Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts

Friday, 7 August 2026

சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி


சைவமா?-அசைவமா?


மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி                                    

"சைவ உணவு மட்டும் தான் நலன் பயக்கும் உணவு" என்று தவறான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இறைச்சிகளில் தான் நமது உடல் எளிதாக செரிமானம் செய்து கொள்ளக் கூடிய முறையில் சத்துக்கள் உள்ளன.


எப்படி பென்றால், உயிரினங்கள் உண்டவுணவை கடினப்பட்டு செரிமானம் செய்து தனது உடலில் சேர்த்து வைக்கின்றன. அதை நாம் எளிதாக உண்டு விடுகிறோம்.


எளிதான முறையில் உள்ளதால் நமது உடல் செரிமானம் செய்து சேர்த்து வைத்துக் கொள்கிறது. நாம் மிகுதியாக சாப்பிடுவதால் மிகுதியாக சேர்த்து வைத்துக் கொள்கிறது, இதனால் நோய் வருகிறது.


ஆகையால் சரியான அளவில் உணவை உண்டால் நலமாக இருக்கலாம்.


சிலர் கடவுள் மனிதனை சைவ விலங்காகதான் படைத்தான், அதனால்தான் விலங்குகளுக்கு உள்ள குத்திக் கிழிக்கும் வளைந்த பற்களை மனிதனுக்கு கொடுக்க வில்லை என்கின்றனர்.


ஒருசிலர் 'மனிதன் 'சைவ' விலங்கு', அதனால் தான் இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு உள்ளது போல் வளைந்த குத்திக் கிழிக்கும் பற்கள் இல்லை. 'மனித இனத்தை சேர்ந்த குரங்கும் சைவ உணவையே உண்கிறது' என்று கூறுகின்றனர்.

[குத்திக் கிழிக்கும் பற்கள் உள்ள தாவர உண்ணியான நீர்யாணை]


கடவுள் பெயரால் சொல்லப்படும் காரணம் முழுக்க முழுக்க பொய்யே!


இப்பொழுதுதான் கட வுள்களுக்கு கெல்லாம் "சைவ வேடம்’ போடப்படுகிறது.


வேதங்களில் கடவுள்களுக்கு உயிரினங்களை வெட்டிப் படைப்பதை தான் முக்கியத் தொழிலாக சொல்லப்படுகிறது. வேதப் படி பார்ப்பனர்கள் அனைவரும் ஆடு, மாடு, கோழி, குதிரை என்று அனைத்தையும் வெட்டித்தான் உண்டிருக்கின்றனர்.


கவுதம புத்தரின் கொள்கை பரவுதல் காரணமாக தாக்குபிடிக்க முடியாமல் இடையில் பார்ப்பனர்கள் 'சைவ' வேடம் போட ஆரம்பித்துவிட்டனர்.


மனிதன் சைவ விலங்கா?


உயிரினங்களுக்கு அதனதன் பழக்கவழக்கங்களுக்கு உறுப்புகள் உள்ளன' என்பது உண்மைதான்.


அந்த அடிப்படையில்தான் பற்களும் அமைந்துள்ளன.


பற்கள் குத்திக்கிழிக கூடிய முறையில் இல்லாததால், இறைச்சிகளை சீரணிக்க முடியாமலா இருக்கிறான் மனிதன்.


அனைத்தையும் சீரணிக்கக் கூடிய வகையிலேதானே மனிதன் உள்ளான்.


விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவன் தோன்றுவதற்கு அடிப்படையான உயிரினங்கள் இறைச்சியை குத்திக் கிழித்து உண்ணும் உயிரினங்களாகத்தான் உள்ளன.


“எந்த ஒரு உறுப்பையும், எந்த ஒரு விலங்கும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அந்த உறுப்பு காலப்போக்கில் வளர்ச்சி குன்றி பிறகு மறைந்து கூட போய்விடும்" இது அறிவியல் உண்மை


"மனிதனுக்கு குத்திக்கிழிக்கும் அவசியம் இல்லாமல் போய்விட்டதால், மனிதனின் பற்களும் வடிவ மாற்றம் பெற்றுவிட்டன” என்பதுதான் உண்மை.


சைவ உணவால் கொழுப்பு சேராதா?


கொழுப்பு பொருள்கள் உடலில் மிகுதியாகச் சேர்வதால் உடலில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது 'மாரடைப்பு' நோய்’ ஆகும். இந் நோய்தான் பெரிய அளவில் அச்சுறுத்துகிறது.


'சைவம்' என்று சொல்லப்படும் பால், வெண்ணெய், நெய், எள், நிலக்கடலை, தேங்காய் மற்றும் பலவகை பருப்புகளில் கொழுப்பு நிறைந்துள்ளது. சில வகை காய்கறிகளில் மட்டுமே கொழுப்பு குறைவாக உள்ளது.


