Thursday 31 January 2019

இந்து என்றால்...
In Persian, says our author, the word means slave, and according to Islam, all those who did not embrace Islam were termed as slaves." (Dayanand Saraswati Aur Unka Kaam, edited by Lala Lajpat Rai, published in Lahore, 1898, in the Introduction)

நம் ஆசிரியர் பாரசீக மொழியில் இவ்வார்த்தைக்கு அடிமையென்று பொருள் கூறுகிறார்.

மேலும், இசுலாத்தின் படி இசுலாமிய சமயத்தை தழுவிடா தோர் அடிமைகள் எனப்பட்டனர்.

லாலா லஜபதிராய் பதிப்பித்த தயானந்த சரஸ்சுவதியில் (அவுர் உன் காகாம் என 1898இல் லாகூரில் வெளியிட்ட நூலின் முன்னுரையில்)

மேலும் ஒரு பாரசீக அகராதி லக்னோவில் 1964இல் வெளியான லுசேத் - இ - கிஷ்வாரி எனும் நூல் இந்து எனில் திருடன், கொள்ளைகாரன், வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் அபகரிப்பவன், அடிமை என்று பொருள் கூறுகிறது.

Furthermore, a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964, gives the meaning of the word Hindu as "chore [thief], dakoo (dacoit], raahzan [waylayer), and ghulam(slave]." In another dictionary,

இதன் பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழைமையான பார்சி டிக்ஸ்னரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1964ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்சி பதிப்பகம் ஒன்றில் மறுபதிப்பானது.

அதில் ஹிந்து என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட விளக்கமானது திருடன் வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் பிடுங்கி ஓடுபவன், கொள் ளைக்காரன் (இருவர் அதற்கு மேல் சேர்ந்து கொள்ளையடிப்பவர்கள்), பிறருக்கு எப்போதும் தொல்லை கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும்போது பிடிபட்டு தண்டனைக் குள்ளாக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அடிமைச் சேவகம் புரிபவர்கள்) என்ற பல்வேறு அளவுகளில் பொருள் கொடுத் துள்ளனர்.

- ‘தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

Wednesday 23 January 2019

நம்பூதிரிகளின் கேவலமான முறை

முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லித்தருவது.

இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.

வடநாட்டைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்.

அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. இன்றைக்கு இந்தப் பரிசோதனையை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது என்றார்கள் அன்று. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”

2004 ஆம் ஆண்டில் கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை.

“பிள்ளை இல்லாமல் அந்தந்தக் குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம் (மனு 9-59)“ என மனு அன்றே அயோக்கியத்தனத்திற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டான். இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.
தமிழ்ர்களே வரலாற்றை படியுங்கள்.வரலாறு தெரியாத எந்த இனமும் தன் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியாது.
#பகிருங்கள்
- இராமசாமி முத்துக்கிருசுணன் முகநூல் பதிவு, 24.1.18

சாலைகளை ஆக்கிரமிக்கும் கோயில்கள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுசென்னை, ஜன.23 பொதுச் சாலைகளை ஆக்கிர மித்து கோயில்கள்  கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற் படுகிறது. எந்த  சூழ்நிலையிலும் ஆக் கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது. தெய்வங்களாக  இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்பட் டுள்ள விநாயகர் கோயிலை அகற்ற கோரியும், அரசு நிலங்கள், பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது என்ற அரசாணையை பின்பற்றும்படி உத்தரவிடக் கோரியும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் 2005 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தர வில், அரசு புறம்போக்கு நிலங்களை அப கரிக்கும் நோக்குடன் சிலர், அங்கு கோயில் கட்டுவதாகவும், இதை இந்து சமய அறநிலையத்துறை ஊக்குவிக்கக் கூடாது.

எனவே, தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கோயில்கள், மசூதிகள், கிறித்துவக் கோயில்கள் குறித்த புள்ளிவிவரங்களை  அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று (22.1.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஒரு சுற்ற றிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தமிழகம் முழுவதும்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில்கள், கிறித்துவ கோயில், மசூதி குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டி ருந்தது.

மேலும், அரசு வழக்குரைஞர், நீதிபதியிடம், புள்ளிவிவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

"தெய்வங்களாக" இருந்தாலும்..

நீதிபதி தன் உத்தரவில், பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள்  கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எந்த  சூழ்நிலையிலும் ஆக்கிரமிப்புகளை அனு மதிக்க முடியாது. தெய்வங்களாக  இருந் தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை.

