வெற்றிவலவன் பதிவுகள்

மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு
Showing posts with label பச்சையப்பன் கல்லூரி. Show all posts
Showing posts with label பச்சையப்பன் கல்லூரி. Show all posts

Saturday, 19 February 2022

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கை : உண்மை வரலாறு


பிற இதழிலிருந்து... 
   November 01, 2021 • Viduthalai

கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

‘இந்து தமிழ்’ நாளிதழில் 22.10.2021 அன்று வெளியான ம.வெங்கடேசனின் ‘பச்சையப்பன் கல்லூரியில் பட்டியலினத்தோர் சேர்க்கப் பட்டது எப்படி?’ கட்டுரையை வாசித்தேன். ‘நீதிக்கட்சி ஆதிதிராவிட மக்களுக்காக எது வும் செய்யவில்லை’ என்பதாக உருவாக்கப் படும் அவதூறுகள், கட்டுக்கதைகளின் ஒரு பகுதிதான் இது!

பச்சையப்பன் கல்லூரிப் பிரச்சினை பற்றி ரெட்டைமலை சீனிவாசன் 1893-இல் குறிப்பிடுகிறார். 1906-இல் அயோத்திதாசரின் ‘தமிழன்’ ஏட்டில் ஒரு குறிப்பு இருக்கிறது. 1917-இல் பிட்டி.தியாகராயர், தான் அறக்கட்டளையில் தலைவராக இருந்தபோதே பச்சையப்பன் கல்லூரியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்பட்டது பற்றிப் பேசியிருக்கிறார். இதற்காக எம்.சி.ராஜா குரல் கொடுத்திருக்கிறார். 1921-ல் சட்டசபையிலேயே இப்பிரச்சினை பற்றி நீதிக்கட்சியின் ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனாரும் முகமது உஸ்மான்சாகிபும் பேசியிருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு காலகட்டங்களிலும் பேசப்பட்டுவந்த பிரச்சினைதான், 1927-இல் வழக்காக வந்து மீண்டும் கவனம் பெறுகிறது.

பச்சையப்பன் கல்லூரியில் மட்டுமில்லை; பெரும்பாலான இடங்களிலும் இதுதான் நிலை. ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருந்ததால்தான், இரட்டை ஆட்சி முறையில் இருந்த குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்டு, பள்ளிக் கல்வி தொடங்கி, கல்லூரிக் கல்வி வரை அனைத்து மக்களுக்கான உரிமைக்காகப் பல ஆணைகளை, உதவிகளை நீதிக்கட்சி அரசு செய்யத் தொடங்கியிருந்தது.

* நான்காம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த ஆதிதிராவிட மாணவர்களுக்கு, மாதத்துக்கு இரண்டு ரூபாய் முதல் ஏழு ரூபாய் (ஒரு பவுன் 13 ரூபாயாக இருந்த காலகட்டத்தில்) கல்வி உதவித்தொகை.

* இலவச நண்பகல் உணவு.

* வணிகக் கல்வி படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்குக் கல்விக் கட்ட ணத்தைத் திருப்பியளித்தது.

* மருத்துவக் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.

* பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர் களுக்கென்று தனி வகுப்புகள் அமைக் காமல், எல்லா வகுப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்கான ஆணை.

* ஆதிதிராவிட மாணவர்களை அதிகம் சேர்க்கும் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி உதவி; சேர்க்காத பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட மாட்டாது என்ற ஆணை.

* கல்லூரிகளில் அனைத்து வகுப்பாரும் சேர்க்கப் படுவதற்கான மாணவர் சேர்ப்புக் குழுக்கள் அமைப்பு.

இப்படி, ஒவ்வொரு கட்டமாக ஆதிதிராவி டர்களுக்கான தடைகளெல்லாம் தகர்க்கப் பட்டு வந்தன நீதிக்கட்சியால்!

பெரியாரின் தாக்கம் தந்த மாற்றம்

காங்கிரசில் இருந்தபோதும், வெளியேறிய பிறகும் இத்தகைய ஜாதி-தீண்டாமை ஒழிப்புக் காகவும், சமூக நீதிக்காகவும்தான் பெரியார் போராடினார்; குரல்கொடுத்தார். 

