Showing posts with label பார்ப்பான். Show all posts
Showing posts with label பார்ப்பான். Show all posts

Wednesday, 30 October 2024

இராமன் -இராமராஜ்ஜியம் என்றால் என்ன? - பார்ப்பானே கடவுள் என கூறும் ஆதாரங்கள்!



இராமன் -இராமராஜ்ஜியம் என்றால் என்ன?


- கவிஞர் கலி.பூங்குன்றன்

(தமிழர் தலைவர் உரையைத் தழுவியது இக்கட்டுரை )


"இராமாயணம் -இராமன் இராமராஜ்ஜியம்" எனும் தலைப்பிலே 23, 27.3.2018 அன்று இருநாள்களிலும் மாலை நேரத்தில் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.

குறுகிய கால அறிவிப்பு எனினும் மக்கள் பெரு வெள்ளமாய்த் திரண்டனர்.

இரண்டாவது சொற்பொழிவில் "பிராமணர்கள்" கடவுளுக்கு மேலே எப்படி தூக்கி நிறுத்தப்படுகிறார்கள்? இராமன் - இராமராஜ்ஜியம் என்ற சொல்லாடல்கள் உச்சத்தில் இருக்கும் காலக்கட்டம் இது ; இவற்றின் மீதான காதல் அல்லது உச்சக்கட்ட மதிப்பு என்பதெல்லாம் மக்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சியின் வெளிப் பாடல்ல; மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கைங்கர்யம் இது. இராமராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறி அதிகார பலத்தால் ஆட்டம் போடுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து இராம ராஜ்ஜிய ரத ஊர்வலம் புறப்பட்டு பல
மாநிலங்களின் வழியாக செல்லும் திட்டத்தோடு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அவர்கள் காலடி வைத்த போது, ஈரோட்டுப் பூகம்பம் வெடித்து, பேரச்சத்தை ஊட்டியது.

இராமராஜ்ஜியம் என்றால் வருணாசிரம ராஜ்ஜியம், சூத்திரன் சம்பூகன் தலையை வெட்டிய ராஜ்ஜியம்தானே!

இந்த அடிவேரின் இரகசியத்தை உணர்ந்ததால் அல்லவா திராவிடர் கழகத் தலைவர் ஓர் அறிவிப்பினைக் கொடுத்தார்.

"இராமராஜ்ஜியம்" என்றால் பார்ப்பனர் களின் ராஜ்ஜியம் தான் என்பதற்குப் பல ஆதாரங்களை அடுக்கிக் காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்கள்.

அந்த உரையைத் தழுவி இந்தக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது.

வேதம் என்ன கூறுகிறது?

தெய்வாதீனம் ஜகத் சர்வம்,
மந்த்ரா தீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்
தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெயத என்பது ரிக் வேதம்.

(62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர்களே நமது கடவுள் - அவனைத் தொழ வேண்டும்.

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்திற் பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகியிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்.

(மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 100)

பிராமணன் பிறப்பானது தருமத்தின் அழிவில்லாத உருவமாயிருக்கிறது. தருமம் விளங்கும் பொருட்டு உற்பவித்த அந்தப் பிராமணனின் ஞாநத்திலே மோக்ஷத்திற் குரியவனாகிறான். (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 98)
.........

கிருஷ்ண அவதாரக் கற்பிதம்

"புத்தர்பிரான்" அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப் பட்டது. காம விளையாட்டுக்களை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே 'கிருஷ்ண லீலா' கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக்கட்டப்பட்டது."
('என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தொகுதி -4, பக்கம் 210)

மகா பாகவதம் செப்புவது என்ன?

ஸ்ரீவேத வியாசர் அருளிச் செய்த ஸ்ரீமஹா பாகவதம் (திருவனந்தபுரம் பாகவத சிரேஷ்டரான வேணுகோபாலாச்சாரியார் அவர்களால் ஸம்ஸ்க்ருத காவ்யத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. (எண்பத்தாறாவது அத்தியாயம், தசம ஸ்கந்தம், பக்கம் 351-352)

"ஸ்ரீகிருஷ்ணன் எதிரே தோன்றிய தபசியான நீ ஒரு பெண் கணங்களை விசேஷமாய்ப் பூஜிக்காமல் மாதவனை மாத்திரம் விசேஷமாய்ப் பூஜித்தபடியால் அந்தப் பகவான் அம்மறையோனை நோக்கி இந்த ரிஷிகள் எந்த ஜலத்தைத் தொடுகிறார்களோ, அதுவே புண்ணிய தீர்த்தமாகும் படிச் செய்யத் தக்கின மகிமையுடையவர்கள், சகல தேவர்களுடைய சொரூபம் யான்.

