Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Wednesday, 1 March 2023

திராவிடம் என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டதா?

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

 வெள்ளைக்காரனா காரணம்

திராவிடம் என்பது ஏதோ வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆதாரத்துடன் பல முறை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி யிருக்கிறார். 

மநுதர்மம் என்ன வெள்ளைக்காரன் எழுதியதா?

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சுவி, நடன், கரணன், கஸன், திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத் திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையைய டைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத் தியாயம் 10; ஸ்லோகம் 44)

திராவிடர்

திராவிடன் என்றால் யார் - திராவிடம் என்றால் என்ன என்று எழுதுகிறதே மநுதர்மம். 

‘அய்ம்பத்தாறு தேசங்களுள் ஒன்று’ என்றும், ’தமிழ்’ என்றும் திராவிடத்திற்குப் பொருள் சொல்கிறதே தமிழ்ப் பேரகராதி!

18 தேசங்களுள் ஒன்றாகத் திராவிடம் பற்றிச் சொல்கிறதே 9-ஆம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு!

8-ஆம் நூற்றாண்டின் குமரில பட்டர் சொல் கிறாரே!

12-ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டில் வரும் ”திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம்” என்ற வரிகளில் வரும் திராவிடம் என்பது என்ன?

தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியனைத் திராவிடன் (திரமிட) என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதியும், அதற்கு பாண்டிய தமிழாபரணன் என்று குறிப்பிடும் தமிழ்ப் பகுதியும் சொல்கிறதே!

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பாகவதம், மச்சபுராணம் என்று இவர்களின் இதிகாச, புராணங்கள் எல்லாம் திராவிடம் என்று குறிப்பிடுகின்றனவே! பவுத்த, சமண இலக்கியங்கள், சீன, பிராக்ருத, பாலி மொழிப் பதிவுகள் எல்லாம் திராவிட என்ற சொல் லைத் தமிழர்கள்- திராவிடர்கள் என்ற நோக்கில் பயன்படுத்தியுள்ளனவே!

வெள்ளைக்காரர்கள் வருகைக்கு முன் தென் னாட்டை, தமிழ்நாட்டைக் குறிக்க திராவிடம் என்ற சொல் திராவிட என்றோ, த்ரமிட என்றோ பயன் படுத்தப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் அம்மையார்? (வானதி சீனிவாசன்)

ஆர்.எஸ்.எஸ். அச்செடுத்துக் கொடுத்த அரதப் பழசான அவதூறுக் குப்பைகளின் ஜெராக்ஸ் நகலைக் கையில் வைத்துக் கொண்டு இப்படியே காலம் தள்ளாமல், அறிவார்ந்த செய்திகளை அருள்கூர்ந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவ்வளவு ஏன்? “நானும் ஒரு பச்சைத் திராவிடன் தான்!” என்று கச்சை கட்டினாரே, அதே பா.ஜ.க.வில் இருக்கும் இன்னொரு சூத்திரத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். ஒரு முறை அவரிடமும் கேட்டுப் பார்க்கலாமே! 

பா.ஜ.க.வில் சூத்திரத் தலைமைகள் உருவாவணதற்கே தமிழ்நாட்டில் உள்ள  திராவிட இன உணர்வு தானே காரணம். ராதா ராஜன்கள் இருந்த இடத்தில் வானதி சீனிவாசன்கள் வந்து சேரவே திராவிட இயக்கம் இல்லா விட்டால் சாத்தியப்பட்டிருக்குமா? ஹெச்.ராஜாக்களும், திருப்பதி நாராயணன்களும், கே.டி.ராகவன்களும் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக முடியாமல், பெயரளவுக்கேனும் சூத்திரத் தமிழர்களை, தமிழச்சிகளை முன்னிறுத்துகிறதே பா.ஜ.க! 

திராவிட இன உணர்வின் பலன் மற்றவர்களை விட, புகைச்சல் பார்ப்பனர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்ப்பனரல்லா தாருக்குத் தெரியாதா என்ன?

திராவிடம் என்ற சொல்லுக்கு இத்தனைப் பெரிய வரலாறு உண்டு. ஆனால் இந்து மதம் என்ற பெயர் யார் வைத்தது? 'வெள்ளைக்காரன் வந்து கொடுத்த பெயர் தான் இந்து' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தனது 'தெய்வத்தின் குரலில்' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தெரியுமா அம்மையாருக்கு?

-  ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

Friday, 22 May 2020

திராவிடமும் வட பகுதி தமிழ்ச் சொல்லே!

சேர நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் பாண்டிய நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சேர, சோழ பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் தான் ஒவ்வொரு பகுதியின் நிலையும். இலக்கியங்களை படைப்பவர்களுக்கு மட்டுமே இவற்றை பற்றி தெரியும். அதனால் பல பகுதி சொற்களை கையாள்வர். தொல்காப்பியர் கேரளாவை அதாவது சேர நாட்டை சேர்ந்தவராதலால் தொல்காப்பியத்தில் சேர நாட்டில் புழக்கத்தில் இருந்த சொற்கள் சிலவற்றை கையாண்டிருப்பார். சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லாத சொற்கள் என்பதால் அவற்றை தமிழ் சொற்கள் கிடையாது என சொல்லமுடியாது. தொல்காப்பியரை தமிழர் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. முற் காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் வழங்கிவந்த்து. இதேபோல் நமக்கு தெரியாத பல சொற்கள் இந்தியா முழுவதும் இருந்த தமிழில் இருந்திருக்கலாம். வட பகுதியில் இருந்த தமிழ் மாற்றமடைந்து பிராகிருதம் என மாறியது. அதிலிருந்து பாலி தோன்றியது. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த சந்தசு என்ற மொழியுடன் பிராகிருதம், பாலி போன்றவற்றை கலந்து சமசுகிருதம் என்று ஒன்றை உண்டாக்கினர். இதனால் தான் பல தமிழ் சொற்களை வடமொழி என சொல்லிக்கொண்டுள்ளோம். வெள்ளம் என்றால் நீர் இதை திருவள்ளுவர் கையாண்டுள்ளார். ஆனால் தமிழ் நாட்டில் வழங்கப்படுவதில்லை, ஆனால் மலையாளத்தில்(கேரளம்) புழக்கத்தில் உள்ளது. வெள்ளம் தமிழ்ச் சொல் இல்லை என சொல்லமுடியுமா? திராவிடமும் வட பகுதி தமிழ்ச் சொல்லே!

- செ.ர.பார்த்தசாரதி

திராவிடமென்றால் என்ன?







படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்


நான் நேற்று முன் நாள் படித்து முடித்த நூல்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ந.சி.கந்தையா அவர்கள் 1948ல் எழுதிய நூல்- திராவிடமென்றால் என்ன?
2008ல் 'தையல் வெளியீடு' சென்னை-14 வெளியிட்டுள்ளது.'திராவிட மொழிகள் தோன்றிய வரலாறு, தமிழ் மொழி வளர்ச்சி,திராவிடம் பற்றிய ஆய்வு, ஆரிய மொழி கலப்பு, வட நாட்டு மொழிகளின் தோற்றம், தமிழை கெடுக்கவந்த ஆரியம் மற்றும் ஆரியமொழி, ஆரிய பண்பாட்டு படையெடுப்பு' என நிறைய ஆதாரங்களுடன் விளக்கி கூறியுள்ளார். படித்து பயன்பெறவேண்டிய நூல். விலை 50ரூ
-22.5.14

Tuesday, 12 May 2020

திராவிடத்தால் எழுந்தோம்!

தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி அதன் பெயராலேயே குளிர்காய நினைக்கும் குணா என்பவர் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற பெயரில் பொய்யும் புரட்டும் உள்ள, ஆதாரமும் அற்ற ஒரு நூலை எழுதியுள்ளார்.
குணாவின் புரட்டு களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து ஆதாரங்களுடன் "ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!" என்ற பெயரில்திராவிடர் கழகத்தின் மாநில இலக்கியத்துறை செயலாளரான மஞ்சை வசந்தன் அவர்கள் ஒரு சிறப்பான ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
இந்நூலை புரட்சிக்கனல் வெளியீடு வெளியிட்டுள்ளது.
பக்கங்கள் - 248
விலை - ரூ150.00

குணாவுக்கு பாவாணர் பதிலடி

ஆரிய கொள்கையும் பண்பாடும் புத்த ஜைன மதங்கள் தமிழகத்திற்கு வந்தன - குணா

ஆரிய மதத்திற்கு எதிராய் வந்தவை புத்தமும், சமணமும்! - பாவாணர் (ஒப்பியன் மொழி நூல்)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Muthu Dvk