Saturday 30 November 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?

அறிவியலாளர்களை மதம் படுத்திய பாடு!

அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள்.

இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.

தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம்  உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.

‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.

பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.

கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள்.

விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.

இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல.

கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.

எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்?

தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.”

எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே!

‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள்.
Thanks Theevan Theevan ✊👍✊
- தமிழினியனின் முகநூல் பதிவு, 30.11.19

Friday 29 November 2019

தினமலருக்கு 'காலைக்கதிர்' மூக்கறுப்பு!

பெயருக்குப்பின் ஜாதி மறைய காரணம் ஈ.வெ.ரா. இல்லையாம். நாகரிகம் வளர்ந்ததால் ஏற்பட்டதாம்.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் ஜாதி பட்டத்தைத் துறப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன், விருதுநகர் வி.வி. இராமசாமி ஆகியோர் நாடார் பட்டத்தை இன்று முதல் துறக்கிறோம் என்றதும்,  சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரனார் சேர்வை பட்டத்தைத் துறக்கிறேன் என்று அறிவித்ததும், 1927ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் நாயக்கர் பட்டத்தைத் துறந்ததும், அதன் காரணமாக  தமிழ் நாட்டில் ஏற்பட்ட   விழிப்புணர்ச்சியும் 'தினமலர்' கும்பலுக்குத் தெரியாதா? இந்த அடிப்படை வரலாறு கூடத் தெரியாமல் பத்திரிகை நடத்துவதும் ஒரு கேடா!

தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களின் நிலை என்ன? அங்கெல்லாம் ஜாதி பட்டம் ஒழிந்ததா? அங்கெல்லாம் நாகரிகம் வளரவில்லையா? தானாக ஏன் நடக்கவில்லை? பெரும்பாலோர் தங்கள் ஜாதிக்குள் தான் திருமணம்  செய்து கொள்கின்றனர் என்கிறது 'தினமலர்'.

இதே 'தினமலர்' குடும்பத்தால் நடத்தப்படும் 'காலைக்கதிர்' (29.9.2015 பக்கம் 3) வெளியிட்ட செய்தி என்ன?

"2013-2014-இல் சிறப்புத் திருமணங்கள் சட்டப்படி 7235 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன. இது 2014-2015ல் 19 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் இல்லாத வகையில் மதங்கள், சமுதாயப் பிரிவுகளைக் கடந்து செய்யப்படும் திருமணப் பதிவுகள் மூன்று மடங்காக அதிகரித்து உள்ளன" என்று வெளியிட்டது 'தினமலர்' குடும்பத்து நாளேடான காலைக் கதிர் தானே.

பதிவு செய்யப்பட்ட வகையில் மூன்று மடங்கு அதிகம் என்றால், பதிவு செய்யப்படாத ஜாதிமறுப்பு, மத மறுப்புத் திருமணங்கள் எத்தனை மடங்கு இருக்கும்?

சென்னை - பெரியார் திடலில் இயங்கும் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் இம்மாதத்தில் இரு பார்ப்பனர்களே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர் என்பதைத் 'தினமலர்' வகையறாக்களுக்குத் தெரியுமா?

கல்வி, வேலைவாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடுபற்றியும் ஏகடியம் செய்கிறது 'தினமலர்' உங்கள் ஆட்சிதானே மத்தியில் நடக்கிறது. ஜாதியை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வரட்டுமே. அதற்குப் பின்  ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பிரச்சினை வராது அல்லவா? முதலில் தினமலர் கும்பல் தோளில் தொங்கும் பூணூலை அறுத்து  எறியட்டுமே பார்க்கலாம்....

 - விடுதலை நாளேடு, 25.11.19

Sunday 17 November 2019

இந்து மத கடவுள்கள் ரிஷிகளின் பிறப்புத் தன்மை!

சிங்கத்திற்கு  சிங்கமகாசூரன் பிறந்தான்
புலிக்கு   வீரீஞ்சிகன் பிறந்தான்
யானைக்கு விநாயகன் பிறந்தான்
குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான்
கழுதைக்கு காங்கேயன் பிறந்தான்
கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான்
எருமைக்கு மகிஷன் பிறந்தான்
பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான்
ஆட்டுக்கு அசமுகி பிறந்தான்
மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான்
நாய்க்கு சவுநகன் பிறந்தான்
நரிக்கு கேசகம்பலன் பிறந்தான்
பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான்
குரங்குக்கு சம்புகன் பிறந்தான்
மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான்
கிளிக்கு சுகர் பிறந்தான்
பட்சிக்கு சகுனி பிறந்தான்
ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான்
தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான்
மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான்
பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான்
மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள்
பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள்
மலைக்கு வசுவதத்தன் பிறந்தான்
துரோனியில் துரோணன் பிறந்தான்
கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான்
ஆற்றில் பீஷ்மன் பிறந்தான்
காற்றுக்கு பீமன் பிறந்தான்
புற்றில் வால்மீகி பிறந்தான்
குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான்
தாமரையில் பத்மை பிறந்தான்
அண்டத்தில் வாதன் பிறந்தான்
கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள்
சூரியனுக்கு கர்ணன் பிறந்தான்
சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான்
செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான்
புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான்
வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான்
சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான்
சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான்
முகத்தில் பிராமணன் பிறந்தான்
தோளில் சத்திரியன் பிறந்தான்
தொடையில் வைசியன் பிறந்தான்
காலில் சூத்திரன் பிறந்தான்
வாயில் வேதவல்லி பிறந்தாள்
மூக்கில் அஸ்வினி பிறந்தாள்
மனதில் மன்மதன் பிறந்தான்
தொப்பிளில் வீரவாகு பிறந்தான்
கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான்
தும்மலில் தூபன் பிறந்தான்
நிழலில் சுந்தரன் பிறந்தான்
கண்ணீரில் வானரன் பிறந்தான்
உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான்
வலது கால் விரலில் கக்கன் பிறந்தான்
இடது கால் விரலில் தாணி பிறந்தான்
கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான்
ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான்
பேய்க்கு காந்தாரி பிறந்தாள்
கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான்
காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான்
விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான்
நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது
ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான்
மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள்
வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான்
புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான்
பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான்
- பழ. பிரபு முகநூல் பக்கத்திலிருந்து
17.11.13

Tuesday 5 November 2019

தலைவர்கள் வாழ்ந்த ஆண்டுகள்

உலகச் சமயங்களின் தலைவர்கள் வாழ்ந்த ஆண்டுகள்

ஆதி சங்கரர்-32
இயேசு நாதர்-34
விவேகானந்தர்-39
இராமானுசர்-41
இராமகிருட்டினர்-50
முகமது நபி-51
இரமண மகரிஷி-60
குருநானக்-70
மகாவீரர்-72
புத்தர்-80

உலகப் தத்துவப் பெரியோர்கள் வாழ்ந்த ஆண்டுகள்

லெனி்ன்-51
ஆபரகாம் லிங்கன்-56
ரூசோ-60
காரல் மார்க்ஸ்-65
இங்கர்சால்-66
ஏங்கல்ஸ்-75
டால்ஸ்டாய்-82
மா சே துங்-83
வால்டேர்-84
சர்ச்சில்-90
கடவுள் இல்லை என்று வாழ்நாள் முழுக்க நாத்திகத் கருத்தையும் பகுத்தறிவு பேசிய பெரியார் 95ஆண்டுகள் 97 நாட்கள்..