‘‘பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப் புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டப் படாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்து சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ முன்னே றவே இல்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமே யானால், இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும், பிராமணக் கொடு மையும் நமது நாட்டில் இருக்குமா?’’ என்று கேட்டவர் பெரியார். (குடிஅரசு 8.11.1925) இந்துக்களாகக் கருதப்பட்டு, ஆதிதிராவி டர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்பது மட்டும் பிரச்சினையில்லை. இந்துக்கள் அல்லாதோர் என்ற வகையில், இஸ்லாமி யருக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடம் மறுக்கப் பட்டுவந்தது. அனைவருக்குமான பிரச்சினை யாகத்தான் அதை நீதிக்கட்சி அணுகியது.

நீதிக்கட்சியின் கடுமையான தீர்மானம்

1927 அக்டோபர் 22, 23 ஆகிய இரு நாட்கள் பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான நீதிக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியார் எழுச்சியுரை ஆற்றினார். அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான சுரேந்திரநாத் ஆரியா கொண்டு வந்த முக்கியமான தீர்மானம் எது தெரியுமா?

‘‘பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கல்லூரியின் அறங்காவலர்களுக்கு வலியுறுத்தி இந்த மாநாடு கூறுகிறது.

...இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்றுச் செயல்படத் தவறினால், அக்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது” என்ற கடுமையான எச்சரிக்கையுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலை பச்சையப்பன் கல்லூரியில் மட்டும் இல்லை என்பதை, இதே மாநாட்டில் ஆர்.வி.சொக்கலிங்கம் என்பவர் முன்மொ ழிந்த தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது. கல்லூரி சேர்க்கைக் குழுக்களையும் தாண்டி, தனித்து வமான விதிமுறைகளைக் காட்டி பச்சையப்பன் அறக்கட்டளையில் இந்துக்கள் அல்லாதோர் தவிர்க்கப்பட்டுவந்த நிலையில், ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளி களுக்கு நிதி உதவி ரத்து என்ற ஆணையை (கல்வி.87, 16.1.1923) கல்லூரிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதைத்தான் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

என்.சிவராஜின் வரலாற்றில்

1927-இல் நடைபெற்ற வழக்கில், அறங் காவலர் குழுவின் முடிவு சாதகமாக இல்லாத சூழலில், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிறகு, நீதிக்கட்சி ஆதரவோடு சட்டமன்றத்தில் இடம்பெற்றவரான என்.சிவராஜ், அவரது மாமனார் வி.ஜி.வாசுதேவப் பிள்ளை ஆகியோரின் முயற்சியாலும், நீதிக்கட்சியின் கோபதி நாராயணசுவாமி செட்டி அவர்களின் தலையீட்டாலும் 1928-இல் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர். ஆனால், ம.வெங்கடே சனோ பிரச்சினை முடியும் வரை நீதிக்கட்சியும், பெரியாரும் இது பற்றி எதுவும் பேசவே இல்லை என்று உண்மைக்கு மாறான கருத்தை முன்வைக்கிறார்.

பனகல் அரசரின் ஆலோசனையிலேயே சுப்பராயன் செயல்படுகிறார் என்று கருதித் தானே, சைமன் கமிஷனை சாக்காக வைத்து சுயராஜ்ஜியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது; அதை திராவிடர் ஆதரவு ஆட்சி என்று குறிப்பிட்டதில் என்ன தவறு?

நன்றி: 'இந்து தமிழ் திசை' (1.11.2021)

Posted by parthasarathy r at 02:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ஆதிதிராவிடர், பச்சையப்பன் கல்லூரி

Sunday, 24 October 2021

பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்பட்டது எப்படி?

#பச்சையப்பன்கல்லூரி #பெரியார் #நீதிக்கட்சி #என்_சிவராஜ்

இந்து சமய அறநிலையத்துறை தொடங்கும் கல்லூரியில் பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்றொரு அரசு விளம்பரம். அதைத் தவறென்று கூறி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கை விடுக்கிறார். (16.10.2021 விடுதலை)

அதில் பழைய வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டும் அவர், பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக நினைவூட்டலாக ஒரு செய்தியைச் சொல்லிச் செல்கிறார்.

 //1928-க்குமுன் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லீம் மாணவர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது; அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சி தான் மாற்றியது. (காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து; அவரது அறக்கட்டளைமூலம் நடத்தப்படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டுகாலம் இருந்ததை தந்தை பெரியார் - சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது).// என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிவிட்டார். இது பொய் என்கிறார் ஒருவர்.

