Monday 25 October 2021

ம.பொ.சி. தமிழ்த்தேசிய முன்னோடியா? பார்ப்பனர்களின் பின்னோடியா?

Sunday 24 October 2021

பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்பட்டது எப்படி?

#பச்சையப்பன்கல்லூரி #பெரியார் #நீதிக்கட்சி #என்_சிவராஜ்

இந்து சமய அறநிலையத்துறை தொடங்கும் கல்லூரியில் பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்றொரு அரசு விளம்பரம். அதைத் தவறென்று கூறி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கை விடுக்கிறார். (16.10.2021 விடுதலை)

அதில் பழைய வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டும் அவர், பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக நினைவூட்டலாக ஒரு செய்தியைச் சொல்லிச் செல்கிறார்.

 //1928-க்குமுன் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லீம் மாணவர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது; அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சி தான் மாற்றியது. (காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து; அவரது அறக்கட்டளைமூலம் நடத்தப்படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டுகாலம் இருந்ததை தந்தை பெரியார் - சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது).// என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிவிட்டார். இது பொய் என்கிறார் ஒருவர்.

அதற்குச் சான்றாக தான் எழுதிய கட்டுரையையும் காட்டுகிறார். மறுக்க வேண்டியதில்லை. அவர் எழுதியிருக்கும் செய்திகள் உண்மையானவை தான் என்போம். ஆனால், முழுமையானவையா? நிறைவானவையா? அக் கட்டுரையில் அவர் கவனமாகத் தவிர்த்திருக்கும் செய்திகள் என்ன? அல்லது கவனம் கொள்ள மறுத்திருக்கும் செய்திகள் என்ன? தான் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வழக்கு தொடர்ந்ததா என்பது பற்றித் தகவல்கள் இல்லை என்று சொல்லும் கட்டுரையாளர் திரு.ஏ.பி.ராஜசேகரன், நீதிபதியின் அவதானிப்பை ஏற்றுக்கொண்ட அறங்காவலர்கள் ஆதிதிராவிடர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க  முடிவெடுத்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றினர் என்று எழுதியுள்ளார். ஆனால், அந்த அறங்காவலர் குழுவில் என்ன நடந்தது என்பதை 'குடிஅரசு' சொல்கிறது. இக் கட்டுரையின் பின்பகுதியில் அதுபற்றி குறித்துள்ளோம்.

நினைவூட்டலாக ஆசிரியர்  சொன்ன செய்திகள் பொய்யென்று சொல்லும் அவ்வழக்குரைஞர், ஏன் சில செய்திகளை, நீதிக்கட்சி, பெரியார் ஆகியோரின் முன்னெடுப்புகளை மறைக்கிறார்? அல்லது என்ன செய்தியை விதைக்க முயல்கிறார் என்பதை அவரே உணர்வார்.

ஆசிரியர் வீரமணி சொல்லியிருப்பவை பொய்யா? முதலில் அதைப் பார்ப்போம்.

* //1927 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரே ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்த்துக் கொண்டதில்லை. சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது வழக்கு தொடுத்து வழக்கில் வென்ற பிறகே 1928முதல் ஆதிதிராவிட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். // சான்று: http://adi-dravidar.blogspot.com/p/6.html
அப்போது சிவராஜ் நீதிக்கட்சியின் சார்பில் மேலவை உறுப்பினராக இருந்தார்.

* 1927 அக்டோபர் 22, 23 தேதிகளில் சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடு. பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி (முதலியார்), தந்தை பெரியார் உள்ளிட்ட நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். அதில் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சுரேந்திரநாத் ஆரியா முன்மொழிந்த தீர்மானம்: "பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை கல்லூரியின் அறங்காவலர்களுக்கு வலியுறுத்தி இந்த மாநாடு கூறுகிறது. இவ்வாறு அவர்களை சேர்க்காமல் ஒதுக்குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்பதாகும்.” பின்னர் விவாதத்துக்குப் பிறகு சேர்க்கப்பட்ட வரிகள்: “இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்று செயல்படத் தவறினால் அக் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.” இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அதே மாநாட்டில் ஆர்.வி.சொக்கலிங்கம் இதே போன்ற மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தார். “ஆதிதிராவிடர், கிறித்துவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மான்யங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.” அத் தீர்மானமும் நிறைவேறியது.

* 1927 நவம்பர் குடிஅரசில் காட்டமான “ஆதி திராவிடர் - விபசாரி மக்களை விட இழிந்தவர்களா?” என்ற கட்டுரை கேட்கிறது - ”தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா?”.

* அதையொட்டி நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா மாநாட்டில், வழக்கின் முடிவில் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கப்பட்டதற்கு வரவேற்பும், இதே போல் கிறித்துவ, முஸ்லிம் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற தீர்மானமும், பச்சையப்பன் அறக்கட்டளையில் ஆதிதிராவிடர் சேர்க்கப்படுவதற்குத் தடையாயிருந்த திரு.வெங்கடேச சாஸ்திரலு பார்ப்பனரைக் கண்டித்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* பச்சையப்பன் அறக்கட்டளையிலிருந்து கொண்டு கலாட்டா செய்துகொண்டிருந்த 'வெங்கடேச சாஸ்திரலு’ என்ற பார்ப்பனரைப் பற்றி எழுத மனம் வராததேன்? காலச்சுவடு தடுக்குமா?

* காலச்சுவடு கட்டுரையில் அவர் எடுத்துக்காட்டியிருக்கும் பக்கங்களில் மேயர் என்.சிவராஜ் அவர்களைப் பற்றிய பதிவே காணாமலிருப்பதேன்? தெரியவில்லை. சிவராஜ் அவர்களின் வரலாற்றில் இருக்கும் செய்தி தவறா? அவர் எதுவும் செய்யவில்லையா இந்தப் பிரச்சினையில்? எது உண்மை?

