Thursday 28 February 2019

ஜாதி மதமற்றவர் என அரசு சான்று பெற்ற திருப்பத்தூர் சிநேகா



ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி இணையரின் மூத்த மகள் நான். காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா என  எனக்குப் பெயரிட்டனர்.  அம்மா பெயரின் முதல் எழுத்தை முதலிலும், அடுத் தது அப்பா பெயரின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனேன்.

முதல் வகுப்பு சேர்க்கை யில் தான் பள்ளி நிர்வாகம்  முதலில் நான் என்ன ஜாதி என்று கேட்டது. எனக்கு ஜாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தை யாவது சொல்லுங்கள் என் றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர்.

இப்படி தான் தொடங் கியது என் முதல் பிரச்சாரம்.

பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் ஜாதி மதம் குறிப்பிட்டதில்லை. ஜாதி சான்றிதழும் இல்லை.

என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் அவ்வண் ணமே வளர்த்தனர்.

என் இணையர் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழாவை ஜாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற ஜாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம்.

ஆதிரை நஸ்ரீன், ஆதிலா அய்ரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு எங்கள் மகள்களை ஜாதி மத அடையாளங்கள் இன்றி வளர்கிறோம்.

ஜாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் இந்த அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம்.

ஜாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் ஜாதி சான்றிதழ் போல், ஜாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

நீண்ட முயற்சியில்....... என்ன ஜாதி என்று சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு, ஜாதி இல்லை மதம் இல்லை என சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன்.....

எனினும் இறுதியில் வெற்றி பெற்றோம். ஜாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றேன்.....

“மதம் மக்களின் அபின்” - என்றார் மார்க்ஸ்

மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது....... என்றார் அம்பேத்கர்.

ஜாதி, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்க வில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? - என்றார் பெரியார்.

ஜாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

இதோ இவர்களின் ஜாதி மத வர்க்கம் அற்ற சமூகத்திற்கான கனவின் முதல் புள்ளி.



லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல. போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும்.

ஜாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

கொள்கை காற்றில் கரையும் வெற்று முழக்கமல்ல. சமூக புரட்சிக்கான வலுவான விதை.

தோழமையுடன்,  ம.ஆ.சிநேகா.

நன்றி: இந்த புரட்சிகரமான சான்றிதழை அளிக்க பரிந்துரை செய்த திருப்பத்தூர் சார் ஆட்சியர் திருமிகு.பிரியங்கா பங்கஜம் அவர்கள், சான்றளித்த திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமிகு.சத்தியமூர்த்தி அவர்கள், அனைத்து விதங்களிலும் பேருதவியாக இருந்த தோழர்.அறவேந்தன் அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தகவல்: கோ.திராவிடமணி விடுதலை மாவட்ட செய்தியாளர், கிருட்டினகிரி.

-  விடுதலை ஞாயிறு மலர், 16.2.19

மீனாட்சி தீட்டான கதையைக் கேளுங்கோ, கேளுங்கோ!

மீனாட்சி கோவிலில் நாடாரும் பஞ்ச மரும் நுழைந்ததால் மீனாட்சி தீட்டா யிட்டா கோத்திரமும் தீட்டாயிட்டு தாம் கேளுங்கோ, கேளுங்கோ!


சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததை யடுத்து கோயில் மூடப்பட்டு, சுத்தீகரணச் சடங்குகள் செய்யப்பட்டன. 80 ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத்தில் ஆலயப் பிரவேசம் நடந்தவுடன் இதேபோல சுத்தீகரணச் சடங்கு செய்யப்பட்டது.

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தின் செயலர் எல்.என். கோபாலசாமியும் பட்டியல் இனத்தவர்களை(நாடார் உட்பட)யும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

வரலாற்றில் ஆலயப் பிரவேச நிகழ்வு என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வில், பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர். பூவலிங்கம், வி.எஸ். சின்னய்யா, முருகானந்தம் ஆகிய அய்ந்து தாழ்த்தப் பட்டவர்களும் எஸ்.எஸ். சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர்.

அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் உள்ள நாட்டார் வழக்காற்று மன்றத்தின் நூலகத்தில் உள்ள அன்றைய கும்மிப்பாடல் சிறு நூல் ஒன்றில் கூறுவ தாவது:-

பஞ்சமரும், நாடாரும் கோவிலுக்குள் நுழைந்ததால், மீனாட்சி தீட்டாயிட்டா, மீனாட்சி தீட்டான மதுரை தீட்டாச்சி, மதுரை தீட்டானால் நாடு கோத்திரமும் தீட்டாச்சு, என்று கூறி  கோவிலில் உள்ள மூலவர் மீனாட்சி சிலையை எடுத்துக் கொண்டு இன்றைய மதுரை மய்ய தபால் நிலையம் எதிரே உள்ள ஒரு கோவிலில் சிலையை வைத்து வழிபட ஆரம்பித் தனர்.

அதை எடுக்கச்சென்ற நீதிமன்ற ஊழியர்களை நெருங்கவிடாமல் கோவி லிலில் இருந்த பார்ப்பனப் பெண்கள் கோவில் வாசலை சுற்றி நின்று கொண்டு கோவில் நுழைவிற்கு எதிராக முழக்க மிட்டனர்.

சுமார் 1 வாரத்திற்கு மேல் நடந்த இந்த இழுபறிக்குப் பிறகு மீனாட்சி சிலையை மீண்டும் மீனாட்சிக் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

இந்த ஒரு வாரகாலத்தில் பஞ்சமர்கள் கோவிலில் நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டிற்குப் பரிகாரம் செய்யப்பட்டது, சிலை யும் சில நாட்கள் புனித நீரில் முழுமையாக மூழ்கவைக்கப்பட்டு பிறகு வெளியே எடுக்கப்பட்டது.

அந்தக் கும்மிப்பாடல்

பஞ்சமனும் சாணானும் கோவி லுக்கு வந்ததாலே,

மீனாட்சி ஆயிட்ட தீட்டு

தீட்டு ஆயிட்ட மீனாட்சி.,

மீனாட்சி தீட்டானதால

கோத்திரமும் தீட்டாச்சி,

கோத்திரம் தீட்டனதால

நாடு நகரமும் திட்டாச்சி,

கச்சேரிக்கு (நீதிமன்றம்) தெரியுமா சாத்திரம்?

கெட்டுப்போச்சு நம்ம கோத்திரம்

மீனாட்சி ஆயிட்டா தீட்டு

நாட்டார் வழக்காற்று மன்ற நூலகத்தில் உள்ள கோவில் நுழைவு கும்மிப்பாடல் தொகுப்பு.

-  விடுதலை ஞாயிறு மலர், 9.2.19

சூத்திரர் பட்டம் - சில முக்கிய தகவல்கள்

சூத்திரனென்ற பெயரைச் சுமப்பதற்கு தமிழர்கள் ஏற்றவர்களென்று அவர்கள் மேல் ஆரியர் அச்சுமையை ஏற்றியிருக் கிறார்கள். அதனைச் சுமந்துகொண்டிருப்ப வர்கள், இறக்கிவிட வேண்டுமேயன்றி, ஏற்றியவர்கள் இறக்கிவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதி சமீபகாலத்தில், ஆனரெபிள் திவான்பகதூர் ரகுநாதராவ் அவர்கள் (இவர் காங்கிரஸ் துவக்க காலத் தலைவர்களில் ஒருவர்) ஆனரெபிள் பொப்பிலி மஹாராஜா அவர்களை சூத்திரர் என்று எழுதி, 1910ஆம் வருடம், ஏப்ரல் 23ஆம் தேதி பிரசுரமான ‘ஹிந்து' பத்தி ரிகை வாயிலாக வெளியிடப்பட்டதை அநேகர் அறிந்திருப்பீர்கள். (ராவ் பகதூர் வெ.ப.சுப்பிரமணி முதலியார் அவர்கள் ‘இராமாயண உள்ளுரைப் பொருளும் தென் னிந்திய சாதி வரலாறும் - 1935 வெளியீடு)

