Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, 7 February 2025

காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்!

Vikatan
`` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்!
விஷ்ணுராஜ் சௌ
தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கானஅரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.
Published: 20th Oct, 2018 at 16:44 PM

வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்போதும் வியப்பைத் தரக்கூடியவை, அவர்கள் செல்லும் பகுதிகளில் தென்படும் மொழிகளின் விதவிதமான எழுத்துகள்தான். பொதுவாக மொழிகளைப் பேசக் கேட்கும்போது, அவை முழுமையான அழகியலை உணர்த்துவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட மொழிகளில் பேசும் வார்த்தைகளின் சத்தங்களை மட்டுமே கடத்துகின்றன. எழுத்துகளின் வாயிலாகத்தான் ஒரு மொழியை முழுமையாக நாம் அறிய முடியும். அந்த வகையில், தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு மொழியானது மனித நாகரிகங்களின் வளர்ச்சியைப்போல, காலப்போக்குக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைத் தன்னுள் நிகழ்த்தி செவ்வியல் தன்மையை அடைந்து, மொழியியலின் அடுத்தகட்டத்தை அடைகிறது. இந்த வளர்ச்சிக்காக அவை எடுத்துக்கொள்ளும் காலத்துக்குள் பல மொழிகள் அழிந்தும், வேற்றுமொழிகளின் கலப்பால் சில மொழிகள் சிதைந்தும் போய்விடுகின்றன. இன்று பயன்பாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் எழுத்துகள் இல்லாமல் வெறும் பேச்சுவழக்கு மொழியாகவே இருப்பதற்குக் காரணம், அவை முழுமையான வளர்ச்சியைப் பெறாமல் போனதே ஆகும். நாம் பயன்படுத்தும் எழுத்துகளானது, தொடக்கத்தில் கோடுகளாக ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களாக மாற்றம் அடைந்து, பல தலைமுறையினர் அதைச் செதுக்கிவைத்து, இன்று நம் கைகளில் வந்து கிடைத்துள்ளன.

`குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின. 1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றனிடம் பேசினோம்.

``தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தங்களை முதலில் பெரியார் கொண்டு வரக் காரணம் என்ன?"

``மொழியை எளிமையாக்குவதுதான். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் காரணம். எழுத்துகள் ஒவ்வொன்றும் வேறு அளவுகளைக் கொண்டிருந்தன. இது அச்சு பதிப்பித்தல் முறையைக் கடினமாக்கியது. எனவே, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அனைத்து எழுத்துகளும் ஒரே அளவுடையதாக மாறும். `ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளை மட்டும் வைத்துக்கொண்டு உலக மொழியாக மாறும்போது, எழுத்துகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தமிழ்மொழி நிறைய மக்களைச்  சென்றடையும்' என்றார் பெரியார். எனவே, முதலில் நம் குழந்தைகள் தாய்மொழியைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் அது எளிமையாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையைச் சென்றடையும் என்பதுதான் அதன் நோக்கம்."

``தமிழ் மொழியில் இதுபோன்று எழுத்து மாற்றங்கள் தொடர்ந்து நிகழுமா?’’

``ஆம்... தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்து வடிவம் இப்போது இல்லை. எனவே, நம் மொழி இன்னும் எளிமையாக்கப்படலாம். இவை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அந்த மாற்றங்கள் உலகம் தழுவியதாக மாறும். ஏற்கெனவே, மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன.’’

```காட்டுமிராண்டி மொழி தமிழ்' எனப் பெரியார் சொன்னது குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் அப்படிச் சொன்னதற்கான காரணங்கள் என்ன?"

``பெரியார், இந்தக் கருத்தை இரண்டு காரணங்களுக்காகச் சொன்னார். ஒன்று தமிழ் மொழி தோன்றிய காலஅளவை வைத்து; இரண்டாவது தமிழில் உள்ள புராணங்கள் சார்ந்த நூல்களைக் கருத்தில்கொண்டு. அதே பெரியார்தான், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார். திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். ஆக்கரீதியான சிந்தனையை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த விவாதத்தைப் பெரியார் கையிலெடுத்தார். ரஷ்ய மொழி போன்ற பல்வேறு மொழிகளில் நவீன இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றாலும், அவை அனைத்தும் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையே. செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ்மொழி மட்டுமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டில் பாரதிதாசன்வரை என தனக்கான உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் தமிழின் சிறப்பு."

காகிதங்களிலிருந்து, நவீன தகவல் தொழில்நுட்பக் காலத்துக்கு ஏற்ப, தமிழ் மொழி கணினியைச் சென்றடைந்த பின்னரும், நம் தாய்த்தமிழ்நாட்டுக் குழந்தைகளைச் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள இடைவெளிதான் அனைவருக்கும் கவலையைத் தருகிறது.