என்னுடைய சொரூபம் வேதம், அந்த வேதங்களுடைய சொரூபம் மறையோர். அவர்களுக்கு மிஞ்சினவர்கள் உலகி லில்லை. அவர்கள் சாமானிய மானிடர் களென்றெண்ணி அவர்களை பழித்து என்னைப் பூஜித்ததனால் ஒரு பயனையு மடைய மாட்டார்கள். அந்த வேதியரை பூஜிக்கிறவன்தான் ஞானி அவனே எனக்கு மிகவும் இஷ்டனென்று ஸ்ரீபகவனால் ஆக்கியாபிக்கப்பட்டு அந்தச் சுவாமியின் எதிரில்தானே அந்த ரிஷிகளை அநேக விதமாய்ப் பூஜித்து உபசரித்து சந்தோஷப் படுத்தினார்.
........

பிராமணன் திரி மூர்த்திகளிலும் உயர்ந்தவன் என்று நிரூபிக்க இன்னும் இரண்டொரு உதாரணங்களை வேண்டுமானாலும் சொல்லுகிறேன். அதாவது, ஸ்ரீவைகுந்த வாசனாகிய நீலமேக சாமள வர்ணனாகிய ஸ்ரீசாட்சாத் கிருஷ்ண பரமாத்துமாவை, பிரம்ம புத்திரனாகிய நாரதர் தரிசிக்க வந்தபோது, அச்சமயம் பரமாத்துமா பூசையறையில் இருந்து வெளியே வந்தார். வெகு நேரம் வரையில் பரமாத்துமாவின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த நாரத பகவான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்துமாவைப் பார்த்து இவ்வுலகத்தின் கண்ணுள்ள அனந்தகோடி மக்களும் தங்களைப் பூசித்துவரும் போது, தாங்கள் இவ்வளவு நேரமாய் யாரைப் பூசை செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்ட உடனே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்துமா, பூசையறையில் முன்னால் விடப்பட்ட திரைச் சீலையை நீக்கிவிட்டு, அங்கு அவரால் பூஜிக்கப்பட்ட விக்கிரகத்தைத் திறந்து காட்டினார். அதைப் பார்த்தவுடன், நாரதபகவான் அப்படியே ஆச்சரியப்பட்டுப் பிரம்மித்துப் போனார். ஏனென்றால் அஃது ஒரு பிரமஷ்வரூபமாகிய பிராமணனுடைய விக்கிரகமே அன்றி, வேறல்ல. ஆதலால் அப்படிப்பட்ட கண்ணனாலேயே பூசிக்கப்பட்டு வரும், பிராமணாளுடைய மகத்துவத்தை வேதங்கள் கூட வரை யறுத்துக் கூறமுடியாது என்றால், மற்றவர்களால் அவர்களுக்குக் குணதோஷம் கூறமுடியுமா? இதுகிடக்க, இன்னொரு சம்பவத்தையும் சொல்லுகிறேன் கேளும். ஒரு சமயம், வாயுபுத்திரனாகிய ஹனுமான், ஒரு பிராமணச் சிறுவனாக உருவந்தாங்கி, ஸ்ரீராமபிரான் முன் தோன்றிய போது ஸ்ரீராமர் அவரைக் கண்ட மாத்திரத்தில், அவர் காலில் நெடுஞ்சாரியாய் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டுள்ளார். இதைக் கண்ட இராம தூதனாகிய ஹனுமான், இராமமூர்த்தியைப் பார்த்துச் சொல்லுகின்றார், நான் உண்மையான பிராமணன் அல்ல; நாட்டினில் வாழும் குரங்கு வம்சத்தைச் சார்ந்தவன். ஆகையால் என் காலில் விழுவது முறையல்ல என்று சொல்லவும், அதற்கு இராமர் பதிலுத்தாரமாக என்ன சொன்னார் என்றால், நான் பிராமணாளைக் கண்ட மாத்திரத்தில் உடனே அவர்களைக் கைகூப்பி வணங்குவது என் கடமையாகும். ஆகையால் உண்மையான பிராமணனாய் இருந்தாலென்ன, அல்லது போலிப் பிராமணனாய் இருந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான். அதைப் பற்றி ஒன்றும் தோஷமில்லை என்று சொல்லியிருக்கிறார்.

