Monday 4 October 2021

அய்யங்கார் வீட்டுத் திண்ணையில் உட்காரவைக்கப்பட்ட காந்தியார் !



" சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொல்வது
1925 ஆம் ஆண்டுக்கு முன்பாகும். அப்போதெல்லாம்
எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்த்தான்
காந்தியார் உட்காரவைக்கப்பட்டார். "

1927 இல் ஏற்பட்ட மாற்றம் !

மகாத்மா சொல்கிறார் :
பிராமணரல்லாதாரே இந்த
இயக்கத்தைப்(நீதிக்கட்சி) பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள்.பிராமணர் ,
பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள்
இருந்தாலும் சிறிது காலத்தில்
அவை மறைந்துவிடும் என்று
டாக்டர் வரதராஜுலு நாயுடு
கூறுகிறார்.என்னைப் போன்றவர்கள் இதில் தலையிடவேண்டாம் என்றும்
கேட்டுக்கொண்டார்.ஆனால்
ஈரோட்டுராமசாமி நாயக்கர்
தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப்
போன்றவர்களே இதில் அவசியம் தலையிட்டு , மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்றும்
கூறுகிறார். இப்பொழுது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள்
பரவி வருவதைக் காண்கிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது
எஸ்.சீனிவாச ஐயங்கார் வீட்டின் தாழ்வாரத்தில் உட்கார்ந்து இருந்தேன். இப்போது(1927) அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன்.என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை
வரை செல்கிறாள்.

சான்று: "தமிழ் நாட்டில் காந்தி"
                    பக்கம்  520 - 521.

1925 க்கும் 1927 க்கும் இடைப்பட்ட காலத்தில் காந்தியாரின் வருணம் மாறியதா ?
மனு தர்மம் மாறியதா ?

1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமே
இம்மாற்றத்திற்குக் காரணம்
என்பதைத் தோழர்கள் 
உணரவேண்டும் !

No comments:

Post a Comment