Tuesday, 29 March 2022

சென்னை கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஹிந்திக்கு முதலிடம்- தமிழுக்குக் கடைசி இடமா?

 


Thursday, 3 March 2022

தமிழுக்கு மூன்றாம் இடமா?


 சென்னை கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில்  புதிதாக அமைக்கப்பட்ட. நுழைவுவாயிலில் (தியாகராயர் நகர் வடமேற்கு பகுதி)  நிலையத்தின் பெயர் பொறிக்கப்பட் டுள்ளது. அதில் முதலிடத்தில் ஆங்கிலமும் இரண்டாவது இடத்தில் இந்தியும் மூன்றாவது இடத்தில் தமிழும் பொறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழர் களிடம் இந்தியை திணிப்பதிலும் தமிழைப் புறம் தள்ளுவதிலும் மும்முரமாக இறங்கியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செ.ர.பார்த்தசாரதி,

மாவட்டச் செயலாளர்,

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

Friday, 8 October 2021

பச்சையப்பன் கல்லூரியும் சிந்தா தரிப்பேட்டை விடுதலை அலுவலகமும்

 ஒற்றைப் பத்தி : பச்சையப்பன் கல்லூரி

ஈரோட்டிலிருந்து ‘விடுதலை' அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டது 1940 இல்! சென்னை சிந்தா தரிப்பேட்டை, 2, பால கிருஷ்ண பிள்ளைத் தெரு வில் உள்ள கட்டடத்தில் இயங்கத் தொடங்கியது.


ஈரோட்டிலிருந்து அச்ச கத்திற்குத் தேவையான இயந் திரங்கள் உள்படப் பல பொருள்கள் வந்து சேர வேண்டிய இடைக்காலத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று கருதிய தந்தை பெரியார் அவர்கள், ‘‘சீர் திருத்த தொண்டர் மாநாட்டை'' சென்னை சிந் தாதரிப்பேட்டை அந்தக் கட்டடத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.


‘விடுதலை' குடியேற விருந்த அந்த இடத்திற்கு ‘‘ஜஸ்டிஸ் மகால்'' என்று பெயர் சூட்டினார். சுமார் 2000  பேர் கலந்துகொண்ட மாநாடு அது (23.12.1940).


அம்மாநாட்டில் 17 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் ஒன்று முக்கிய மாகக் கவனிக்கத்தக்கதாகும்.


‘‘சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வடமொழியில் கடவுள் வணக்க வாழ்த்துச் சொல்லுவதை நீக்கவேண்டும் என்று இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது'' என்பதுதான் அந்தத் தீர்மானம்.


‘‘பச்சையப்பன் கல்லூரி யின் படிக்கட்டும் தமிழ்ப்   பேசும் - பாடும்'' என்று பிற் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு கல்லூரி, ஒரு காலகட்டத் தில் எந்த நிலையில் இருந் தது?


கடவுள் வாழ்த்து- தமி ழில் இல்லை என்பதும்; அதேநேரத்தில், சமஸ்கிருதத் தில் இருந்தது என்பதும் இன் றைய இளைய தலைமுறை யினர் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவலாகும்.


பார்ப்பனரல்லாத பச்சை யப்பரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில்கூட, ஆரியம் தன் ‘ஆக்டோபஸ் வேலை'யை எப்படி காட்டி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ‘ஹிந்து'வான பச்சை யப்பர் அறக்கட்டளை நடத் தும் அந்தப் பச்சையப்பன் கல்லூரியில், தாழ்த்தப்பட் டோர் ‘ஹிந்து' இல்லை என்று கூறி, அம்மாணவர்களைச் சேர்க்காமல் தடை செய்தி ருந்த சூழ்ச்சியையும் புரிந்து கொள்ளவேண்டும். அதன் பின்னால் இருந்தது பார்ப்ப னியம் என்பது விளங்க வில்லையா?


இந்த இடத்தில் இன் னொன்றையும் இணைத்துப் பார்ப்பது அவசியம். சென் னையில் 24.1.2018 அன்று பி.ஜே.பி.யின் தேசிய செய லாளர் திரு.எச்.ராஜாவின் தந் தையார் ஹரிஹர சர்மா என் பவர் எழுதிய நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.


அவ்விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி மட் டும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வில்லை என்பதையும் நினைவு கூர்க! 1940 ஆனா லும், 2018 ஆனாலும் பார்ப் பனர்கள், பார்ப்பனர்கள்தான் - அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.