* ஆதிதிராவிட மக்களை சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்று ’தீர்மானம்’ இயற்றினார் என்று சர்.பிட்டி. தியாகராயர் குறித்த அபாண்டங்களுக்கெல்லாம் தன் முகநூல் பதிவில் தூபம் போடும்  வழக்குரைஞர், (அப்படி ஒரு தீர்மானம் இருந்தால் அவர்கள் எடுத்துக் காட்டட்டும். அப்படி அபாண்டம் பேசப்பட்ட பி&சி மில் பிரச்சினையில் மக்களைத் துண்டாடியவர்கள் யார் என்பதையெல்லாம் ஏற்கெனவே ஆய்வாளர் க.திருநாவுக்கரசு விரிவாக எழுதிவிட்டார்) இப்போதுவந்து ஆர்.எஸ்.எஸ். கூட்டம் வைக்கும் அபாண்டங்களைத் தூக்கி சாட்சிக் கூண்டில் நிறுத்துகிறார், பாவம்!

* சர்.பிட்டி தியாகராயர் பச்சையப்பன் கல்லூரி அறங்காவல் குழுவில் இருந்தது பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கப்படும் முன்னான காலம். (1917-ல் அது குறித்து அவர் பேசுகிறார்.) அங்கு அவருக்கு நடந்த அனுபவம் தான் பின்னாளில் பச்சையப்பன் கல்லூரி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிலையங்களிலும் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாதார் மாணவர்கள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகத் தனிக் குழுக்களை அமைக்க ஏற்பாடு செய்யக் காரணமாயிற்று. (ஏ.பி.பாத்ரோ நீதிக்கட்சி அமைச்சராக இருக்கும்போது!) அவை நடைமுறைக்கு வர பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

* "ஆதிதிராவிடர், கிறித்துவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மான்யங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது” என்றொரு தீர்மானத்தை மேலே கண்டோமே, அதற்கு முன்னோடி என்ன தெரியுமா?  

“தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படமாட்டாது” என்ற (கல்வி 87, 16.1.1923) அரசாணை!

அதுமட்டுமல்ல, “தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களை மிகுதியாகச் சேர்க்கும் பள்ளிகளுக்கு பண உதவி மிகுதியாக வழங்கப்பட்டமை (ஆணை 205 கல்வி, 11.2.1924)”, மருத்துவக் கல்வி பயில நிதி உதவி, ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள வாங்க நிதி, ஆதி திராவிடர் அணுகும் இடத்தில் பள்ளிகள் அமைய வேண்டும் என்பதற்கான ஆணைகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிற்காலத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் சேர்த்துக் கொள்ள மறுத்தால் அனுமதி ரத்து என்பதுவரை படிப்படியாக மாற்றங்கள் வந்தன.

* இந்தக் கல்வி உரிமைப் போராட்டம், ஆணைகளின் தொடர்ச்சி தான் பச்சையப்பன் கல்லூரிப் பிரச்சினை. அது தனியாக எங்கிருந்தோ முளைத்து வந்ததல்ல. இந்த உரிமைக்காகப் படிப்படியாக நீதிக்கட்சி அரசுகளும், அதனைத் தொடர்ந்து அதன் ஆதரவோடு அமைந்த பி.சுப்பராயனின் அமைச்சரவையும் செயல்பட்டமையைத் தெளிவாக அறியலாம். அன்றைக்கிருந்த அத்தனைப் பிரச்சினைகளையும் சமூகக் கேடுகளையும், கொடுமைகளையும், தனக்கிருந்த வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மத்தியில் ஒவ்வொன்றாக எதிர்கொண்டு வெற்றிகண்ட நீதிக்கட்சியின் செயல்பாடுகள் வரலாற்றில் எங்கும் கண்டிராத சாதனைகள். இவற்றையெல்லாம் மறைக்க நினைப்பது ஏன்? நீதிக்கட்சியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவே திட்டமிட்டுத் திரித்துக் காட்ட முயற்சிப்பது ஏன்?

அன்றிருந்த சூழலில் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவ்வரசு ஆற்றியிருக்கும் பணிகளை விடுத்து, ஒரேடியாக ஏன் மாறவில்லை என்பதைப் போல கேள்வி எழுப்புவதை 'வரலாற்றைப் புரிந்து கொள்ள மறுப்பது' என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

இன்றும் அந்த சமூகநீதிப் பாதைதான் தொடர்கிறது - பயணம் முடியவில்லை. என்ன காரணம்? இன்னும் சமூகக் கேடுகள் ஒழியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும்! எனில், நூறாண்டுகளுக்கு முன்னான நிலையை நினைத்துப் பார்ப்போம். 

நீதிக்கட்சியையும், திராவிட இயக்கத்தையும் குறை/அவதூறு சொன்னால், சமூகநீதிச் சக்திகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவாருக்கும் பயன்படலாம். அதற்காகப் பார்ப்பன சடகோபம் கிடைக்கலாம்; பாராட்டு கிடைக்கலாம். பத்ரிகள் ஷேர் செய்யலாம் (ஏ.பி.ரா. அவர்களே இந்த உத்தமர்களின் பகிர்வைப் பற்றி எழுதியுமிருக்கிறார். வெளிப்படையாகப் பத்ரிகள் ஷேர் செய்வதால் மட்டுமல்ல.. இல்லாவிட்டாலும் இவை யாருக்குப் பயன்படும் என்பதை நாம் அறிவோம் அல்லவா!) 