ஆகையால் 'சைவ உணவு சாப்பிட்டால் மட்டும் கொழுப்பு இதயக் குழாய்களை அடைக்காது' என்று சொல்வது தவறானதாகும். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதை என்னால் காண்பிக்க முடியும்!


அதோடு, ‘புல்'லை மட்டுமே தின்னும் செம்மறி ஆட்டின் உடலில் எப்படி கொழுப்பு சேர்கிறது!

அதற்கும் சில அடிப்படைக் காரணம் உள்ளன.


60 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை கொழுப்பு சத்துக்கள். உடலில் உள்ள பல சுரப்பிகளின் மூலமாக குடலிலும் கல்லீரலிலும் தயாரிக்கப்படுகிறது. மீதிதான் உணவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொழுப்புச் சத்தை சாப்பிட்டால்தான் உடலில் கொழுப்பு சேரும் என்பதல்ல; எதைச் சாப்பிட்டாலும் உடலே கொழுப்பை உண்டாக்கிக் கொள்ளும் என்பதுதான் உண்மை.


அதனால்தான் புல்லை மட்டுமே தின்னும் ஆடும், மாடும் கொழுகொழுவென கொழுப்புடன் இருக்கின்றன.



கொழுப்பால் உடல் பாதிக்குமா?


கொழுப்பால் உடல் பாதிப்படையாது. கொழுப்பு உடலுக்கு தேவையே! அளவை மீறும் போது தான் கோளாறு வருகிறது.


கொழுப்பின் வகைகள்


கொழுப்பில் நான்கு வகை உண்டு. இதில் முக்கியமானது (1) குறைந்த அடர்த்தி கொழுப்பு, (2) மிகு அடர்த்தி கொழுப்பு என்பவையாகும்.


இதில் குறைந்த அடர்த்தி கொழுப்பு மற்ற கொழுப்பு சத்துக்களை உடல் முழுக்க எடுத்துச் சென்று அணுத் திசுக்களுக்கு ஊட்டுகின்றன. திசுக்களுக்குள் சென்ற குறைந்த அடர்த்தி கொழுப்பை மிகு அடர்த்தி கொழுப்பு ஈர்த்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று சிதைவடைய வைக்கிறது.


ஆனால், இரத்தத்தில் குறைவு அடர்த்தி கொழுப்பு 160 மி.லி. கிரா முக்கு மேல் இருந்தாலும் 'மிகு அடர்த்தி கொழுப்' பின் அளவு 35 மி.லி. கிராமுக்கு குறைவாக இருந்தாலும் திசுக்களிலேயே குறை அடர்த்தி கொழுப்புகள் தங்கி; இரத்த நாளங்களில் படிந்து அடைக்க ஆரம்பித்துவிடும்.


மிகு அடர்த்தி கொழுப்பைப்பற்றிய கவலையே தேவையில்லை. அது கல்லீரலில் சிதைவடைந்துவிடும். 


 இரண்டு வகை கொழுப்புமே உடலுக்குத் தேவை தான், ‘அளவு சரியாக இருக்க வேண்டும்’

என்பதுதான் முக்கியம். 


இறைச்சி வகைகளில் மிகுதியாக, குறைவு அடர்த்தி கொழுப்புகளே உள்ளன. ஆகையால் இறைச்சியை அளவோடு சாப்பிட வேண்டும்.


மற்ற இறைச்சி வகைகளை விட கோழி இறைச்சியில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. 


ஆகையால் கோழி இறைச்சியை மற்ற இறைச்சியைவிட தாராளமாகச் சாப்பிடலாம்.


உற்சாகமூட்டும் கோழி!

அதோடு கோழி இறைச்சியில் 'டைரோசின்' என்ற அமினோ அமிலம் இருப்பதால் மூளையில் டோபா மைன், நாராஃபிறெய்ரைன் என்ற வேதிப் பொருள்களின் அளவை மிகுதியாக்கும். இவை மனதிற்கு உற்சாகத்தையும் செயல்பாட்டில் வேகத்தையும் அளிக்கிறது. 


அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி முடிவு, ''டைரோசின் உடலுக்கு சக்தி தந்து பதற்றமான நிலைமைகளை சமாளிக்கும் திறனை தருகிறது" என்று கூறுகிறது.


புற்றுநோயைத் தடுக்கும் மீன்


மீன் உணவில் மிகுதியாக அடர்த்தி மிகுந்த கொழுப்பே இருக்கிறது. அடர்த்தி மிகுந்த கொழுப்பு: அடர்த்தி குறைந்த கொழுப்பை கரைக்கும்; இதனால், மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது. ஆதலால் மீனை மிகுதியாக உண்ணலாம்.


