Wednesday 27 July 2022

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

Tuesday 26 July 2022

நாங்கள் ஹிந்து அல்ல... திராவிடர்! இலண்டனில் நடைபெற்ற வழக்கு!

103 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்வில் செய்த வரலாற்று சாதனை

Wednesday 20 July 2022

தஞ்சையில் காணாமல்போன தமிழ் பைபிள் 300 ஆண்டுகளுக்குப்பின் லண்டனில் கண்டுபிடிப்பு

Sunday 17 July 2022

பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! (வரலாற்று சுவடு)


(வரலாற்று சுவடு)
பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! போலீசார் தடியடி நடத்தி பெண் வக்கீல்களை விட்டினார்கள். 20 பெண் வக்கீல்கள் காயம் அடைந் தார்கள்.

ஓர் ஆணுக்கு எதிராக 2 பெண்கள் சாட்சி சொன்னால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற சட்டத்தை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

- ராணி வார இதழ், 27.02.1983

Saturday 2 July 2022

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்

ஜாதி, மதம் அற்றவர்கள் எனச் சான்றிதழ்


சிவகாசி, ஜூன் 24 சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்து பகுதி யைச்  சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 35). இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்க வேண் டும் என்று விண்ணப்பம் அளித்தார். விண் ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுவரை இப்படி சான்றிதழ் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறினர். அப்போது கார்த்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கி உள் ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதி காரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்தி கேயன், அவருடைய மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் ஜாதி, மதம் அற்ற வர்கள் என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, "எனது சொந்த ஊர் சிவகாசி. சில ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு மனு கொடுத் தேன். அப்போது வழங்க மறுத்துவிட்டனர். ஆனால், அந்த சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இணையதளத்தில் அதற்கான தகவல்கள் கிடைத்தன, கடந்த 2018 இல் வழக்குரைஞர் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்று இருந்தார். 

இதை ஆதாரமாக வைத்து ஜாதி, மதம் அற்றவர்கள் என்று எனக்கும், என் மனை விக்கும் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயதொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியையாக உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள். மூத்த மகன் நேசன்(4) யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கி றேன். 2 ஆவது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயதுதான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழுக்கு விண்ணப்பம் கொடுப்பேன்.

 இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஜாதி, மதம் அற்றவர் என மகளுக்குச் சான்று பெற்றனர்

 குழந்தைக்கு ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்: கோவையைச்சேர்ந்த பெற்றோரின் உறுதி

கோவை, ஜூன் 1 - பள்ளி, கல்லூரி களில் மாணவர் சேர்க்கையின் போது இடஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை பெறுவதற்கு ஜாதிச் சான்றிதழ் அவசியம் ஆகும். 

அதேநேரத்தில், எந்த ஜாதி, மத அடையாளமும் தேவையில்லை என்று கூறுவோருக்கு ஜாதி, மதம் அற்றவர் என சான்றளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் அர சாணை உள்ளது. எனினும், அச்சான்றிதழ் பெறுவதில் பெரும் அறைகூவலையே பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் பெரு மளவிலான எதிர்நீச்சல் போட்டு, தங்களின் மகளுக்கு  சான்றிதழைப் பெற்றுள்ளனர் அச்சிறுமியின் பெற்றோர்.

கோவையை சேர்ந்த இணையர் தங்களது மகளுக்கு ஜாதி மற்றும் மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர்.  கல்வி நிலையங்களில் குழந்தைகளை சேர்க்கும்போதே, அவர்களுடைய விவரங்களில் ஜாதி மற்றும் மதம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள் கேட்டு பெறுகின்றன. இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிலையில், தங் களது ஜாதி மற்றும் மதத்தினை குறிப்பிட விரும்பாதவர்கள் அதனை புறக்கணிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு முன்னரே அறிவித்திருந்தது.  இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றி தழை பெற்றுள்ளனர்.

கோவையில் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருபவர் நரேஷ் கார்த்திக். 

இவரது மகள் வில்மா. தற்போது மூன்றரை வய தாகும் வில்மாவை பள்ளியில் சேர்க்க முடிவெடுத்த நரேஷ் பல பள்ளிகளை அணுகி யுள்ளார். விண்ணப்ப படிவத்தில் மாணவியின் ஜாதி மற்றும் மதம் குறித்த தகவல் களை நரேஷ் பூர்த்தி செய்யாமலேயே விட்டிருக்கிறார். ஆனால், இதனை காரணம்காட்டி 22 பள்ளிகளில் அவரது மகளுக்கு இடம் கிடைக்க வில்லை. இதுபற்றி அவர் கூறுகையில்,"மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் ஜாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கடந்த 1973 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக் காக ஜாதி சான்றிதழ் கேட்கின்றனர்" என்றார்.

ஜாதி மற்றும் மதம் வேண்டாம்

இதனையடுத்து தனது மகள் வில்மாவிற்கு ஜாதி மாற்று மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கக் கோரி கோவை மாவட்டம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார் நரேஷ் கார்த்திக். இப்போது அவருக்கு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தனது மகளை ஜாதி, மத அடை யாளங்களை கடந்து வளர்க்க விரும் புவதாக கூறும் நரேஷ்," கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப் பட்டு உள்ளது. வேலைக்காக விண் ணப்பிக்கும்போது, ஜாதிப் பிரிவு களில் ழிசி  எனப்படும் ஜாதியற்றவர் களுக்கான பிரிவும் இருக்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

தனது மகளின் ஜாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாத நரேஷ் கார்த்திக், ஜாதி மற்றும் மதம் அற்றவர் என தனது மகளுக்கு சான்றிதழ் பெற்றிருப்பது பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.