ஆனால் சமூகநீதிக்கோ, சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமைக்கோ ஒருபோதும் பலன் கிட்டாது என்பதைப் புரிந்துகொள்ளட்டும். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் உள்ளவை உண்மையே என்பதையும் உணரட்டும்.
- பிரின்ஸ் என்னாரெசு பெரியார் முகநூல் பக்கம், 19.10.21

Thursday 21 October 2021

கலைஞர் வந்தது முதல் செய்தது வரை

*கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?*

*பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.*

*கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக  வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் கோவைக்குத்தான் சென்றார்.சென்னைக்கு அல்ல)*

*மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.*

*அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில்  நடித்தவர் எம்ஜிஆர்.*

*கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.*

*1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார்(படம் பார்க்க) கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955)*

*அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.*

*எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார்.*

*எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950)*

*அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.*

*ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.*

*அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.*

*இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்*

*இன்னொன்று சொல்கிறேன்.*

*திமுக தொடங்கப்பட்டது 1949ல்*

*முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல்*

*வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.*

*1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.*

*அது மட்டுமல்ல. எம்ஜிஆர், சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.*

*அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.*

*இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார்.*

*கலைஞரும் இந்து மத விரோதமும்* 

*கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே!*
 
*எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று.*
 
*அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்!*
 
*அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். அப்போது தான் தெரியும் அவரின் உயரம்.*
 
*அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடந்தவை:*
 
*♦️  முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு, 1996*
 
*♦️  புரவலர் விருது & தங்க நிற அட்டை திட்டம் - ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருக்கோயில் புரவலர் என்ற பட்டமும், அரசு சான்றிதழும், தங்க நிறத்திலான அட்டையும் வழங்க அரசு உத்தரவு. அவர்கள் குடும்பத்தினர் 5 பேருக்கு அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களில் 20 வருடங்கள் சிறப்பு தரிசன அனுமதி வழங்கவும் உத்தரவு. 48 புரவலர்கள் மூலம் ரூ.2.40 கோடி நிதி திரட்டல், 2006-2011*

*♦️  திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்*
 
*1. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், 1996*
*2. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், 1997*
*3. திருநீர்மலை ரங்கநாத சுவாமி திருக்கோயில், 1997*
*4. திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், 1997*
*5. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 1997*
*6. கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், 1997*
*7. தஞ்சை பெரிய கோயில், 1997*
*8. சென்னை மல்லீஸ்வரர் திருக்கோயில், 1997*
*9. வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1997*
*10. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், 1998*
*11. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், 1998*
*12. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், 1998*
*13. ஆழ்வார் திருநகரி அரவிந்தலோசனர் திருக்கோயில், 1998*
*14. சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், 1999*
*15. வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், 1999*
*16. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், 1999*
*17. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 1999*
*18. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், 1999*
*19. ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோயில், 2000*
*20. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், 2000*
*21. மதுரை காளமேக பெருமாள் திருக்கோயில், 2000*
*22. அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2000*
*23. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், 2000*
*24. தொட்டியம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில், 2000*
*25. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், 2000*
*26. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், 2000*
*27. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 2000*
*28. பவானி சங்கமேசுவரர் திருக்கோயில், 2000*
*29. காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 2000*
*30. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், 2000*
*31. திருமுட்டம் பூவராகசுவாமி திருக்கோயில், 2000*
*32. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், 2000*
*உள்ளிட்ட 2459 கோயில்களில் குடமுழக்கு,* 
*33. தமிழகம் முழுவதும்  842 கோயில்களில் பல்வேறு திருப்பணிகள்.*
*34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள்*
*35. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு ரூ.85000/- நிதி உதவி*   
 
 *♦️  கோயில் சுற்றுப்புற மேம்பாடு*
 
*1. நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு அரசின் சார்பில் இலவச மின்விளக்கு* 
*2. திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரல், படிக்கட்டுகள் செப்பனிடல் & மழை நீர் சேமிப்பு ஏற்படுத்துதல்*
*3. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருகுளத்தை சீரமைக்க ரூ.43.90 லட்சம், அருள்மிகு அஷ்டபூஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரங்கசாமி குளத்தினை சீரமைக்க ரூ.22.50 லட்சம் நிதி ஒதுக்கல்*
*4. இந்து அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 50 முக்கிய திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை ஓவியங்களை பாதுகாக்க ரூ.20 லட்சம் செலவில் நடவடிக்கை* 
 
*♦️  கோயில்களில் தமிழ்* 
 
*1. தமிழில் வழிபாடு, தமிழில் வேள்வி  1998*
*2. சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்விய பிரபந்த பயிற்சி மையங்கள், 1998-99*
*3. திருக்கோயில் ஆகம விதிகள் அடங்கிய உத்ரகாமிக ஆகமம் நூலை, 1999*
*4. தமிழ் போற்றி அர்ச்சனை புத்தகங்கள் வெளியீடு, 1999*
*5. சைவத் திருக்கோயில்கள் 5-ல் தேவார இசைப் பள்ளிகள்* 
*6. வைணவத் திருக்கோயில்கள் 4-ல் பிரபந்த இசைப் பள்ளிகள்* 
*7. 8 திருக்கோயில்களில் நாதஸ்வரம் & தவில் பயிற்சி*
*8. 75 திருக்கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்* 
*9. சிதம்பரம் நடராசர் தமிழ் திருமுறைகள் இசைத்தல்*
 
 *♦️  தங்க விமானங்கள், தங்கத்தேர் & மரத்தேர் பணிகள்* 
 
*1. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக 34 தங்கத் தேர்கள்* 
*2. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007*
*3. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007*
*4. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2010*
*5. திருக்கோயில்களின் 241 மரத் தேர் புதுப்பிப்பு* *
*6. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் அம்பாளுக்கு புதிய திருத்தேர் அமைத்தல் & தேரோட்டம், 2008*
 
*♦️  கோயில் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள்* 

*1. கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை என்ற கொள்கை முடிவு*
*2. தமிழகம் முழுவதும் 8325 கோயில் சொத்து பதிவேடுகள் உருவாக்கம், 1996*
*3. தனியார் ஆக்ரமிப்பில் இருந்த திருத்துறைப் பூண்டியில் 621 ஏக்கர், பேரூரில் 250 ஏக்கர் உள்ளிட்ட கோயில் நிலங்கள் மொத்தம் 2745 ஏக்கர் கோயில் நிலங்கள் நேரடி மீட்பு* 
*4. நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக 1414 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு* 
*5. திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாத்திட திருவொற்றியூர், திருத்தணி, விருதுநகர், விழுப்புரம் & தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம்*
*6. மொத்தம் 532 திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்துதல்*
*7. மொத்தம் 59  திருக்கோயில்களில் CCTV  பொருத்துதல்*
*8. திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் நீதிமன்ற கட்டணம் சொத்து மதிப்பில் 7.5 சதவிகிதம் என்று இருந்ததை மாற்றி அனைத்து வழக்குகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.100/- என நிர்ணயித்து அரசு ஆணை, 2010*
*9. கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பருத்தி நூல் புடவை & வேட்டிகளை ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, அவற்றை முதியோர், ஆதரவற்றோர் & கைம்பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்*
  
*♦️  பணியாளர் நியமனம் & நலன்*
 
*1. ஓய்வூதிய நல நிதி, 1996*
*2. பணியாளர் சேமநல நிதி, 1997*
*3. பணியாற்றும் காலத்தில் இயற்கை எய்தும் பணியாளர்களுக்கு ரூ.2000/- இறுதி சடங்கு நிதி, 1997*
*4. பணியாளர்களின் மகன் திருமணத்திற்கு ரூ.6000, மகள் திருமணத்திற்கு ரூ.10000/-, 1997*
*5. மருத்துவப்படி, சீருடை சலவைப் படி, இருசக்கர வாகனம் வாங்க கடன், 1997*
*6. கோயில்களுக்கான 200 புதிய செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல், 1998*
*7. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களின் அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படி, 1998*
*8. திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, 1999*
*9. ஆண்டுக்கு ஒரு லட்சமும் அதற்கு மேலும் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம், 1999*
*10. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மடிக்கணனி வழங்குதல், 2010*
*11. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி பயில நிதி உதவி, 2010*
*12. திருக்கோயில் பணியாளர்கள் 2575 பேருக்கு ஒரே சீருடை & அடையாள அட்டை, 2010*
*13. கிராம பூசாரிகள் 1146 நபர்களுக்கு ஓய்வூதிய திட்டம்*
*14. ஒரு காலப் பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர் & பூசாரிகள்10,000 பேருக்கு இலவச சைக்கிள், 2010*
*15. மொத்தம் 49,240 கிராம பூசாரிகள் அடங்கிய நலவாரியம், 2010*
*16. திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள் நியமனம்* 
*17. மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில் 14 தவில், 30 நாதஸ்வரம், 4 தாளம் ஆகிய இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்* 
*18. சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்*
 
*♦️  கோயில்கள் சார்ந்து மக்கள் நலப் பணிகள்* 
 
*1. திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி மைய நிதியை உருவாக்கி திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நிதி வசதி* 
*2. திருக்கோயில்களில் ஆதரவற்ற இளம் சிறார்கள் கருணை இல்லம் திட்டத்தின் கீழ் 38 திருக்கோயில்கள் மூலம் 43 கருணை இல்லங்கள், 1975*
*3. திருக்கோயில் கருணை இல்ல மாணவ, மாணவியர்களுக்கு இலவச கணினி, தட்டச்சு & தையல் பயிற்சி* 
*4. திருக்கோயில்களால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை*
*5. நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கிய திருக்கோயில்களில் நூல் நிலையங்கள் அமைத்தல்* 
*6. பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம்*
*7. திருவேற்காடு, சமயபுரம் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் திருமண மண்டபங்கள், 2007 & 2009*
 
*♦️  திருவாரூர் ஆழித் தேர்*

*அனைத்து துறைகளிலும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும்படியான ஓர் சிறப்பு முத்திரையை பதித்துள்ள தலைவர் கலைஞர், அறநிலையத் துறையில் அப்படியான ஒரு முத்திரையை தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் பதித்துள்ளார்.*

*அது தான் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் ஆழித் தேர்.*

*நீண்ட நெடுங்காலமாக ஆத்திகர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் திருவாரூர் தேர் ஓட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது.  எண்கோண வடிவத்தில் நாலு நிலைகளுடன் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மரத்தால் ஆன ஆழித்தேரை, நாத்திகரான இவர் 1969ல் முதல்வரானவுடன் திருச்சி Bhel நிறுவனத்தின் உதவியுடன் செப்பனிட்டு, இரும்பு அச்சுகள், சக்கரங்கள் & Hydraulic Brake System எல்லாம் கொண்டதாக நவீனமயப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு ஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தார்.*

*இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் அவர் மறைவுக்கு பின்னரும் ஏன் தொடர்ந்து இந்து மத விரோதி என்று தூற்றுகிறது?* 

*அதற்கு காரணம்  கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள் தான்.* 

*தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,*

*1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்*
*2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்*
*3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்* 
 
*பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சர்கர் பணி, இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு  குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அவர் மீதான வன்மமாக வளர்ந்து அவர் மறைவுக்கு பின்னரும் அவரை தூற்ற காரணமாகிவிட்டது.*

*கலைஞரின் வார்த்தைகளே தான் அவர்களுக்கான பதில்*

*கடவுளை கலைஞர் ஏற்கிறாரா இல்லையா என்பதல்ல கேள்வி.*
*கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் கலைஞரை ஏற்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி.*
*அந்த கேள்விக்கான பதில் தான் அவர் செய்துள்ள, மேலே பட்டியிலடப்பட்டுள்ள பணிகள்*

1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் 
2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் 
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் 
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் 
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் 
7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் 
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் 
9. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர் 
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர் 
11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர் 
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் 
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர் 
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர் 
15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர் 
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர் 
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர் 
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர் 
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் 
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
23. கோவில்களில் குழந்தைகளுக்கான " கருணை இல்லம் " தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர் 
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர் 
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர் 
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர் 
28. SIDCO உருவாக்கியது கலைஞர் 
29. SIPCOT உருவாக்கியது கலைஞர் 
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர் 
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் 
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர் 
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர் 
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர் 
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபட்டோரில் இணைத்தது கலைஞர் 
36. மிகவும் பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர் 
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் 
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர் 
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர் 
44. பெண்ணுக்கு சொத்தில்  சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் 
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர் 
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர் 
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் 
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர் 
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர் 
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் 
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர் 
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர் 
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர் 
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு 
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர் 
61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர் 
62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர் 
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர் 
64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர் 
65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர் 
66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர் 
67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு 
68. சமத்துவபுரம் தந்தது கலைஞர் 
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர் 
70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர் 
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர் 
73. உருது அக்காடமி தந்தது கலைஞர் 
74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர் 
75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர் 
76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர் 
77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர் 
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தது கலைஞர் 
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர் 
80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
81. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர் 
82. ஆசியாவிலே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்தது கலைஞர் 
83. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
84. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
85. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர் 
86. 20 அணைகள் கட்டியது கலைஞர் 
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர் 
88. 9 மாவட்டங்களில் புதிய மாவத்டாட்சியர் அலுவலகம் கட்டியவர் கலைஞர் 
89. மதுரை நீதிமன்றம் கட்டியது கலைஞர் 
90. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர் 
91. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர் 
92. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர் 
93. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர் 
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர் 
95. 13000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர் 
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர் 
97. சென்னையில் 9 மேம்பாலங்கள் தந்தது கலைஞர் ச
98. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர் 
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர் 
*100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்* 
*101. வேலூர், தூத்துகுடி, கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்தது கலைஞர்*
*102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்* 
*103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்னை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்*
*104. 10 சமையல் பொருட்க்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர்* 
*105. விவசாய கடன் 7000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்*
*106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர்* 
*107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1050 ஆக உயர்த்தியது கலைஞர்*
*108. வகைபபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1100 ஆக உயர்த்தியது கலைஞர்* 
*109. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர்* 
*110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2000 ஆக உயர்த்தியது கலைஞர்*
*111. மாவட்டத்திற்க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்* 
*112. ரூ 189 கோடி செலவில் காவிரி - குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்* 
*113. ரூ 369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்*
*114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்* 
*115. பொது நுழைவு தேர்வு ரத்து செய்தது கலைஞர்* 
*116. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்* 
*117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனராமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தது கலைஞர்*
*118. அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர்* 
*119. 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்*
*120. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான " நலமான தமிழகம் திட்டம் " தந்தது கலைஞர்* 
*121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர்*
*122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தது கலைஞர்.*
*123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்* 
*124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர்*
*125. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர்*
*126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்* 
*127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகள் தந்தது கலைஞர்* 
*128. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்*
*129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்*
*130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி " அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர்*
*131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர்* 
*132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்*
*133. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்* 
*134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தது கலைஞர்* 
*135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்தது கலைஞர்*
*136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்* 
*137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்* 
*138. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்* 
*139. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்* 
*140. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர்* 
*141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்* 
*142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர்* 
*143. 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்* 
*144. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்* 
*145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில் உருவாக்கியது கலைஞர்* 
*146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்*
*147. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்*
*148. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்* 
*149) முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.*
*150) இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்..*
*151) இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.*
*152) பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.*
*153) மாவட்ட தலை நகரங்களில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்*
*154) மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி வழங்கியவர் கலைஞர்.*

*சேப்பாக்கம் அன்புகுமார் மு.துணை செயலாளர் 115.வது வட்டம்*

Sunday 10 October 2021

‘துக்ளக்' வெளியிட்ட கார்ட்டூன்களுக்கு துளைத்திடும் வினாக் குண்டுகள்!

 


‘துக்ளக்', 1.9.2021, அட்டைப்படம்

கடவுளைப் பரப்புகிற அர்ச்சகன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் கூறுவது இருக்கட்டும். சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் போடப்பட்ட கமிஷன் (1960-1962) என்ன சொல்லுகிறது?

"அனேகமாக இந்தக் கோயில் பண்டாரங்கள் (அர்ச்சகர்கள்) தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் பெற முடியுமோ, அவ்வளவுப் பணம் பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே வேலை" என்று சர்.சி.பி.ராமசாமி அய்யர் கமிஷன் சொல்லுகிறது.

அத்தோடு அய்யர் கமிஷன் நின்றுவிடவில்லை.

தஞ்சாவூர்  பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 60 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் சொந்தமாக இருந்தது. இதுபற்றி அய்யர் கமிஷன் கூறுகிறது கேளுங்கள்! கேளுங்கள்!!

40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போனதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுவது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் அல்ல. சாட்சாத் சர் சி.பி.ராமசாமி அய்யர் கமிஷன்தான்.

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் ‘துக்ளக்' கார்ட்டூன் கடவுளைப் பரப்புகிற அர்ச்சகன் அயோக்கி யன் என்று கூறுகிறதோ!

வெகு காலத்திற்கு முன்கூடப் போக வேண்டாம்.

சிதம்பரம் நடராஜன் கோயில் தி.மு.க. ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வரப்பட்ட தல்லவா? அது பற்றிய வழக்கில் தில்லை நடராஜர் கோயில் தீட்சதர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த கணக்கு என்ன?

ஆண்டு வருமானம் - ரூ. 37,199 (என்ன, பேட்டா விலை போல் இருக்கிறதா?)

செலவு - ரூ. 37,000

மிச்சம் - ரூ. 199

இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தபோது அதே சாட்சாத் நடராஜன் கோயில் வருமானம் என்ன?

15 மாதங்களில் வந்த தொகை ரூ. 25,12,485.

இப்பொழுது புரிகிறதா சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்அர்ச்சகர்கள், பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை கோடி கோடி என்று. ஒருக்கால் இதை நினைத்துதான் கடவுளைப் பரப்புகிற அர்ச்சகன் அயோக்கியன் என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் ‘துக்ளக்‘கில் கார்ட்டூனைப் போட்டு இருப்பாரோ!

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு மன்னன் கிருஷ்ணதேவராயன் கொடுத்த வைரங்கள், நகைகள் காணோம் காணோம் என்ற குற்றச்சாட்டு உயர்நீதி மன்றம் வரை சிரிப்பாய் சிரித்ததே!

சினிமா நடிகர் சிரஞ்சீவி தமது பிரஜாராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர்களுடன் நடந்து சென்று திருப்பதி கோவிந்தா கடவுளைக் ‘கோவிந்தா' ஆகாமல் காப்பாற் றுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லையா?

