Showing posts with label சாகு மகராசர். Show all posts
Showing posts with label சாகு மகராசர். Show all posts

Friday, 14 August 2026

பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கிய சாகு மகராசரின் சமூகநீதிச் சாசனம்

 

பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு கோலாப்பூர் சமஸ்தான அரசிதழ் (கெஜட்) – 26.07.1902

கட்டுரை

கட்டுரை

தற்போது கோலாப்பூர் சமஸ் தானத்தில், அனைத்து வர்ணங் களைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வியை அளிப்பதற்கும், அவர்களைக் கல்வியை நோக்கி ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று அரசு வருந்துகிறது.

இவ் விசயம் குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொது, உயர்கல்வியை முடித்த பின்னரும் போதுமான வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லை என்று அரசு கண்டறிந்துள்ளது.

இதற்கான தீர்வாகவும், சமஸ்தானத் தின் குடிமக்களில் பின்தங்கிய வகுப்புகளைச் (வர்ணங்களைச்) சேர்ந்தவர்கள் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கவும், சமஸ்தானத்தின் வேலைவாய்ப்புகளில் ஒரு கணிசமான பகுதியை இவ்வகுப் பினருக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக, இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியி லிருந்து காலியாகும் அனைத்துப் பணியிடங்களிலும் 50 சதவீத இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப் பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் அவர்கள் ஆணையிடுகிறார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள அனைத்து அலுவலகங்களிலும், இனிமேல் செய்யப்படும் அனைத் துப் பணி நியமனங்களும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆணை வெளியிடப்பட்ட பிறகு, ஒவ்வொரு துறைத் தலைவரும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நியமனங்கள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையை மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு: பார்ப்பனர், பிரபு (பார்ப்பனர் அல்லாத ஓர் உயர்ஜாதி), ஷென்வி (சரஸ்வதி பார்ப்பனர்கள்), பார்சிகள் மற்றும் பிற முன்னேறிய வகுப்புகளைத் தவிர்த்த மற்ற அனைத்து வகுப்பினரும் ‘பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்’ என்று கருதப்பட வேண்டும்.

மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களின் ஆணையின்படி,

நாகேஷ் பாண்டுரங் பிடே,

தனிச் செயலாளர்

சான்று: ‘ராஜரிஷி சாகு கௌரவ கிரந்த்’ நூல் (பக்கம் 1077)

தமிழில்: சமா இளவரசன்

- விடுதலை நாளேடு, 26.7.26