-  விடுதலை நாளேடு, 23.1.19

Monday 21 January 2019

தமிழும் திராவிடர் மொழியும்

தமிழும் ஆரியக் கலப்பாகத்தான் மாறிப்போயிருந்தது; இன்றுவரை தூய்மைபடுத்தப்பட்டுதான் வருகிறது! இன்னும் பணி முடிவடையவில்லை!
ஆரிய மொழியான சமசுகிருதம் மிகுதியாக கலக்கப்பட்ட தமிழ் மொழிகள் மீட்டுருவாக்கம் செய்யப்படாததாலும் மீட்டுருவாக்கம் செய்யப்படவேண்டியது என உணராததாலும் திராவிடர் மொழிகளாக மாறிவிட்டன!

அறிவு மேன்மை!

மனிதன் என்பதற்குப் பொருள் விசயங்களை ஆராய்ந்து நன்மை, தீமையை உணர்ந்து செயல்படுவதே! மற்ற ஜீவப்பிராணிகளான ஆடு, மாடு, குதிரை, காகம் இவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதே மாதிரியே இருக்கின்றன. ஆனால் மனிதன் 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட எவ்வளவோ மாற்றம். 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, ஏன் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட பெரிய மாற்றம். இவற்றிற்கு காரணம் மனிதனின் அறிவு மேன்மை தான்!

(பெரியார், விடுதலை - 27.03.1951)

Friday 18 January 2019

பொது இடங்களை ஆக்கிரமிக்கும் அனைத்து மதக் கோயில்களையும் அகற்றுக! - சென்னை உயர்நீதிமன்றம்

நடைபாதைக் கோயில் பிரார்த்தனை கடவுளை சேருமா!   - உச்சநீதிமன்றம்
சென்னை, ஜன.6 பொது இடங்களை ஆக்கிரமித் துள்ள அனைத்து மதக் கோயில்களையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நடைபாதைக் கோயிலுக்குச் செய் யப்படும் பிரார்த்தனை கடவுளைப் போய் சேருமா என்று உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வழிபாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்று 1968ஆம் ஆண்டு தமிழக பொதுத்துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது.

ஆனால், இந்த அரசாணை மற்றும் சுற்றறிக்கைக்கு எதிராக, கோவை வருவாய் கோட்டாட்சியரின் அலு வலகத்தில் சட்டவிரோதமாக பிள்ளையார் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த கோயிலை அகற்றும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இம்மனுவின்மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு கடந்த 4.1.2019 அன்று வந்தது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பொதுச்சாலை, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சில பேராசைக்காரர்கள், மாபியா கும்பல்கள் அரசு நிலங்களை அபகரிக்கவும், பணம் சம்பாதிக்கவும் பொது இடங்களில் கோயில்கள் கட்டுகின்றனர். அதனால், வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் சிலர் சாலையோரம் கோயில்களைக் கட்டுகின்றனர்.

இதுபோன்ற செயலை இந்து சமய அறநிலையத் துறை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. அது மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதாகி விடும்.

தெய்வத்தின்மீதும் நடவடிக்கை தேவை

பொதுஇடங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது. தெய்வமாக இருந்தாலும், பொது இடங்களை ஆக்கிர மிக்க அனுமதிக்க முடியாது. அவ்வாறு ஆக்கிரமித்தால், அந்த தெய்வத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது.

எனவே, பொதுசாலை, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வும் உள்ள சட்டவிரோத கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நில அபகரிப்பாளர்கள், மாபியாக்கள் மூலமாக பொதுஇடங்களை ஆக்கிரமிக்க தெய்வமே வந்தாலும் கூட அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலா ளர், ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன்.

இந்த அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்களையும், நீர்நிலைகளையும், பொது சாலை களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம்

டில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள பல ஆக்கிரமிப்புக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதில் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ள கோயிலும் ஒன்றாகும். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவைகளை நீதிபதிகள் கீதாமிட்டல் மற்றும் ஹரிசங்கரின் அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது இந்த அமர்வு, "சட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கட வுளைப் போய் சேருமா? அந்தக் கோயில்கள் புனிதத் தன்மை உள்ளதா?" என கேள்வி எழுப்பியது. மேலும் அதே பகுதியில் வாகனம் நிறுத்த சட்ட விரோதமாக அனுமதி அளித்த வடக்கு டில்லி மாநகராட்சிக்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

அது மட்டுமின்றி சட்டபூர்வமாக கட்டப்படாத எந்தக் கட்டடத்தையும் அது மத பிரார்த்தனை செய் யும் இடமாக இருந்தாலும் அனுமதி அளித்தது மாநகராட்சியின் தவறு எனவும் குறிப்பிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 6.1.19

Saturday 12 January 2019

பெரியார் கணினியில்...ஒரு மனிதனை அல்லது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டாரை, ஒரு மதத்தாரைக் காட்டு மிராண்டித் தன்மையுள்ளவர்கள் என்று சொல்லுவதற்குக் காரணங்களான குறிப்புகள் என்னவென்றால்:

1. கை ரேகை பார்த்தல்.

