Showing posts with label பா.ஜ.க.. Show all posts
Showing posts with label பா.ஜ.க.. Show all posts

Sunday, 5 May 2019

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன? - அவர்கள் யார்? - அவர்களின் பணி என்ன?

ஆர்.எஸ்.எஸ்.-க்கும், பி.ஜே.பி.-க்கும் என்ன தொடர்பு?
முழுவதும் படித்து உணருங்கள்!
1) ஆர்.எஸ்.எஸ். என்பது ராட்டிரிய சேவை சங்கம் இது ஆரிய, பார்ப்பன இந்து மத வெறி என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால், கோல்வால்க்கரால் 1912ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.
2) இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு.
3) இதுதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டுக்கொன்றது. இன்று இந்தியாவில் நடக்கும் மதக் கலவரங்களுக்கும், சாதி மோதல்களுக்கும் இதுதான் காரணம்..
4) இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்புதான்.
5) இதன் நோக்கம் தொடர்ந்து பார்ப் பனர்கள் அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர் கள் அடிமையாக, தீண்டத் தகாதவர்களாக இருக்கவேண்டும். இதுவே இந்த அமைப் பின் குறிக்கோள்.
6) இது உலகின் மிகப் பெரிய பாசிச அமைப்புகளில் பயங்கரமானது.
7) இந்த அமைப்பில் ராணுவத் தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பார்கள்.
8) இந்த அமைப்பில் அடியாளாக ஆதிக்க சாதி இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், கொலைகள் - குற்றங்கள் நடத்த பயன் படுத்தப்படுவர்.
9) இவர்கள் மக்களிடம் அதிகமான மூடநம்பிக்கைக் கருத்துக்களை பரப்புவர். புராணத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரங் களை, உண்மையான கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்து, மக்களை மூட நம்பிக்கையில் புதைப்பார்கள்.
10) ராமன் என்பவன் ஒரு கதையின் கதாபாத்திரம் -அதை உண்மைக் கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில், பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய்ச்சொல்லி, முட்டாள் இந்துக்களை, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பி, பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து, இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்தனர்.
11) விநாயகர் ஊர்வலம் என்று, முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை, இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு வந்து விநாயகர் சிலைவைத்து மத நல்லிணக்க த்தைச் சிதைத்தனர். அந்நேரங்களில் சட்டம் ஒழுங்கு அழிக்கப்படுகிறது.
12) இவர்கள் அரை டவுசர் போட்டு, கையில் தடியுடன், பொது சாலையில் இசுலாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள். இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட காவல் துறை முழு பாதுகாப்பு கொடுக்கும்.
13) இவர்களது அமைப்புக்கு, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், ஆயுதப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளைக் கொடுப்பார்கள்.
14) ராணுவ கிடங்கிலிருந்து மிக எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கும்.
15) பெரும்பாலான அரசுகள் (மத்திய, மாநில அரசுகள்) இவர்களின் அமைப்பு மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தமான உண்மை.
16)  இந்த அமைப்புகளின் தலைவர்கள் மாற்று மதத்தினரை இழிவுபடுத்தும் உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் - அரசு இதைக் கண்டு கொள்ளாது.
17) சமஸ்கிருதம் - இந்தி இவை இரண்டையும் எல்லோரும் படிக்க வேண்டும் என வற்புறுத்துவார்கள். பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி மாட் டுக்கறி உண்பதை தடை செய்வார்கள்.
18) அதிகமான அம்மண-சாமியார்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவார் கள். அவர்களை இவர்கள் ரிஷிகள் அமைப்பு என ரவுடிகளாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
19) இவர்களின் மூடநம்பிக்கை கருத்துக் களை எதிர்க்கும் அறிவுஜீவிகள், எழுத்தா ளர்கள், கம்யூனிஸ்டுகள், பகுத்தறிவாளர் கள், பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள் ஆகியோர்களைத் தாக்கி கலவரம் செய்வார்கள் பல நேரங்களில் கொலையும் செய்வார்கள் இப்படி பல அறிஞர்களைக் கொலை செய்திருக்கின்றனர்.
20) இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் அவை விஷ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தள், ஹிந்து முன்னணி, ஹிந்துஸ்தான் விராத், நிர்மாண் சபா, ஹிந்து சபா, அகில பாரத் வித்யார்த்தி பவன் என்ற மாணவர் அமைப்பு, சேவாதள் மாநில சுயாட்சிகொண்ட சிவா சேனா, ரன்வீர் சேனா (பிகாரில் நிலபிரபுக்கள் படை) தமிழகத்தில் அரசியல் கட்சியாக இந்து மகா சபை, இந்து மக்கள் கட்சி. - மத்தியில் அரசியல் கட்சியாக பிஜேபி - பாரதிய ஜனதா பார்ட்டி.
21) பெயருக்கு தேசப்பற்று என்று கூச்சலி டுவார்கள் இந்திய தேசிய மூவண்ணக் கொடியை இவர்களது அமைப்பு எப் போதும் ஏற்றுக்கொள்ளாது, மரியாதையை யும் செய்யாது.
22) இவர்களின் தலைமைப் பீடம் ஆர்எஸ்எஸ் நாக்பூரில் உள்ளது. சென்ற ஆண்டு வரை தேசியக் கொடி ஏற்றப் படவே இல்லை.
23) இவர்களின் அமைப்பு சமுக நீதிக்கு - இடஒதுகீட்டுக்கு எதிரானது.
24) இவர்களது அமைப்பு சமத்துவத்தை எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு
25) உரிமை, ஜனநாயகம் அதற்கான போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது - அந்த தருணத்தில் - ரத்தக்களரி கொண்டு போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது - ஆங்காங்கே உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறது.
26) இந்தியாவில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட கலவரங்களைத் தூண்டி, லட்சக் கணக்கான மக்களைக் காவு வாங்கி உள்ளது.
26) உயர் சாதி, கீழ் சாதி, தீண்டாமை என்பவை மனுதர்ம - வர்ணாசிரம கொள் கையை உயிர் மூச்சாகக் கொண்டவை.
27) இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் எல்லா சாதி அமைப்புகளிலும் இவர்கள் தான் தலைமை பொறுப்பை கைப்பற்றிக் கொண்டுள்ளனர் (கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது).
28) இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், ஆர்.எஸ். எஸ். ஆதரவாளர்களால்தான் நடத்தப்படு கிறது. காரணம் அனைத்து துறைகளிலும் இவர்கள் ஊடுருவி விட்டனர்.
எடுத்துக்காட்டு: தந்தி டிவி செய்தியாள ராக இருந்த ரங்கராஜ்பாண்டே
29) இவர்களின் அமைப்பு , இந்திய அரசின் முக்கிய முடிவுகளை தீர்மானிக் கிறது. பாஜக கட்சியின் தற்போது நரேந்திர மோடி, அமீத்சா, ராஜ்நாத் சிங், 1947 ஆண் டிற்கு முன்பின் சர்தார் வல்லபாய் படேல், சர்வர்க்கார், வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சுப்பிரமணியசாமி போன்ற எல்லோரும் ஆர்.எஸ்.எஸால் அடிப்படை கோர் உறுப்பினர்கள்.
தமிழகத்தில் நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, இல.கணே சன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர்கள் ஸிஷிஷி-ல் பயிற்றுவிக்கப் பட்டவர்கள்தான்.
30) இவர்களின் ஆலோசனையின் படியே இந்திய உளவுத்துறைகளான ரா மற்றும் அய்பி செயல்படுகின்றன. ஈழப்பிரச் சினையில், ரா வின் ஆலோசனையில்தான் இந்தியாவும். இந்திய வெளியுறவுத்துறையும் செயல்பட்டன. அந்த ராவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்புத்தான்.
31) பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது -பெண்கள் படிக்கக்கூடாது - வேலைக்கு போகக்கூடாது பெண்ணின் வேலை - பிள்ளை பெற்று வீட்டில் இருந்து பராமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர்.எஸ்.எஸ். தர்மம்.
32) வெள்ளையர்களுக்கு எதிராக போராட திராணி இல்லாமல், இந்த தேசத் தின் சுதந்திர தியாகிகளை காட்டிக்கொடுத் தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை
33) கோவில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும். பார்ப்பனர் அல்லாதோர் கருவறைக்கு சென்றால் தீட்டு என்ற கொள்கையை அமல் படுத்தியதும் இந்த ஆர்.எஸ்.எஸ். தான்.
34) இந்தியாவில் இது போன்ற எந்த அமைப்பையும் மத்திய அரசு தடைசெய்தது இல்லை, ஆனால் ஆர்.எஸ்.எசை மூன்று முறை தடைசெய்தார்கள் 1) காந்தியார் கொலை 2) பாபர் மசூதியை இடித்த போதும் தடைவிதித்தனர்.இந்த தேசத்துரோகிகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபி பற்றி இன்னும் நிறைய இருக்கிறது.
உலகத் தமிழர்களே எச்சரிக்கை!
இந்திய தேசியவாதிகளே எச்சரிக்கை!!
மண்ணின் மைந்தர்களே நாம் அனைவரும் "தமிழர்கள்" என்னும் ஒருமைப்பாட்டிற்குள் நின்று இவர்களை அடையாளம் காண்போம்.
- பகிரியிலிருந்து. (வாட்ஸ்அப்)
- விடுதலை ஞாறிறு மலர், 20.4.19

Sunday, 29 April 2018

பாஜக கும்பலின் பாலியல் பாய்ச்சல்கள் - ஒரு தொகுப்பு

- மின்சாரம்




1. கருநாடக பாஜக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டனர்.