அதற்குச் சான்றாக தான் எழுதிய கட்டுரையையும் காட்டுகிறார். மறுக்க வேண்டியதில்லை. அவர் எழுதியிருக்கும் செய்திகள் உண்மையானவை தான் என்போம். ஆனால், முழுமையானவையா? நிறைவானவையா? அக் கட்டுரையில் அவர் கவனமாகத் தவிர்த்திருக்கும் செய்திகள் என்ன? அல்லது கவனம் கொள்ள மறுத்திருக்கும் செய்திகள் என்ன? தான் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வழக்கு தொடர்ந்ததா என்பது பற்றித் தகவல்கள் இல்லை என்று சொல்லும் கட்டுரையாளர் திரு.ஏ.பி.ராஜசேகரன், நீதிபதியின் அவதானிப்பை ஏற்றுக்கொண்ட அறங்காவலர்கள் ஆதிதிராவிடர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க  முடிவெடுத்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றினர் என்று எழுதியுள்ளார். ஆனால், அந்த அறங்காவலர் குழுவில் என்ன நடந்தது என்பதை 'குடிஅரசு' சொல்கிறது. இக் கட்டுரையின் பின்பகுதியில் அதுபற்றி குறித்துள்ளோம்.

நினைவூட்டலாக ஆசிரியர்  சொன்ன செய்திகள் பொய்யென்று சொல்லும் அவ்வழக்குரைஞர், ஏன் சில செய்திகளை, நீதிக்கட்சி, பெரியார் ஆகியோரின் முன்னெடுப்புகளை மறைக்கிறார்? அல்லது என்ன செய்தியை விதைக்க முயல்கிறார் என்பதை அவரே உணர்வார்.

ஆசிரியர் வீரமணி சொல்லியிருப்பவை பொய்யா? முதலில் அதைப் பார்ப்போம்.

* //1927 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரே ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்த்துக் கொண்டதில்லை. சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது வழக்கு தொடுத்து வழக்கில் வென்ற பிறகே 1928முதல் ஆதிதிராவிட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். // சான்று: http://adi-dravidar.blogspot.com/p/6.html
அப்போது சிவராஜ் நீதிக்கட்சியின் சார்பில் மேலவை உறுப்பினராக இருந்தார்.

* 1927 அக்டோபர் 22, 23 தேதிகளில் சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடு. பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி (முதலியார்), தந்தை பெரியார் உள்ளிட்ட நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். அதில் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சுரேந்திரநாத் ஆரியா முன்மொழிந்த தீர்மானம்: "பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை கல்லூரியின் அறங்காவலர்களுக்கு வலியுறுத்தி இந்த மாநாடு கூறுகிறது. இவ்வாறு அவர்களை சேர்க்காமல் ஒதுக்குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்பதாகும்.” பின்னர் விவாதத்துக்குப் பிறகு சேர்க்கப்பட்ட வரிகள்: “இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்று செயல்படத் தவறினால் அக் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.” இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அதே மாநாட்டில் ஆர்.வி.சொக்கலிங்கம் இதே போன்ற மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தார். “ஆதிதிராவிடர், கிறித்துவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மான்யங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.” அத் தீர்மானமும் நிறைவேறியது.

* 1927 நவம்பர் குடிஅரசில் காட்டமான “ஆதி திராவிடர் - விபசாரி மக்களை விட இழிந்தவர்களா?” என்ற கட்டுரை கேட்கிறது - ”தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா?”.

* அதையொட்டி நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா மாநாட்டில், வழக்கின் முடிவில் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கப்பட்டதற்கு வரவேற்பும், இதே போல் கிறித்துவ, முஸ்லிம் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற தீர்மானமும், பச்சையப்பன் அறக்கட்டளையில் ஆதிதிராவிடர் சேர்க்கப்படுவதற்குத் தடையாயிருந்த திரு.வெங்கடேச சாஸ்திரலு பார்ப்பனரைக் கண்டித்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* பச்சையப்பன் அறக்கட்டளையிலிருந்து கொண்டு கலாட்டா செய்துகொண்டிருந்த 'வெங்கடேச சாஸ்திரலு’ என்ற பார்ப்பனரைப் பற்றி எழுத மனம் வராததேன்? காலச்சுவடு தடுக்குமா?