(சிங்கப்பூர் அறிஞர் அ.சி.சுப்பய்யா அவர்களின் 'சுந்தரமூர்த்தி நாயனார்' கிரிமினல் கேஸ்)

கம்ப இராமாயணம்

வால்மீகி தனது இராமாயணத்தில் இராமனை சாதாரண மனிதனாகப் படைத்திருக்க, கம்பனோ மிகப் பெரிய அளவில் உயர்த்திப் பிடித்தான்; கடவுளுக்கு மேல் பார்ப்பனர்கள் என்றும் கூச்சமின்றிப் பாடி சென்று இருக்கிறான்.

கரிய மாலினும் கண்ணுத லானினும்
உரிய தாமரை மேலுறை வானினும் விரியும் பூதமோ ரைந்தினும் மெய்யினும்
பெரிய ரந்தணர் பேணுதி யுள்ளத்தால்

அதாவது, திருமால், சிவன், நான்முகன், அய்ம்பூதம், வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும் அந்தணர்கள் பெருமையுடையவர்கள்; ஆகையால் அவர்களை உள்ளன் போடு வழிபடுவாயாக என்றும்,

2 அந்த ணாளர் முனியவு மாங்கவர்

சிந்தை யாலருள் செய்யவுந் தேவரில்

நொந்து ளாரையும் நொய்துயர்ந் தாரையும்

" மைந்த எண்ண வரம்புமுண் டாங்கொலோ

அதாவது அந்தணர்கள் கோபத்தால் அழிந்தவர்களையும், அந்தணர்கள் அருளினால் செல்வாக்குப் பெற்றுயர்ந்தவர்களையும் கணக்கிட முடியாது என்றும்,

3 அனைய ராதலின் அனையஇவ்வெய்யதீ
வினையின் நீங்கிய மேலவர் தாளிணை
புனையுஞ் சென்னியை வாய்ப்புகழ்ந் தேத்துதி
இனிய கூறிநின் றேயின செய்தியால்

அதாவது, அந்தணர்கள் இத்தனையு முடையவராக இருத்தலினால், தீவினை செய்யாது உயர்ந்தவர்களாகிய அவ்வந்தணர் பாதங்களில் உன் தலை படும்படியாக வணங்கி, அவர்களைப் புகழ்ந்து அவர்களிடம் இனிய சொற்களைக் கூறி அவர்களிடும் கட்டளைப்படி நடப்பாய் என்றும்,

4. ஆவ தற்கும் அழிவதற் கும்மவர்

ஏவ நிற்கும் விதியுமென் றாலினி

யாவ தெப்பொருள் இம்மையு மம்மையுந்

தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே

ஒருவன் செல்வம் அடைவதற்கும்
அழிவதற்கும் காரணமான விதியும் அந்தணர்களின் கட்டளைப் படியேதான் நடக்கும்; ஆகையால் இப்பிறப்பிற்கும், மறுபிறப்பிற்கும் (அவர்களை விடுத்தால்) வேறு பயன் ஏது? எனவே, அந்தணர்களை வணங்குதல் தேவர் களை வணங்குதல் போலச் சிறந்ததாகும் என்று கூறி அந்தணர் (பார்ப்பனர்) பெருமையை இவ்வாறு கூறுகிறார். போதுமா? இன்னும் வேண்டுமா?

(குடிஅரசு - கட்டுரை - 12.02.1944)

                                                   ...............

சங்கராச்சாரியார் பார்வையில்

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் 'தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் "அருந் தொண்டாற்றிய அந்தணர்கள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நூலை வெளியிட்டு நூலோர் வழிவந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர்

சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப்

பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி

செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான்

நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட

போதும் கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு.

அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த

காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட

அப்புறம்தான். அந்தணன்தான் முதலில்

(நக்கீரன் 5.112002) இப்பொழுது சொல்லுங்கள் -

இந்து மதம் என்றால், இராமன் என்றால், அதன்

பொருள் என்ன?


பிராமணாள் நமது கடவுள் - இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 - விடுதலை ஞாயிறு மலர், 31.3.2018

Monday, 7 October 2024

பார்ப்பான் பிச்சைக்காரன்!

"பழைய நாளில் பிராமணன் தான் பிச்சை எடுப்பான், மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்."
"பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு" என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராமண சந்நியாசிகள் அன்று பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ஏதாவது வேலை செய்து விட்டு, அதைக் கூலியாகக் பெற்றுக் கொள்கிறேன் என்பார்கள். இப்பொழுது இவன் செய்கின்ற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (காஞ்சி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள், முதற் பகுதி - கலைமகள் - 1957-1958, பக்கம் 28)
- 8.10.19 எனது முகநூல் பக்கம்

Saturday, 13 June 2020

அடுத்த பிறவியில் பசுவாக பிறப்பான் பார்ப்பான்!



