Sunday 13 December 2015

பேஸ்புக் சாட்டில் Sticker வசதி தற்போது கணினிகளுக்கும்


stickers in fb
அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல் கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம். 
நீங்கள் சாட் செய்யும் போது சாட் விண்டோவின் வலது கீழ் மூலையில் ஒரு ஸ்மைலி இருக்கும் அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல Stickers உங்களுக்கு வரும்.
stickers in fb chat
எதை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் போதும் அது உங்கள் நண்பருக்கு சென்று விடும்.
sticker
முதல் படத்தில் மேலே சாம்பல் நிறத்தில் (Gray Color) தெரிவாகி உள்ளவற்றிற்கு அடுத்து உள்ளவற்றை தெரிவு செய்தால் விதவிதமான Stickers உங்களுக்கு கிடைக்கும். கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்தால் Sticker Store க்கு செல்லலாம்.
sticker store
இதில் Free என்பதை கிளிக் செய்தால் குறிப்பிட்ட Sticker உங்கள் சாட்டில் சேர்ந்து விடும். அதன் பின் அவற்றை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். தற்போது அனைத்து Sticker களும் இலவசமாக கிடைக்கின்றன.
- பிரபு கிருஷ்ணா
-விடுதலை,14.6.14

எளிய பெயரில் ஈமெயில் ஐடி உருவாக்க

மின்னஞ்சல் முகவரி என்பது நமக்கு எப்போதும் இன்றியமையாத ஒன்றாகும். ஜிமெயில் மூலம் இப்போது புதியதாக மின்னஞ்சல் கணக்கு தொடங்க நினைக்கும் ஒருவரால், எண்களை பயன்படுத்தாமல் மின்னஞ்சல் முகவரி உருவாக்க இயலாது(ஆங்கில வார்த்தை கொண்டு). எளிய வகையில் ஈமெயில் முகவரி உருவாக்க உதவும் mail.com பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
Mail.com ஆனது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்து மிக அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் கணக்கு. இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது gmail.com, yahoo.com, ymail.com என்று குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே டொமைன் ஆக தரும், ஆனால் mail.com 200 டொமைன்களை தருகின்றது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான ஒன்றை, மிகக் குறைந்த எழுத்துக்களை பயன்படுத்தி உருவாக்கி விடலாம். உதராணம்
இது போல மொத்தம் 200 வகையான டொமைன்களில் உங்கள் மின்னஞ்சல் கணக்கை நீங்கள் உருவாக்கலாம். இதன் மூலம் புதியதாக தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நீங்கள் எளிதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விடலாம்.
இதில் நான் உருவாக்கிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகள்:

  • prabu[at]playful.com
  • prabu[at]iname.com
இதன் மற்ற சில சிறப்பம்சங்கள்:
1. Unlimited ஈமெயில் Storage
2. Spam Filter மற்றும் வைரஸ் மின்னஞ்சல்களில் இருந்து பாதுகாப்பு
3. பயன்படுத்த எளிய அமைப்பு
4.எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி.
5. அலுவலக பயன்பாடுகளுக்கு உகந்த ஒன்று.
இதன் குறைபாடு:
1. ஈமெயில் Forwarding என்ற ஒரு வசதி இலவசமாக இல்லை.
- பிரபு கிருஷ்ணா
-விடுதலை,21.6.14

Wednesday 2 December 2015

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?

             கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?


(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடுநீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.
(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பிபேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டிஉன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?
ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரேஎன்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா?
(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978ல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)
தகவல்: ர.பார்த்தசாரதிசென்னை -34.

நான் எழுதிய இந்த கட்டுரை 15.10.1980 'உண்மை' மாதமிருமுறை இதழில் முதல்
 முறையாக வெளிவந்தது ஆகும். நான் எழுதிய முதல் கட்டுரையும் இது தான்.
பிறகு நான்கு முறை 'விடுதலை' நாளேட்டில் மறு வெளியீடாக வெளிவந்துள்ளது. 
கடைசியாக
'விடுதலை' நாளேட்டில் 24.10.14ல் மறு வெளியீடாக வெளிவந்துள்ளது. 


  
                              15.10.1980 'உண்மை' மாதமிருமுறை இதழ்        விடுதலை  30.12.2011


                                      விடுதலை 15.6.12 பக்-7
                      

                       
                   30.8.13 விடுதலை                                         24.10.13 விடுதலை