2. சோதிடம் பார்த்தல்.

3. பிறந்த நேரம் கொண்டு சாதகப் பொருத்தம் பார்த்தல்.

4. சகுனம் பார்த்தல், அதற்குப் பலன் கணித்தல்.

5. நல்ல நேரம், நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம் என்பவைகளைப் பார்த்தல்.

6. ஆருடம் பார்த்தல், அதை நம்புதல்.

7. பட்சி சாத்திரம் பார்த்தல்.

8. ராகு காலம், குளிகை காலம், எம கண்டம் முதலியன பார்த்தல்.

9. நல்ல நட்சத்திரம், கெட்ட நட்சத்திரம், நல்ல லக்னம், கெட்ட லக்னம் பார்த்தல்.

10. கழுதை கத்துதல் பலன் பார்த்தல், ஆந்தை அலறுதல் பலன் பார்த்தல்.

11. பல்லி, கத்துதல் குறித்துப் பலன் பார்த்தல்.

12. பாம்பு குறுக்கே போவது பற்றிப் பலன் பார்த்தல்.

13. காக்காய் கத்துதலுக்குப் பலன் கூறுதல்.

14. பூனை குறுக்கே போவதற்குப் பலன் கூறுதல்.

15. ஒத்தைப் பார்ப்பான் தென்படுதல்.

16. முண்டை பாப்பாத்தி (கைம்பெண்) வருதல்.

17. நெருப்பு எதிரில் வருதல்.

18. மனிதன் தும்முவதன் (தும்மல்) பலன்.

19. விளக்கு அணைதல், அதற்கே கெட்ட பலன் கூறுதல்.

20 கண் திருட்டி படுதல், திருட்டி கழித்தல்.

21. சாந்தி கழித்தல்.

22. பாடம் போடுதல் (நோய் தீருவதற்காக)

23. மந்திரம் செபித்தல்.

24. தழைகளைக் கொண்டு (வேப்பிலை) பாடம் போடுதல்.

25. சாமி ஆடுதல்.

26. வாக்குக் கேட்டல் (பூசாரியிடம்).

27. பேய் ஆடுதல் (இதில் நம்பிக்கை வைத்தல்).

28. பேய் ஓட்டுதல்.

29. வலம் சுற்றுதல், இடம் சுற்றுதல் (பிரதட்சணம் - அப்பிரதட்சணம்).

30. வலது கால், இடது கால், வலது கை, இடது கை, உயர்வு தாழ்வு கற்பித்தல்.

31. எண்களில் நல்ல எண்கள், கெட்ட எண்கள் எனக்கருதுதல் (3, 13, 8, 18)  இவை கெட்ட எண்கள் என்பது).

32. அதிசயங்கள் செய்வது, அற்புதங்கள் செய்து காட்டுவது பற்றிய நம்பிக்கைகள்.

33. ஆசீர்வாதம் செய்தல், வாழ்த்துக் கூறுதல் நம்பிக்கை கொள்ளுதல், வசவு (வைதலில்) சாபம் கொடுத்தல் ஆகியவைகளில் நம்பிக்கை வைத்தல்.

34. பிரார்த்தனை செய்து விட்டு தொழுதுவிட்டு வந்தவர்களைக் குழந்தைகளின் தலையில் வாயினால் ஊதச்சொல்லுவதில் குழந்தைக்கு நோய் சவுகரியமாகும் என்ற நம்பிக்கை.

35. அகால - இயற்கைக்கு மாறான வகையில் செத்துப் போனவர்கள், பிசாசாகப் பிறந்து வந்து தொல்லை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை.

36. தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்த வஸ்துக்கள், சிலர் முகத்தில் விழிப்பதால் கெடுதி ஏற்படுதல் என்ற நம்பிக்கை.

37. அமாவாசை, சனிக்கிழமை முதலிய நாட்களில் கறி தின்னுவதில்லை என்ற நம்பிக்கை.

“பெரியார் கணினி”, ப. 891

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

Tuesday 8 January 2019