன்" என்றவர்தானே.

முதல் அமைச்சராக ஆச்சாரியார் இருந்தபோது திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் என்ன பேசினார்?

"அவரவர் ஜாதித் தொழிலை அவரவர் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்து விட்டால் வேலை எங்கி ருந்து கிடைக்கும்?"

('தி இந்து' 30.6.1952)

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆச்சாரியார் குலக் கல்வி திட்ட அறிவிப்புக்கு முன்பே  இந்தக் குலக்கல்வி மனப்பான்மையோடு இருந்தார் என்பதுதான்!

ஜாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. இதை நன்கு யோசித்துதான் நம் முன்னோர்கள்  வர்ணாசிரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்"

(கரூர் பசுபதிபாளையத்தில் ஆச்சாரியார் உரை 'சுதேசமித்திரன்' பக்கம் 1 - 29.1.1961)

ராஜாஜியின் இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால் தான் 1953இல் அவர் கொண்டு வந்தது ஜாதியின் அடிப்படையிலான  குலக் கல்வியே என்பது மிகப் பச்சையாகவே தெரியும் - புரியும்.

குலக் கல்வி திட்டத்தை எதிர்த்த தி.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வாரிசுகளை தங்கள் தொழிலான அரசியலிலே வைத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகிறார் 'தினமலர்' எழுத்தாளர்.

அரசியலில் ஈடுபடுவதும், பொதுத் தொண்டாற்று வதும் ஒரு தொழில் என்று சொல்லும் 'அதிமேதாவியை' இப்பொழுதுதான் பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக சிலவற்றை நம்மால் கேட்க முடியும்.

இந்தியாவில் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகக் கருதப்படும் சரத்பவாரின் மூதாதையர் மண் பாண்டம் செய்தவர்கள். அவருடைய மூதாதையர் தொழிலைக் கற்று அதிலே ஈடுபட்டிருந்தால் சரத்பவார் மராட்டிய மாநில முதல் அமைச்சராக ஒன்றிய அமைச் சராக வந்திருக்க முடியுமா?

மும்பை வந்து தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் நுழைந்து ஒரு நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது. அவர் வாழையடி வாழையாக அரசியல் குடும்பத்தில் வந்தவர் கிடையாதே!

இசைஞானி இளையராஜாவின் பாட்டனார்  எஸ்டேட் கூலித்தொழிலாளி. சொந்த வீடு கிடையாது.

"குலத் தொழிலைப் பின்பற்றி இருந்தால் இன்று உலகம் போற்றும் இசைஞானியாக ஒளிர முடியுமா?

பச்சைத் தமிழர் காமராசர் அரசியலில் ஆச்சாரியாரை வீழ்த்தி அவதானித்திருக்க முடியுமா?

தி.க., தி.மு.க. காங்கிரசின்  வாரிசு அரசியல் பேசும் இவர்கள் பா.ஜ.க.வில்  கொத்துக் கொத்தாக குடும்ப வாரிசுகளாக ஜொலிக்கிறார்களே! அதைப்பற்றி மூச்சு விடாதது ஏன்? (தனிப் பட்டியல் காண்க).

ஓ, மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி - அதுதானே பார்த்தோம்!


Posted by parthasarathy r at 06:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: குலக்கல்வி, தினமலர், பதிலடி

Friday, 12 February 2021

பெரியாரைப் பாராட்டிய தினமலர் (சிக்கனமும் தொண்டறமும்)


ஈ.வெ.ரா. 25 ஆயிரம் ரூபாயை மடியில் 
கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்குப் போய் இதோ பணம் இருக்கிறது… என்று சொன்ன சம்பவம் ஒன்று நடந்தது.

 என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, ஒரு வழக்கில்
தண்டனை கொடுத்துவிட்டனர் (1945). அன்று தீர்ப்பு சொன்னபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம்.

 ஜாமினில் எடுப்பதானால் பணம் வேண்டி இருக்கும் என்று யாரோ கூறினர். அதைக் கேள்விப்பட்ட  ஈ.வெ.ரா., 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்தார். 

