Showing posts with label வளர்ச்சி. Show all posts
Showing posts with label வளர்ச்சி. Show all posts

Wednesday, 20 June 2018

முன்னோக்கி இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே...

50 வருடங்களாக இந்தி தெரியாமல், முன்னோக்கி இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே...

#உயர்_கல்வி :
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி சேர்பவர்கள், தமிழகத்தில்தான் அகில இந்திய சராசரியை விட இருமடங்கு அதிகம்.
#தமிழகம்.       – 38.2%..
#குஜராத்         – 17.6% ;
#மபி                 – 17.4% ;
#உபி                – 16.8% ;
#ராஜஸ்தான் – 18.0% ;
இந்திய சராசரி : 20.4%

#கல்வி_நிலையங்களின்_தரம் :-
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான்.

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ மூன்றாமிடத்தில்...

இதேபோல இந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……

#முதல்_100_பொறியியல்_கல்லூரிகளில்
1.தமிழ் நாடு – 22 ;
2.குஜராத் – 5 ;
3.மபி – 3 ;
4.உபி – 6 ;
5.பிகார் – 1 ;
6.ராஜஸ்தான் – 3

#100_சிறந்த_பல்கலைகழகங்களில் 1.தமிழ் நாடு – 24 ;
2.குஜராத் – 2 ;
3.மபி – 0 ;
4.உபி – 7 ;
5.பிகார் – 0 ;
6.ராஜஸ்தான் – 4

#பொருளாதார_மொத்த_உற்பத்தி_(GDP)
இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகமே.

தமிழ் நாடு – ₹18.80 lakh crore (2nd Place)
குஜராத் – ₹10.94 lakh crore (5th) ;
மபி – ₹7.35 lakh crore (10th) ;
உபி – ₹12.37 lakh crore (4th) ;
ராஜஸ்தான் – ₹7.67 lakh crore (7th) ;
சத்தீஸ்கர் – ₹2.77 lakh crore (17th)

#Infant_Mortality_Rate
தமிழ் நாடு – 21 ;
குஜராத் – 36 ;
மபி – 54 ;
உபி – 50 ;
ராஜஸ்தான் – 47 ;
சத்தீஸ்கர் – 46 ;
இந்திய சராசரி : 40

#Maternal_Mortality_Rate
தமிழ் நாடு – 79 ;
குஜராத் – 112 ;
மபி – 221 ;
உபி – 285 ;
ராஜஸ்தான் – 244 ;
சத்தீஸ்கர் – 221 ;
இந்திய சராசரி : 167

#தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்
தமிழ் நாடு – 86.7% ;
குஜராத் – 55.2% ;
மபி – 48.9% ;
உபி – 29.9% ;
ராஜஸ்தான் – 31.9% ;
சத்தீஸ்கர் – 54% ;
இந்திய சராசரி : 51.2%

#கல்வி_விகிதாசாரம்
தமிழ் நாடு – 80.33% ;
குஜராத் – 79% ;
மபி – 70% ;
உபி – 69% ;
ராஜஸ்தான் – 67% ;
சத்தீஸ்கர் – 71% ;
இந்திய சராசரி : 74%

#ஆண்_பெண்_விகிதாசாரம்
தமிழ் நாடு – 943 ;
குஜராத் – 890 ;
மபி – 918 ;
உபி – 902 ;
ராஜஸ்தான் – 888 ;
இந்திய சராசரி : 919

#தனிநபர்_வருமானம்
தமிழ் நாடு – 1,28,366 ;
குஜராத் – 1,06,831;
மபி – 59,770 ;
உபி – 40,373 ;
ராஜஸ்தான் – 65,974 ;
சத்தீஸ்கர் – 64,442 ;
இந்திய சராசரி : 93,293

#மனிதவள_குறியீடு
தமிழ் நாடு – 0.6663 ;
குஜராத் – 0.6164 ;
மபி – 0.5567 ;
உபி – 0.5415 ;
ராஜஸ்தான் – 0.5768 ;
சத்தீஸ்கர் – 0.358 ;
இந்திய சராசரி : 0.6087

#ஏழ்மை_சதவீதம்
தமிழ் நாடு – 11.28% ;
குஜராத் – 16.63% ;
மபி – 31.65% ;
உபி – 29.43% ;
ராஜஸ்தான் – 14.71% ;
சத்தீஸ்கர் – 39.93% ;
இந்திய சராசரி : 21.92%

#ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்
தமிழ் நாடு – 18% ;
குஜராத் – 33.5% ;
மபி – 40% ;
உபி – 45% ;
ராஜஸ்தான் – 32% ;
சத்தீஸ்கர் – 35% ;
இந்திய சராசரி : 28%

#மருத்துவர்களின்_எண்ணிக்கை
தமிழ் நாடு – 149
குஜராத் – 87 ;
மபி – 41 ;
உபி – 31;
ராஜஸ்தான் – 48 ;
சத்தீஸ்கர் – 23 ;
இந்திய சராசரி : 36 (ஒரு லட்சம் பேருக்கு)

*இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, பிற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட, எல்லா விதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது….

மேலும்,
1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.

4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..

5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

உண்மை நிலவரம் இப்படியிருக்க, #திராவிட_ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்….

நன்றி:தீக்கதிர்