Showing posts with label சங்கம். Show all posts
Showing posts with label சங்கம். Show all posts

Wednesday, 27 December 2023

ரயில்வேக்களில் ஜாதி பேத அடையாளங்கள் நீக்கப்பட்டதை பாராட்டி ரயில்வே சங்கத்திற்கு பெரியார் கடிதம்

சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் முகநூல் பதிவு 

தந்தை பெரியார் எனது தாத்தாவிற்கு எழுதிய கடிதங்களில் சில...

(V.Ramachandran - One of the founder of S.R.M.U Southern Railway Mens Union & Railway Chief Commercial Controller,Trichy)

Date 22.3.41

My dear Ramachandran,

உங்களுடைய கடிதங்களும், தந்தியும் கிடைத்தன. அவற்றிற்கு ஆக எனது மனமார்ந்த நன்றியறிதலை செலுத்துகிறேன். 

ரயில்வேக்களில் ஜாதி பேத அடையாளங்கள் நீக்கப்பட்டன என்பது மிகவும் பாரட்டப்பட்டதும் குறிப்பிடத் தகுந்ததுமான ஒரு வெற்றியேயாகும்.

இதற்கு காரணம் தமிழர்களின் ஒருமித்த உணர்ச்சியே ஆகும். இதுபோலவே மற்றும் நியாயமான விஷயங்களிலும் உரிமைகளிலும் உணர்ச்சிகளுக்கு போராடினோமேயானால் வெற்றி பெறலாம் என்பதில் அய்யமில்லை.

தங்கள் அன்புடைய,
ஈ.வெ.ராமசாமி ❤❤

(குறிப்பு: ரயில் நிலையங்களில் தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு பானை முறை இருந்துள்ளது.  ஆதிக்க சாதி பானைகளை கீழே போட்டு உடைத்தது தான்
SRMU வின் முதல் போராட்டமாக இருந்துள்ளது. அதை பாராட்டி பெரியார் அவர்கள் எழுதிய கடிதம் இது).

Monday, 29 April 2019

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் வ.வசந்தி பணி நிறைவு பாராட்டு!



சென்னை, ஏப்.29 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் 37 ஆண்டுகள் பணி யாற்றி 11.4.19ல் பணி ஓய்வு பெற்றார்..

அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி  முன்கூட்டியே 10.4.19 பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் சார்பிலும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற் சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. .

கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் த.ரமேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொருளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி  ஆகியோரால் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப்புடன் பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி நூல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தொழிற் சாலை, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசேகர், சங்க செயற்குழு  உறுப்பினர் பா.இயேசுராஜா மற்றும் தொழிலாளர்களும் அலுவலர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 -  விடுதலை நாளேடு, 29.4.19