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திராவின் முதல்வராக இருந்தவருமான சந்திரபாபு நாயுடுகாரும் களத்தில் குதிக்கவில்லையா?

திருப்பதி கோயில் ஊழல் பற்றி சி.பி.அய். விசாரணை தேவை என்று குரல் கொடுக்கவில்லையா?

"மன்னர் கிருஷ்ணதேவராயர் வழங்கிய நகைகள் திடீரென மாயமாகிவிட்டன. விஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதன் மீது விசாரணை நடத்தி, ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டில்லியில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறிடவில்லையா?

திருப்பதி கோயில் நகைப் பாதுகாப்புப் பிரிவில் முக்கிய பணியில் இருந்த சேஷாத்திரி என்ற பார்ப் பனருக்கு டாலர் சேஷாத்திரி என்றே பெயர். ஏன் தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் உருவம் பொறித்த டாலர் விற்பனையிலேயே மோசடி! அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விசாரணை அதிகாரி ரமணகுமார் தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்தும், டாலர் சேஷாத்திரி மீது ஒரு துரும்புக் கூடப் படவில்லையே!

இதுபோன்றவற்றால் தான் ‘துக்ளக்' கார்ட்டூனில் அர்ச்சகர்கள் என்றால் அயோக்கியர்கள் என்று கல்வெட்டுச் சாசனமாகப் பொறிக்கப்பட்டுள்ளதோ!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமையை எதிர்க்கும், ஒழிக்கும் நடவடிக்கையே!

பொது இடங்களில் இருந்த தீண்டாமை ஒழிக்கப்பட்டு கோயில் கருவறைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கி இருக்கிறது. அந்தப் பாம்பை அடித்து விரட்ட வேண்டும் என்பதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது!

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் அது! அந்தக் களத்திலேயே தான் தனது இறுதி மூச்சையும் துறந்தார்.

அதனைத்தான் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்துவிட்டோமே என்று குறிப்பிட்டார்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற நூறாவது நாளில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற அடிப்படையில் பயிற்சி பெற்ற 58 பேர்களுக்குப் பணி நிய மனத்துக்கு ஆணையினை வழங்கினார் (14.8.2021).

இதனைக் கேலி செய்யும் வகையில் தான் ‘துக்ளக்' கார்ட்டூன் போடுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

"ஏய், நீங்கள் எல்லாம் சூத்திர பஞ்சம பசங்க தான் - உங்களுக்கு எல்லாம் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால் விபசாரி மக்கள் தான் - எங்கள் ஹிந்து சாஸ்திரப்படி.

அதை உங்களால் மாற்ற முடியாது - முடியவே முடியாது - நீங்கள் அர்ச்சகராகி விடுவீர்களா? பார்த்து விடுவோம்" என்று பூணூலை உருவிவிட்டு ஆவேசம் காட்டினாலும் அந்த வருணாச்சிரம ஆணவத்தின் நச்சுப் பல்லைப் பிடுங்கிட எண்ணற்ற இளைஞர்கள் கிளர்ந்தெழுவர் - எச்சரிக்கை!

எங்களால் கார்ட்டூன் போட முடியாதா?

கோயிலுக்கு வாங்கோ... வாங்கோ... சரச லீலை ஆடலாம் வாங்கோ... வாங்கோ.... எங்களாத்து தேவநாதன்களின் காமலீலா வினோதங்கள் ஜோர்! ஜோர்!! என்று கார்ட்டூன் போட முடியாதா?

நாங்களாகக் கற்பனை செய்து கூடப் போட வேண்டாம். திருவாளர் சோ.ராமசாமி அய்யர்வாளே போட்ட கார்ட்டூன்தான் இருக்கவே இருக்கிறதே! கார்ட்டூன்களை ஒட்டிப் போடப்பட்ட வாசகங்களும் இருக்கின்றனவே. (‘துக்ளக்', 1.6.1981, பக். 32)

"வாங்கோ! வாங்கோ!! கோயிலுக்கு வாங்கோ! ‘சைட்‘ அடிக்கலாம் வாங்கோ! வாங்கோ!!" என்று உங்க வார்த்தையைக் கொண்டே சுளுக்கு எடுக்க முடியாதா எங்களால்?

எழுதுங்கள்! எழுதுங்கள்!! கார்ட்டூன் போடுங்கள்! போடுங்கள்!! எங்கள் இனத்து இளைஞர்களுக்கு நல்லா வேலை  கொடுங்கோ! எங்கள் தலைமுறையையும் தாண்டி பார்ப்பன எதிர்ப்பு என்ற நெருப்பு சுடர் விட்டு எரிய வேண்டாமா? நன்னா எழுதுங்கோ! எழுதுங்கோ!!

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூகநீதி நாளாக" கடைப்பிடிக்க - உறுதிமொழி மேற்கொள்ள - தமிழக அரசு ஆணை வெளியீடு

  "சமூகநீதி நாளாக" கடைப்பிடிக்க - உறுதிமொழி மேற்கொள்ள - தமிழக அரசு ஆணை வெளியீடு

Friday 8 October 2021

சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடும் பச்சையப்பன் கல்லூரியும்

 ஒற்றைப் பத்தி - பச்சையப்பன் கல்லூரி


1927 அக்டோபர் 22, 23 நாட்களில் சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடு வரலாற்றில் நிலைத்து நிற்கும் சிறப்புக்குரியதாகும்.


அந்த மாநாட்டில் பல்வேறு புகழ் பூத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று, சுரேந்திரநாத் ஆர்யா அவர்களால் முன்மொழியப் பட்டு, சந்திரா ரெட்டியால் (சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்காலத்தில் தலைமை நீதி பதியாக இருந்தவர்) வழிமொழி யப்பட்ட தீர்மானம் வருமாறு:


‘‘பச்சையப்பன் கல்லூரியி லும், அவர்களின் அறக்கட் டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதி திராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்க சேர்க் கப்பட வேண்டியதன் அவசியத் தைக் கல்லூரியின் அறங்காவ லர்களுக்கு இம்மாநாடு வலி யுறுத்திக் கூறுகிறது. இவ்வாறு அவர்கள் சேர்க்காமல் ஒதுக் குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்ப


தாகும்.