மீன் உணவு கொழுப்பை கரைப்பதோடு அல்லாமல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.


நிலத்திலுள்ள உணவு பொருள்களில் 'அயோடின்' சந்து மிகமிகக் குறைந்த அளவே உள்ளது. ஆனால், கடல்வாழ் உயிரினங்களில் 'அயோடின்' சத்து நிறைந்துள்ளது. ஆகையால் மீன் உணவை உண்பதால், அயோடின் குறைவால் ஏற்படும் 'தைராய்டு அழற்சி. நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.


மூளை வளர்ச்சிக்கு மீன்


'ஸ்பெயின் நாட்டு ஊட்டச்சத்து நிபுணர்கள், மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது' என்கின்றனர். ஆகையால் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மீன் கொடுத்துப் பழக்க வேண்டும். குறைந்தது வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். 


கருவுற்ற தாய்மார்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் மீன் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


உற்சாகமூட்டும் புரதம்


தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு 'கார்போ அய்ட்ரேட்' நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில், அவர்களுக்கு களைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு மாறாக புரதம் நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில் அவர்களுக்கு உற்சாக மேற்பட்டது; என்றும் சத்துணவு ஆராய்ச்சியாளர் 'போலி ஸ்ப்ரிங்' என்பவர் கூறுகிறார்.


'கார்போ அய்ட்ரேட்' எனப்படும் மந்தமாக்குகிற மாவுச்சத்து பொருள் தாவர வகை உணவுகளில் தான் நிறைந்துள்ளது.


ஆனால், உற்சாகமூட்ட கூடிய புரதப் பொருள் இறைச்சி வகைகளிலே தான் நிறைந்து உள்ளது.


இறைச்சியில் இரும்பு

இறைச்சியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இறைச்சியை புறக்கணித்தால் இரும்பு சத்து குறைவு ஏற்படும். உடலில் இரும்பு சத்து மிகுதியாக தினமும் 85 கிராம் இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


இறைச்சியை முழுமையாகத் தவிர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை. தீமையே மிகும்!


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 3, 12.4.1998




Saturday, 11 June 2022

'சைவம்' ஒரு சர்ச்சை! - செ.ர.பார்த்தசாரதி


'சைவம்' ஒரு சர்ச்சை!

'சைவம்' என்றால், கறி (ஊன்), மீன், முட்டை போன்ற பொருள்களை சாப்பிடாமல் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது.

 'சைவம்' - பெயர் வரக் காரணம்

 தமிழ் நாட்டில் சைவ சமயத் தவர்கள் தான் இந்த முறையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். அதனால் இந்த முறைக்கு 'சைவம்' என்ற பெயர் வந்துவிட்டது.

வட நாட்டில் வைணவம்' என்றால்தான் 'சைவம்' என்று பொருள்.

சைவம் என்றால் என்ன?

இந்த சைவ முறை, வீட்டுக்கு வீடு; நாட்டுக்கு நாடு, வேறுபடுகிறது.

வெளிநாட்டு வகையை சேர்ந்த 'லகான்' கோழி முட்டையை சில வீடுகளில் 'சைவ முட்டை' என்று
உண்கின்றனர்.

காஷ்மீர், மேற்கு வங்கம், இலங்கை போன்ற இடங்களில் மீனை 'ஜலப்புஷ்பம் என்ற பெயராலே 'சைவம்'' என்று பார்ப்பனர்கள் உட்பட உண்கின்றனர்.

இந்தியாவில் 'சைவம்' என்று சொல்லப்படும் 'பால்' பொருள்களை சீனாவில் 'அசைவம்' என்று ஒதுக்கி
விடுகின்றனர்.

ஆங்கிலத்தில் சொல்லப்படும் 'விஜிடேபுள்' என்பதன் பொருள் 'தாவர உணவு' என்பதாகும்.

பொதுவாக பார்க்கப்போனால்;  சைவ உணவு உண்ண வேண்டும் என்று சொல்லப்படுவதன் நோக்கம்; "எந்த உயிரையும் துன்புறுத்தவோ கொல்லவோ! கூடாது" என்பதுதான்.

விவேகானந்தர் கூற்று

விவேகானந்தர் ஒரு முறை கூறினார்;

எந்தவொரு உயிரையும் வஞ்சிக்காமல்; எந்த ஒரு மனி தனாலேயும் வாழ முடியாது' என்று.

முதல்வர் கலைஞர் கேட்ட கேள்வி!

