Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

Thursday, 6 August 2026

சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி


சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! 

- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி


இலங்கை நாட்டில் நுவரெலியா என்ற இடத்தில் ‘சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவிலை 1982 ல் ரூ.10 இலட்சம் செலவில் பெரிய அளவில் எடுத்துக் கட்ட தமிழ் அமைச்சர் (அப்போதைய) இராஜதுரை அவர்கள் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதுவரை அத்திட்டம் நிறைவேறாமல் இருந்தது. 

ஆனால், தற்போது இலங்கை அரசு, வெளிநாட்டு பயணிகளை கவர சீதை அம்மன் கோயிலை புதுப்பித்து பெரிய அளவில் கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கேட்டவுடன் இரண்டு பக்கமிருந்தும் வலிமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒரு பக்கம் புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள்; 'இந்து மத, கோயிலை பெரிய அளவில் விளம்பரப் படுத்த கூடாது' என்றும்; மறுபக்கம் இலங்கை நாட்டின் தொல்குடி மக்களான தமிழர்கள்; இராவணனை இணையற்ற வீரனாக கருதுவதால், 'இராவணனின் எதிரி யான 'இராமன்' சம்பந்தப்பட்ட கோயிலை பெருமைப் படுத்த கூடாது’ என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கோயிலைப் பற்றி அலசுவோம்!'குட்டித்தீவை எட்டிப்பார்த்தேன்' என்ற நூலில் இருந்து) 

“நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி இறங்கு முகமாக செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தில் 'சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் இக்கோயில் உள்ளது.

இது, தம் ஊர் கிராமக் கோயில்கள் போல் சிறிய கோயில், அது சமீபத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். பார்த்தால் மூன்று மலைகள் தெரிகின்றன. நடுவில் இருக்கும் மலை நல்ல உயரம்: இரு புறமும் சிறிய மலைகள்.

அந்த உயரமான மலையில் தான் இராவணன் சீதையை சிறை வைத்து இருந்தான் என்று சொல்லப்படுகிறது.

அந்த மாலைக்கு ‘சீதா எலியா’ என்று பெயர். சிங்கள மொழியில் ‘எலியா’ என்றால் மலை, சீதை சிறையில் இருந்த மலை என்பதால் ‘சீதா எலியா' என்று பெயர் ஏற்பட்டது.

சீதையை அசோகவனத்தில் சிறை வைத்ததாக நாம் படித்து இருக்கிறோம். ஆனால்; இந்த மலையில் அசோக மரமே கிடையாது. வேறு மரங்களும் இல்லை. ஆட்கள் செல்ல வசதியும் இல்லை” 


                                     அசோக மரம்

மேற்கண்ட செய்திகள் 'இராணி' வார ஏட்டின் ஆசிரியர் குரும்பூர் குப்புசாமி (அ.மா.சாமி) அவர்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து 'குட்டித் தீவை எட்டிப்பார்த்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 

ஆட்கள் செல்ல வசதி இல்லாத, மரங்களே இல்லாத ஒரு மலையைக் காட்டி ‘இங்குதான் சீதை'யை சிறை வைத்தனர்; என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்! குரும்பூர் குப்புசாமி அவர்களுக்கு மனசாட்சி உறுத்தியதால் உண்மையை எழுதியுள்ளார். 

இராமாயணத்தில் அரண்மனையை ஒட்டியுள்ள அசோகவனத்தில் சீதையை சிறை வைத்ததாகத்தான் உள்ளது. ஆனால் இலங்கையில் ஒரு மொட்டையான மலையைக் காட்டி: இதுதான் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் என்கிறார்கள் என்பதிலிருந்து; இராமாயண கதையை உண்மை என்று காட்ட, தற்காலத்தில் இட்டுக் கட்டப்பட்ட இடமே  நுவரெலியாவும்  ‘சீதை அம்மன்' கோயிலும் ஆகும் என்பதை அறிய முடிகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் V , 18.4.1999



Friday, 31 July 2026

இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு! -செ.ர.பார்த்தசாரதி

 இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!

- செ.ர.பார்த்தசாரதி



"இலக்குவன் சீதையிருந்த குடில் வாயிலின் வெளியே ஒரு கோடு போட்டு விட்டு 'இதை நீ தாண்டி வர வேண்டாம், வந்தால் ஆபத்து நேரலாம்' என்று சீதை இடம் கூறிவிட்டுச் சென்றதாகவும், இதை மதியாமல் இராவணனுக்கு கோட்டை தாண்டி வந்து பிச்சையிட்டதால் அவன் சீதையை தரையுடன் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டான்" என்று கம்பராமாயணத்தில் இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர்.

