1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644 அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் (Rev. Herman Jensen) என்பவர் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Educational Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந் நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:-
241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.
744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால், தண்டு எடு, தடி எடு என்பார்கள்.
887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?
981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.
1581: அக்கிகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல
1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்
1657: பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போஜனம் செய்வித்தது போல
1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்
2278: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துப்போன பசுதானம்
2884: ஆனைமேலிருக்கிற அரசன் சோற்றைவிட பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறுமேல்
2902: பசு சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது.
2904: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக் கூடாது.
- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18
No comments:
Post a Comment