பார்ப்பான் உட்பட இந்துக்கள், கடவுளுக்கு அர்ப்பனித்தப்பின் பசு உட்பட இறைச்சி உணவுகளை உண்ணலாம்.
பார்ப்பான் பசுவை உண்ணாவிட்டால் அடுத்த பிறவியில் பசுவாக பிறப்பான்.என மனு தர்ம சாஸ்த்திரம் கூறுகிறது.
இன்றைக்கு சுற்றும் பசுக்கள், சிரார்த்தத்தில் இறைச்சி தின்னாத பார்ப்பனர்களோ!
- செ.ர.பார்த்தசாரதி, முகநூல் பக்கம், 10.6.17

Tuesday, 10 March 2020

‘‘பிராமணனுக்கு'' ஸ்பெஷல் டாய்லெட்டாம் - கேரளக் கோவிலில்!

இன்றைய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் (சென்னை பதிப்பு, 6.3.2020, பக்கம் 9) வெளிவந்துள்ள அதிர்ச்சிக்கும், அருவருப்புக்கும்  உரிய தகவல் - செய்தி!

‘கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குட்டுமுக்கு மகாதேவர் கோவிலில் பார்ப்பனர் களுக்கென்று ஒரு தனி கழிப்பறை  (Exclusive Toilet for Brahmins in Kerala temple raises a stink)    உள்ள செய்தி ‘நாறுகிறது' என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில்,

கேரளத்து ஆராய்ச்சி மாணவர் அரவிந்த் ஜி கிறிஸ்டோ என்பவர் இந்த அதிர்ச்சித் தகவலை ‘போர்டு' அமைக்கப்பட்டுள்ளதோடு, படம் எடுத்து சமூக வலைத்தளங்களின்மூலம் பரவவிட்டு - ‘‘திருவிழாவின்போது நான் அங்கே போனேன்; பார்த்தேன் - அதிர்ச்சியாக இருந்தது; இதற்குப் பிறகு அந்தப் பலகை ‘‘பார்ப்பனர்களுக்கு மட்டும்'' என்ற கழிப்பறைப் பலகை நீக்கப்படும் என்று தேவசம் போர்டும், அக்கோவில் நிர்வாகிகளும் கூறுவது அறிய மகிழ்ச்சி'' என்கிறார் அவர்!

‘‘அவர் ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை? ஏன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார்'' என்று கோபத்துடன், அவர்மீது காவல்துறையில் புகார் மனுவை பார்ப்பனர்கள் கொடுத்திருப்பது எவ் வளவு மோசமான ஜாதிவெறியின், மதவெறியின் அப்பட்டமான வெளிப்பாடு பார்த்தீர்களா?

‘‘25 ஆண்டுகளுக்குமேல் அந்த பார்ப்பனர் களுக்கு மட்டுமே அந்த கழிப்பறை என்ற பலகை இருப்பதுபற்றி எங்கள் கமிட்டியின் தகவலுக்கு இது கொண்டு வரப்படவில்லை; உடனடியாக நீக்குகி றோம்'' என்று தேவசம்  போர்டும், கோவில் நிர் வாகிகளும் கூறியிருப்பது ஒரு வகையில் வர வேற்கத்தக்கதுதான்; ஆனால், கேரளப் பார்ப் பனர்கள் இதற்கு சப்பைக் கட்டும் விளக்கங்கள் கூறுவதுதான் மிகப்பெரிய கேலிக் கூத்தாக உள்ளது!

அந்தப் பெயர்ப் பலகை 2003 இல் வைக்கப்பட்டது என்று தேவசம் போர்டு தலைவர் ஏ.பி.மோகனன் என்பவர் கூறுகிறார். இந்து அறநிலைய ஆணையர் ஜெயக்குமார், இதுகுறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

‘யோக க்ஷேம சபா'வின் மேனாள் மாவட்ட செயலாளரான ஹரிநம்பூதிரி என்ற பார்ப்பனர், ‘‘பிராமண சமூகத்தின்மீது அவதூறு பரப்புவதற்கே இச்செய்தி பரப்பப்பட்டுள்ளது'' என்று சிறிதும் வெட்கமின்றி கூறுவது வேடிக்கையான ஜாதி ஆணவப் போக்கு அல்லவா?