உவமைக் கவிஞர் சுரதா கூட தமது ‘சுரதா' இதழிலே ஒரு முறை கிண்டலாக "சாலை நடுவில் போடப்படும் மஞ்சள் கோட்டை (ட்ராஃபிக் கோடு) முதலில் போட்டவர் இலக்குவன் தான்' என்று எழுதியிருந்தார்.

ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கம்பராமாயணத்தில் இலக்குவன் கோடு போட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ‘சடாயு காக்கும்' என்று சொன்னதாகத் தான் பாடல்-19-ல் இருக்கிறது.

சீதை இராவணனை இலை குடிலுக்குள், இருக்கையில் உட்காரவைத்து உபசரித்ததாகவும், பிறகுதான் இராவணன் இலை குடிலை தரையுடன் பெயர்த் தெடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்.

இராவணன் இலை குடிலுக்குள் உட்கார்ந்ததாக கூறும் பாடல் வருமாறு:

"ஏத்தினளெய்தலு மிருத்திரீண் டென்

வேத்திரத் தாசனம் விதியினல் கினாள் மாத்திரிதண்டயல் வைத் தவஞ்சனும் பூத்தொடர் சாலையினிருந்த போழ்தினே.


(ஜடாயுவுயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம் பாடல்-34)

கம்பராமாயண வசனம் (எழுதியவர் சு. அ. இராமசாமிப் புலவர்) என்ற நூல் கூட கோடு போட்டதாகக் கூறவில்லை. குடிலுக்குள் அமரவைத்து பேசியதாக தான் கூறுகிறது.

வால்மீகி இராமாயணத்தில் கூட ‘இராவணனை குடிலில் அமரவைத்து உபசரித்த தாகத்தான்' உள்ளது. (ஆதாரம்: காவ்ய ராமாயணம், கே. எஸ். சீனிவாசன் மொழிபெயர்ப்பு, வசனம்-2) ஜடாயுவுயிர் நீத்த படலம்

துளசி இராமாயணமும் இதையேதான் கூறுகிறது. (ஆதாரம்:- திரிவேணி இராமாயணம் ஜகந்நாராயணன்)

சீதையைக் காப்பாற்றுவதில் போட்டி!

ஆனால் இல்லாத ஒன்றை, போடாத கோட்டை பற்றி துணிந்து பொய் சொல்லி, எல்லோரையும் நம்பும்படி செய்துவிட்டி ருக்கிறார்களே! இதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே!' இப்படிப்பட்ட மக்களிடம் நடக்காத இராமாயணத்தை எழுதி, நடந்ததாக பொய் சொல்லி, அதை நம்ப வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமே கிடையாது.

- உண்மை இதழ், 01.11.1986

- விடுதலை நாளேடு, பக்கம்-7



Wednesday, 18 March 2026

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு, பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது 'இருக் வேதத்தில் (இருக வேதம் (57) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள். மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும் முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம் 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு தொகுப்பு | பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு. இந்திய வரலாறு-பக்கம் 118). ("விடுதலை" அசுரன் மலர் 2006, பக்கம் 16] உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு. அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது.
அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம் என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம், வால்மீகியும் கம்பரும், பக்கம் 15)

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் 'இரகு வம்சம்' என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது.

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும். வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ர.பார்த்தசாரதி, சென்னை

விடுதலை நாளேடு 18.8.2012

Saturday, 10 May 2025

வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி

புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட ‘வால்மீகி இராமாயணம்’ தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது.

நம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நிலப்பரப்பு, சுற்றிலும் கடல் சூழ்ந்து உள்ளது. இந்தப் பகுதியில் ‘இராமநாதசுவாமி கோயில்’ என்று ஒன்று பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கட்டடக்கலையை வைத்து கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்த இராவணனை இராமன் கொன்றுவிட்டு, ‘புஷ்பக விமானம்’ மூலம் அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இறங்கி, இராவணனை கொன்ற ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்குவதற்காக, இராமன் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ததாகவும்; அதுவே பிறகு இராமநாதசுவாமி கோயில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


‘பிரம்மஹத்தி தோஷம்’ என்றால் என்ன?

பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் பிரம்மாவின் தலை பகுதியில் இருந்து தோன்றியவர்களாம்!

மற்றவர்கள் பிரம்மாவின் மற்ற பகுதிகளில் இருந்து தோன்றியவர்களாம்!

பார்ப்பனர்கள் மட்டுமே அனைத்து உரிமைகளும், தகுதியும் பெற்றவர்களாகவும்

மற்றவர்கள் விலங்குகளை போன்றவர்களாகவும் வேதங்கள் சித்தரிக்கின்றன.

ஆகையால் சூத்திரர்களைக் கொன்றால் எந்த பாவமும் கிடையாது. அதாவது ஒரு உயிரை கொன்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் பார்ப்பானை கொன்றால் உயிரைக் கொன்றதாக ஆகிவிடும். அதனால் கொன்றவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ என்ற பாவம் சூழ்ந்து விடும்.

இந்த பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்களை ‘பிரம்ம ராட்சஷ பிசாசு’ என்ற பிசாசு பின் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வரும். இந்த தோஷம் நீங்க வேண்டுமானால் அதற்கான நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும்.

இந்தப்படி தான் (புராணப்படி) பிராமணனான இராவணனை இராமன் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை உண்டாக்கி அதற்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

பல மதங்கள் தோன்றி பிறகு 6 மதங்களாக நிலைத்தன. (சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், காணாபத்தியம்)

இந்த ஆறு மதங்களும் தங்கள் தங்கள் மதங்களுக்கு ஒருவரை முழுமுதற் கடவுளாக பரிந்துரைக்கின்றன. அதாவது பரப்பிரம்மம்(மகாதேவ்).

இதில் சைவமும் வைணவமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என

இன்று வரை போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

சைவ புராணங்களில் வைணவத்தை இகழ்ந்தும்; வைணவ புராணங்களில் சைவத்தை இகழ்ந்தும் எழுதப்பட்டுள்ளன.

‘சிவன் தான் முழு முதற்கடவுள். இராமனே சிவனை வழங்கினான்’. என பரப்புவதற்காக தான் இந்த இராமேஸ்வர இராமநாதசுவாமி கோயில் கதை ஆகும்.

வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ‘இராமேஸ்வரத்தை பற்றியோ! ‘இராமன் சிவலிங்கத்தை வணங்கினான்’ என்பதை பற்றியோ குறிப்பு கிடையாது.

இராமன் ‘மகேந்திர கிரி’ (மகேந்திர பர்வதம்) மலையின் மேலிருந்து, மலையின் அடிவாரத்தை கடலின் அலைகள் தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததாகவும். பிறகு அடிவாரத்திற்கு வந்து, பாலத்தைக் கட்டி இலங்கை சென்றதாகவும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.

இராமேஸ்வரத்தில் எந்த மலையும் கிடையாது. இராமேஸ்வரத்தில் மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எந்த மலைகளும் கிடையாது. இந்த ‘மகேந்திர கிரி’ என்ற மலை, ஒடிசாவில் உள்ளது.

ஒடிசாவை பற்றி கூறிய கதையை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறுவதே ஒரு பெரிய புரட்டாகும்.

இராவணனை கொன்றுவிட்டு இலங்கையிலிருந்து ‘புஷ்பக விமானம்’ மூலம் ‘அயோத்தி’ திரும்பிய போது, நடந்த நிகழ்வுகளின் இடங்களை சீதைக்கு காட்டிக் கொண்டே வருவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகிறது. இடையில் இராமேஸ்வரத்தில் இறங்குவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படவே இல்லை.

காளிதாசர் இயற்றிய ‘இரகு வம்சம்’ என்ற காவியத்திலும் ‘இலங்கையில் இருந்து அயோத்தி நோக்கி இராமரை சுமந்து கொண்டு புறப்பட்ட புஷ்பக விமானம், இடையில் எங்கும் இறங்காமல் அயோத்தியில் தான் இறங்கியது.’ என்று கூறப்பட்டுள்ளது.

(ரகுவம்ச மஹா காவ்யம்,13ஆவது சர்க்கம்)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்படாத ஒரு நிகழ்வை, ‘மகாவிஷ்ணுவிற்கே ஈஸ்வரன் தான் கடவுள்’ என்று சொல்வதற்காக சைவர்கள், பிற்காலத்தில் சில புராணங்களை இயற்றி அதில் இராமாயணத்தை புகுத்தி சில திருத்தங்களை செய்து விட்டார்கள்.

