Thursday, 21 October 2021

கலைஞர் வந்தது முதல் செய்தது வரை

*கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?*

*பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.*

*கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக  வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் கோவைக்குத்தான் சென்றார்.சென்னைக்கு அல்ல)*

*மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.*

*அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில்  நடித்தவர் எம்ஜிஆர்.*

*கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.*

*1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார்(படம் பார்க்க) கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955)*

*அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.*

*எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார்.*

*எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950)*

*அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.*

*ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.*

*அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.*

*இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்*

*இன்னொன்று சொல்கிறேன்.*

*திமுக தொடங்கப்பட்டது 1949ல்*

*முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல்*

*வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.*

*1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.*

*அது மட்டுமல்ல. எம்ஜிஆர், சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.*

*அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.*

*இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார்.*

*கலைஞரும் இந்து மத விரோதமும்* 

*கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே!*
 
*எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று.*
 
*அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்!*
 
*அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். அப்போது தான் தெரியும் அவரின் உயரம்.*
 
*அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடந்தவை:*
 
*♦️  முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு, 1996*
 
*♦️  புரவலர் விருது & தங்க நிற அட்டை திட்டம் - ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருக்கோயில் புரவலர் என்ற பட்டமும், அரசு சான்றிதழும், தங்க நிறத்திலான அட்டையும் வழங்க அரசு உத்தரவு. அவர்கள் குடும்பத்தினர் 5 பேருக்கு அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களில் 20 வருடங்கள் சிறப்பு தரிசன அனுமதி வழங்கவும் உத்தரவு. 48 புரவலர்கள் மூலம் ரூ.2.40 கோடி நிதி திரட்டல், 2006-2011*

*♦️  திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்*
 
*1. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், 1996*
*2. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், 1997*
*3. திருநீர்மலை ரங்கநாத சுவாமி திருக்கோயில், 1997*
*4. திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், 1997*
*5. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 1997*
*6. கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், 1997*
*7. தஞ்சை பெரிய கோயில், 1997*
*8. சென்னை மல்லீஸ்வரர் திருக்கோயில், 1997*
*9. வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1997*
*10. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், 1998*
*11. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், 1998*
*12. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், 1998*
*13. ஆழ்வார் திருநகரி அரவிந்தலோசனர் திருக்கோயில், 1998*
*14. சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், 1999*
*15. வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், 1999*
*16. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், 1999*
*17. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 1999*
*18. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், 1999*
*19. ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோயில், 2000*
*20. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், 2000*
*21. மதுரை காளமேக பெருமாள் திருக்கோயில், 2000*
*22. அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2000*
*23. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், 2000*
*24. தொட்டியம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில், 2000*
*25. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், 2000*
*26. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், 2000*
*27. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 2000*
*28. பவானி சங்கமேசுவரர் திருக்கோயில், 2000*
*29. காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 2000*
*30. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், 2000*
*31. திருமுட்டம் பூவராகசுவாமி திருக்கோயில், 2000*
*32. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், 2000*
*உள்ளிட்ட 2459 கோயில்களில் குடமுழக்கு,* 
*33. தமிழகம் முழுவதும்  842 கோயில்களில் பல்வேறு திருப்பணிகள்.*
*34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள்*
*35. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு ரூ.85000/- நிதி உதவி*   
 
 *♦️  கோயில் சுற்றுப்புற மேம்பாடு*
 
*1. நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு அரசின் சார்பில் இலவச மின்விளக்கு* 
*2. திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரல், படிக்கட்டுகள் செப்பனிடல் & மழை நீர் சேமிப்பு ஏற்படுத்துதல்*
*3. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருகுளத்தை சீரமைக்க ரூ.43.90 லட்சம், அருள்மிகு அஷ்டபூஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரங்கசாமி குளத்தினை சீரமைக்க ரூ.22.50 லட்சம் நிதி ஒதுக்கல்*
*4. இந்து அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 50 முக்கிய திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை ஓவியங்களை பாதுகாக்க ரூ.20 லட்சம் செலவில் நடவடிக்கை* 
 
