Tuesday 24 September 2019

உருவப்படத் திறப்பின் நோக்கம்

உருவப்படத் திறப்பின் நோக்கம்


நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூஜை செய்யவோ, தேங்காய் பழம் ஆராதனை செய்து விழுந்து கும்பிட்டு பக்தி செய்து நமக்கு வேண்டியதைக் கோரி பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாக கருதிக் கூட நாம் எந்தப்பட திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும் எப்படிப்பட்ட படத்திற்கு பூஜை செய்யும்படியோ, கோவில்களிலோ, தேர், ரதம், விமானம், சப்பரம் ஆகியவை களிலோ வைத்து ஊர்வலம், ஆராதனை செய்யும்படி காலித் தனம் செய்வதற்கு ஆகவும் அல்ல. ஆனால் மற்றெதற்கு என்றால் மனித சமூகநலனுக்கு சுயநல மில்லாமலும், மற்றவர் களிடமும் எவ்வித கூலியோ புகழோ, பிரதிப் பிரயோஜனமோ பெறாமலும் தன் முயற்சியால் தன் பொருளால் தன் பொறுப் பென்று கருதி தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதி சயங்களையும், தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம் மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா? என்பதற்கு ஆகவே தான் - மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம் கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாக வேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.-

- விடுதலை, 19.3.1938

விடுதலை 13 9 19

Wednesday 11 September 2019

பாப்பான் பாப்பான் பாப்பான் - பாடல்

பாப்பான் பாப்பான் பாப்பான்  பாப்பான்   இளைச்சி   போயி  ஆளிருந்தா  யாருக்குமே   தெரியாம   இடறிவிட்டு    படுகுழியில்   தள்ளப்பாப்பான்-நம்ப
ஆளைவிட்டே
தமிழனையே
கொல்லப்பாப்பான்.

ஏய்ப்பான் ஏய்ப்பான்
ஏய்ப்பான்  ஏய்ப்பான்
பஞ்சகட்டுவேட்டிகட்டி
பஞ்சாங்கத்த
புரட்டிக்கிட்டு
பகவானக்காட்டிபணம்
பறிக்கப்பாப்பான்.
பூணூல் அணியாமல்
ஒருநாளும்
இருக்கமாட்டான்.

புத்தர்களைசமனர்களை  கொன்றதுவும்
நாட்டில் புத்தநெறி
பரவாமல்தடுத்ததுவும்
இராமலிங்கம்,
அருணகிரி,
நந்தன் தீயில்
வெந்ததுவும்
காந்தியாரசுட்டதுவும்
ஆரியந்தான்- மக்கள
தூங்கப்போட்டு
நடத்திய காரியந்தான்.
.
மன்னாதி மன்னர்களை  வீழ்த்தியதும்,  மாவீரர்
வரலாற்றைமாற்றியதும்  பொல்லாத
சூதுவாதும்உல்லாச
மங்கை  மது
போகத்தாலும்
தமிழர்களைவீழ்தினான். பாழும்கதைகளாலே
மடையா்களாய்
ஆக்கினான்.

பாப்பான் பாப்பான்
பாப்பான் பாப்பான்
பாடுபடும்பாட்டாளி
பறிதவிக்க பட்டுவேட்டி
கலையாம பருத்தஉடம்புகரையாம
பகவானுக்கு ஆறுவேளை படைக்கிறான்-கோயில்
மணியடிச்சே
பகல்கொள்ளை
அடிக்கிறான்.

கோயில்கட்ட
பாராங்கல்லை
தூக்கியவன்  கையில்
உளிபிடித்து  சிற்பம்
உருவாக்கியவன்
நாயி,பூனை,மூஞ்சூரு
கூட தடையில்லாமல்
பூரும் அந்தகருவரையில்
தமிழன்பூரமுடியல
சவுண்டிபாப்பான்
பூந்து பூசைபண்ண
தடையில்லை.

பாப்பான் பாப்பான்
பாப்பான் பாப்பான்.

தி.க   பாடல்கள்.