‘‘ஆறுகால பூஜையில், சாப்பிடுவதாகக் கூறப் படும் பகவானுக்கே ‘‘கக்கூஸ்'' கோவில்களில் தனியே கட்டப்படுவதில்லையே, ஏன்?'' என்று நடிகவேள் எம்.ஆர்.இராதா தனது நாடகங்களில் கேட்பார்! அதுவும் இப்போது நினைவுக்கு வருகிறது.

பார்ப்பன சாம்ராஜ்யம் - ஆட்சியில்  இல்லாமல்  ராஜகுரு ஸ்தானத்தில் பார்ப்பனீயம் அமர்ந்து, அர்த்தமுள்ள இந்து மதத்தின் அட்டகாசமான வர்ணாஸ்ரமக் கொடுமை எவ்வளவு கோரமான முகத்தையுடையது என்பது இதன்மூலம் புரிய வில்லையா? முன்பு - கேரளாவை ‘‘ஒரு பைத்தி யக்காரர்கள் வாழும் விடுதி'' என்றார் விவே கானந்தர்; அது இப்போது முற்போக்கு - பகுத்தறிவு - இடதுசாரிகளால் பெரிதும் மாற்றப்பட்டு வருகிறது!

பைத்தியக்காரர்கள் என்னும்போது, மற்றொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது.

சுமார் 150 ஆண்டுகளுக்குமுன்பு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள ‘‘பைத்தியக்கார ஆஸ்பத் திரியில்'' பார்ப்பனர்களுக்கென்று தனி வார்டு (ஸ்பெஷல் வார்டு) இருந்தது என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருக்காதே!

பகவானுக்கு இல்லாத வசதிகள்கூட பார்ப்ப னர்களுக்கு உண்டு என்பதுதான் சாஸ்திர விதி யாகுமே!

‘‘தெய்வாதீனம் ஜகத் சர்வம்,

மந்த்ரா தீனம் து தெய்வதம்

தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்

தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெயத

(‘ரிக் வேதம்',  62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.

கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது.

மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப் பட்டவை.

எனவே பிராமணனையே தொழவேண்டும்''

துளசிதாஸ் ராமாயணத்தில், ராமன் போன்ற அவதாரங்களே பிராமணர்களைத்தான் முதலில் தொழுது வணங்கினார்கள் பக்தி சிரத்தையோடு; கடவுளை வணங்குவதுகூட அவ்வளவு முக்கியத் துவமானது அல்ல!

எனவேதான், பிராமணர்களுக்கு டாய் லெட்டில்கூட ‘‘ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்!''

இதை சட்டமாக்கவே துடிக்கிறார்கள் பலரும் இன்று!

கடவுளும், பக்தியும் யாருக்குப் பயன்படுகிறது பார்த்தீர்களா?

பக்தகே(ர)டிகளே, சிந்தியுங்கள்; வெறுப்பு விருப்பின்றி சிந்தியுங்கள்!

பெரியார் உங்கள் மனக்கண்ணில் படுவார்!

- விடுதலை நாளேடு, 6.3.20

Saturday, 13 July 2019

நாங்களும் ‘பிராமின்’ நீயும் ‘பிராமின்’ ஆதலால்....?

மின்சாரம்


இந்தியாவின் இமய மலைச்சாரலில் உள்ள காஷ்மீர் மாநிலம் கதுவாவில்  ஆசிபா என்ற 7  வயது சிறுமி கொடூரமான முறையில் பாலி யல் வன் கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு  பாந் தன்கோட் சிறப்பு நீதிமன் றத்தில் வழங்கப்பட் டது.

இந்தக் கொடூரமான கொலை நாடு முழு வதும் கடும் போராட்டத் தைத் தூண்டியது. இந்த வழக்கில் 8 பேர் சிக்கியுள்ளனர்.  குற்றம் தொடர்புடைய ஒரு சிறுவன்மீதான குற்றச் சாட்டு உறுதிசெய்யப்படாத தால் அவரை மட்டும் விடுவித்த நீதி மன்றம் மற்ற அனை வருக்கும் சிறைத் தண்டனை வழங்கியது

பஞ்சாப் - பதான் நீதிமன்றத்தில்...