1. அரசு ஆவணங்களில் 'சூத்திரர்' பட்டம் நீக்கக் கோரி இயற்றப் பட்ட முதல் தீர்மானம்

பார்ப்பனரல்லாத இளைஞர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சென்னை எஸ்.அய். ஏ.ஏ. மைதானத்தில் 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22, 23 தேதிகளில் நடைபெற்றது. 20ஆம் நூற்றாண்டின் கிழக்கத்திய லூதர் என்றழைக்கப்பட்ட, இரண்டாயிரம் ஆண்டுகளாக மதம் என்ற போர்வையில் ஆர்ய இனத்தால் தங்களது அடிப்படை உரிமைகளும் களவாடப்பட்ட நமது சகோதரர்களுக்காக போராடியவரும், தனது வாழ்நாளையே பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு தியாகம் செய்தவருமான டாக்டர் நாயர் அவர்கள் பெயரிலான அரங்கில் மாநாடு நடை பெற்றது. மைசூர் ஜனாப் முகமது அப்பாஸ் கான் அவர்கள் இம்மாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இதனை பனகல் மகாராஜா அவர்கள் முன்மொழிய செல்வி ரஞ்சிதம் வழி மொழிந்தார். திரு வோகேலி ஆர்யா அவர்கள் அனைவரையும் வர வேற்றார். எந்த ஜாதியும் நமது ஜாதியை விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்ற நம்பிக்கையில் பொது வாழ்வினைத் தொடங்க வேண்டுமென நமது மதிப்பிற்குரிய தேசப் பற்றாளர் திரு ஈ.வெ. ராமசாமி அவர்களின் ஆலோச னைக்கு உண்மையானவர்களாக நாமிருந்து, நாம் அனைவரும் இங்கு ஒன்றாக உயர்ந் தவர், தாழ்ந்தவர். பணக்காரர், ஏழை, ஆண், பெண், இந்து, முகமதியர், கிருஸ்துவர் என்ற வேறுபாட்டின்றி, நமது தனிப்பட்ட சுதந்திரத்தையும், குண நலங்களையும் இழந்து விடாமல் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் போல் நாம் இங்கு வாழ்வோம் என்று அவர் கூறினார். இம்மாநாட்டில் மேலும் திருவாளர்கள் சர்.ஏ.ராமசாமி முதலியார், ஈ.வெ.ராமசாமி, எஸ்.ஆர்யா, சி.செங்கல்வராய முதலியார், ஓ.சி.சீனிவாசன், பி.ஜீவரத்தின முதலியார் மற்றும் பல தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரு ஜே.எஸ். கண் ணப்பர் கீழ்க்கண்ட தீர்மானத்தை வழி மொழிந்தார்.

"சென்னை அரசு தனது ஆவணங்களில் 'சூத்ரா' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பெரும்பான்மையாக உள்ள பார்ப்பன ரல்லாத சமூகத்தினரின் சுயமரியாதை உணர்வை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது என இம்மாநாடு கருதுகிறது. அதனால், கடந்த கால ஆவணங்களி லிருந்து இந்த சொல்லை நீக்குவ துடன் அலுவலக ஆவணங்களில் இனி இச்சொல் லைப் பயன்படுத்தக் கூடாதென அனைத்து இலாக்காக்களுக்கும் உடனடியாக ஒரு ஆணை பிறப்பிக்கவேண்டுமென அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஒட்டுமொத்த சமூகத்தின் சுயமரியாதை யினைப் பற்றியது இத்தீர்மானம் என அவர் கூறினார். பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்' என்றழைக்கப்பட்டனர்; அவர்களும் இது ஏதோ தங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை என்பதாகவே கருதி இதுவரை அதில் நிறைவு பெற்றவராகவே இருந்துவந்தனர். ‘ரிக் வேதம், மனுதர்ம சாஸ்திரப்படி ஒரு சூத்திரன் என்பது 'தாசிமகன்' என்றும், பார்ப்பனருக்கு சேவை செய்யவே பிறந்த வன் என்றும் பொருள் தருவதாகும். இந்தப் பட்டமும் அதன் விளக்கமும் இவர்களுக்கு உண்டாக்கும் இழிவைப் போல் இழிவைத் தருவது வேறெதுவுமிருக்க இயலாது. சில காலத்துக்கு முன் சென்னையின் வடக்குப் பகுதி ‘கருப்புநகரம்' என்றழைக்கப்பட்டதை விட இது மிகவும் மோசமானது. மக்களின் போராட்டத்தின் காரணமாக இப்பெயர் ‘ஜார்ஜ் டவுன்' என மாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கவேண்டும். 'பஞ்சமர்' என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் இதற்கு எதிராக மறுப்பு தெரிவித்ததால், தற்போது அவர்கள் ஆதிதிராவிடர் என்றழைக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அரசுப் பணியில் உள்ள பணியாளர்களின் வகுப்புவாரியான எண் ணிக்கையினை அளிக்க சட்டமன்ற மேலவை கேட்டுக்கொண்டதற்காக சென்னை மாகாண சுயாட்சி அரசு பதில் அளிக்கும் போது, அரசின் பார்ப்பனச் செயலாளர் ஒருவர் சமீபத்தில் ‘சூத்ரா’ என்ற சொல்லை பார்ப்பனரல்லாதாரைக் குறிக்கப் பயன்படுத் தியுள்ளார். மதநம்பிக்கை கொண்டு இருந்த அரசாங்கத்தின் கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியின்போது, எந்த அரசு அறிக்கையிலும் இப்பட்டம் பயன்டுத்தப்பட வில்லை. ஆனால் தற்போதுள்ள உள்துறை அமைச்சரோ ஒரு பார்ப்பனரல்லாதவர். டாக்டர் . சுப்பராயன் அவர்களிடம் நாம் கோருவதெல்லாம், அரசு ஆவணங்களி லிருந்து இச்சொல் நீக்கப்படவேண்டும் என்பதுதான். இத்தீர்மானத்தை வழி மொழிந்த திரு டி.ஆர்.ரத்தினம் அவர்கள் சூத்ரா என்ற இச்சொல் சமூகத்தை மிகவும் இழிவு படுத்துவதாக உள்ளதால், அரசு ஆவணங்களில் ஆட்சேபணைக்குரிய இத்தகைய சொல் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். இத்தீர் மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பலத்த கைதட்டல்களுக் கிடையே நிறைவேற்றப்  பட்டது.