2. குஜராத் பாஜக அமைச்சர்கள் 2 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த போது பிடிபட்டு, பாஜகவின் கலாச் சாரத்தை நாடு முழுவதும் தெரிய வைத் தனர்.

3. அருணாச்சலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொலி வெளியாகி மாட்டிக் கொண்டார்.

4. மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சார விடுதி நடத்திவந்தார் - இவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

5. இமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத் தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு பதவி வில கினார்.

6. மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரியை பாலியல் துன் புறுத்தல் செய்ததாக கைது செய்யப் பட்டார்.

7. குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷியின் ஆபாசக் காணொலி வெளியானதை அடுத்து, கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார்.

8. மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந் தாதே-யின் காணொலி வெளியாகி, கைது செய்யப்பட்டார்.

9. ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொலி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.

10. பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

11. இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண் டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து, கொடூரமாகக் கொலை செய்தார்.

12. ஆர்.எஸ்.எஸ். தலைவரும், மேகாலயா ஆளுநருமான சண்முக நாதன் (பாஜக நியமனம்), பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, ஆளுநர் பொறுப் பிலிருந்து விலகினார்.

13. உத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்துவிட்டார்கள்.

14. இப்போது சிறுமி ஆசிஃபா வழக்கிலும் இந்துத்துவா கும்பல் கைது செய்யப்பட்டிருக்கிறது. கைதானவர்க ளுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி அமைச்சர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். கத்துவா, உன்னாவ் பிரச்சினை நாடு முழுவதும் பெரிதாக வெடித்துக் கொண்டு இருக்கும் போது உ.பி. முதல் வர் சாமியார் ஆதித்யநாத், பாலியல் குற் றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக பிரமுகருமான சாமியார் சின்ம யானந்த் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க. பதவியாளர்களும் பச்சைக்கொடி!

வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுமிகளை பாலியல் ரீதியில் சீரழித்து கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த  நிலையில் பொதுமக்களே சமூக வலைதளங்களில்  பாஜகவினரின் நட்பை முறிக்கும் வகையில்  #அன்ஃப் ரெண்ட்பிஜேபி (#UNFRIEND_BJP) என்ற ஹேஷ்டேக்கை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.  காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்,   உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை பாலியல் வன்முறை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.    அதை ஒட்டி முகநூலில் உள்ள பலரும் பாஜக உறுப்பினர்களையும் ஆதரவாளர் களையும் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி வருகின்றனர்.

இதற்காக #அன்ஃப்ரெண்ட் பிஜேபி என்னும் ஹேஷ்டாக் உப யோகம் பரவலாகி வருகிறது. இதன் மூலம் கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்முறை விவகாரத்தில் ஆதரவு தெரி விக்கும் பாஜகவினரை நண்பர்கள் பட் டியலில் இருந்து பலர் நீக்கி வருகின் றனர்.   மேலும் தங்கள் நண்பர்களையும் பாஜகவினரை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.   பெரும்பாலானோர்,   பாஜகவினரே உங்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது. எனவே உங்கள் நட்பு தேவை இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி அன்று பிரதமர் மோடி இது குறித்து தனது மவுனத்தை கலைத்தார்.  அவர் இந்த சம்பவங்கள் வெட்கப்படத் தக்கவை எனக் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.   ஆனால் அதே நாளில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி எனபவர், ஆசிஃபாவை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு பாஜக அமைச் சர்கள் ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டதை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.