*♦️  கோயில்களில் தமிழ்* 
 
*1. தமிழில் வழிபாடு, தமிழில் வேள்வி  1998*
*2. சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்விய பிரபந்த பயிற்சி மையங்கள், 1998-99*
*3. திருக்கோயில் ஆகம விதிகள் அடங்கிய உத்ரகாமிக ஆகமம் நூலை, 1999*
*4. தமிழ் போற்றி அர்ச்சனை புத்தகங்கள் வெளியீடு, 1999*
*5. சைவத் திருக்கோயில்கள் 5-ல் தேவார இசைப் பள்ளிகள்* 
*6. வைணவத் திருக்கோயில்கள் 4-ல் பிரபந்த இசைப் பள்ளிகள்* 
*7. 8 திருக்கோயில்களில் நாதஸ்வரம் & தவில் பயிற்சி*
*8. 75 திருக்கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்* 
*9. சிதம்பரம் நடராசர் தமிழ் திருமுறைகள் இசைத்தல்*
 
 *♦️  தங்க விமானங்கள், தங்கத்தேர் & மரத்தேர் பணிகள்* 
 
*1. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக 34 தங்கத் தேர்கள்* 
*2. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007*
*3. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007*
*4. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2010*
*5. திருக்கோயில்களின் 241 மரத் தேர் புதுப்பிப்பு* *
*6. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் அம்பாளுக்கு புதிய திருத்தேர் அமைத்தல் & தேரோட்டம், 2008*
 
*♦️  கோயில் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள்* 

*1. கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை என்ற கொள்கை முடிவு*
*2. தமிழகம் முழுவதும் 8325 கோயில் சொத்து பதிவேடுகள் உருவாக்கம், 1996*
*3. தனியார் ஆக்ரமிப்பில் இருந்த திருத்துறைப் பூண்டியில் 621 ஏக்கர், பேரூரில் 250 ஏக்கர் உள்ளிட்ட கோயில் நிலங்கள் மொத்தம் 2745 ஏக்கர் கோயில் நிலங்கள் நேரடி மீட்பு* 
*4. நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக 1414 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு* 
*5. திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாத்திட திருவொற்றியூர், திருத்தணி, விருதுநகர், விழுப்புரம் & தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம்*
*6. மொத்தம் 532 திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்துதல்*
*7. மொத்தம் 59  திருக்கோயில்களில் CCTV  பொருத்துதல்*
*8. திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் நீதிமன்ற கட்டணம் சொத்து மதிப்பில் 7.5 சதவிகிதம் என்று இருந்ததை மாற்றி அனைத்து வழக்குகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.100/- என நிர்ணயித்து அரசு ஆணை, 2010*
*9. கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பருத்தி நூல் புடவை & வேட்டிகளை ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, அவற்றை முதியோர், ஆதரவற்றோர் & கைம்பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்*
  