2. சந்நியாசம் பெற்றுக் கொள்ளும் உரிமை கூட சூத்திரர்களுக்கு இல்லை என்பது பற்றிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பு

"சந்நியாசம் கொள்வது ஆரியர்க்கு உரியதல்ல; ஆரியர்கள் முதலாவதாக இந்தியாவில் நுழைந்தபொழுது, சந்நியா சத்தை வெறுப்பவர்களாகவே இருந்தனர். அவர்களது வாழ்க்கைச் சூழல் அதைப்பற்றிச் சிந்திக்கக் கூட அவர்களை அனுமதிக்கவில்லை. உண்மையில் வேதகால முனிவர்களிற் பலர் அவர்களது பெரிய மகிழ்வான, நிறைந்த வாழ்வினை குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந் தனர். அவர்களில் யாக்ஞவல்கியரைப் போன்ற சிலர் இரண்டு மனைவிகளை உடையவர்களாக இருந்தனர். காலப் போக்கில் ஆரியர் அல்லாதாரிடமிருந்து - குறிப்பாக ஹரப்பாவில் வாழ்ந்த திராவிடர்களிடமிருந்து 'சந்நியாசம்' என்ற கோட்பாட்டை அவர்கள் கடன் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் மூன்று உயர் சாதியினர் மட்டுமே லவுகீக வாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ளலாம் ; மற்றவர்கள் மேற்கொள்ளக் கூடாது என்று ஆக்கிக் கொண்டார்கள். அதுவும் வாழ்வின் கடைசிக் கட்டத்தில்தான். இந் தக் கடுமையான விதிமுறைக்கு மாறாக, சூத்திரர்கள் மட்டுமல்லாமல் அடிமை களும் சண்டாளர்களும் (தீண்டத்தகாதவர் களும்) கூட விரும்பினால் சந்நியாசிகளா கலாம் என்று புத்தர் அனுமதித்தார். இவ்வாறு ‘கீதை பற்றிய உண்மை' என்ற நூலில் பகுத்தறிவு அறிஞர் வி.ஆர். நார்லா கூறியுள்ளார்.

