Showing posts with label தை. Show all posts
Showing posts with label தை. Show all posts

Sunday, 9 February 2020

தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


ராமநாதபுரம் மாவட்டம் கீழக் கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில்  உள்ள ஜும்மா பள்ளி வாசலில் காலச்சக்கர பழங்கால கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் தை மாதத்தை தமிழ் வருட ஆரம்ப மாதமாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ராயணத்தில் பிரவே சிக்கும் மாதமாகிய தை மாதத் தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சனாயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ஆடியில் ஆரம் பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டே காலத்தை கணித்துள்ளார்கள். பூமியின் சுழற்சியால் சூரியன் பூமியின் தென்பகுதியில் இருந்து வடபகுதியின் கடைசிக்கும், வடபகுதியில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக்கொள்கிறது.

மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு சூரியனுக்கு பொங்கலிட்டு உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தே தொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழன் தன் களஞ்சியத்தில் உள்ள பழைய தானியங்களை எடுத்து தர்மம் செய்துவிட்டு புதிய தானியங்களை கொள்முதல் செய்துவிடுவாராம்.

இதுபோன்ற பல சிறப்புகள் தை மாதத்திற்கு இருந்து வருகிறது.இதன்படி 2006.1.1ஆம் காலத்தில் இருந்த தமிழக அரசு தை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்கால கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது.

300 ஆண்டு களுக்கு முன்பு வரை தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது. இந்த தகவலை கீழக்கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

- விடுதலை ஞாயிறு மலர் 11 1 20