*♦️  பணியாளர் நியமனம் & நலன்*
 
*1. ஓய்வூதிய நல நிதி, 1996*
*2. பணியாளர் சேமநல நிதி, 1997*
*3. பணியாற்றும் காலத்தில் இயற்கை எய்தும் பணியாளர்களுக்கு ரூ.2000/- இறுதி சடங்கு நிதி, 1997*
*4. பணியாளர்களின் மகன் திருமணத்திற்கு ரூ.6000, மகள் திருமணத்திற்கு ரூ.10000/-, 1997*
*5. மருத்துவப்படி, சீருடை சலவைப் படி, இருசக்கர வாகனம் வாங்க கடன், 1997*
*6. கோயில்களுக்கான 200 புதிய செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல், 1998*
*7. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களின் அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படி, 1998*
*8. திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, 1999*
*9. ஆண்டுக்கு ஒரு லட்சமும் அதற்கு மேலும் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம், 1999*
*10. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மடிக்கணனி வழங்குதல், 2010*
*11. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி பயில நிதி உதவி, 2010*
*12. திருக்கோயில் பணியாளர்கள் 2575 பேருக்கு ஒரே சீருடை & அடையாள அட்டை, 2010*
*13. கிராம பூசாரிகள் 1146 நபர்களுக்கு ஓய்வூதிய திட்டம்*
*14. ஒரு காலப் பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர் & பூசாரிகள்10,000 பேருக்கு இலவச சைக்கிள், 2010*
*15. மொத்தம் 49,240 கிராம பூசாரிகள் அடங்கிய நலவாரியம், 2010*
*16. திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள் நியமனம்* 
*17. மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில் 14 தவில், 30 நாதஸ்வரம், 4 தாளம் ஆகிய இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்* 
*18. சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்*
 
*♦️  கோயில்கள் சார்ந்து மக்கள் நலப் பணிகள்* 
 
*1. திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி மைய நிதியை உருவாக்கி திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நிதி வசதி* 
*2. திருக்கோயில்களில் ஆதரவற்ற இளம் சிறார்கள் கருணை இல்லம் திட்டத்தின் கீழ் 38 திருக்கோயில்கள் மூலம் 43 கருணை இல்லங்கள், 1975*
*3. திருக்கோயில் கருணை இல்ல மாணவ, மாணவியர்களுக்கு இலவச கணினி, தட்டச்சு & தையல் பயிற்சி* 
*4. திருக்கோயில்களால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை*
*5. நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கிய திருக்கோயில்களில் நூல் நிலையங்கள் அமைத்தல்* 
*6. பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம்*
*7. திருவேற்காடு, சமயபுரம் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் திருமண மண்டபங்கள், 2007 & 2009*
 
*♦️  திருவாரூர் ஆழித் தேர்*

*அனைத்து துறைகளிலும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும்படியான ஓர் சிறப்பு முத்திரையை பதித்துள்ள தலைவர் கலைஞர், அறநிலையத் துறையில் அப்படியான ஒரு முத்திரையை தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் பதித்துள்ளார்.*

*அது தான் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் ஆழித் தேர்.*

*நீண்ட நெடுங்காலமாக ஆத்திகர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் திருவாரூர் தேர் ஓட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது.  எண்கோண வடிவத்தில் நாலு நிலைகளுடன் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மரத்தால் ஆன ஆழித்தேரை, நாத்திகரான இவர் 1969ல் முதல்வரானவுடன் திருச்சி Bhel நிறுவனத்தின் உதவியுடன் செப்பனிட்டு, இரும்பு அச்சுகள், சக்கரங்கள் & Hydraulic Brake System எல்லாம் கொண்டதாக நவீனமயப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு ஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தார்.*

*இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் அவர் மறைவுக்கு பின்னரும் ஏன் தொடர்ந்து இந்து மத விரோதி என்று தூற்றுகிறது?* 

*அதற்கு காரணம்  கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள் தான்.* 

*தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,*

*1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்*
*2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்*
*3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்* 
 
*பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சர்கர் பணி, இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு  குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அவர் மீதான வன்மமாக வளர்ந்து அவர் மறைவுக்கு பின்னரும் அவரை தூற்ற காரணமாகிவிட்டது.*

*கலைஞரின் வார்த்தைகளே தான் அவர்களுக்கான பதில்*

*கடவுளை கலைஞர் ஏற்கிறாரா இல்லையா என்பதல்ல கேள்வி.*
*கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் கலைஞரை ஏற்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி.*
*அந்த கேள்விக்கான பதில் தான் அவர் செய்துள்ள, மேலே பட்டியிலடப்பட்டுள்ள பணிகள்*