பிற்காலத்தில் ஆரியர்கள் இதனை எடுத்துக் கொண்டார்கள்; என்றாலும் மூன்று சாதியாருக்கு மட்டுமே உள்ள உரிமை சந்நியாசம் கொள்ளுவது என்று திரித்து வைத்துக் கொண்டனர். அதாவது கீழ் சாதியினருக்கு அவ்வுரிமை இல்லை. இன்றளவும் ‘இந்துலா' என்ற இந்துச் சட்டத்தில் இது நடைமுறையில் உள்ள ஓர் சட்டமாகும். உச்சநீதிமன்றத்தின் கீழ்க்கண்ட தீர்ப்பில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏ.அய்.ஆர். 1980 உச்சநீதிமன்றம்

ஏ.அய்.ஆர். 1972 லிருந்து ஆல் 273

எஸ். முர்தசா பாசல் அலி

மற்றும் ஏ.பி. சென் ஜேஜே

சிவில் மேல்முறையீடு எண்; 1979-ன் 1802-நாள்: 21.12.1979

கிருஷ்ணசிங்: மேல்முறையீட்டாளர் வி. மதுரா அஹிர் மற்றும் இதரர்.

(அ) இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 3, விதி 13 - வாதிப்பிரதிவாதிகளுக்கு இந்து தனிப்பட்ட சட்டம் பொருந்துவது பற்றி - சூத்திரர்கள் சன்னியாசிகளாக ஆவதற்குத் தகுதியற்றவர்களா என்பது பற்றி:

ஜதி அல்லது சன்யாசி ஆவதற்கு சூத்திரர்கள் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்ட ஸ்மிருதி எழுதியவர்களால் நிர்ணயிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்த கடுமையான விதி, அரசியலமைப்பு சட்டம் பகுதி 3இன் கீழ் உறுதியளிக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் காரணமாக செல்லத் தக்கதல்ல என்ற கருத்து சரியான தல்ல. வாதப்பிரதிவாதிகளின் தனிப்பட்ட சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்தின் 3-ஆம் பகுதி தொடவே இல்லை (பக்கம் 17)

வாதிப்பிரதிவாதிகளின் தனிப்பட்ட சட்டங்களைக் கையாளும்போது, இந்து சட்டங்கள் பற்றி அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப் பூர்வமான ஆதாரங்களின், அதாவது பல்வேறு உயர்நீதிமன்றங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளவாறு ஸ்மிருதி கள் மற்றும் அவற்றின் விளக்கவுரைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு நீதிபதி சட்டத்தை, அது எந்த ஒரு பழக்கத்தினாலோ அல்லது வழக்கத்தினாலோ அல்லது மற்றொரு சட்டத்தால் ரத்து செய்யப்பட்ட தாகவோ அல்லது மாற்றப்பட்டதாகவோ இல்லாதபோது, நடைமுறைப்படுத்த வேண்டுமேயன்றி, நவீன காலத்திய தனது சொந்தக் கருத்தினை அறிமுகப்படுத்த இயலாது. (பக்கம்: 17)

கீழ்சாதிக்காரர்களுக்குத் துறவு பூணவும் உரிமை இல்லை. அப்படி நிகழ்ந்துவிட்டால், அது அவர்களுக்கு உயர்சாதியினருடன் சிறிதளவேனும் சமத் துவத்தை அளித்து விடும். மேலும், மேல்சாதிக்காரர்களின் ஆதிக்க சக்திகளின் அடித்தளம் ஆட்டங் கண்டுவிடும் என்பதால் மிகவும் சாமார்த் தியமாக வர்ணாசிரமத்திற்கு - குலத்தொழி லுக்கு எவ்வித இடையூறும், தடங்கலும் - ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொண் டனர். கிருஷ்ணனின் கீதை உபதேசம் மூன்றாவது அத்தியாயம் 4, 7, 8 சுலோகங் களை கூர்ந்த மதியினர் படித்தால் இதனை எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்று தமது நூலின் 169ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.

- விடுதலை ஞாயிறு மலர், 9.2.19

10 விழுக்காடு மத்திய அரசின் ஆணை

உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் பால்வார்க்கும் மத்திய அரசின் ஆணை இதுதான்


-  விடுதலை ஞாயிறு மலர், 2.2.10

Wednesday 27 February 2019

பான் எண்ணை எளிதாகப் பெறலாம்

பான் கார்டில் உள்ள நிரந்தரக் கணக்கு எண் வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல், பிஎஃப் விதிடிராவ் போன்ற காரணங்களுக்குக் கட்டாயமாக உள்ளது.
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 EXCLUSIVE  STYLE Technology  Group's what's app  9843335586 💣💣💣💣💣🍭🍭🍭🍭🍭🍭🍭

