Showing posts with label நூல் திறனாய்வு. Show all posts
Showing posts with label நூல் திறனாய்வு. Show all posts

Friday, 19 February 2021

உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்"



"உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்" என்ற தலைப்பில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2009ல் வெளியிடப்பட்ட நூல்.
நா.நந்திவர்மன் என்பவரால் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அறக்கட்டளை சொற்பொழிவாக இன் நிறுவனத்தில் ஆற்றிய ஆய்வுரையாகும்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலக பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளோடு ஒப்பு நோக்கி ஆய்வுரையாற்றியுள்ளார்.
மாந்த இனத்தின் தோற்றத்தை அறிவியல் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
பக்கங்கள்-108
விலை- ரூ35/-
- எனது முகநூல் பதிவு, 20.2.18

Saturday, 18 July 2020

''புத்தரின் புனித வாக்கு''



''புத்தரின் புனித வாக்கு'' என்கின்ற இந்த நூலை பழைய ஆவணங்களிலிருந்து ''பால் காரஸ்'' என்பவர் தொகுத்துள்ளார். ஜப்பானிலுள்ள கமகூரா புத்த மடத்தின் புத்த பிட்சு 'ரெட் ரெவரன்ட் ஷாக்கு சோய'னால் இது 1894ல் வெளியிடப்பட்டது. இன் நூலில் விளக்கப் படங்களை 'ஒ.கோபெட்ஸ்கி' என்பவர் வரைந்துள்ளார். கிறித்தவர்களுக்கு ''பைபிள்'' போலவும், இஸ்லாமியர்களுக்கு ''குரான்'' போலவும் சீக்கியர்களுக்கு ''கிரந்தம்'' போலவும் இன் நூல் புத்த மத்த்திற்கு புனித நூலாக்க் கருதப்படுகிறது. பல நாடுகளில் அனைத்து பிரிவு புத்த ஆலயங்களிலும் இன் நூல் வைக்கப்பட்டு புனித நூலாக கருதப்படுகின்றது. ஜப்பான் மற்றும் இலங்கையில் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. இன்நூல் பைபிள்,குரானை போலவே அத்தியாயம்.சுலோகம் என்ற முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை உள்ளடக்கியது இன் நூல். தமிழில் மு.கி. சந்தானம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். இந்தியாவில் இந் நூலை இந்திய அரசு ''தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்'' மூலம் பல மொழிகளில் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு -2000, விலை ரூ.75.00, தமிழ் நாட்டில் கிடைக்குமிடம் - ப்ப்ளிகேஷன்ஸ் டிவிஷன், இராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை-600090.(8வது அத்தியாயத்திலிருந்து புத்தரை மொட்டைத் தலையராக அறிமுகப்படுத்துகின்றனர், ஆனால் படம் வரைந்தவரோ புத்தரை ''கிராப்பு'' தலையராகவே வரைந்துள்ளார். அதோடு புத்தரை ''இயேசு''வின் சாயலாகவே வரைந்துள்ளார் ) புத்தரை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள இந்நூலை வாங்கி படியுங்கள். அரசு வெளியீடாக இருப்பதால் விலையும் குறைவு தான்.
- 18.07.14, முகநூல் பக்கத்தில்

Saturday, 13 June 2020

சர் பிட்டி தியாகராயர்



 இன்று திராவிடர் இயக்க முன்னோடி, தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின்(ஜஸ்டிஸ் கட்சி ) தலைவர், முதல் முதலாக சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சர் பிட்டி தியாகராயரின் 169வது பிறந்த நாளை கொண்டாடினோம். ( 27.04.2020)
- எனது முகநூல் பக்கம்

1.6.17ல் மறைந்த வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் சர் பிட்டி தியாகராயரின் 165வது பிறந்த நாளை முன்னிட்டு, 27.4.2015ல் வெளியிட்ட நூல் இது.(பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகம்)
- செ.ர.பார்த்தசாரதி, 5.6.17

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! என்கிற இந்த நூலை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதியுள்ளார். திராவிடர் கழக வெளியீடு ஆகும் இந் நூல், விலை ரூ 140/-
நீதி கட்சி காலம் தொடங்கி இன்றைய காலம் வரை திராவிடர் இயக்கம் குறித்த பார்ப்பனர்களின் தவறான கருத்து பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுத்து எழுதப்பட்டுள்ளது. பல வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. படித்து பாதுகாக்கப்படவேண்டிய நூல்.
-செ.ர.பார்த்தசாரதி, 3.6.14

Friday, 12 June 2020

பௌத்தமும் பெரியாரியமும் - நூல் ஆய்வு



"பௌத்தமும் பெரியாரியமும்" என்ற நூலை 'நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்' சிறு நூல் வரிசையில் வெளியிட்டுள்ளது.
ந.முத்து மோகன் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையம் சார்பில் 9 10 2012 அன்று பேராசிரியர் அறவேந்தன் ஏற்பாடு செய்திருந்த "இந்திய தத்துவ மரபில் பெரியாரியம்" என்ற கருத்தரங்கில் "பௌத்தமும் பெரியாரியமும்" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இந்நூல். பக்கங்கள் - 16
விலை 10 ரூபாய் தான்.
இந்நூலில் இந்திய தத்துவங்களை விளக்கிக் கூறுகிறார். தந்தை பெரியாரின் தத்துவங்களை விளக்கிக் கூறி விட்டு, பௌத்தத்திற்கும் தந்தை பெரியார் தத்துவத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகளை எடுத்துக்காட்டுகிறார். ஆத்மா மறுப்பு, உடல் இயங்கு தத்துவம் போன்றவற்றை விளக்கி பேசியுள்ளார். தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை இடையில் வெளிப்படுத்துகிறார்.
- செ.ர.பார்த்தசாரதி, முகநூல் பதிவு, 31.5.20

Friday, 22 May 2020

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்



"இயேசு என்றொரு மனிதர் இருந்தார் " என்ற தலைப்பில் சேவியர் என்பவர் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன்.

இன் நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

கிருத்தவர்களின் வேத நூலான 'புதிய ஏற்பாடு' என்ற நூலை படிப்பவர்களுக்கு இயேசுவின் கதை தெளிவில்லாமல் இருப்பதை அறிவார்கள். இயேசுவின் கதையை மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்பவர்கள் எழுதியதாக புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் ஒருத்தவருக்கு ஒருத்தர் முரண்பாடாக கூறியுள்ளனர்.

இந் நூலில் முறையாக தொகுத்து தெளிவாக படிக்கும் வகையில் எழுதியுள்ளார். யோவான் தான் இயேசுவை கடவுளாக காண்பிக்கும் வகையில் சிறப்பித்து எழுதியுள்ளதாக கூறியுள்ளார். 

- எனது முக நூல் பக்கம்,12.4.20

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்



"யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற எஸ். செண்பகப் பெருமாள் அவர்கள் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன். இது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

குலதெய்வ வழிபாடாக தொடங்கிய யூதமதம் பரிணாம வளர்ச்சி பெற்று பெருந் தெய்வ வழிபாடாக மாறியது குறித்து விளக்கிக் கூறுகிறது இந்நூல். யூதர்கள் சமாரியர்கள் என இரு பிரிவாக பிரிந்தது குறித்தும், பைபிள் படி இயேசு யூதர்கள் இடத்தில் பிறந்து யூதர்களுக்கான வழிகாட்டியாக அறியப்பட்டார் என்றும், பிறகு வந்த பவுல் இயேசுவை கிறிஸ்துவாக மாற்றி அனைத்து தரப்பு மக்களுக்கான கடவுளாக மாற்றும் வகையில் பைபிளை மாற்றினார், என புதிய ஏற்பாடு-பழைய ஏற்பாடு ஆகியவற்றிலிருந்து ஏராளமான ஆதாரங்களை எடுத்து விளக்கிக் கூறியுள்ளார். 
- எனது முகநூல் பக்கம், 10.4.20

பாரபாஸ் - நோபல் பரிசு பெற்ற நாவல்



இயேசுவை கடவுளாக நம்பலாமா நம்பக்கூடாதா என்பதை நடுவாகவைத்து இயேசுவிற்கு பதிலாக சிலுவை தண்டணையிலிருந்து தப்பித்ததாக சொல்லப்படும் பாரபாஸ் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கும்வகையில் 1950ல் 'பேர் லாகர் குவிஸ்ட்' எனும் தெற்கு சுவிடனை சேர்ந்த எழுத்தாளரால் எழுதப்பட்ட 'பாரபாஸ்' என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை இன்று படித்து முடித்தேன்.

கர்ப்னையாக சொல்லப்பட்ட செய்திகளை (அற்புதங்கள்) நம்பி வெறித்தனமாக பரப்பப்பட்ட மதம் கிருத்தவ மதம் என்பதை நேரடியாக சொல்லாமல் கதையாக சொல்கிறார் நாவலாசிரியர்!
- எனது முகநூல் பக்கம், 7.4.20

திராவிடமென்றால் என்ன?







படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்


நான் நேற்று முன் நாள் படித்து முடித்த நூல்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ந.சி.கந்தையா அவர்கள் 1948ல் எழுதிய நூல்- திராவிடமென்றால் என்ன?
2008ல் 'தையல் வெளியீடு' சென்னை-14 வெளியிட்டுள்ளது.'திராவிட மொழிகள் தோன்றிய வரலாறு, தமிழ் மொழி வளர்ச்சி,திராவிடம் பற்றிய ஆய்வு, ஆரிய மொழி கலப்பு, வட நாட்டு மொழிகளின் தோற்றம், தமிழை கெடுக்கவந்த ஆரியம் மற்றும் ஆரியமொழி, ஆரிய பண்பாட்டு படையெடுப்பு' என நிறைய ஆதாரங்களுடன் விளக்கி கூறியுள்ளார். படித்து பயன்பெறவேண்டிய நூல். விலை 50ரூ
-22.5.14

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறறு

இந்த நூல் தந்தை பெரியாரின் வாழ்க்கையை ஒரளவு சுருக்கமாக கூறுகிறது. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படிப்பதற்கு முன் இதை படித்தால் முன்னோட்டமாக இருக்கும். ஆசிரியர்- பட்டத்திமைந்தன்,
கௌரா ஏஜென்சி வெளியீடு, விலை- ரூ 80.00
-எனது முகநூல் பக்கம், 22.5.17