தந்தை பெரியார் எனது தாத்தாவிற்கு எழுதிய கடிதங்களில் சில...
(V.Ramachandran - One of the founder of S.R.M.U Southern Railway Mens Union & Railway Chief Commercial Controller,Trichy)
Date 22.3.41
My dear Ramachandran,
உங்களுடைய கடிதங்களும், தந்தியும் கிடைத்தன. அவற்றிற்கு ஆக எனது மனமார்ந்த நன்றியறிதலை செலுத்துகிறேன்.
ரயில்வேக்களில் ஜாதி பேத அடையாளங்கள் நீக்கப்பட்டன என்பது மிகவும் பாரட்டப்பட்டதும் குறிப்பிடத் தகுந்ததுமான ஒரு வெற்றியேயாகும்.
இதற்கு காரணம் தமிழர்களின் ஒருமித்த உணர்ச்சியே ஆகும். இதுபோலவே மற்றும் நியாயமான விஷயங்களிலும் உரிமைகளிலும் உணர்ச்சிகளுக்கு போராடினோமேயானால் வெற்றி பெறலாம் என்பதில் அய்யமில்லை.
தங்கள் அன்புடைய,
ஈ.வெ.ராமசாமி ❤❤
(குறிப்பு: ரயில் நிலையங்களில் தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு பானை முறை இருந்துள்ளது. ஆதிக்க சாதி பானைகளை கீழே போட்டு உடைத்தது தான்
SRMU வின் முதல் போராட்டமாக இருந்துள்ளது. அதை பாராட்டி பெரியார் அவர்கள் எழுதிய கடிதம் இது).
No comments:
Post a Comment