அது மட்டும் இல்லாமல் 10 இலக்கம் கொண்ட இந்தப் பிளாஸ்டிக் பான் கார்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். இப்படிப் பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. எனவே பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம். உங்களுடைய பான் கார்டு என் மறந்துவிட்டால் வருமான வரித் துறை இணையதளத்தில் உள்ள ‘ Know Your PAN' என்ற சேவை மூலமாகப் பான் விவரங்களைப் பெற முடியும். வருமான வரி இணையதளத்தில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/VerifyYourPanDeatils.html என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் ‘verify your PAN' என்ற படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும். இங்கு தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் தங்களது பான் எண்ணை எளிதாகப் பெறலாம். பான் எண் தெரியவந்த உடன் டூப்ளிகேட் பான் கார்டுக்கான கோரிக்கையை சமர்ப்பித்து புதிய கார்டை பெறலாம். தற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- கட்செவியில் வந்தது.

பான் எண்ணை எளிதாகப் பெறலாம்

பான் கார்டில் உள்ள நிரந்தரக் கணக்கு எண் வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல், பிஎஃப் விதிடிராவ் போன்ற காரணங்களுக்குக் கட்டாயமாக உள்ளது.
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 EXCLUSIVE  STYLE Technology  Group's what's app  9843335586 💣💣💣💣💣🍭🍭🍭🍭🍭🍭🍭

அது மட்டும் இல்லாமல் 10 இலக்கம் கொண்ட இந்தப் பிளாஸ்டிக் பான் கார்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். இப்படிப் பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. எனவே பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம். உங்களுடைய பான் கார்டு என் மறந்துவிட்டால் வருமான வரித் துறை இணையதளத்தில் உள்ள ‘ Know Your PAN' என்ற சேவை மூலமாகப் பான் விவரங்களைப் பெற முடியும். வருமான வரி இணையதளத்தில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/VerifyYourPanDeatils.html என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் ‘verify your PAN' என்ற படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும். இங்கு தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் தங்களது பான் எண்ணை எளிதாகப் பெறலாம். பான் எண் தெரியவந்த உடன் டூப்ளிகேட் பான் கார்டுக்கான கோரிக்கையை சமர்ப்பித்து புதிய கார்டை பெறலாம். தற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- கட்செவியில் வந்தது.

Saturday 16 February 2019

அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்



சென்னை, பிப்.16 பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது.
மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக இமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. 
இதையடுத்து தமிழகம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், 
பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் 19ஆம் தேதி முதல் அமலாகவுள்ளது.
காவல்துறையினருக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்பு படைக்கு 101, சுகாதாரத் துறையினருக்கு 108, பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள்  தற்போது தொடர்பு கொண்டு  வருகின்றனர். ஆனால் வரும் 19ஆம் தேதி முதல், 112 என்ற ஒரே எண்ணிலேயே அனைத்து வகையான உதவிகளையும் பொதுமக்கள் கோர முடியும்.
நெருக்கடி காலத்தில் உதவி கோர விரும்புவோர், தொலைபேசியில் 112 என்ற எண்ணை அழுத்தினாலோ, ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசி எனில், அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் பொத்தானை 3 முறை அழுத்தினாலோ, அவசரகால உதவி சேவை மய்யத்துக்கு அழைப்பு செல்லும். 
செல்லிடப்பேசியில் 112 என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதன்மூலமும் உதவி கோரலாம்.
அந்த அழைப்பு, 112 சேவை மய்யத்துக்கு செல்லும். அதில் பேசும் அதிகாரிகள், பொதுமக்கள் கோரும் உதவி வகைகளை கவனத்தில் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார நிலையம் மற்றும் பிற உதவிகள் மய்யங்களில் ஏதேனும் ஒன்றுக்கு தகவல் அனுப்புவர். அதன்மீது சம்பந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு உதவி செய்வர்.
அமெரிக்காவில் 911 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, அனைத்து வகையான உதவிகளையும் அந்நாட்டு மக்கள் கோர முடியும். அந்த வரிசையில் இந்தியாவில் தற்போது 112 என்ற எண் அமல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 16.2.19

Tuesday 12 February 2019

ஜாதி முறை (கணக்கெடுப்பு)



ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை


சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப்பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்சஸ் சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங் களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக் கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார்  இந்திய கவர்ன்மெண்டுக்கு அனுப்பிய விண்ணப் பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத் தெரி வித்திருக்கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்ப தென்ன வென்றால்,