ஊன் (அசைவ) உணவை விட்டு விட்டு; இப்பொழுது 'சைவ உணவையே' உண்பதாக கூறியுள்ள தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள்; இளமைக் காலத்தில் ஒரு முறை, கிருபா னந்தவாரியாரைப் பார்த்து. 'உயிரை கொல்லக்கூடாது என்கிறீர்களே!' கீரைத்தண்டை

(6-ம் பக்கம் பார்க்க)

5-ம் பக்கத் தொடர்ச்சி...

வேரோடு பிடுங்கி சமைத்து உண்கிறீர்களே! இது கொலை அல்லவா? என்று கேட்டாராம். 

கிருபானந்த வாரியார் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட: இன்றளவும் இதற்கு பதில் இல்லையே! என்று கூறியிருந்தார்.

எது சரி?

ஒரு மாட்டைக் கொள்றால் சுமார் 200 பேர் பங்கு போட்டு உண்ணலாம். ஆனால் 'சைவ உணவு" என்று சொல்லப்படும் முளைக்கீரைகளில் சுமாராக 200 அய் கொன்று ஒருவர் தான் உண்ண முடியும்.

ஒன்றை கொன்று 200 பேர் சாப்பிடுவது சரியா? 200 அய் கொன்று ஒருவர் சாப்பிடுவது சரியா? முதலில் கூறப்பட்ட வழியே சிறந்த வழி!

மனித இனம் வாழ பெரியார் கூறிய வழி!

''மனித இனப்பெருக்கத்தினால் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது. இதை ஓரளவு தடுக்க வேண்டுமானால், 'இறைச்சி' உணவை உண்டு வந்தால்தான் முடியும். அதோடு சத்தான உணவும் இறைச்சிதான். ஆகையால் இறைச்சி உணவை அனைவரும் உண்ண வேண்டும்" என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

அதோடு மனித இனப்பெ ருக்கத்தினால் நிலப்பரப்பில் தாவர  உணவும், இறைச்சி உணவும் கிடைக்காமல் போகும்போது முழுக்க முழுக்க மனிதன் கடலினுள் இருக்கும் 'மீன்' இனத்தை நம்பித்தான் இருக்க முடியும்" என்றும் கூறியுள்ளார்.

பெரியார் தத்துவம்தான் இன்றைக்கும். நாளைக்கும் பொருந்திவரக் கூடியது.

உயிரினங்களை கொன்று தின்னாத மனிதனே உலகில் கிடையாது.

ஏதாவது ஒரு வகையில் உயிரினங்களைக் கொன்று கொண்டுதான் இருக்கிறனர்.

. 'தயிர்' எனப்படும் 'பால்' பொருள், "ஈஸ்ட்டு' எனப்படும் பாக்டீரியாவால்தான் உண்டாக்கப்படுகிறது. 
தயிரை சாப்பிடும்போது அதில் உள்ள 'ஈஸ்ட்டு'களையும் விழுங்கி சீரணித்து விடுகிறோம்.

பார்ப்பனர்கள் அனைவரும் இதைத்தான் செய்கின்றனர். 'சைவ' வேடம் போடுகிறவர்களை மூட்டை பூச்சி, கொசு கடித்தால் சும்மாவாகவா இருக்கிறார்கள்?

'தோல்', பொருள்களைப் பயன்படுத்தாதவர்கள் யார்? தோள்பை, பணப்பை (மணி பர்சு), கைப்பை, காலணிகள். உடைகள் என்று வகைவகையாக பயன்படுத்துகிறார்களே! 

'ஷூ' கம்பெனிகளை பலபார்ப்பனர்கள் வைத்துக் கொண்டுள்ளனரே! 'ஷூ'வுக்கு பாலிஷ் தயார் செய்யும் கம்பெனிகளைக்கூட வைத்துள்ளனரே! 

இனிதான 'தேன்' எப்படி கிடைக்கிறது? தேனீக்களின் எச் சிலுடன் பூவின் தேன் கலக்கப்பட்டு தேன் கூட்டில் உமிழப்படுகிறது. அந்த எச்சிலை தான் உண்கின்றனர். அப்பொழுது எச்சில் தீட்டு என்ன ஆனது!

பட்டுப் பூச்சியின் எச்சில் தான் பட்டுத்துணி, பட்டுப் பூச்சிகளை சுடு நீரில் கொன்று தானே பட்டாடைகள் தயாரிக்கப்படுகின்றன. அப்பொழு தெல்லாம் ஏன் உயிர்க் கொலை தெரிவதில்லை!

சைவத்தை யாராலும் கடைப்பிடிக்க முடியாது!. எல்லோரும் சைவ வேடதாரிகளே! சைவர்கள் அல்ல!

- செ.ர.பார்த்தசாரதி

(21.9.97, விடுதலை ஞாயிறு மலர், பக்கம் -5,6)
-