" இதோ பணம், 25 ஆயிரம் நான் தருகிறேன். ஜாமினில் எடுங்கள் " என்றார். ஆனால் , ஜாமினில் 
எடுக்க முடியவில்லை. தவித்துப் போனார், ஈ.வெ.ரா.

. அண்ணாதுரை முதல்வரான பின், அவருக்குச் சிகிச்சை அளிக்க அமெரிக்கா செல்ல வேண்டும் 
என்று தீர்மானிக்கப்பட்டது. பெரும் அளவில் பணம் செலவாகும் என்று பேச்சு எழுந்தது. அதெல்லாம் அரசு செலவுதான். 

ஆனாலும், ஈ.வெ.ரா. பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக, எவ்வளவு செலவானாலும், நான் தருகிறேன்…என்று மன்றாடியபோது, கலங்காத கண்களும் கலங்கின..

ஒருபுறம் பொதுப்பணத்தில் ஒரு காசுகூட
தொடாத சிக்கன சிகாமணி. 

மறுபுறம், உற்றவருக்கு ஓடி வந்து உதவும் மனிதாபிமானம்.

இவை, ஈ.வெ.ரா., எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

- ”தினமலர்” வார மலர் 20.1.2013 பக்கம் 15

நன்றி : Sirpi Rajan
Posted by parthasarathy r at 21:59 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சிக்கனம், செலவு, தினமலர், தொண்டு, பெரியார்
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Followers

Blog Archive

  • ▼  2026 (16)
    • ▼  August (12)
      • பாரதி விழா (மணியம்மை)
      • பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத...
      • விரும்பியபடியே குழந்தை பெறலாம்! மூலிகை மன்னன் செ....
      • சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா (தோ...
      • முதலைக் கண்ணீர் வடிப்பதேன்? - செ.ர.பார்த்தசாரதி செ...
      • நான் பாரதியாரைச் சந்தித்தால் தொகுப்பிலிருந்து….-கி...
      • சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார...
      • கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி
      • சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ....
      • பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி
      • பனிக்கட்டி வழுக்குவது ஏன்? - மூலிகை மன்னன் செ.ர.பா...
      • உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும் - செ.ர.பார...
    • ►  July (3)
    • ►  March (1)
  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • வண்ணார் வரலாறு
    ஒற்றைப் பத்தி -  January 31, 2021  • Viduthalai 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்று பீற்றுகிறார்கள் - அந்த மதத்தில் மனிதர்களைப் பிறப்பின...
  • சங்ககாலம் பொற்காலமா? - 2
      பிப்ரவரி 01-15 , 2014 உண்மை  இதழ் பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம் – பேராசிரியர் ந.வெற்றியழகன்   சிறப்பிழந்த சேரமன்னர்க...
  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
     ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தே...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!
    சென்னை  வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்ற...
  • இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -
     கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டு...
  • பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி
    ‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்பு...
  • இராமாயணம் ஒரு கட்டுக்கதை!
    சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அ...
  • நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை
      நான் பாரதியாரைச் சந்தித்தால்... கி.வீரமணி கட்டுரை ( பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981 ஆம் ஆண்டில், 'குமுதம்' ஏடு ஆசிரியர் க...

Labels

  • 100 நாள்
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அசைவம்
  • அசோக வனம்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசிதழ்
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆண்
  • ஆண்டு விழா
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயசு
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலக்குவன்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உண்மை இதழ்
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுக்கதை
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்தவம்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடிஅரசு
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குமுதம்
  • குரான்
  • குலக்கல்வி
  • குழந்தை
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சாகு மகராசர்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சித்த மருத்துவம்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாலி
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாத்திகர் மாநாடு
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பல்லி
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பனிக்கட்டி
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பாரதி
  • பாரதியார்
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவம்
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புரட்டு
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மருத்துவர்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முதலைக் கண்ணீர்
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மூலிகை மன்னன்
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயவாடா
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.