- மயிலாடன்


குறிப்பு: சென்னையில் நடைபெற்ற ‘‘சீர்திருத்த தொண் டர் மாநாட்டுத்'' தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் நேற்று நமக்குத் தெரிவித்தார்.

Thursday, 22 July 2021

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம்

 

சென்னைஜூலை 21- வினா-விடைத்தாள் அறிக்கை யில் தமிழ் பதிப்பு முதலி லும்ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறி விக்கப்பட்டுள்ளதுதமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சிநடத்தும் தேர்வுகளில் இனி தமி ழுக்கு முதலிடம் கொடுக் கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதுவினாத்தாள்விடை வினாத்தாள் அறிக்கை யில் தமிழ் பதிப்பு முதலி லும்ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக் கும்  எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

Thursday, 20 May 2021

பல பகுதிகளின் சொற்கள் ஒன்றிணைந்து உருவானதே தமிழ்

சேர நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் பாண்டிய நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சேர, சோழ பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் தான் ஒவ்வொரு பகுதியின் நிலையும். இலக்கியங்களை படைப்பவர்களுக்கு மட்டுமே இவற்றை பற்றி தெரியும். அதனால் பல பகுதி சொற்களை கையாள்வர். தொல்காப்பியர் கேரளாவை அதாவது சேர நாட்டை சேர்ந்தவராதலால் தொல்காப்பியத்தில் சேர நாட்டில் புழக்கத்தில் இருந்த சொற்கள் சிலவற்றை கையாண்டிருப்பார். சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லாத சொற்கள் என்பதால் அவற்றை தமிழ் சொற்கள் கிடையாது என சொல்லமுடியாது. தொல்காப்பியரை தமிழர் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. முற் காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் வழங்கிவந்த்து. இதேபோல் நமக்கு தெரியாத பல சொற்கள் இந்தியா முழுவதும் இருந்த தமிழில் இருந்திருக்கலாம். வட பகுதியில் இருந்த தமிழ் மாற்றமடைந்து பிராகிருதம் என மாறியது. அதிலிருந்து பாலி தோன்றியது. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த சந்தசு என்ற மொழியுடன் பிராகிருதம், பாலி போன்றவற்றை கலந்து சமசுகிருதம் என்று ஒன்றை உண்டாக்கினர். இதனால் தான் பல தமிழ் சொற்களை வடமொழி என சொல்லிக்கொண்டுள்ளோம். வெள்ளம் என்றால் நீர் இதை திருவள்ளுவர் கையாண்டுள்ளார். ஆனால் தமிழ் நாட்டில் வழங்கப்படுவதில்லை, ஆனால் மலையாளத்தில்(கேரளம்) புழக்கத்தில் உள்ளது. வெள்ளம் தமிழ்ச் சொல் இல்லை என சொல்லமுடியுமா? திராவிடமும் வட பகுதி தமிழ்ச் சொல்லே!

Tuesday, 19 January 2021

தமிழ் இலக்கியத்தில் ஜாதியோ, ஜாதி!

ஒற்றைப் பத்தி

ஜாதியோ, ஜாதி!

தமிழ் இலக்கியத்தில் பிற்காலத்தில் வருண வேறுபாடு கூறப்பட்டது. தமிழ் இலக்கணத்தில், எழுத்து, பாக்கள் ஆகியவற்றுக்கும்கூட வருண வேறுபாடு கூறப்பட்டது.

பார்ப்பனரை வெண்பாவாலும், சத்திரியரை (அரசரை) ஆசிரியப் பாவாலும், வைசியரை (வணிகரை) கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாடவேண்டும்; பாக்களைக் கலந்து பாடும் கலம்பகத்திலும் வருண பேதம்! தேவருக்கு 100, பார்ப்பனருக்கு 95, சத்திரியருக்கு 90, அமைச்சருக்கு 70, வைசியருக்கு 50, மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமாம்.

பாடல் இலக்கணத்தில்கூட வருண வகுப்பாடு என்கிற அளவுக்கு ஆரியம் புகுந்து விளையாடிய கொடூரத்தை என்னவென்று சொல்ல!

பாம்புகளில், பிராமண, அரச, வைசிய ஜாதிகள் எவை என்று சிந்தாமணி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பேச்சு வழக்கிலும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வருண வேறுபாடு வழங்குவதைக் காணலாம். தலை வெளுத்து, உடல் சிவந்த கழுகைப் ‘‘பிராமணக் கழுகு'' என்று கூறினர்.

