பனிக்கட்டி வழுக்குவது ஏன்?
- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி
எந்த ஒரு பொருளும், தடை இல்லாவிட்டால் இயங்கிக் (ஓடிக்) கொண்டே தான் இருக்கும்.
நாம் நடக்கும் போது; நம் கால்களில் உள்ள கோடுகள் (ரேகை); தரையில் உள்ள சிறு சிறு கீறல்கள் மற்றும் மேடு பள்ளங்களில் படிந்து ஒரு தடையை ஏற்படுத்து கின்றன. இதனால் ஒரு வகையான பிடிமானம் ஏற்பட்டு நம் கால்கள் வழுக்கு வதில்லை; இதனால் தொடர்ந்து நடக்கிறோம்.
ஆனால், தரையில் எந்த வகையான தடைகளும் (சிறு சிறு கீறல் மற்றும் மேடு பள்ளங்கள்) இல்லாமல் இருந்து நடந்தோமானால் நம் கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் வழுக்கிக் கொண்டே சென்று கடைசியில் நிலை தடுமாறி கீழே விழ வேண்டி வரும்.
இதேபோல் தான் பனிக்கட்டியின் மீது நடக்கும் போதும் ஏற்படுகிறது.
பனிக்கட்டியின் மேல் நாம் காலை வைத்தவுடன், நம் காலில் உள்ள வெப்பம் பனிக்கட்டியினுள் ஊடுருவி பனிக்கட்டியை உருக்கு (கரைக்) கிறது; இதனால் நம் காலுக்கும் பனிக்கட்டி க்கும் இடையில் 'நீர்' உண்டாகிறது. இதன் ஆக்கமாக (காரணமாக) பிடிப்பற்ற தன்மை ஏற்பட்டு பனிக்கட்டியின் மீது நாம் வழுக்கி விழுகிறோம்.
பல்லி நடப்பது எப்படி?
'பல்லி' தனது கால்களில் உள்ள 'பை' போன்ற பகுதி யிலுள்ள காற்றை அழுத்தி வெளியேற்றி 'வெற்றிட பிடிப்பான்' முறையில் நடப்பதாக பலரும் நம்பிக் கொண்டு வருகின்றனர். 'அதனால்தான் வழுவழுப்பான கண்ணாடியில் கூட அதனால் நடக்க முடிகிறது' என்று கூறி வருகின்றனர்.
உண்மை அதுவல்ல! 'பல்லி'யின் கால்களின் அடியில் நூறு மில்லியன் கணக்கான 'மைக்ரோஸ்கோப்பிக் மயிரிழைகளால் ஆன 'பிரஷ்'கள் உள்ளன. இவை மிக வழுவழுப்பான இடங்களின் மீது இருக்கும் மிகச் சிறு சிறு மேடு பள்ளங்களில் கூட நுழைந்து பொருந்தக்கூடியது. அப்படி செல்லும் போது மயிரிழைகளின் மூலக்கூறுகளும், மேற்பரப்பு (கண்ணாடி) எந்த மூலக்கூறுகளால் ஆனதோ அவையும் மிக நெருக்கமாக உள்ளதால் இவற்றின் இடையே மூலக் கூறுகளின் 'ஒட்டிணைவாற்றல் சக்தி இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் கண்ணாடியும் பல்லியின் காலும் நன்றாக ஒட்டிக் கொள்கிறது.
மூலக்கூறுகளின் 'ஒட்டிணைவாற்றல் சக்தியால் தான் பல்லி கீழே விழாமல் தொங்கிக் கொண்டு மேல் தளத்தில் கூட நடக்கிறது.
No comments:
Post a Comment