* காலச்சுவடு கட்டுரையில் அவர் எடுத்துக்காட்டியிருக்கும் பக்கங்களில் மேயர் என்.சிவராஜ் அவர்களைப் பற்றிய பதிவே காணாமலிருப்பதேன்? தெரியவில்லை. சிவராஜ் அவர்களின் வரலாற்றில் இருக்கும் செய்தி தவறா? அவர் எதுவும் செய்யவில்லையா இந்தப் பிரச்சினையில்? எது உண்மை?

* ஆதிதிராவிட மக்களை சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்று ’தீர்மானம்’ இயற்றினார் என்று சர்.பிட்டி. தியாகராயர் குறித்த அபாண்டங்களுக்கெல்லாம் தன் முகநூல் பதிவில் தூபம் போடும்  வழக்குரைஞர், (அப்படி ஒரு தீர்மானம் இருந்தால் அவர்கள் எடுத்துக் காட்டட்டும். அப்படி அபாண்டம் பேசப்பட்ட பி&சி மில் பிரச்சினையில் மக்களைத் துண்டாடியவர்கள் யார் என்பதையெல்லாம் ஏற்கெனவே ஆய்வாளர் க.திருநாவுக்கரசு விரிவாக எழுதிவிட்டார்) இப்போதுவந்து ஆர்.எஸ்.எஸ். கூட்டம் வைக்கும் அபாண்டங்களைத் தூக்கி சாட்சிக் கூண்டில் நிறுத்துகிறார், பாவம்!

* சர்.பிட்டி தியாகராயர் பச்சையப்பன் கல்லூரி அறங்காவல் குழுவில் இருந்தது பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கப்படும் முன்னான காலம். (1917-ல் அது குறித்து அவர் பேசுகிறார்.) அங்கு அவருக்கு நடந்த அனுபவம் தான் பின்னாளில் பச்சையப்பன் கல்லூரி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிலையங்களிலும் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாதார் மாணவர்கள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகத் தனிக் குழுக்களை அமைக்க ஏற்பாடு செய்யக் காரணமாயிற்று. (ஏ.பி.பாத்ரோ நீதிக்கட்சி அமைச்சராக இருக்கும்போது!) அவை நடைமுறைக்கு வர பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

* "ஆதிதிராவிடர், கிறித்துவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மான்யங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது” என்றொரு தீர்மானத்தை மேலே கண்டோமே, அதற்கு முன்னோடி என்ன தெரியுமா?  

“தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படமாட்டாது” என்ற (கல்வி 87, 16.1.1923) அரசாணை!

அதுமட்டுமல்ல, “தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களை மிகுதியாகச் சேர்க்கும் பள்ளிகளுக்கு பண உதவி மிகுதியாக வழங்கப்பட்டமை (ஆணை 205 கல்வி, 11.2.1924)”, மருத்துவக் கல்வி பயில நிதி உதவி, ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள வாங்க நிதி, ஆதி திராவிடர் அணுகும் இடத்தில் பள்ளிகள் அமைய வேண்டும் என்பதற்கான ஆணைகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிற்காலத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் சேர்த்துக் கொள்ள மறுத்தால் அனுமதி ரத்து என்பதுவரை படிப்படியாக மாற்றங்கள் வந்தன.

* இந்தக் கல்வி உரிமைப் போராட்டம், ஆணைகளின் தொடர்ச்சி தான் பச்சையப்பன் கல்லூரிப் பிரச்சினை. அது தனியாக எங்கிருந்தோ முளைத்து வந்ததல்ல. இந்த உரிமைக்காகப் படிப்படியாக நீதிக்கட்சி அரசுகளும், அதனைத் தொடர்ந்து அதன் ஆதரவோடு அமைந்த பி.சுப்பராயனின் அமைச்சரவையும் செயல்பட்டமையைத் தெளிவாக அறியலாம். அன்றைக்கிருந்த அத்தனைப் பிரச்சினைகளையும் சமூகக் கேடுகளையும், கொடுமைகளையும், தனக்கிருந்த வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மத்தியில் ஒவ்வொன்றாக எதிர்கொண்டு வெற்றிகண்ட நீதிக்கட்சியின் செயல்பாடுகள் வரலாற்றில் எங்கும் கண்டிராத சாதனைகள். இவற்றையெல்லாம் மறைக்க நினைப்பது ஏன்? நீதிக்கட்சியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவே திட்டமிட்டுத் திரித்துக் காட்ட முயற்சிப்பது ஏன்?