இந்தியாவையே பரபரப்பிற்கு ஆளாக்கிய ஆசிபா  பாலியல் வன் கொடுமை  செய்து கொல்லப்பட்ட வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான் கோட் நீதிமன்றத்தில்   ஜூன் 3 ஆம் தேதியோடு விசாரணை முடிந்தது.  மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தேஜ்வந்தர் சிங் 10.6.2019 அன்று தீர்ப் பளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கு அதிகளவு போராட் டத்தைத் தூண்டியது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

குற்றப்பத்திரிகையில், இஸ்லாமிய நாடோடி இன சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கதுவா மாவட் டத்தில் கடத்தப் பட்டு கோயிலுக்குள் 4 நாட்கள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு  கொல்லப்பட்டார். சிறுமியின் தலை பாறையின் மீது கிடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் காட்டிற்குள் கிடந்தது என ஜூன் 17 அன்று  கண்டுபிடிக்கப்பட்டது.  மூன்று நாள் கள் கழித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று பெருமையுடன் கூறிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அதன் பிறகு  கத்துவாவில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கோவில் பூசாரி, அவரது மகன், உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர், இரண்டு காவல் அதி காரிகள் உள்ளிட்ட பலரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று தெரியவந்தது.



குற்றவாளியாக


கோவில் அர்ச்சகர்


இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக் கியது. இதனால் இந்த வழக்கு குற்றவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட் டது. துணை ஆய்வாளர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் இருவரும் ஆதாரங்களை அழிக்க முற்பட்ட குற்றத்திற் காக கைது செய்யப்பட் டனர்.  முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியும் கோவில் அர்ச்சகருமான சஞ்சி ராம்  20.3.2018 அன்று சரணடைந்தார்.

சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் தத்தா, சிறப்பு காவல்துறை அதிகாரிகளான தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா  ஆகியோர் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியை கொலை செய்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சான்றுகளை அழிக்க முற்பட்ட துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. அமைச்சர்கள் ஆதரவு


குற்றவியல் பிரிவின் விசாரணைப்படி  கதுவா நகரில் இருந்து இஸ்லாமியர்களை விரட்டி அடிக்கவும்  பயத்தினை உருவாக்கவும் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த வழக்கில் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வும் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை, வனவிலங்கு சிறுமியை கடித்து குதறியுள்ளது, ஆனால் முதல்வர் மகபூபா முப்தி இந்துக்கள் மீது விரோதமாக இருக்கிறார் ஆகவே பொய்யான குற்றச்சாட்டை இந்துக்கள் மீது வைக்கிறார் என்று கூறி போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில்  காஷ்மீர் பாஜக அமைச்சர்கள்  சவுத்ரி லால் சிங் மற்றும் பிரகாஷ் கங்கா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கதுவா நீதிமன்றத்தில் ஏப்ரல் 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது நீதிமன்றத்தில் பாஜக வழக்குரைஞர் அணி பெரும் வன்முறையில் ஈடுபட்டு அதை தடுக்க முற்பட்டனர். இதனால்  உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை ஜம்மு-காஷ்மீரில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் வழக்குரைஞர் கள் ஜே.கே. சோப்ரா, எஸ்.எஸ் பாஸ்ரா மற் றும் ஹர்மீந்தர் சிங் ஆகியோரை உள்ளடக் கியது.  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குர்தாஸ்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

வழக்குரைஞர் அச்சம்!


கடந்த ஆண்டு கதுவா சிறுமியின் குடும் பத்தினரின் வழக்குரைஞர் தீபிகா ராஜ்வத் வழக்கு குறித்து வாதாடுவதில் இருந்து பின் வாங்கினார். தனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறைக்கு எழுத்துமூலம் புகார் கொடுத்தும் காவல்துறை அலட்சியம் செய்ததால் இவ் வழக்கில் இருந்து வெளியேறுவதாகக் கூறி யிருந்தார்.

உலகை உலுக்கிய இந்தக் கொடூரத்தின் பின்னணியில் நியாய தர்மம், தார்மிகம் பேசும் பார்ப்பனர்களாக ‘இந்து’த்துவாவாதி கள் இருக்கிறார்கள். இவ்வளவுக் கேவலமான ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை இந்துத் தீவிரவாதிகள், வெறியர்கள் என்று சொன்னால் வெறிபிடித்த வேட்டை மிருகங் களாக விழுந்து பிடுங்குகிறார்கள் - குதறு கிறார்கள்.

இதில் மிக முக்கியமான - ஏன் அதி முக் கியமான தகவல் ஒன்று இருக்கிறது. பார்ப்ப னர்களைப் பற்றிக் கூறினால், இந்தத் தி.க. காரர்களுக்கு இதுதான் வேலை; சதா பார்ப்பனர்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்று கதைக்கும் மனிதர்களை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கி றோம்.