சகோதரர்களான ஆதிதிரா விடர், முஸ்லிம்கள், கிறித்தவர் கள் அவர்களின் ரத்தத்தில் பிறந்த பெரும் வள்ளலான பச் சையப்பர் தாராள மனம் கொண்டு நிறுவிய பள்ளி, கல் லூரிகளில் சேர்ப்பதற்கு விதிக் கப்பட்டிருந்த தடையை எவ் வாறு அவர்களால்  பொறுத்துக் கொள்ள முடியும்? இதைவிட அவமானமும், அநீதியும் வேறு எதுவும் இருக்க முடியாது.


ஒரு கிறித்துவரை கல்லூரி முதல்வராக வைத்துக்கொள் வார்கள். ஆனால், அதே கல் லூரியில் ஒரு கிறித்துவ மாண வனைக் கல்வி பயில அனு மதிக்க மாட்டார்கள். மனிதர் களின் ஜாதி, இனம், பிரிவு, நிறம் பற்றி தங்களுக்கு நம்பிக்கை நம்பிக்கை இல்லை என்பதை பார்ப்பனர் அல்லாத சமூக மக்கள் ஒரே குரலில் உரக்கப் பிரகடனப்படுத்த வேண்டும்'' என்று அத்தீர்மானம் கூறுகிறது.


இந்தத் தீர்மானம்பற்றி கருத் துக் கூறப்படுகையில் பச்சை யப்பன் அறக்கட்டளையின் பத் திரத்தில் சில நிபந்தனைகளும், வரையறைகளும் இருப்பதால் அவைகளைப் பின்பற்றவேண் டிய கட்டாயம் அறங்காவலர் களுக்கு உள்ளது. அந்த அறக் கட்டளையின் நிதி இந்துக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இதில் இந்துக்கள் யார், இந்துக்கள் அல் லாதார் யார்? என்று எப்படிக் கூற முடியும்? என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.


‘‘இந்தக் கோரிக்கையை, அறக்கட்டளை ஏற்று செயல் படத் தவறினால் அக்கல்வி நிறு வனங்களுக்கு அளிக்கும் மானி யத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மாநாடு கேட் டுக் கொள்கிறது'' என்று தீர்மா னத்தில் மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


இதனைத் தொடர்ந்து ஆர்.வி.சொக்கலிங்கம் மற் றொரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.


‘‘ஆதிதிராவிடர், கிறித்தவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மானியங்களையும், அளிக் காமல் நிறுத்தி வைக்கவேண்டும்'' என்பதுதான் அத்தீர்மானம்.


எத்தனை எத்தனைத் தடைக் கற்களைக் கடந்து வந் துள்ளோம் - திராவிடர் இயக்கம் எப்படியெல்லாம் குரல் கொடுத் திருக்கிறது, செயல்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத் துக்காட்டே! மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்துக்களாகக் கணக்கிடப்பட்ட ஆதிதிராவிடர் கள், இந்து என்று பச்சையப்பர் குறிப்பிட்டுள்ளதில் மட்டும் சேரமாட்டார்கள் என்ற நிலை எத்தகைய பார்ப்பனீய சித்தாந்த மனப்போக்கு? சிந்திப்பீர்!


 - மயிலாடன்

பச்சையப்பன் கல்லூரியும் சிந்தா தரிப்பேட்டை விடுதலை அலுவலகமும்

 ஒற்றைப் பத்தி : பச்சையப்பன் கல்லூரி

ஈரோட்டிலிருந்து ‘விடுதலை' அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டது 1940 இல்! சென்னை சிந்தா தரிப்பேட்டை, 2, பால கிருஷ்ண பிள்ளைத் தெரு வில் உள்ள கட்டடத்தில் இயங்கத் தொடங்கியது.


ஈரோட்டிலிருந்து அச்ச கத்திற்குத் தேவையான இயந் திரங்கள் உள்படப் பல பொருள்கள் வந்து சேர வேண்டிய இடைக்காலத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று கருதிய தந்தை பெரியார் அவர்கள், ‘‘சீர் திருத்த தொண்டர் மாநாட்டை'' சென்னை சிந் தாதரிப்பேட்டை அந்தக் கட்டடத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.


‘விடுதலை' குடியேற விருந்த அந்த இடத்திற்கு ‘‘ஜஸ்டிஸ் மகால்'' என்று பெயர் சூட்டினார். சுமார் 2000  பேர் கலந்துகொண்ட மாநாடு அது (23.12.1940).


அம்மாநாட்டில் 17 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் ஒன்று முக்கிய மாகக் கவனிக்கத்தக்கதாகும்.


‘‘சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வடமொழியில் கடவுள் வணக்க வாழ்த்துச் சொல்லுவதை நீக்கவேண்டும் என்று இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது'' என்பதுதான் அந்தத் தீர்மானம்.


‘‘பச்சையப்பன் கல்லூரி யின் படிக்கட்டும் தமிழ்ப்   பேசும் - பாடும்'' என்று பிற் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு கல்லூரி, ஒரு காலகட்டத் தில் எந்த நிலையில் இருந் தது?


கடவுள் வாழ்த்து- தமி ழில் இல்லை என்பதும்; அதேநேரத்தில், சமஸ்கிருதத் தில் இருந்தது என்பதும் இன் றைய இளைய தலைமுறை யினர் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவலாகும்.


பார்ப்பனரல்லாத பச்சை யப்பரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில்கூட, ஆரியம் தன் ‘ஆக்டோபஸ் வேலை'யை எப்படி காட்டி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ‘ஹிந்து'வான பச்சை யப்பர் அறக்கட்டளை நடத் தும் அந்தப் பச்சையப்பன் கல்லூரியில், தாழ்த்தப்பட் டோர் ‘ஹிந்து' இல்லை என்று கூறி, அம்மாணவர்களைச் சேர்க்காமல் தடை செய்தி ருந்த சூழ்ச்சியையும் புரிந்து கொள்ளவேண்டும். அதன் பின்னால் இருந்தது பார்ப்ப னியம் என்பது விளங்க வில்லையா?