அன்றிருந்த சூழலில் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவ்வரசு ஆற்றியிருக்கும் பணிகளை விடுத்து, ஒரேடியாக ஏன் மாறவில்லை என்பதைப் போல கேள்வி எழுப்புவதை 'வரலாற்றைப் புரிந்து கொள்ள மறுப்பது' என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

இன்றும் அந்த சமூகநீதிப் பாதைதான் தொடர்கிறது - பயணம் முடியவில்லை. என்ன காரணம்? இன்னும் சமூகக் கேடுகள் ஒழியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும்! எனில், நூறாண்டுகளுக்கு முன்னான நிலையை நினைத்துப் பார்ப்போம். 

நீதிக்கட்சியையும், திராவிட இயக்கத்தையும் குறை/அவதூறு சொன்னால், சமூகநீதிச் சக்திகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவாருக்கும் பயன்படலாம். அதற்காகப் பார்ப்பன சடகோபம் கிடைக்கலாம்; பாராட்டு கிடைக்கலாம். பத்ரிகள் ஷேர் செய்யலாம் (ஏ.பி.ரா. அவர்களே இந்த உத்தமர்களின் பகிர்வைப் பற்றி எழுதியுமிருக்கிறார். வெளிப்படையாகப் பத்ரிகள் ஷேர் செய்வதால் மட்டுமல்ல.. இல்லாவிட்டாலும் இவை யாருக்குப் பயன்படும் என்பதை நாம் அறிவோம் அல்லவா!) 

ஆனால் சமூகநீதிக்கோ, சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமைக்கோ ஒருபோதும் பலன் கிட்டாது என்பதைப் புரிந்துகொள்ளட்டும். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் உள்ளவை உண்மையே என்பதையும் உணரட்டும்.
- பிரின்ஸ் என்னாரெசு பெரியார் முகநூல் பக்கம், 19.10.21
Posted by parthasarathy r at 05:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தாழ்த்தப்பட்டோர், நீதிக்கட்சி, பச்சையப்பன் கல்லூரி

Friday, 8 October 2021

சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடும் பச்சையப்பன் கல்லூரியும்

 ஒற்றைப் பத்தி - பச்சையப்பன் கல்லூரி

     June 24, 2020 • Viduthalai


1927 அக்டோபர் 22, 23 நாட்களில் சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடு வரலாற்றில் நிலைத்து நிற்கும் சிறப்புக்குரியதாகும்.


அந்த மாநாட்டில் பல்வேறு புகழ் பூத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று, சுரேந்திரநாத் ஆர்யா அவர்களால் முன்மொழியப் பட்டு, சந்திரா ரெட்டியால் (சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்காலத்தில் தலைமை நீதி பதியாக இருந்தவர்) வழிமொழி யப்பட்ட தீர்மானம் வருமாறு:


‘‘பச்சையப்பன் கல்லூரியி லும், அவர்களின் அறக்கட் டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதி திராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்க சேர்க் கப்பட வேண்டியதன் அவசியத் தைக் கல்லூரியின் அறங்காவ லர்களுக்கு இம்மாநாடு வலி யுறுத்திக் கூறுகிறது. இவ்வாறு அவர்கள் சேர்க்காமல் ஒதுக் குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்ப


தாகும்.


சகோதரர்களான ஆதிதிரா விடர், முஸ்லிம்கள், கிறித்தவர் கள் அவர்களின் ரத்தத்தில் பிறந்த பெரும் வள்ளலான பச் சையப்பர் தாராள மனம் கொண்டு நிறுவிய பள்ளி, கல் லூரிகளில் சேர்ப்பதற்கு விதிக் கப்பட்டிருந்த தடையை எவ் வாறு அவர்களால்  பொறுத்துக் கொள்ள முடியும்? இதைவிட அவமானமும், அநீதியும் வேறு எதுவும் இருக்க முடியாது.


ஒரு கிறித்துவரை கல்லூரி முதல்வராக வைத்துக்கொள் வார்கள். ஆனால், அதே கல் லூரியில் ஒரு கிறித்துவ மாண வனைக் கல்வி பயில அனு மதிக்க மாட்டார்கள். மனிதர் களின் ஜாதி, இனம், பிரிவு, நிறம் பற்றி தங்களுக்கு நம்பிக்கை நம்பிக்கை இல்லை என்பதை பார்ப்பனர் அல்லாத சமூக மக்கள் ஒரே குரலில் உரக்கப் பிரகடனப்படுத்த வேண்டும்'' என்று அத்தீர்மானம் கூறுகிறது.