மதவாதம் கண்களை மறைக்கிறது

ஜம்முவில் உள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மற்றும் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் டிவிட்டரில் கண்டனப் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடல் அழகு ஸ்வரா பாஸ்கர் என்பவர் கரீனா கபூரின் பதிவிற்கு மறுபதில் இட்டுள்ளார். அதில் "நீ இந்துவாக இருந்துகொண்டு இசுலாமியரை திருமணம் செய்ததால் இந்துவிற்கும் இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டாய் என்று பதி லிட்டுள்ளார். கரீனா கபூர் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குவாலியர் நவாப் வம்சத்தைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண் டார். இதனால் இவரை இந்துக்களுக்கு எதிரானவர் என்று இந்துத்துவ மத வாதிகள் பிரச்சாரம் செய்து வருகின் றனர். 2017-ஆம் ஆண்டு ஜெய்பூரில் நடந்த இந்துமத மாநாட்டில் இவரது படத்தை அட்டையில் போட்டு இவர் லவ்ஜிகாத்திற்கு பலியானவர் (இசுலாமி யர்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்வதை இந்துத்துவாதிகள் லவ்ஜி காத் என்று கூறுவார்கள்) என்று கூறி ஒரு சிறிய நூலை வெளியிட்டிருந்தனர். இவருக்கு சைப் அலிகானுக்கும் பிறந்த குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயரிட்டிருந்தார்.

உடனே மதவாதிகள் தைமூர் என்ற பெயரை வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். தற்போது இந்துத்துவ வாதி கள் 8 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்து கொலைசெய்ததை கண்டித்த கரீனா கபூரை மீண்டும் இந்து மதத்திற்கும் இந்தியாவிற்கும் துரோகி என்று கூறியுள்ளனர். உண்மையில் பாஜக என்ற மதவாத கட்சி மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் மதவாதிகளின் கொடூரப் பிடியில் ஆட்கொண்டு சீரழிந்து வருகிறது. ஒரு தவற்றை சுட்டிக்காட்டிய கரீனா கபூரை ஒரு பிர பல மாடல் அழகியே இந்துத் துரோகி என்று எழுதியிருப்பதில் இருந்து நாடு எந்த அளவு மதவாதப் பிடியில் சீரழிந் துள்ளது என்று கண்டுகொள்ளலாம்.

Swara Bhasker  @ReallySwara You should be ashamed you exist. That God gave you a brain which you chose to fill with hate and a mouth you chose to spew filth from. You are a shame on India and Hindus. That shits like you feel emboldened to talk this crap publicly is this govt.’s legacy  8:18 PM - Apr 14, 2018.

பாசிச பா.ஜ.க. அதிகாரி

கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்த விஷ்ணு நந்தகுமார் காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாகச் சமீபத்தில் அவரின் முகநூலில் சர்ச்சைக் குரிய கருத்தைப் பதிவிட்டார். அதில் நல்லவேளை அந்தச் சிறுமி இந்தச் சின்ன வயதிலேயே கொல்லப் பட்டுவிட்டார். இல்லாவிட்டால், வளர்ந்த பின் என்றாவது ஒருநாள் மனித வெடி குண்டாக மாறி இந்தியாவுக்கு எதிராக மாறிவிடுவார் என்று பதிவிட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந் தன.

முகநூலில் பலரும் விஷ்ணுவைக் கண்டித்து வாசகங்கள் எழுப்பினர். பலர் உடனடியாக விஷ்ணுவை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்கள். இதற்காக ட்விட்டரில் டிஸ்மிஸ் யுவர் மேனேஜர் என்று பிரத் தியேகமாக ஹேஷ்டேக் உருவாக்கப் பட்டு வைரலானது. இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி அந்தத் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஏராளமானோர் கடும் கண்டனத்தை யும், விஷ்ணுவை டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தினார்கள். மனிதநேயமற்ற வகையில் உங்கள் வங்கியில் ஊழியர் முகநூலில் கருத்து தெரிவித்து குற்ற வாளியைவிட மோசமாக நடந்து கொள் கிறார் என்று ஒருவரும், எப்படி இப்படிப் பட்ட மோசமான மனநிலையைக் கொண் டவரை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வங்கியின் பெயரை காப்பாற் றிக் கொள்ளுங்கள் என்று சிலரும், விஷ்ணுவை உடனடியாக பதவியிலி ருந்து தூக்குங்கள் என்று பலரும் ட்வீட் செய்ததால், வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, வங்கி நிர்வாகத்தின் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வங்கியின் துணை மேலாளர் விஷ்ணு வேலையில் இருந்து கடந்த 11ஆம் தேதி நீக்கப்பட்டு விட்டார். வேலையில் மோசமாகச் செயல்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யபட்டார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அனைவரின் மனதையும் புண்படுத்தி விட்டது. இதை வங்கி நிர்வாகமும் கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. பதிவு செய்த விஷ்ணு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த பிரமுகர் என்பதும் அவரது குடும்பத்தினரும் இந்துத்துவ அமைப்பினர் என்றும் தெரியவந்தது, ஆசிஃபா கொலை தொடர்பாக ஆர். எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப் பிடத்தக்கது.

- விடுதலை ஞாயிறு மலர், 21.4.18