இதோ ஒரு தகவல்; படித்தபின் ஆற அமர யோசியுங்கள் - யோசியுங்கள். அதற்குப்பின் தி.க.காரர்கள் யாரையேனும் பார்க்க நேர்ந் தால் உங்கள் கருத்தை மனந்திறந்து சொல்லுங் கள்! சொல்லுங்கள்!

இதோ அந்தத் தகவல்:

பெண் காவல்துறை அதிகாரியின் பேட்டி இதோ:

குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராம ணர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர் களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத் தார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ‘ எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்’ என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாத தால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதர வாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள்.

கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங் கரமாக முழக்கமிட்டார்கள். மூவர்ணக் கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத் தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். பிணை மனுக்கள் விசார ணைக்கு வரும்போதெல்லாம் வழக்குரை ஞர்கள் கும்பலாக முழக்கமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளி யேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந் திருக்கும். சில காவல்துறையினரும் குற்ற வாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒரு விதமான சட்டமற்ற தன்மையையும் பீதி யையும் நிறைத்து வைத்திருந்தார்கள்.  ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம். . நீதித்துறையின் மீது எங்க ளுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்... “

- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. சுவேதாம்பரி சர்மா அவர்களின் பேட்டிதான் இது.

இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? பார்ப்பனர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் பச்சைப் பார்ப்பனராகவே கொஞ்சமும் கூச்ச மின்றி நடந்து கொள்கிறார்கள்  என்பதுதான் கவனிக்கத்தக்கது. பார்ப்பனராக இருந்தாலும் இதுபோன்ற பெண் அதிகாரிகளைக் காண் பது அரிதினும் அரிதே!

-  விடுதலை ஞாயிறு மலர், 15.6.19

Friday, 5 July 2019

பிராமணர்கள் கீழ்ஜாதிப் பெண்ணைக் கற்பழிப்பார்களா?” - நீதிபதி



1992ஆம் ஆண்டில் இதேபோல ஒரு நிகழ்ச்சி நடந்தது ராஜஸ்தான் மாநிலத்தில். அது நடந்த இடம் உயர்நீதிமன்றம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.

ராஜஸ்தான் அரசின் மகளிர் வளர்ச்சிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர் ‘சச்சின்’ திருமதி பன்வாரி தேவி. குழந்தைத் திருமணங் களைத் தடுப்பது இவரின் தலையாய பணி.

ஆனால் அது ராஜஸ்தான் மாநிலமாயிற்றே. குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவிலேயே கொடி கட்டிப் பறக்கும் பூமியாயிற்றே.

அந்த அம்மையாருக்கு எதிர்ப்பு என்பது எரிமலையாகத் தானே இருக்கமுடியும்.

ராம்கர்ன் குர்ஜார் என்பவரின் ஒரு வயது குழந்தை மணத்தைத் தடுத்தார் அந்தச் சமுக சேவகி. அதன் கோர விளைவு என்ன தெரியுமா? அய்ந்து பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண் ணின் கணவருக்கு எதிரிலேயே  நிர்வாணப் படுத்தி  வன்புணர்ச்சி செய்தனர் (இப்படியும் மனிதப் பதர்கள்!).

இது நடந்தது 1992 செப்டம்பரில். என்ன கொடுமை - அந்தப் பெண் பக்கம் நிற்க வேண்டிய மகளிர் வளர்ச்சித் துறை அவரைக் கைவிட்டது - பிஜேபி அரசாயிற்றே!

கடும் எதிர்ப்புக்கிடையே ஓராண்டு கழித்துக் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப் பட்டது. அதன்பிறகு 5 மாதங்கள் கழித்தே குற்றவாளிகள் கைது செய் யப்பட்டனர்.

குற்றவாளிகள் சாதாரணமான வர்களா? பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்கள்.

சமுகப் பிரஷ்டம் செய்யப்பட்டது யார் தெரியுமா? பாதிப்புக்கு ஆளான பன்வாரி தேவியே! 30 புதிய பஞ்சாயத்து உறுப்பினர்கள் வழக்கை வாபஸ் வாங்க வற்புறுத்தினர், அசரவில்லை அந்தப் பெண்.

கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது 1994இல். வழக்கு இரகசியமாகவும் நடத்தப்பட வில்லை. அந்தப் பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பகிரங்கமாக நடத் தப்பட்டது.

