Sunday 13 December 2015

பேஸ்புக் சாட்டில் Sticker வசதி தற்போது கணினிகளுக்கும்


stickers in fb
அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல் கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம். 
நீங்கள் சாட் செய்யும் போது சாட் விண்டோவின் வலது கீழ் மூலையில் ஒரு ஸ்மைலி இருக்கும் அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல Stickers உங்களுக்கு வரும்.
stickers in fb chat
எதை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் போதும் அது உங்கள் நண்பருக்கு சென்று விடும்.
sticker
முதல் படத்தில் மேலே சாம்பல் நிறத்தில் (Gray Color) தெரிவாகி உள்ளவற்றிற்கு அடுத்து உள்ளவற்றை தெரிவு செய்தால் விதவிதமான Stickers உங்களுக்கு கிடைக்கும். கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்தால் Sticker Store க்கு செல்லலாம்.
sticker store
இதில் Free என்பதை கிளிக் செய்தால் குறிப்பிட்ட Sticker உங்கள் சாட்டில் சேர்ந்து விடும். அதன் பின் அவற்றை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். தற்போது அனைத்து Sticker களும் இலவசமாக கிடைக்கின்றன.
- பிரபு கிருஷ்ணா
-விடுதலை,14.6.14

எளிய பெயரில் ஈமெயில் ஐடி உருவாக்க

மின்னஞ்சல் முகவரி என்பது நமக்கு எப்போதும் இன்றியமையாத ஒன்றாகும். ஜிமெயில் மூலம் இப்போது புதியதாக மின்னஞ்சல் கணக்கு தொடங்க நினைக்கும் ஒருவரால், எண்களை பயன்படுத்தாமல் மின்னஞ்சல் முகவரி உருவாக்க இயலாது(ஆங்கில வார்த்தை கொண்டு). எளிய வகையில் ஈமெயில் முகவரி உருவாக்க உதவும் mail.com பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
Mail.com ஆனது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்து மிக அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் கணக்கு. இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது gmail.com, yahoo.com, ymail.com என்று குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே டொமைன் ஆக தரும், ஆனால் mail.com 200 டொமைன்களை தருகின்றது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான ஒன்றை, மிகக் குறைந்த எழுத்துக்களை பயன்படுத்தி உருவாக்கி விடலாம். உதராணம்
இது போல மொத்தம் 200 வகையான டொமைன்களில் உங்கள் மின்னஞ்சல் கணக்கை நீங்கள் உருவாக்கலாம். இதன் மூலம் புதியதாக தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நீங்கள் எளிதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விடலாம்.
இதில் நான் உருவாக்கிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகள்:

  • prabu[at]playful.com
  • prabu[at]iname.com
இதன் மற்ற சில சிறப்பம்சங்கள்:
1. Unlimited ஈமெயில் Storage
2. Spam Filter மற்றும் வைரஸ் மின்னஞ்சல்களில் இருந்து பாதுகாப்பு
3. பயன்படுத்த எளிய அமைப்பு
4.எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி.
5. அலுவலக பயன்பாடுகளுக்கு உகந்த ஒன்று.
இதன் குறைபாடு:
1. ஈமெயில் Forwarding என்ற ஒரு வசதி இலவசமாக இல்லை.
- பிரபு கிருஷ்ணா
-விடுதலை,21.6.14

Wednesday 2 December 2015

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?

             கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?


(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடுநீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.
(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பிபேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டிஉன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?
ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரேஎன்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா?
(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978ல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)
தகவல்: ர.பார்த்தசாரதிசென்னை -34.

நான் எழுதிய இந்த கட்டுரை 15.10.1980 'உண்மை' மாதமிருமுறை இதழில் முதல்
 முறையாக வெளிவந்தது ஆகும். நான் எழுதிய முதல் கட்டுரையும் இது தான்.
பிறகு நான்கு முறை 'விடுதலை' நாளேட்டில் மறு வெளியீடாக வெளிவந்துள்ளது. 
கடைசியாக
'விடுதலை' நாளேட்டில் 24.10.14ல் மறு வெளியீடாக வெளிவந்துள்ளது. 


  
                              15.10.1980 'உண்மை' மாதமிருமுறை இதழ்       



 விடுதலை  30.12.2011


                                      விடுதலை 15.6.12 பக்-7
                      

                       
                   30.8.13 விடுதலை                                         24.10.13 விடுதலை 


               

Sunday 1 November 2015

உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற
காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு
பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்
எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு
ஏமாந்து போகாதீங்க!
ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால்
அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே
ஆளையே மாத்துறாங்க.
பெண்: அது... ஆயிரங் காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம
அறிவுக்குப் பொருத்தம்
ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!
ஆண்: கோழி யில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!
பெண்: அந்தக் குஞ்சுகள் பொறிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே
பேசுவது தப்பித முங்க
ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும்
முயற்சியும் பண்ணுறாங்க!
- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுர மும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப் பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற் றுள்ளது.
-viduthalai,1.11.13

தெரியவில்லை மகனே!

தெரியவில்லை மகனே!
மகன்: பூமியிலே கண்டம் அய்ந்து, மதங்கள் கோடி என்று பாரதி பாடியிருக்கிறான் இல்லையா? அப்பா.
அப்பா: ஆமாம் மகனே!
மகன்: இருக்கிற மதங்களிலேயே மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் இந்து மதம் தான் என்று இந்து மதத் தலைவர்கள் பறைசாற்றுகிறார் கள் இல்லையா அப்பா...!
அப்பா: ஆமாம் மகனே.
மகன்: அப்படி யென்றால் அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதற்காக ஏதோ பிரளயம் ஏற்பட்டு விட்டதைப் போல இந்து மதவாதிகள் ஆகாயத்திற்கும் பூமிக்கும் தாவிக் குதிக்கிறார்களே! அது ஏன் அப்பா?
அப்பா: தெரியவில்லை மகனே. உண்மையான தெய்வம் எதிரே இருக்கும் கல்லிலே இல்லை; அது உங்கள் தோள் வலிமையிலேஇருக்கிறது!