இந்த இடத்தில் இன் னொன்றையும் இணைத்துப் பார்ப்பது அவசியம். சென் னையில் 24.1.2018 அன்று பி.ஜே.பி.யின் தேசிய செய லாளர் திரு.எச்.ராஜாவின் தந் தையார் ஹரிஹர சர்மா என் பவர் எழுதிய நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.


அவ்விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி மட் டும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வில்லை என்பதையும் நினைவு கூர்க! 1940 ஆனா லும், 2018 ஆனாலும் பார்ப் பனர்கள், பார்ப்பனர்கள்தான் - அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.


- மயிலாடன்


குறிப்பு: சென்னையில் நடைபெற்ற ‘‘சீர்திருத்த தொண் டர் மாநாட்டுத்'' தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் நேற்று நமக்குத் தெரிவித்தார்.

3.30 லட்சம் சிறார்களுக்கு பாலியல் கொடுமை; பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டு

 

பாரிஸ்அக். 7- கடந்த 70 ஆண்டுகளில் பிரான்சின் கத்தோலிக்க சர்ச்களில், 3.30 லட்சம் சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது.

அய்ரோப்பாவைச் சேர்ந்த பிரான்சு நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பெர்னார்டு பிரேநட் என்ற கத்தோலிக்க பாதிரி யார்சிறார் பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்விசாரணையில் 75 சிறார் களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப் புக் கொண்டார்அவ ருக்கு அய்ந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் உள்ள கத்தோலிக்க ஆல யங்களில், 1950ஆம் ஆண்டு முதல் 2020 வரை சிறாருக்கு நடந்த பாலி யல் கொடுமைகள் குறித்துஜீன் - மார்க் சாவி என்பவர் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியதுஇந்த ஆணை யம், 2,500 பக்கங்கள் உள்ள விசாரணை அறிக்கையை கத்தோலிக்க தலைமை ஆலயத்துக்கு அனுப்பி உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவதுஇரண்டரை ஆண்டுகள் நடந்த இந்த விசாரணை யில் சிறார் மீதான பாலி யல் கொடுமைகள்குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளவற்றை மட்டுமே ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுஇது தொடர்பாக 70 ஆண்டுகளில் கத்தோ லிக்க சர்ச்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 500 பாதிரி யார்கள் உள்ளிட்டோர் குறித்து ஆணையம் ஆய்வு செய்ததுஅதில், 3,000 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களில் மூன்றில் இரு பங்கினர் பாதிரி யார்கள்இந்த வகையில் 3.30 லட்சம் சிறார்கள்பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்இவற்றில் 40 பாலியல் குற்றங்கள் நடந்து மிக நீண்ட காலமாகி விட்டது. 22 குற்றங்களில் சம்பந்தப் பட்டவர்களும்பாதிக்கப் பட்டோரும் உயிருடன் உள்ளதால் வழக்கு தொடுக்க பரிந்து ரைக்கப் பட்டுள்ளது.

ஆலயங்களில்சிறார் மீதான பாலியல் கொடு மைகளை தடுப்பது தொடர் பாக 45 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளனஅவற்றை செயல்படுத் தினால் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'கடவுள்' பெயரில் அறக்கட்டளை, தனி நபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


சென்னை,அக்.7- 'கடவுள் பெயரில்தனியார் அறக் கட்டளைதனி நபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாதுஎனசென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு டன் அறிவு றுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்தவெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட் டம்திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில்வைகாசி மாத பிரம்மோற்சவ விழாஇரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. 'எதிர்கா லங்களில் உற்சவங்களை நடத்தஜீயர்கள்உள்ளூர் காரர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண் டும்எனகூறியிருந்தார்.

இம்மனுநீதிபதிகள் ஆர்.மகாதேவன்ஆதிகேச வலு அடங்கிய சிறப்பு அமர்வில், 6.10.2021 அன்று விசாரணைக்கு வந்ததுதமிழ்நாடு அரசு தரப்பில்சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்நவ., 10 முதல், 19ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 'கரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப் படவில்லைஇதில்கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லைநிகழ்ச்சிக்காகபல சபாக் கள் சார்பில்பணம் வசூ லிக்கப்படுகிறதுஎன தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 'கடவுள் பெயரில்தனி நபர்கள்தனியார் அறக்கட்டளைகள் நன் கொடை வசூலிக்கக் கூடாதுஎனநீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித் தனர்உடனேதொலை வில் இருந்து வரும் பக் தர்களுக்கு அன்னதானம் வழங்கநன்கொடை வசூலிப்பதாகமனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட் டதுஅதற்கு நீதிபதிகள், 'பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம்சட்ட விரோத அம்சங்கள் ஏதே னும் சுட்டிக் காட்டப்பட் டால்நீதிமன்றம் தலை யிடும்என தெரிவித்தனர்.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்: அவமானம் கொள்கிறேன் - போப் பிரான்சிஸ்

 

போப் பிரான்சிஸ்

பாரீஸ்அக்.8 பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கு அவமானப்படுவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜீன் மார்க் சாவ் தலைமையில் இரண்டு ஆண்டுகளாகத் தனியார் விசாரணைக் குழு நடத்திய ஆய்வு முடிவில்ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில்உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டதுபிரான்சில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாகஇந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகின்றன.

பிரான்சில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும்பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுஇந்த நிலையில் இது தொடர்பாக போப் பிரான்சிஸ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவதுபாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆலயத்தின் இயலாமைக்காகவும்பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் ஆலயங்கள் நிற்காததற்கும்நீண்டகாலமாகபாதிக்கப்பட்டவர்களைக் கவலையில் வைத்திருந்ததற்காகவும் நான் அவமானம் கொள்கிறேன்இது அவமானத்துக்கான தருணம் என்று தெரிவித்துள்ளார்.