1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் 
2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் 
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் 
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் 
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் 
7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் 
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் 
9. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர் 
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர் 
11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர் 
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் 
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர் 
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர் 
15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர் 
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர் 
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர் 
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர் 
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் 
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
23. கோவில்களில் குழந்தைகளுக்கான " கருணை இல்லம் " தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர் 
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர் 
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர் 
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர் 
28. SIDCO உருவாக்கியது கலைஞர் 
29. SIPCOT உருவாக்கியது கலைஞர் 
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர் 
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் 
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர் 
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர் 
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர் 
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபட்டோரில் இணைத்தது கலைஞர் 
36. மிகவும் பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர் 
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் 
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர் 
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர் 
44. பெண்ணுக்கு சொத்தில்  சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் 
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர் 
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர் 
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் 
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர் 
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர் 
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் 
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர் 
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர் 
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர் 
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு 
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர் 
61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர் 
62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர் 
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர் 
64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர் 
65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர் 
66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர் 
67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு 
68. சமத்துவபுரம் தந்தது கலைஞர் 
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர் 
70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர் 
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர் 
73. உருது அக்காடமி தந்தது கலைஞர் 
74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர் 
75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர் 
76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர் 
77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர் 
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தது கலைஞர் 
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர் 
80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
81. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர் 
82. ஆசியாவிலே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்தது கலைஞர் 
83. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
84. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
85. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர் 
86. 20 அணைகள் கட்டியது கலைஞர் 
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர் 
88. 9 மாவட்டங்களில் புதிய மாவத்டாட்சியர் அலுவலகம் கட்டியவர் கலைஞர் 
89. மதுரை நீதிமன்றம் கட்டியது கலைஞர் 
90. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர் 
91. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர் 
92. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர் 
93. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர் 
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர் 
95. 13000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர் 
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர் 
97. சென்னையில் 9 மேம்பாலங்கள் தந்தது கலைஞர் ச
98. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர் 
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர் 
*100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்* 
*101. வேலூர், தூத்துகுடி, கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்தது கலைஞர்*
*102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்* 
*103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்னை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்*
*104. 10 சமையல் பொருட்க்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர்* 
*105. விவசாய கடன் 7000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்*
*106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர்* 
*107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1050 ஆக உயர்த்தியது கலைஞர்*
*108. வகைபபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1100 ஆக உயர்த்தியது கலைஞர்* 
*109. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர்* 
*110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2000 ஆக உயர்த்தியது கலைஞர்*
*111. மாவட்டத்திற்க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்* 
*112. ரூ 189 கோடி செலவில் காவிரி - குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்* 
*113. ரூ 369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்*
*114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்* 
*115. பொது நுழைவு தேர்வு ரத்து செய்தது கலைஞர்* 
*116. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்* 
*117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனராமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தது கலைஞர்*
*118. அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர்* 
*119. 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்*
*120. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான " நலமான தமிழகம் திட்டம் " தந்தது கலைஞர்* 
*121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர்*
*122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தது கலைஞர்.*
*123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்* 
*124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர்*
*125. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர்*
*126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்* 
*127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகள் தந்தது கலைஞர்* 
*128. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்*
*129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்*
*130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி " அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர்*
*131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர்* 
*132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்*
*133. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்* 
*134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தது கலைஞர்* 
*135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்தது கலைஞர்*
*136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்* 
*137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்* 
*138. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்* 
*139. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்* 
*140. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர்* 
*141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்* 
*142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர்* 
*143. 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்* 
*144. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்* 
*145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில் உருவாக்கியது கலைஞர்* 
*146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்*
*147. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்*
*148. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்* 
*149) முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.*
*150) இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்..*
*151) இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.*
*152) பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.*
*153) மாவட்ட தலை நகரங்களில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்*
*154) மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி வழங்கியவர் கலைஞர்.*

*சேப்பாக்கம் அன்புகுமார் மு.துணை செயலாளர் 115.வது வட்டம்*

No comments:

Post a Comment