இதில் மறக்காமல் நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. வன்புணர்வு செய் யப்பட்ட அந்தப் பெண், மருத்துவ மனைக்குச் சென்றபொழுது பெண் மருத்துவர் இல்லை என்று சோதனை செய்ய மறுக்கப்பட்டது. ஒரு விதமாக 52 மணி நேரம் கழித்து மருத்துவ சோதனை.

இந்த அவலம் எல்லாம் ஒரு புறம் இருக் கட்டும். இப்பொழுது படிக்கப்போகும் பகுதிதான் முக்கியமானது.

“கீழ்ஜாதிப் பெண்ணான பன்வாரியை, உயர்ஜாதியினர் - அதுவும் பிராமணர் உட்பட எப்படி கற்பழிப்பர்?” என்று கேட்டார்களே பார்க்கலாம் டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள்.

(ஆதாரம்: Economic and Political Weekly 1995 November 25)..

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தாலும் பார்ப்பான் பார்ப்பானே!
- விடுதலை ஞாயிறு மலர், 15.6.19


Friday, 14 December 2018

பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர்

பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர் தான் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போர்.இவர்கள் ஆரிய வர்த்தத்தில் உள்ளோர். ஆரிய  வர்த்தத்திற்கு தெற்கே உள்ளவர்கள்(தென் இந்தியா) சூத்திர்கள் என சாஸ்திரங்(புராணங்கள்&மனுஸ்மிருதி)களும் நீதி மன்ற தீர்ப்பும் கூறுகிறது. சத்திரியர் என்றால் தமிழில் அரசர் என்று பொருள். அதனால் சாஸ்திரத்தால் சூத்திரர் எனப்பட்ட அரச வழியினர் என சொல்லிக்கொள்வோர் நாங்களும் சத்திரியர் என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களையும் சூத்திரர் பட்டியலில் சேர்த்து தான், அவர்களுக்கும் திருமணத்தின் போது தான் பூனூல் மாட்டுகிறான் பார்ப்பான்.
- 14.12.17ல் நான் முகநூலில் பதிவிட்டது

Saturday, 13 October 2018

பார்ப்பனரைப்பற்றிய பழமொழிகள்



1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644 அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் (Rev. Herman Jensen)  என்பவர் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Educational Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந் நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:-

241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.

744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால், தண்டு எடு, தடி எடு என்பார்கள்.

887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?

981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.

1581: அக்கிகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல

1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்

1657: பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போஜனம் செய்வித்தது போல

1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

2278: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துப்போன பசுதானம்

2884: ஆனைமேலிருக்கிற அரசன் சோற்றைவிட பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறுமேல்

2902: பசு சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது.

2904: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக் கூடாது.

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

Tuesday, 4 September 2018

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன பொருள்!

ஒழிக்கும் வழி!

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், அவர்களைக் கொன்று ஒழிப்பது என்பது அல்ல. சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசுத் தொல்லை ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒழிந்து விடுவார்கள்.

(பெரியார், விடுதலை - 13.10.1953)

Wednesday, 18 July 2018

பூனூல் எத்தனை பூனூல் 1886

பூனூல் எத்தனை பூனூல் 1886 சொல்வது புரட்சியாளர் அம்பேத்கர்
""""""""""""""""""""""""""""""""""""""""""

  இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்லர் ! அவர்களில் 1886 பிரிவினர் உள்ளனர் !

திராவிட பார்ப்பனர்கள் 5, மராட்டிய பார்ப்பனர்கள் 31, ஆந்திரப் பார்ப்பனர்கள் 16, தமிழ்ப் பார்ப்பனர்கள் 11, கர்நாடக பார்ப்பான் 7,குர்ஜான் பார்ப்பான் 147, கவுட பார்ப்பான் 5, சரஸவத பார்ப்பான் 3 , பஞ்சாப் சரஸ்வத் பார்ப்பான் 222, மலைநாட்டு சரஸ்வத்ப் பார்ப்பான் 35, நாட்டுப்புற சரஸ்வதப் பார்ப்பான் 57,

காஷ்மீர் சரஸ்வதப் பார்ப்பான் 155, காஷ்மீர் பார்ப்பான் 221, சிந்து சரஸ்வதப் பார்ப்பான் 6, கன்யா குப்ஜ பார்ப்பான் 10,  !

இதில் மிஸ்ரா,  சுக்லா, திவாரி,  துபே,  பாண்டே , உபாத்யாயா,  கபுவே,  தீட்சித் மற்றும் வாஜ்பேயி
ஆகியோர் அடக்கம் !