Saturday, 25 April 2020

பார்ப்பனர் பற்றி திருமூலர்

-புலவர் கோ . இமயவரம்பன் 

சைவ சமயத்தவர் தங்கள் மதத்திற்குப் பெரிய ஆதாரமாகத் தமிழில் உள்ள ஆகமங்களைத்தாம் காட்டுவர் இந்த ஆகமம் பன்னிரண்டு திருமுறைகளையும் , பதினான்கு சித்தாந்த சாத்திரங்களையும் கொண்டது என்றும் கூறுவர் . இந்த பன்னிரண்டு திருமுறைகளில் 10 - வது திருமுறையாகத் திருமூலரின் திருமந்திரம் வைக்கப்பட்டுள்ளது . அதில் திருமூலர் பார்ப்பனர்களைப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களை இங்கே காண்போம் . 

பார்ப்பான் அர்ச்சகனாக இருக்கக் கூடாது . 

கோவில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்ப்பான் கடவுளை அர்ச்சிக்கக் கூடாது . அர்ச்சித்தால் போர்க் குணம் படைத்த நாடாளும் மன்னனுக்குக் கொடிய நோய் உண்டாகும் . அதோடு நாட்டிலும் பெரிய பஞ்சம் ஏற்படும் " என்று நந்தி கூறியதாகக் கூறுகின்றார் .

 " பேர் கொண்ட பார்ப்பான் 
பிரான் தன்னை அர்ச்சித்தால் 
போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் 
பார் கொண்ட நாட்டுக்கு 
பஞ்சமுமாம் என்றே சீர் கொண்ட தந்தி தெரிந்துரைத்தானே " திருமந்திரம் - 519 

உச்சிக் குடுமி , பூனூல் காரணமாக பார்ப்பாள் ஆகான் , " பார்ப்பாள் உச்சிக் குடுமியும் , பூணுலும் கொண்ட தன் காரணமாக வே பிராமணன் ஆகிவிட மாட்டாள் . அவள் அணிந்திருக்கும் பூணூலானது பஞ்சினாலானது . உண்மையாள நூல் என்பது வேதாந்தமாகும் . குடுமி என்பது மெய்யறிவாகும் .

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம் 
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் 
நூலுடை அந்தணர் கானும் நுவலிலே . திருமந்திரம் - 230 

பார்ப்பானின் உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுக்க வேண்டும் . " 

"அறியாமையைப் போக்கிக் கொள்ளாத பார்ப்பனர்கள் உச்சிக்குடுமியும் பூணூலும் பெற்று இருப்பார்களேயானால் , இந்த மண்ணுலகானது சோர்வடையும் . பெருமை பொருந்திய வாழ்வினையுடைய மன்னவனும் தனது சிறப்புகளை இழப்பாள் . ஆதலால் இதனைப் பகுத்துணர்ந்து பார்ப்பானுடைய ஆடம்பரப் பூனூலையும் உச்சிக் குடுமியையும் அறுத்தெறிவதே நல்லதாகும் . " 

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் 
வாடும் புவியும்  பெருவாழ்வு மன்னனும் 
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந் 
தாடம்பரநூற் சிகையறுத் தால் நன்றே ".
திருமந்திரம் - 241 
( நூல் - பூணூல் , சிகைகுடுமி ) 

பார்ப்பானுக்கு மன்னன் நல்லறிவு புகட்ட வேண்டும் . 

தெளிந்த அறிவில்லாத பார்ப்பனர்கள் சடைமுடி , பூணூல் கொண்டு மெய்ஞ்ஞான ஞாளிகளைப் போல் நடித்து மக்களை ஏமாற்றி உலவக்கூடும் . இப்படிப்பட்ட பார்ப்பனர்களை மன்னன் அறிவாளிகளைக் கொண்டு பரிசோதி த்து அவர்களுக்கு நல்லறிவு உண்டாக்கு வானேயானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் . " 

" ஞானமி லாதார் சடைசிகை நூல் நண்ணி 
ஞாளிகள் போல நடிக்கின் றவர்தம்மை 
ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நல மாகும் நாட்டிற்கே "
திருமந்திரம் - 242 
 மூடர்களே பார்ப்பனர்

" உண்மை பேசுதல் இல்லாமலும் தெளிந்த நல்லறிவு இல்லாமலும் , எல்லோருக்கும் பொருந்தும் விஷயங்களை அறிவு கொண்டு ஆய்ந்துணரும் தன்மை இல்லாமலும் , பக்தி இல்லாமலும் , கடவுளைப் பற்றிய உண்மை அறியாமலும் இருக்கின்ற பித்தம் பிடித்த மூடர்கள் தாம் பிராமணர் ஆவார்கள் . " 

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி 
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப் 
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப் 
பித்தேறும்  மூடர் பிராமணர் தாம் அன்றே ' 
திருமந்திரம் - 231 - 2
                             *   *    *
- பார்ப்பனர் எதிர்ப்பு கருத்துகள் !என்ற நூலிலிருந்து

No comments:

Post a Comment