Showing posts with label குங்குமம். Show all posts
Showing posts with label குங்குமம். Show all posts

Wednesday, 7 May 2025

குங்குமம்’ பிறந்த கதை

துக்ளக்குக்குப் பதிலடி- கவிஞர் கலி.பூங்குன்றன்

விடுதலை நாளேடு
பதிலடிப் பக்கம்
(23.4.2025 நாளிட்ட ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த பதில்களுக்கான பதிலடி இங்கே!           (கட்டுரையின் ஒரு பகுதி)

குங்குமம்’ பிறந்த கதை

‘‘மலட்டு நிலத்தை மாதவிலக்கான பெண்களைக் கொண்டு உழச்செய்யின் விளைச்சல் ஏற்டும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாத விலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளை ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்றும் இவ் வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் – பெண்களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.”

திரு. செ. கணேசலிங்கன் எழுதிய ‘பெண்ணடிமை தீர” என்ற நூலிலிருந்து

எதை எடுத்து எதில் பூசிக்கொள்வது? சிந்திக்க வேண்டாமா?