Friday 6 September 2019

வர்ணப் பாகுபாடு கொடுமை

ஆம்! சட்டப்படியும், சாத்திரப்படியும் தென் இந்தியர்கள் அனைவரும் சூத்திரர்களே! நான்கு வர்ணத்தவர்களின் கலப்பால் உண்டானதே அவர்ணஸ்தர்கள்(தாழ்த்தப்பட்டோர்) என மனுஸ்மிருதி சாஸ்திரம் கூறுகிறது.


பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர் தான் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போர்.இவர்கள் ஆரிய வர்த்தத்தில் உள்ளோர். ஆரிய  வர்த்தத்திற்கு தெற்கே உள்ளவர்கள்(தென் இந்தியா) சூத்திர்கள் என சாஸ்திரங்(புராணங்கள்&மனுஸ்மிருதி)களும் நீதி மன்ற தீர்ப்பும் கூறுகிறது. சத்திரியர் என்றால் தமிழில் அரசர் என்று பொருள். அதனால் சாஸ்திரத்தால் சூத்திரர் எனப்பட்ட அரச வழியினர் என சொல்லிக்கொள்வோர் நாங்களும் சத்திரியர் என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களையும் சூத்திரர் பட்டியலில் சேர்த்து தான், அவர்களுக்கும் திருமணத்தின் போது தான் பூனூல் மாட்டுகிறான் பார்ப்பான்.



- செ.ர.பார்த்தசாரதி பதிவு


Thursday 5 September 2019

மாட்டுக் கொட்டிலில் காந்தியாரை சந்திக்கச் செய்த சங்கராச்சாரியார்

அக்டோபர் - 1927 எட்டாம் தேதியன்று  தமிழகத்தை விட்டுத் திருவாங்கூர் சமஸ்தானத்திற்குள் நுழைந்த மகாத்மா காந்தி, 16.10.1927 ஆம் தேதியன்று பாலக்காட்டில் இருந்து காரில் கோயமுத்தூர் வந்து சேர்ந்தார். அவர் பாலக்காட்டில் சங்கராச்சாரிய சுவாமிகளைச் சந்தித்தார், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளை - காந்திஜி சந்தித்துப் பேசியது, வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். பாலக்காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்றாலும் தமிழகத்திற்கு இது நெருங்கிய தொடர்புடைய நிகழ்ச்சி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ‘’ஸ்ரீ ஜகத்குரு திவ்விய சரித்திரம்‘’ என்ற நூலில் அதைத் தொகுத்தவரான இராமச் சந்திரபுரம் எஸ். சாம்பமூர்த்தி சாஸ்திரி இச் சந்திப்பைக் குறித்துக் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:


மதத்தலைவராக விளங்கும் ஸ்வாமிகளின் தெள்ளிய அறிவையும், பரந்த நோக்கத்தையும், எவரையும் ஏற்றுக் கொண்டு அருள் புரியும் தன்மையையும் பற்றி ‘ஹிந்து’ பத்திராதிபர் ஏ. ரெங்கசாமி அய்யங்கார், எஸ். சத்திய மூர்த்தி ஆகியோர் மூலம் காந்தியடிகள் முன்பே கேள்வியுற் றிருந்ததால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு ஸ்வாமிகளைச் சந்தித்து அவர்களுடன் பேச வேண்டுமென்ற தீர் மானத்தைச் செய்து கொண்டார். அதை யொட்டியே சரித்திரத்தில் முக்கியத் துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு 15.10.1927இல் நிகழ்ந்தது. பாலக் காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில் ஸ்வாமிகள் தங்கியிருந்த ஜாகையின் பின்புறம் அமைந்திருந்த மாட்டுக்கொட்டிலில் காந்தி யடிகளுக்கும் ஸ்வாமிகளுக்கும் சந்திப்பு ஏற்பட்டது. குறிப்பாக இரண்டொருவரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காந்தியடிகளும் ஸ்வாமிகளை நெருங்கியதும் இந்து முறைப் படி அவர்களை வணங்கினார். காஷாயக் கதராடை ஒன்றை அணிந்து தரையில் அமர்ந்திருந்த ஸ்வாமிகளின் ஒளி நிறைந்த திருமேனியில் காந்தியடிகளின் மனம் ஈடு பட்டு நிறைந்துவிட்டது அப்பொழுது சற்றுநேரம் மௌனம் நிலவியது. பின்னர் ஸ்வாமிகள் சமஸ்கிருதத்தில் இரண் டொரு வார்த்தைகள் கூறி, காந்தியடிகளை வரவேற்று உட்காரும்படி தெரிவித்தார். காந்தியடிகளும் கீழே அமர்ந்து, தமக்கு சமஸ்கிருதம் பேசுவதற்குப் பழக்கமில்லை யென்றும், இந்தியிலேயே பேச அனுமதிக்க வேண்டு மென்றும், ஆனால் கூடியவரையில் சமஸ்கிருத சொற் களைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்துக் கொண்டார். இந்தியில் பேசுவதை ஸ்வாமிகளும் புரிந்து கொள்ளக்கூடியவராதலால், இந்த ஏற்பாட்டின்படி ஸ்வாமி கள் சமஸ்கிருதத்திலும் காந்தியடிகள் இந்தியிலும் பேசத் தொடங்கினார்கள். கடவுள் நம்பிக்கையை அடிப்படை யாகக் கொண்டே ராஜ்யங்கள் அமைய வேண்டுமென்றும், ஆத்ம சிந்தனையைப் புறக்கணித்து மனித சக்தியை மாத்திரம் பயன் படுத்தி அமையும் எந்த இராஜ்யமும் சீக்கிரத்தில் அழிவுதான் அடையுமென்றும், இதன் உண்மையைக் காந்தியடிகள் - உலகிற்கு எடுத்துக் கூறுவதைத் தாம் மிகவும் பாராட்டுவதாகவும், ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும் பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்களென்றும் அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகு மென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்’’.

“தமிழ் நாட்டில் காந்தி”

(பக்கம்-574-576)

-அ.இராமசாமி

- விடுதலை ஞாயிறு மலர், 3. 8. 19

Wednesday 4 September 2019

ஒவ்வொரு கணக்கீட்டிற்கும் அடிப்படை  பொருள் தேவை

மணி நேரம் என்பது நமது சொடுக்கும் அளவையும், இமைக்கும் அளவையும் வைத்து கணக்கிடப்படுகிறது. அதேபோல் ஒளியின் பயணத் தொலைவை வைத்து ஒளி ஆண்டு கணக்கிடப்படுகிறது.
நாம் எங்கு இருக்கிறோமோ அதை வைத்து தான் எதையும் கணிக்க முடியும்! ஆங்கில ஆண்டாக இருந்தாலும் தமிழ் ஆண்டாக இருந்தாலும் ஹிஜ்ரி ஆண்டாக இருந்தாலும் எல்லாம் ஞாயிற்றை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுவதால் ஒன்றாகத்தான் கணக்கு வரும் ! சமஸ்கிருத ஆண்டு விண்மீன் களை அடிப்படையாக கொள்வதால் நமது கணக்குக்கு மாறாக இருக்கும்!

ஒவ்வொரு கணக்கீட்டிற்கும் அடிப்படை  பொருள் தேவை. அந்த அடிப்படையில் கணக்கீடுகள் செய்கின்றனர். கணக்கீடு அலகுகளை மாற்றுவதும் உண்டு. தண்ணீரை அடிப்படையாக கொண்டு கிலோ கிராம் கணக்கிடப்படுகிறது. அதாவது 1லிட்டர் நீர் 1கிலோவாகும். இதை வைத்து எந்த பொருளையும் கிலோ எவ்வளவு, லிட்டர் எவ்வளவு என கணக்கிட்டு விடலாம்! இதேபோல் தான் வெப்பத்தை அளக்க பயன்படும் செல்சியசு - பாரன்யீட் அளவும். மீட்டர்- அடி போன்றவையும்!
நிலாவில் இருந்தாலும் அதற்கேற்றார்போல் கணக்கீடுகளை மாற்றிக்கொள்ளலாம்!
ஒருகாலத்தில் மாதத்தை வைத்துகூட வயதை கணித்துள்ளனர்.
- செ.ர.பார்த்தசாரதி
4.9.19