இந்தத் தீர்மானம்பற்றி கருத் துக் கூறப்படுகையில் பச்சை யப்பன் அறக்கட்டளையின் பத் திரத்தில் சில நிபந்தனைகளும், வரையறைகளும் இருப்பதால் அவைகளைப் பின்பற்றவேண் டிய கட்டாயம் அறங்காவலர் களுக்கு உள்ளது. அந்த அறக் கட்டளையின் நிதி இந்துக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இதில் இந்துக்கள் யார், இந்துக்கள் அல் லாதார் யார்? என்று எப்படிக் கூற முடியும்? என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.


‘‘இந்தக் கோரிக்கையை, அறக்கட்டளை ஏற்று செயல் படத் தவறினால் அக்கல்வி நிறு வனங்களுக்கு அளிக்கும் மானி யத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மாநாடு கேட் டுக் கொள்கிறது'' என்று தீர்மா னத்தில் மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


இதனைத் தொடர்ந்து ஆர்.வி.சொக்கலிங்கம் மற் றொரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.


‘‘ஆதிதிராவிடர், கிறித்தவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மானியங்களையும், அளிக் காமல் நிறுத்தி வைக்கவேண்டும்'' என்பதுதான் அத்தீர்மானம்.


எத்தனை எத்தனைத் தடைக் கற்களைக் கடந்து வந் துள்ளோம் - திராவிடர் இயக்கம் எப்படியெல்லாம் குரல் கொடுத் திருக்கிறது, செயல்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத் துக்காட்டே! மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்துக்களாகக் கணக்கிடப்பட்ட ஆதிதிராவிடர் கள், இந்து என்று பச்சையப்பர் குறிப்பிட்டுள்ளதில் மட்டும் சேரமாட்டார்கள் என்ற நிலை எத்தகைய பார்ப்பனீய சித்தாந்த மனப்போக்கு? சிந்திப்பீர்!


 - மயிலாடன்

Posted by parthasarathy r at 06:39 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தாழ்த்தப்பட்டோர், பச்சையப்பன் கல்லூரி, வாலிபர் மாநாடு

பச்சையப்பன் கல்லூரியும் சிந்தா தரிப்பேட்டை விடுதலை அலுவலகமும்

 ஒற்றைப் பத்தி : பச்சையப்பன் கல்லூரி

   June 26, 2020 • Viduthalai

ஈரோட்டிலிருந்து ‘விடுதலை' அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டது 1940 இல்! சென்னை சிந்தா தரிப்பேட்டை, 2, பால கிருஷ்ண பிள்ளைத் தெரு வில் உள்ள கட்டடத்தில் இயங்கத் தொடங்கியது.


ஈரோட்டிலிருந்து அச்ச கத்திற்குத் தேவையான இயந் திரங்கள் உள்படப் பல பொருள்கள் வந்து சேர வேண்டிய இடைக்காலத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று கருதிய தந்தை பெரியார் அவர்கள், ‘‘சீர் திருத்த தொண்டர் மாநாட்டை'' சென்னை சிந் தாதரிப்பேட்டை அந்தக் கட்டடத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.


‘விடுதலை' குடியேற விருந்த அந்த இடத்திற்கு ‘‘ஜஸ்டிஸ் மகால்'' என்று பெயர் சூட்டினார். சுமார் 2000  பேர் கலந்துகொண்ட மாநாடு அது (23.12.1940).


அம்மாநாட்டில் 17 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் ஒன்று முக்கிய மாகக் கவனிக்கத்தக்கதாகும்.


‘‘சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வடமொழியில் கடவுள் வணக்க வாழ்த்துச் சொல்லுவதை நீக்கவேண்டும் என்று இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது'' என்பதுதான் அந்தத் தீர்மானம்.


‘‘பச்சையப்பன் கல்லூரி யின் படிக்கட்டும் தமிழ்ப்   பேசும் - பாடும்'' என்று பிற் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு கல்லூரி, ஒரு காலகட்டத் தில் எந்த நிலையில் இருந் தது?


