Showing posts with label பஞ்சாப். Show all posts
Showing posts with label பஞ்சாப். Show all posts

Thursday, 2 March 2023

பஞ்சாப் அரசின் பாராட்டத்தக்க செயல்! ஜாதிக் குறியீடு கொண்ட பள்ளிகளுக்குப் பெயர் மாற்றம்

 

சண்டிகர்,ஜன.2- பஞ்சாப் மாநிலத் தில் ஜாதிக் குறியீடு கொண்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

பஞ்சாபில் ஜாதி அடிப்படையில் பெயர் கொண்ட பள்ளிகளின் பெயரை மாற்றுமாறு அதிகாரிக ளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கடந்த 1ஆம் தேதி உத்தர விட்டார்.

இதையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங் களின் அதிகார வரம்புக் குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பெயர்கள் உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டது.

இதன் அடிப்படை யில் தொடக் கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி உட்பட 56 அரசுப் பள்ளி களின் பெயரை மாநில பள்ளிக் கல்வித் துறை மாற்றியுள்ளது.

பள்ளிகள் அமைந் துள்ள கிராமம் அல்லது நன்கு அறியப் பட்ட ஆளுமை, தியாகி அல் லது உள்ளூர் நாயகனின் பெயர் இந்தப் பள்ளிக்க ளுக்கு சூட்டப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர். அரசின் இந்த நட வடிக்கைக்கு மாநில ஆம் ஆத்மி கட்சி வர வேற்பு தெரிவித்துள்ளது.