சென்னை,அக்.7- 'கடவுள் பெயரில், தனியார் அறக் கட்டளை, தனி நபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு டன் அறிவு றுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த, வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட் டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. 'எதிர்கா லங்களில் உற்சவங்களை நடத்த, ஜீயர்கள், உள்ளூர் காரர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண் டும்' என, கூறியிருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேச வலு அடங்கிய சிறப்பு அமர்வில், 6.10.2021 அன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நவ., 10 முதல், 19ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 'கரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப் படவில்லை; இதில், கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லை; நிகழ்ச்சிக்காக, பல சபாக் கள் சார்பில், பணம் வசூ லிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'கடவுள் பெயரில், தனி நபர்கள், தனியார் அறக்கட்டளைகள் நன் கொடை வசூலிக்கக் கூடாது' என, நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித் தனர். உடனே, தொலை வில் இருந்து வரும் பக் தர்களுக்கு அன்னதானம் வழங்க, நன்கொடை வசூலிப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. அதற்கு நீதிபதிகள், 'பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம். சட்ட விரோத அம்சங்கள் ஏதே னும் சுட்டிக் காட்டப்பட் டால், நீதிமன்றம் தலை யிடும்' என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment