Wednesday 13 January 2021

தோள்சீலை போராட்டம்
#தோள்சீலைபுரட்சி;
அல்லது
#குப்பாயபுரட்சி.

பார்ப்பன நம்பூதிரிகள் கேரளாவில் யாரையும் விட்டு வைக்கவில்லை.
அவர்கள் போர் மறவர்களான நாயர்களை தரவாடு என்ற குடும்ப அமைப்பைக் கொண்டு இழிவுப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டனர்.

அரசர்களிடம் நேரடியாக அது போன்ற ஏற்பாடு செல்லாது என்பதால் அவர்களை "மஹாபலி" கதையை கூறி அரசவம்சத்தினர் அனைவரும் "விஷ்ணு"வின் அடிமைகள் என நாம்ப வைத்தனர்.
அதனால் அரசனின் எல்லா சொத்துக்களும் கோவிலுக்கே சொந்தம் என்று சட்டத்தினை மாற்றினர்.
அரசன் எந்த செலவு செய்வதென்றாலும் கடவுளிடம் நேரடித் தொடர்பில் இருக்கும் பார்ப்பண நம்பூதிரி ஒப்புதல் இல்லாமல் செய்ய கூடாது.
அது மட்டுமல்லாமல் "தம்பிரான்"கள் என்று சொல்லப்படும் அரசகுடும்பத்தவர்கள்,
தங்கள் மனைவிகளின் முதல் குழந்தையை மட்டும் கட்டாயம் நம்பூதிரிகளின் தூய்மையான இரத்த சம்பந்தம் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக்கினர்.

இதுமட்டுமல்ல அரசனாக,ஒரு இளவரசன் முடிசூட்டிக் கொள்ளும் போது தன் பெற்றோர் வைத்த பேரையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் அவர்களின் பெயர்,
அவர்களின் பிறந்த நட்சத்திரமாக மட்டும் இருக்கும்!
உதாரணமாக"சுவாதி"நட்சத்திரத்தில் பிறந்த இளவரசன்,
அரசனாக போது அவன் பெயர் "சுவாதி திருநாள்"என்று மாற்றப்படும்.
ஐந்து அரசர்கள் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தால் எல்லோரும் சுவாதி திருநாள் தான்,ஆக எந்த அரசன் எந்த நல்லது செய்தான் என்றும் யாருக்கும் தெரியாது.

அரசவம்சம்
நம்பூதிரி வம்சம்
நாயர் வம்சம்
இம்மூன்றையும் தவிர்த்து ஏனைய எல்லா மக்களும் கேரளாவில் தீண்டத்தகாதோர் ஆக்கப்பட்டனர்.
மற்ற அனைத்து மக்களும் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும்,
இடுப்பில் இருந்து முழங்கால் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்பதை சட்டமாக்கினர்.

பெண்கள் எப்போதும் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும்.
ஆண்களில் அரசனையும் நாயர்களையும் தவிர யாரும் மீசை தாடி வைத்துக் கொள்ளக் கூடாது.
செருப்பு அணியக்கூடாது,
குடை பிடித்து செல்லக் கூடாது.
மீசை தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.
பெண்கள் மேலாடை அணிந்து மார்பை மறைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தனியாக"முக்கியம்"என்ற வரி செலுத்த வேண்டும்.
அந்த‌வரி செலுத்தினாலும்,
பார்பர் நம்பூதிரிகள் எதிரில் வந்தால் தோள் சீலையை விலக்கி மார்பை காட்டித்தான் நிற்க வேண்டும்,
வரி செலுத்துவது பார்பணர் அல்லாதோர் முன் மார்பை மறைக்கவே!
இந்த கொடுமைகளின் உச்சம்,
மக்களின் கவனத்துக்கு முதல்முதலில் வெளிவந்தது 19 ம் நூற்றாண்டில்தான்.
அப்போது கேரளாவில் உள்ள "சேர்த்தலா" என்ற ஊரில் "நங்கோலி"என்ற "ஈழவா"சாதியை சேர்ந்த பெண் வாழ்ந்தாள்.
ஒருமுறை நாயர்கள் முலைவரி வசூலிக்க வந்த போது சற்று பொறுங்கள் என்று கூறி உள்ளே சென்றவள்,
ஒரு தலைவாழை இலையில்,(இந்த வரிப்பணத்தை மரியாதையாக வாழையிலையில் வேறு வைத்து கொடுக்க வேண்டுமாம்) தன் இரு முலைகளையும் அறுத்து வைத்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு மயங்கி விழுந்து இறந்தாள்.
அதிர்ந்து போன நாயர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர்.
பின்னர் அங்கு வந்த அவள் கணவன் "சிறுகண்டன்" அவளை எரிக்கும் போது அந்த நெருப்பில் தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
கேரளவில் பார்பணரை எதிர்த்து நடந்த முதல் புரட்சி வித்து இதுதான்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளாவில் ஆங்கிலேயர்கள் அதிகமான அளவில் இருந்தார்கள்.
இந்த முலை வரி வாங்கும் பார்பணர் தந்திரம் ஆங்கிலேயர்களிடமும் இஸ்லாமியர்களிடமும் செல்லாது,
கேட்டால்  இது இந்துமத தர்மம் இவை இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லி விட்டனர்.

ஆக முலைவரி சட்டம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிறித்துவர்களாக இருந்த சிரியன்,ஜோனகர் ஆகியோருக்கு பொருந்தாது.
மோபில்லா என்று அழைக்கப்படும் இஸ்லாமியரையும் கட்டுப்படுத்தாது.
அந்த பெண்கள்" குப்பாயம்" என்று அழைக்கப்படும் நீண்ட கைகளை உடைய ஜாக்கெட்டுகளை அணிந்து வந்தனர்.
இந்த முலை வரி வாங்கும் பார்பணதந்திரம் அவர்களிடம் பலிக்கவில்லை.

அந்த காலக்கட்டத்தில் முழு குமரி மாவட்டம்,நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் சில மேற்கு பகுதிகள் திருவாங்கூர் மற்றும் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் தான் இருந்தன.
அங்கு வாழ்ந்த பெருவாரியான
சாணார்,நாடார் சாதியை சேர்ந்தவர்கள்.
இவர்களும் இந்த‌முலைவரியில் சிக்கித்தவித்தனர்.

1813 ல் கர்னல் ஜான்‌‌ மன்றோ என்ற ஆங்கிலேயர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிரிட்டிஷ் துதுவராக இருந்தார்.
அவர் திருவிதாங்கூர் அரசனை வற்புறுத்தி பரம்பரை கிறிஸ்துவர் மட்டுமல்ல இனி கிறிஸ்தவராக மாறும் அனைவருக்கும் முலைவரியில் இருந்து விலக்கு அளிக்க சட்டம் கொண்டு வந்தார்.
உடனே பெருவாரியான சாணார்கள் கிருத்துவ மதத்திற்கு மாறினர்.

ஒருபுறத்தில் சாணார் ‌மக்கள் கிருத்துவத்திற்கு மாறும் போது,குமரி மாவட்டத்தில் சாணார்களில் ஒரு தலைவன் தோன்றினார்.
அவரது பெயர் வைகுண்டர்.
மக்கள் அவரை
#ஐயாவைகுண்டர் என்று அழைப்பார்கள்.
அவர்தான்‌ முதலில் கிருத்துவ மதம் மாற மாட்டோம்,
நாங்கள் இந்துக்களாக வே இருப்போம்
ஆனாலும் எம்பெண்களும் குப்பாயம் அணிவார்கள் உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என்று போராட்டத்தை கையில் எடுத்தார்‌.
கேரள மன்னன் படைகள் போராட்டத்தை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.
ஆண்கள் பெண்கள் அனைவரும் அடித்து துவைக்கப்பட்டனர்‌.

இறுதியாக 1859 ல்  சென்னை மாகாணத்தின் கவர்னராக "சார்லஸ் ட்ரெவிலியான்" கொண்டு வந்த பிரகடனத்தின் படி,
கேரள அரசர்கள் சாணார். மக்கள் எந்த மதமாக இருந்தாலும் மேலாடை அணியலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்.
அப்போதும் முலைவரி முழுமையாக நீக்கப்படவில்லை.
அப்போதும் கேரளாவில் ஈழவ,முக்கவாட்டிகள் (மீன் பிடிப்போர்) போன்ற பல சாதி மக்கள் அவதி பட்டுக்கொண்டு தான் இருந்தார்கள்.

ஐயா வைகுண்டரின்‌ பிரச்சாரங்களில் ஈர்க்கப்பட்டவர்கள் கேரளாவில் இருவர்.
ஒருவர்
#நாராயணகுரு
மற்றொருவர்
#ஐயன்காளி.

இதில் நாராயணகுரு ஈழவ சாதியை சேர்ந்தவர்.
இந்த ஈழவ சாதி மக்கள் தெருவில் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு தான் கேரள மக்கள் 
நமது ஐயா பெரியாரை அழைத்து சென்று போராடி,
வெற்றிபெற்று பெரியாருக்கு
#வைக்கம்வீரர் பட்டமும் அளித்தனர்.

நாராயணகுரு,
இந்து மதம் முக்கியம்,
ஆனால்
மக்களுக்கு சுயமரியாதை அதைவிட முக்கியம்
என்று கூறி
ஐயா வைகுண்டர் வழியில் மக்கள் இந்து மதத்திலிருந்து மாறாமல் முலைவரி சட்டத்தை எதிர்த்து
மக்களை போராட வைத்தார்.

ஐயன் காளி இதைவிட சிறப்பானவர்!
இவர் புலையர் இனத்தில் பிறந்தாலும்,
எப்படியோ "களரி"பயிற்சி பெற்று அதில் மிக சிறந்து விளங்கியவர்.
மிகவும் உடல் வலிமையும் கொண்டவர்.
இவர்காலத்தில் கேரளா வந்த "விவேகானந்தர்" கேரளாவை
"சாதி பைத்தியங்கள் வாழும் பைத்தியக்கார விடுதி"என்று சொல்லி விட்டு சென்றார்!

இவரது களரி பயிற்சி காரணமாக
நாயர்கள்
நம்பூதிரிகள்
யாரும் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
"பெருங்கட்டுவிளை"என்ற கிராமத்தில் பிறந்த இவரை,
இவரது போராட்ட முன்னெடுப்புகளின் காரணமாக எல்லோரும் "ஊர் பிள்ளை","மூத்த பிள்ளை" என்று பெருமையோடு அழைப்பார்கள்.
இவரது பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே
1928 ல்
சட்டப்பூர்வமாக முலைவரி நீக்கப் பட்டது.

1891 ல் பிறந்த அம்பேத்காரை போலவே,
புலையர் என்ற தாழ்ந்த சாதியில் பிறந்த ஐயன் காளி,
ஒருவகையில் அம்பேத்காருக்கும் ",முன்னோடி" என்றும் சொல்லலாம்!
1893 லேயே அம்பேத்கர் "கோட்சூட்" போடுவதை போல,
எப்போதும் "செர்வானி" போன்ற ஒரு கோட்,பட்டு அங்கவஸ்திரம்,பட்டு சரிகையுடன் தலைப்பாகை,மணி கட்டிய இரட்டை மாட்டுவண்டியுடன் தலைபாகையுடன் வலம் வந்து பார்பணநம்பூதிரிகளை வெறுப்பேற்றுவார்!

இத்தனை போராட்டங்களுக்கு முதல் வித்திட்ட ஐயா வைகுண்டரை இப்போது "விஷ்ணுவின் அம்சம்" என்று சொல்லிக் கொண்டு அவருக்கு கோவில் கட்டி எந்த பார்பணரை எதிர்த்து போராட்டம் செய்தாரோ அந்த பாராபணரை கொண்டே அந்த கோவிலுக்கு "குடமுழுக்கு விழா"எடுக்கின்றனர் சில நாடார்கள்!
சென்னையில் மேற்கு முகப்பேரில் கூட ஐயா வைகுண்டர் கோயில் ஒன்றை பார்க்கலாம்!

இப்பொழுது புரிகிறதா "கடவுள் இல்லவே இல்லை"என்று அழுத்தம் திருத்தமாக "பெரியார்"ஏன் சொன்னார் என்று!
இல்லை என்றால் இன்று ஒரு கூட்டம் அவருக்கும் கோயில் கட்டி பார்ப்பானை வைத்து குடமுழுக்கு செய்து கொண்டிருக்கும்!

(தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்.
ஆசிரியர்:கிருஷ்ணவேல்).
- கட்செவி வழியாக பெற்றது

No comments:

Post a Comment