ரோம் நகரம் எரிந்த போது பிடில் வாசித்த நீரோவைப் போலவே, இந்த உலகமும் கொடுமை நிறைந்ததாகவே இருக்கிறது! நிலவையும் நிழலையும் பிணைத்து வைக்கிறது, கற்களை வழிபடுவதற்காக மலர்களை உண்டாக்குகிறது. உண்மையிலேயே கற்களல்லவா கற்களை வழிபட வேண்டும்!
- வி.ச. காண்டேகர், தகவல்: புலவர். வெற்றியழகன்


குற்றால நாதருக்கு தீராத தலைவலியாம்

குற்றாலத்தில் உள்ள குற்றால நாத சாமிக்கு தினமும் காலையில் குளிப் பாட்டும்பொழுது கொஞ்சம் மூலிகைத் தைலம் வைத்து தான் குளிப்பாட்டுவார்கள். காரணம் அவருக்குத் தலைவலியாம்!
தகவல்: இரா.பேச்சிமுத்து, குற்றாலம் (நெல்லை)
-viduthalai,1.11.13

Wednesday 19 August 2015

ஆக.19 - உலக நிழற்பட நாள்

ஆயக்கலைகள் 64 என்பர். இந்த கலைகளை யெல்லாம் விஞ்சிய அற்புத நவீனகால கலையாக நிழற்பட கலையை கூறலாம். வரலாற்று நிகழ்வு, சமூக பிரச்சினை, கல்யாணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், சோக நிகழ்வுகள், மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது நிழற்படம்தான். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்வதும் இந்த நிழற்படம்தான். சார்... ஸ்மைல் ப்ளீஸ் என கருப்பு போர்வைக்குள் புகுந்து ஸ்டூடியோவில் படம் பிடித்த காலம் முதல், கையடக்க சைசில் டிஜிட்டல் கேமரா வைத்துக்கொண்டு விதம்விதமாக தங்களை செல்பி முறையில் படம் பிடித்துக்கொள்பவர்கள் நம்மில் அதிகரித்து விட்டனர். அந்தளவுக்கு நிழற்படம் மக்கள் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது.
எங்காவது சுற்றுலா சென்றால் முதலில் நாம் எடுத்து வைக்கும் முக்கிய பொருளாக கேமரா மாறி விட்டது. சுதந்திரத்திற்கு போராடிய காந்தி, நேதாஜி, வஉசி உள்ளிட்ட எண்ணற்ற தேசத்தலைவர்களை, அறிஞர் களை, கலைஞர்களை நாம் நேரில் பார்த்தது கிடையாது.  ஆனால் அவர்களையெல்லாம் நம் கண்முன் வந்து நிறுத்துவது புகைப்படமே. எந்த துறையில் அதிகம் பயன்படுகிறதோ, இல்லையோ செய்தித்துறையில் நிழற்பட கருவி அதிமுக்கியமாக பயன்படுகிறது. வரி வரியாக அரைப்பக்கம் எழுதி சொல்லக்கூடிய கருத்தை ஒரு நிழற்படம் மூலம் எளிதில் சொல்லிவிடலாம். படித்தவர்கள் மட்டுமின்றி மழைக்குகூட பள்ளிக்கு ஒதுங்காதவர்களையும்  படத்தை பார்த்து செய்தியை அறிந்து கொள்ள உதவுகிறது கேமரா. சிறந்த நிழற்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
நிழற்பட கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும்  ஆக.19 ஆம் தேதி  உலக நிழற்பட நாள் கொண்டாடப்படுகிறது. 175ஆவது ஆண்டாக நிழற்பட நாள் கொண்டாடப்பட உள்ளது. 13ஆம்  நூற்றாண்டிலேயே கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிய, பெரிய அளவில் பல்வேறு கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டன. 1825ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டடத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த படம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது. 1839ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார்.
அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் சூட்டினார். போட்டோகிராபி என்பது கிரேக்க மொழி சொல்லாகும். இதன் அர்த்தம் ஒளியின் எழுத்து. இதே ஆண்டில்  லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான நிழற்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். மரத்தாலான இந்த நிழற்பட கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு டாகுரியோடைப் என பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது.
இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயல்பாடுகள் 1839ஆம் ஆண்டு ஆக. 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என உலகம் முழுவதும் அறிவிக்கப் பட்டது. இந்த நாளையே உலக நிழற்பட நாளாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
* 1841இல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பாக்ஸ் என்பவர் கலோடை என்ற முறையை அறிமுகப் படுத்தினார். இதில் நெகட்டிவ்களாக பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலிருந்து பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கப்பட்டது.
* 1880இல் செல்லுலாய்ட் நைட்ரேட் பிலிம்களை பயன்படுத்தி நிழற்படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் கண்டுபிடித்தனர்.
* 1888ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களைப் பயன்படுத்தி பொக்ஸ் கேமராவில் நிழற்படம் எடுப்பதை கண்டறிந்தார்.
* 1900இல் பொக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கொடாக் அறிமுகப்படுத்தினார்.
* 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913இல் ஆஸ்கர் பர்னாக் வடிவமைத்தார். இது நிழற்பட துறையையே புரட்டிப்போட்டது.
* முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981இல் தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள்  ஏற்பட்டுள்ளன.