Sunday 3 May 2020

இந்து என்றால்... தொ.பரமசிவன்



https://threadreaderapp.com/thread/1255403125944582150.html



நான் இந்துவல்ல. நீங்கள்?

இந்து என்ற சொல் இந்தியாவில் பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ,ஆரண்யங்களிலோ,பிராமண்யங்கள் என்று சொல்லக் கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ, இதிகாசங்களிலோ கிடையாது 1/n 

இந்து என்ற சொல் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்தியது, இந்த சொல்லுக்கான மரியாதை என்ன என்று கேட்டால் இது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த சொல் என்பது தான் 2/n 

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பெயர் வைத்தானோ இல்லையோ நாம் பிழைத்தோம் என்று எழுதி உள்ளார்,ஆம் இந்து என்று வெள்ளைக்காரன் பெயர் சூட்டியதில் பலன் அடைந்தது பார்ப்பனர்கள் மட்டுமே 3/n 

1799இல் உள்நாட்டு நெறிகளைத் தொகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,கல்கத்தாவில் சர் வில்லியம் ஜோன்ஸ்(இந்தப் பெயரை RSS காரர்கள் இன்றும் கொண்டாடுவார்கள்) என்ற அதிகாரி நாட்டின் நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu Law என்று பெயரிட்டார்,அப்போது தான் hindu என்ற சொல் முதன் முதலாக அரசியல் 4/n 

அங்கீகாரம் பெற்றது,இந்து என்ற சொல் எந்த இந்திய மொழிகளிலும் கிடையாது, நம் சங்க இலக்கியத்தில் "ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்" என்று வருகிறது, 13ஆம் நூற்றாண்டின் வட மொழி நூல்களில் தென்னக மக்களை திராவிடர் என்று குறிப்பிட்டுள்ளனர், இப்படி எந்த வரலாறும் இந்து என்ற சொல்லுக்கு இல்லை 5/n 

13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ உரையாசிரியர்களைக் கேட்டால் "திராவிட உபநிஷத்" என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சொல்வார்கள், திராவிட இயக்கம் பிறக்கும் முன் வரை தென்னிந்திய பார்ப்பனர்கள் "பஞ்ச திராவிடப் பிராமணர்கள்" என்று தான் தங்களை அழைத்துக் கொண்டனர் 6/n 

அரசியல் சட்டப்படியே இந்து என்ற சொல்லுக்கு நேரடி வரைவிலக்கணம் கிடையாது, கிருத்துவரல்லாத,இசுலாமியர் அல்லாத, பார்சி அல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள் என்று எதிர்மறை வரைவிலக்கணம் தான் உண்டு 7/n 

ஒரு மதம் என்றால் அதற்கு 3 முக்கியமான அடிப்படைகள் இருக்கும்

1. ஒரு முழு முதற்கடவுள்

2.ஆகமங்கள்

3.குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகள்

இந்து மதம் என்று அடையாளம் காட்டப்படும் மதத்திற்கு அப்படி ஏதும் அடிப்படை இல்லை 8/n 

இந்து என்ற சொல் குறித்த பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் கீழே

1.பாரசீக இலக்கியங்களில் ஹிண்டு-இ- ஃபலக்(Hindu-e-falak) என்றால் வானத்தின் கருப்பு அதாவது சனி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது,இந்தப் புனித மண்ணில் கால் வைத்த பாரசீகர்கள் இந்த மண்ணில் பரவி வாழ்ந்து வந்த மக்களை 9/n 

இழித்துக் கூறிய அந்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்துவது இழிவானதாகும்(R.N.Surya Narayan, Universal Religion page 1-2,published from Mysore in 1952) 10/n 

பலர் இந்து என்பது சிந்து என்பதன் சிதைந்த வடிவம் என்கிறார்கள்.அது தவறு. சிந்து என்பது ஆறே அன்றி மக்கள் இனக் குழு அல்ல. நாட்டை ஆக்கிரமித்த இஸ்லாமியர்கள் அப்பகுதியில் வாழ்ந்த ஆரியர்களைக் கேவலப்படுத்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள், இந்து என்றால் பாரசீக மொழியில் 11/n 

அடிமை, அஞ்ஞானி என்று பொருள், இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தைப் பின் பற்றாதவர்களை அவ்வாறு அழைப்பது வழக்கம் என்கிறார் தயானந்த சரஸ்வதி(Maharishi Dayaanand saraswati Aur Unkaa Kaam, Edited by Lala Lajapat Rai,Published from Lahore in 1898, in d chapter of introduction 12/n 

1964இல் லக்னோவில் இருந்து வெளியிடப்பட்ட Lughet-e-Kishwari என்ற பாரசீக அகராதியில் இந்து(hindu) என்பதற்கு திருடன்(chore-Thief) கொள்ளைக்காரன்(dakoo-Dacoit), வழிப்பறி செய்பவன்(raahzvan-Waylayer), அடிமை(ghulam-Slave) என்று பொருள்கள் கூறப்பட்டுள்ளன 13/n 

Urdu-Feroze-ul-Laghat என்று தலைப்பிட்ட மற்றோரு அகராதியில்(vol 1-p 615)

1. In Turkish: chore(திருடன்),raahzan(வழிப்பறிக்காரன்,Lutera(Looter)- கொள்ளைக்காரன்

2. Persian:Ghulam(அடிமை), barda(Obedient servant- கீழ்ப்படிதலுள்ள ஊழியன்), sia faaon( கருப்பு நிறம்), kaalam(கருப்பு) 14/n 

இந்தியா முழுவதும் கருப்பு நிற மக்கள் பரவி வாழ்ந்த நாடாகவே இருந்தது ஆரியர் வருகைக்கு முன். சிந்து சமவெளியில் வாழ்ந்த அம்மக்களை வட மேற்கே பரவ விடாமல் தடுத்தன அங்கிருந்த செங்குத்தான பனி பொழியும் மலைத் தொடர்கள் 15/n 

அன்றைய இந்திய(கருப்பு நிற) மக்கள் அந்த மலைத் தொடர்களைக் கடக்க முயன்ற போது பனிப்பொழிவில் பெருமளவில் இறந்து போயினர்,அதைக் கண்ட வெள்ளை நிற(ஆரியர்கள்) மக்கள் அம்மலைத் தொடருக்கு "கருப்பர்களைக் கொல்லும் மலை என்ற பொருளில் Hindu Kush(Hindu killer) என்று பெயர் வைத்ததாக 16/n 

Bai kahan singh Naba என்பவர் எழுதிய Mahan kosh ,என்ற 1996 இல் வெளியான நூலில்(பக்கம் 275) உள்ளதாக பதிவுகள் உள்ளன, மேலும் இந்தி சப்தர் சாகர் எனும் இந்தி மொழிப் பேரகராதியை வாரணாசியில் உள்ள நாக நிலைப் பிரச்சார சபா வெளியிட்டுள்ளது அதில் 17/n 

இந்து என்ற சொல்லுக்கு

1. black and agly

2. Uncultured brute

3.A Decoit

4.Any thief Belonging to india என்று பொருள் கூறப்பட்டுள்ளது 18/18 .

~இந்து தேசியம்~ 

பிழைத்திருத்தம்- Black and *ugly 

*ugly 

இந்து என்றால்... தொ.பரமசிவன்


https://threadreaderapp.com/thread/1255403125944582150.html

No comments:

Post a Comment