கடவுள் வாழ்த்து- தமி ழில் இல்லை என்பதும்; அதேநேரத்தில், சமஸ்கிருதத் தில் இருந்தது என்பதும் இன் றைய இளைய தலைமுறை யினர் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவலாகும்.


பார்ப்பனரல்லாத பச்சை யப்பரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில்கூட, ஆரியம் தன் ‘ஆக்டோபஸ் வேலை'யை எப்படி காட்டி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ‘ஹிந்து'வான பச்சை யப்பர் அறக்கட்டளை நடத் தும் அந்தப் பச்சையப்பன் கல்லூரியில், தாழ்த்தப்பட் டோர் ‘ஹிந்து' இல்லை என்று கூறி, அம்மாணவர்களைச் சேர்க்காமல் தடை செய்தி ருந்த சூழ்ச்சியையும் புரிந்து கொள்ளவேண்டும். அதன் பின்னால் இருந்தது பார்ப்ப னியம் என்பது விளங்க வில்லையா?


இந்த இடத்தில் இன் னொன்றையும் இணைத்துப் பார்ப்பது அவசியம். சென் னையில் 24.1.2018 அன்று பி.ஜே.பி.யின் தேசிய செய லாளர் திரு.எச்.ராஜாவின் தந் தையார் ஹரிஹர சர்மா என் பவர் எழுதிய நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.


அவ்விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி மட் டும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வில்லை என்பதையும் நினைவு கூர்க! 1940 ஆனா லும், 2018 ஆனாலும் பார்ப் பனர்கள், பார்ப்பனர்கள்தான் - அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.


- மயிலாடன்


குறிப்பு: சென்னையில் நடைபெற்ற ‘‘சீர்திருத்த தொண் டர் மாநாட்டுத்'' தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் நேற்று நமக்குத் தெரிவித்தார்.

Posted by parthasarathy r at 06:30 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தமிழ், பச்சையப்பன் கல்லூரி, விடுதலை அலுவலகம்
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Followers

Blog Archive

  • ▼  2026 (16)
    • ▼  August (12)
      • பாரதி விழா (மணியம்மை)
      • பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத...
      • விரும்பியபடியே குழந்தை பெறலாம்! மூலிகை மன்னன் செ....
      • சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா (தோ...
      • முதலைக் கண்ணீர் வடிப்பதேன்? - செ.ர.பார்த்தசாரதி செ...
      • நான் பாரதியாரைச் சந்தித்தால் தொகுப்பிலிருந்து….-கி...
      • சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார...
      • கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி
      • சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ....
      • பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி
      • பனிக்கட்டி வழுக்குவது ஏன்? - மூலிகை மன்னன் செ.ர.பா...
      • உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும் - செ.ர.பார...
    • ►  July (3)
    • ►  March (1)
  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • வண்ணார் வரலாறு
    ஒற்றைப் பத்தி -  January 31, 2021  • Viduthalai 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்று பீற்றுகிறார்கள் - அந்த மதத்தில் மனிதர்களைப் பிறப்பின...
  • சங்ககாலம் பொற்காலமா? - 2
      பிப்ரவரி 01-15 , 2014 உண்மை  இதழ் பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம் – பேராசிரியர் ந.வெற்றியழகன்   சிறப்பிழந்த சேரமன்னர்க...
  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
     ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தே...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!
    சென்னை  வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்ற...
  • இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -
     கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டு...
  • பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி
    ‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்பு...
  • இராமாயணம் ஒரு கட்டுக்கதை!
    சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அ...
  • நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை
      நான் பாரதியாரைச் சந்தித்தால்... கி.வீரமணி கட்டுரை ( பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981 ஆம் ஆண்டில், 'குமுதம்' ஏடு ஆசிரியர் க...

Labels

  • 100 நாள்
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அசைவம்
  • அசோக வனம்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசிதழ்
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆண்
  • ஆண்டு விழா
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயசு
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலக்குவன்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உண்மை இதழ்
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுக்கதை
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்தவம்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடிஅரசு
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குமுதம்
  • குரான்
  • குலக்கல்வி
  • குழந்தை
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சாகு மகராசர்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சித்த மருத்துவம்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாலி
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாத்திகர் மாநாடு
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பல்லி
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பனிக்கட்டி
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பாரதி
  • பாரதியார்
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவம்
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புரட்டு
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மருத்துவர்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முதலைக் கண்ணீர்
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மூலிகை மன்னன்
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயவாடா
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.