சிவமகா புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் என்கின்ற சிவனை புகழும் புராணங்களில் இந்த புகுத்தல் வேலை நடைபெற்றுள்ளது.

பத்ம புராணத்தில் ‘பூர்வ கல்ப இராமாயணம்’ என்ற பெயரிலும், பிரம்மாண்ட புராணத்தில் ‘அத்தியாத்ம இராமாயணம்’ என்ற பெயரிலும் இராமாயணங்கள் உள்ளன.

இந்தப் ‘பூர்வ கல்ப இராமாயணத்’தில்

இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இராமன் இறங்கி, இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக, சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.

(பத்ம புராணம், பூர்வ கல்ப இராமாயணம், பக்கம்-424, தாமரை நூலகம் வெளியீடு)

ஆனால் அதே ‘பத்ம புராணத்தில்’

‘மனிதர்கள் மோட்சம் அடைவதற்கான வழிகள்’ என்று விரதங்களையும் யாகங்களையும் பற்றி கூறும் போது, ‘பிராமணனை கொல்ல நேர்ந்ததைப் பற்றி சிறீ ராமபிரான் வருத்தம் அடைதல்’ என்ற தலைப்பில் (பக்கம்-364) ‘இராமன் பிராமணனான இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்க என்ன வழி’ என்று அகத்தியரை கேட்டதாகவும்; அகத்தியர், ‘அஸ்வமேத யாகம் நடத்தினால் பாவம் போகும்’ என்று கூறியதாகவும்; அதன்படி அஸ்வமேத யாகத்தை இராமன் நடத்தியதாகவும்’ உள்ளது.

ஒரு இடத்தில் இராவணனை கொன்ற பாவம் தீர, இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை நிறுவி சிவ வழிபாடு செய்ததாகவும், அதே புராணத்தில் இன்னொரு இடத்தில் ‘அஸ்வமேத யாகம்’ நடத்தி, இராவணனை கொன்ற பாவத்தை போக்கிக் கொண்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்படுகிறது.

‘அத்தியாத்ம இராமாயணத்’தில் இராமேஸ்வரத்தின் கடற்கரையில் சிவலிங்கத்தை வழிபட்டுவிட்டு தான், இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(அத்தியாத்ம இராமாயணம், நான்காவது சர்கம், பக்கம்-467, தாமரை நூலகம் வெளியீடு)

அதேபோல் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் புறப்பட்டு அயோத்தி செல்லும் வழியில் சீதைக்கு, தான் நிறுவிய சிவலிங்கத்தை காட்டிச் சென்றதாக, கூறப்பட்டுள்ளது.

சிவமஹா புராணத்தில், ‘சிறீ ராமர் பெற்ற வரமும் இராமேஸ்வரம் மகிமையும்’ என்ற தலைப்பிலான பகுதியில், தெற்கு கடற்கரை(இராமேஸ்வரம்)யில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, சிவனிடமிருந்து, வலிமையானவனான இராவணனை கொல்ல வரம் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(சிறீ சிவமஹா புராணம், முதற் பாகம், பக்கம் -248, பிரேமா பிரசுரம் வெளியீடு)

கந்தபுராணத்தில் பார்வதி நாதரை பூஜித்து பாசுபதாஸ்திரத்தை வரமாக பெற்றுக்கொண்டு இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.

(சிறீ கந்தபுராணம், இரண்டாம் பாகம், உபதேச காண்டம் பக்கம்- 454, பிரேமா பிரசுரம்)

இராமன் (மகாவிஷ்ணு) கடவுள் அல்ல, சிவன் தான் கடவுள் என்று நிறுவுவதற்காக சைவர்களால் உண்டாக்கப்பட்டது தான். இராமேஸ்வர இராமநாதசாமி கோயில் கதையும், அதற்கு ஆதாரமாக புனையப்பட்டதே பத்ம புராணமும், பிரம்ம புராணமும், சிவமகா புராணமும் ஆகும்.