கருநிறமுடைய கழுகைப் ‘பறைக் கழுகு' என்று அழைத்தனர். வெண்மை கலந்த ஒரு வகை மைனாவை பார்ப்பார மைனா என்று அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் ‘‘பார்ப்பாரச் சிலுவா'' (பார்ப்பனக் கிளுவை) என்று ஒரு வகைக் காட்டு வாத்து அழைக்கப்படுகின்றது. ஜாதி அடிப்படையில் வழங்கும் இவ்வழக்கு ஆங்கில மொழியிலும் வழங்கி வருகிறது. ‘பறை நாய்' என்ற பெயரை ஒருவகை நாயினத்துக்கு விலங்கு நூலார் வழங்குவதைக் காணலாம்.

‘‘பிரமா மாடு'' (பிராமண மாடு) என்ற பெயர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று பரவிய இந்திய மாட்டினத்துக்குப் பெயராக வழங்குகின்றது.

வால்மீகி ஒரு செய்யுளில் ‘பிராமணி' என்ற பெயரில் அரணையைக் குறிப்பிடுகின்றார்.

இன்றைக்கும் பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பது, ஆவணி அவிட்டத்தில் புதுப்பிப்பது அவர்கள் துவிஜாதியினர் (இரு பிறப்பாளர்) என்று கூறி, பார்ப்பனரல்லாதாரை சூத்திரர் - வேசி மக்கள் என்று இழிவுப்படுத்துவதுதானே!

ஜாதியின் ஆணிவேர் அறுக்கப்பட்டால்தான் ஆரியம் ஒழியும்!

 - மயிலாடன்

Thursday, 28 March 2019

திராவிடர் இனத்தின் தற்போதைய ஒரு பகுதியே தமிழினம்

1.திராவிடர் இனத்தின் தற்போதைய ஒரு பகுதியே தமிழினம். திருத்தமுறாத (பழந்தமிழ்)தமிழ் பேசிய திராவிடர் இனத்திலிருந்து பிரிந்து,பிரிந்து தமிழை அடிப்படையாக கொண்டு பல பிரிவுகளாக மாறி (தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் பல) இருப்பவர்கள் தான் தற்போதைய திராவிடர் இனம்.

2.திராவிடர் இனத்தின் இழந்த மானத்தை மீட்க தந்தை பெரியார் செருப்படி கூட பட்டார். திராவிடர் இனத்தின் தற்போதைய ஒரு பகுதியே தமிழினம். தமிழ் பேசுபவனெல்லாம் தமிழினம் அல்ல. ஆரியன் தமிழ் பேசினாலும் தமிழன் அல்ல. மொரீசியசில் தமிழ்பேச மறந்து போன தமிழர்களும் மீண்டும் தமிழ் பேச கற்றுவருகிறார்கள். இப்படிபட்டவர்கள் தமிழர்கள். தமிழர் என்பது இனவழியே! மொழிவழி அல்ல!

- நான் (செ.ர.பார்த்தசாரதி)
28.3.2013  முகநூலில்

Sunday, 30 September 2018

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மூன்றாமிடம்!


தானியங்கு மாற்று உரை இல்லை.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மூன்றாமிடம்!

தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006இ-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக் கப்பட்டது. பல தனியார் பள்ளிகள் இந்தச் சட் டத்தை அமல்படுத்தப் படவில்லை, இந்தச் சட் டத்தை அமல்படுத்துவதி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தனி யார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட் டது இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சட்டத்தின் படி, அடுத்தக் கல்வியாண் டில் (2015-_16) தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயமாக தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டும்.
ஆகையால் அந்த பள்ளிகளை காப்பாற்றும் வகையில் அப்பள்ளி களுக்கு ஆதரவாக தமிழ் நாடு அரசு புது ஆணை ஒன்றை வெளியிட்டுள் ளது. இந்த புதிய தமிழ் கற்றல் ஆணையி னால் சி.பி.எஸ்.இ., சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் உள் ளிட்ட தனியார் பள்ளி களை மேலும் 10 ஆண்டு களுக்கு தமிழை புறக்கணிக்க வழிவகுத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித் யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகி யவற்றிற்கு விளக்களித்து ஆணைவெளியிட்டுள்ளது. ஏன் தமிழ்நாட்டில் உள்ள இந்த பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்கக் கூடாதா? எந்த மாநிலத் தவரானாலும் தமிழ் நாட்டிற்குள் வந்துவிட் டால் அவரை தமிழ்நாட் டில் அமலிலுள்ள சட் டங்கள் தானே கட்டுப் படுத்தும்?

அது ஒருபுறமிருக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள பள்ளி விளம்பர பலகைகளில் தமிழ் மூன்றாமிடத்திலுள் ளது. தமிழ்நாட்டு அரசு ஆணைப்படி விளம்பர பலகைகளில் தமிழ் முத லாவதாகவும் மற்ற மொழி களைவிட பெரியதாகவும் இருக்கவேண்டும்.

பாடதிட்டம் மட்டும் தான் மய்ய அரசுடையது. மற்ற அனுமதியெள்ளாம் (கட்டிட அனுமதி உள் பட) தமிழ்நாட்டு அரசி டமிருந்து தான் பெற வேண்டும். ஆகையால் தமிழ்நாடு அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள பள்ளி விளம்பர பலகைகளில் தமிழை முத லாவதாக எழுத நட வடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை, சூளைமேடு, கில் நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள பள்ளி விளம்பர பலகையில் தமிழ் மூன்றாமிடத்தி லுள்ள படம் இது.

- விடுதலை நாளேடு, 30.9. 2014
- நான் அனுப்பிய செய்தி (செ.ர.பார்த்தசாரதி)

Monday, 2 July 2018

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்.அந்தந்த நாட்டின் வெப்பநிலைக்கேற்ப வாயையும்,நாக்கையும் பயன்படுத்தும் நிலையில் ஒலிப்பு மாறும். அதோடு பக்க எழுத்துக்கு ஏற்பவும் ஒலிப்பு மாறும்.[மஞ்ச(ஜ)ள்,அஞ்சா(ஜா) நெஞ்ச(ஜ)ன்,அஞ்ச(ஜ)ல்] ஒவ்வொரு ஒலிப்புக்கும் எழுத்து கொடுத்துக்கொண்டே சென்றால் கற்றல் எளிதாக இருக்காது. ஜ,ஸ,ஷ,ஹ,க்ஷ போன்றவை சமஸ்கிருத எழுத்துகள் அல்ல. சமஸ்கிருதத்திற்கு எழுத்தே கிடையாது. மேற் கண்டவை தமிழில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள்(கிரந்த) அவை.
- முக நூல் 3.7.16 (நான்)

Friday, 27 April 2018

திராவிடர்கள் என பகுப்பு

உலக முதன் மொழி தமிழ்! முதல் தோன்றிய இனம் தமிழினம்! அப்படி என்றால் உலக ஒட்டு மொத்த மனித இனமே தமிழினம் தான்! ஆனால் தற்போதைய அறிஞர்(தந்தை பெரியார் உட்பட)கள், அன்றிலிருந்து இன்றுவரை தொன்மை தமிழிலிருந்து(திராவிடம்) வளர்ச்சி பெற்ற செந்தமிழ் வரை பேசிக்கொண்டு நடந்து கெண்டு வருபவர்கள் தமிழர்கள்.தொன்மை தமிழிலிருந்து (திராவிடம்) செந்தமிழுக்கு முன்பாக மாற்றம் பெற்ற திரிந்த மொழியாக மாறிய மொழிகளை(மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,துளு,பிராகுயி மற்றும் பல)பேசிக்கொண்டு நடந்து கெண்டு வருபவர்களையும்,தமிழர்களையும் சேர்த்து திராவிடர்கள் என பகுத்தனர்.

- 27.4.2014(எனது)

Tuesday, 6 February 2018

திராவிடர் ஏன்!

பார்ப்பன இனத்தை ஒதுக்கத்தான் தந்தை பெரியார் 'திராவிடர் கழகம்' என்று பெயர் வைத்தார். 'தமிழ் நாடு, தமிழர், தமிழர் பண்பாடு' என்ற நூலில் ''நான் திராவிடர் என்று சொல்வது தமிழரை தான், 'திராவிட நாடு' என்று சொல்வது தமிழ் நாட்டை தான்'' என்று கூறுகிறார். தமிழர் என்று இயக்கத்திற்கு பெயர் வைப்பதில் தப்பில்லை, அந்த பெயரின் மூலம் ஆரியன் புகுந்து விடக்கூடாது என்பது தான் முக்கியம். அதில் எச்சரிக்கையாய் இருந்தார் பெரியார். பார்ப்பானையும் தமிழன் தான் என சில தமிழ் தேசியவாதிகள் கூறுகின்றனர். இதில் தான் சிக்கலே.

திராவிடர் இனத்தின் மொழியில் வடமொழி குறைவாக கலக்கப்பட்டு பிறகு தூக்கி எறியப்பட்டு தற்போதைய நிலையில் இருப்பது தான் தமிழ் மொழி. பார்ப்பான் தமிழ் பேசுவதால் தமிழனல்ல.அவன் ஆரியனே. தெலுங்கு போன்ற மொழிகளையும் மீட்டுருவாக்கம் செய்தால் தனித்தியங்க முடியும்.