ஜாதி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டுமென் னும் விஷயத்தில் கவர்ன்மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை சென்சஸ் குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற் கில்லை. ஆனபோதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள் கையை உண்மையாய் அடியோடு விட்டு இருக்கின்றவர்கள். தங்களுக்கு ஜாதி இல்லையென்று சொன்னால் அதை ஜனக்கணக்கு எடுப்பவர்கள் (அதாவது  என்யூமிரேட்டர்கள்) ஒப்புக் கொண்டு அந்தக் காலத்தில் ஜாதியில்லை அதாவது சூடை என்று பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டி ருக்கிறார்கள்.

இது தற்சமயம் நமக்குப் போதுமானதாகும். ஏனெனில் தங்களுக்கு ஜாதி இல்லையென்று கணக்குக் கொடுக்க இஷ்டமுள்ளவர்கள் சர்க்கார் நிபந்தனைக்குப் பயந்து அதாவது ஜாதிப்பெயர் கொடுக்கா விட்டால் ஏதாவது ஆபத்து வருமோ என எண்ணிக் கொண்டிருப்ப வர்களுக்கே இது தைரியத்தைக் கொடுப்பதாகும்.

ஆதலால் ஜாதி வித்தியாசம் மனதில் மாத்திர மல்லாமல், அனுபவத்திலும் பாராட்டாமலிருக்கின் றவர்கள் தைரியமாய் என்யூமிரேட்டர்கள் - கணக்கெடுப்பவர் களிடம் தங்களுக்கு ஜாதியில்லை அல்லது(Nil) நில் என்று சொல்லிவிடலாம் என்பது விளங்கும்.

அதுபோலவே மதம் என்ன என்று கேட்கும் போதும் தைரியமாய் தங்களுக்கு மதம் இல்லை யென்று சொல்லிவிடலாம். இதை மீறிக் கணக் கெடுப்பவர்கள் ஏதாவது சொல்லித்தானாகவேண்டு மென்று கேட்டால் பகுத்தறிவு மதம்(Rationalist) என்று சொல்லி விடலாம்.

ஆதலால் யாரும் சர்க்காருக்குப் பயந்து கொண்டு உண்மைக்கும், தங்கள் உணர்ச்சிக்கும் விரோதமாய் ஜாதிப் பெயரோ, மதப் பெயரோ கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை.

-  குடிஅரசு - 14.12.1930

-  விடுதலை நாளேடு, 9.2.19

Friday 1 February 2019

இந்திய அரசியல் சட்டம் 51-ஏஅடிப்படை கடமைகள் ( Fundamental Duties

இந்தியஅரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை கடமைகள் ( Fundamental Duties 51A) என்ற பகுதி (Part-lVA) நெருக்கடி நிலை காலத்தில் 42 வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வழியாக 1976ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. 10 துணை பிரிவுகள் இதில் உள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். அடிப்படைக் கடமைகள், உரிமைகள்பற்றி.

இந்திய அரசியல் சட்டத்தில்...

அதில் என்ன இருக்கிறது தெரியுமா? காவல்துறையினர் இதை நன்றாக கவனிக்கவேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் 51-ஏ

Article 51A in The Constitution Of India 1949
51A. Fundamental duties It shall be the duty of every citizen of India (a) to abide by the Constitution and respect its ideals and institutions, the national Flag and the National Anthem;
to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;


 அரசியல் சட்டத்தில், 'அடிப்படைக் கடமைகள்' (Fundamental Duties) Part IV-A 51AH என்ற சட்டப் பிரிவில் உள்ள ஒரு துணைப் பிரிவு கூறுவதென்ன?

"நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் (குடிமகளும் அடக்கமே) அறிவியல் மனப்பாங்கு, ஏன்? எதற்கென்று ஆராய்ந்து கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம், மனிதாபிமானம் ஆகியவற்றை பரப்புதல் அடிப்படையான கடமையாகும்" என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறுகிறதே!

(1) Scientific Temper
(2) Spirit of  Inquiry
(3) Reform
(4) Humanism


இவைகளைப் பரப்புதல் அடிப்படைக் கடமை என்று கூறும் நிலையில், இத்தகைய சட்டங்கள் இன்றியமையாதவை அல்லவா?