இது ஒரு புறம் இருக்க பராசக்தியை முழு முதல் கடவுளாக (மகாதேவ்) கூறும் ‘சாக்த மதத்’தின் புராணமான ‘தேவி பாகவதம்’ என்ற புராணத்தில் ‘மகாவிஷ்ணுவே (இராமர்) பராசக்தியை வழங்கினார்’ என்று சொல்வதற்காக இராமர் கிருஷ்கிந்தையில் துக்கப்பட்டு கொண்டிருந்தபோது, நாரதர் பராசக்தியை வணங்கி ‘நவராத்திரி விரதம்’ இருக்க கூறுகிறார். அதன்படி நவராத்திரி விரதம் மேற்கொண்டு, பராசக்தி இடம் இருந்து, போருக்கு உடந்தையாக இருக்க ‘சக்தியம்சத்’தை வரமாக பெற்றதாக’ கூறப்படுகிறது.


Published May 10, 2025, விடுதலை ஞாயிறு மலர்

- எனது கட்டுரை 

Saturday, 25 November 2023

இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!





இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!

செ.ர.பார்த்தசாரதி

"இலக்குவன் சீதையிருந்த குடில் வாயிலின் வெளியே ஒரு கோடு போட்டு விட்டு 'இதை நீ தாண்டி வரவேண்டாம், வந்தால் ஆபத்து நேரலாம்' என்று சீதை இடம் கூறிவிட்டுச் சென்றதாகவும், இதை மதியாமல் இராவணனுக்கு கோட்டை தாண்டிவந்து பிச்சையிட்டதால் அவன் சீதையை தரையுடன் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டான்" என்று கம்பராமாயணத்தில் இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர்.

உவமைக் கவிஞர் சுரதாகூட தமது ‘சுரதா' இதழிலே ஒருமுறை கிண்டலாக "சாலை நடுவில் போடப்படும் மஞ்சள் கோட்டை (ட்ராஃபிக் கோடு) முதலில் போட்டவர் இலக்குவன் தான்'  என்று எழுதியிருந்தார். 

ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கம்பராமாயணத்தில் இலக்குவன் கோடு போட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ‘சடாயு காக்கும்' என்று சொன்னதாகத் தான் பாடல்-19-ல் இருக்கிறது.

சீதை இராவணனை இலை குடிலுக் குள், இருக்கையில் உட்காரவைத்து உபசரித்ததாகவும், பிறகுதான் இராவணன் இலை குடிலை தரையுடன் பெயர்த் தெடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்.

இராவணன் இலை குடிலுக்குள் உட்கார்ந்ததாக கூறும் பாடல் வருமாறு:

"ஏத்தினளெய்தலு மிருத்திரீண் டென்

வேத்திரத் தாசனம் விதியினல் கினாள் மாத்திரிதண்டயல் வைத் தவஞ்சனும் பூத்தொடர் சாலையினிருந்த போழ்தினே.

(ஜடாயுவுயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம் பாடல்-34)

கம்பராமாயண வசனம் (எழுதியவர் சு. அ. இராமசாமி புலவர்) என்ற நூல் கூட கோடு போட்டதாகக் கூறவில்லை. குடிலுக் குள் அமரவைத்து பேசியதாகத்தான் கூறுகிறது.
வால்மீகி இராமாயணத்தில் கூட ‘இராவணனை குடிலில் அமரவைத்து உபசரித்த தாகத்தான்' உள்ளது. (ஆதாரம்: காவ்ய ராமாயணம், கே. எஸ். சீனிவாசன் மொழி பெயர்ப்பு, வசனம்-2) ஜடாயுவுயிர் நீத்த படலம்

துளசி இராமாயணமும் இதையேதான் கூறுகிறது. (ஆதாரம்:- திரிவேணி இராமாயணம் ஜகந்நாராயணன்)

சீதையைக் காப்பாற்றுவதில் போட்டி!

ஆனால் இல்லாத ஒன்றை, போடாத கோட்டைப்பற்றி துணிந்து பொய் சொல்லி, எல்லோரையும் நம்பும்படிச் செய்துவிட்டி ருக்கிறார்களே! இதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே!' இப்படிப்பட்ட மக்களிடம் நடக்காத இராமாயணத்தை  எழுதி நடந்ததாக பொய் சொல்லி அதை நம்ப வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமே கிடையாது.
- உண்மை இதழ், 01.11.1986

Wednesday, 1 November 2023

இராமன் கட்டிய பாலம் எங்கே?


மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- செ.ர.பார்த்தசாரதி, 02.11.2012, முகநூல் பதிவு.(எனது)

Friday, 2 November 2018

இராமன் கட்டிய பாலம் எங்கே?

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- நான் (செ.ர.பார்த்தசாரதி) 2.11.2012ல் முகநூலில் பதிவிட்டது.