மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.
Friday, 19 February 2021
உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்"
Thursday, 2 July 2020
தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்
என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் எழுத்துக்களும் சொற்பொழிவுகளும் அடங்கிய நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டது.
இந்நூலை தொகுத்தவர் புலவர் பா. வீரமணி.
பதிப்பாசிரியர் தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி.
தந்தை பெரியாரின் பேச்சுகளை கருத்துக்களை கால வரிசைப்படி கொடுத்துள்ளனர்.
2019ல் இந்நூல் வெளியிடப்பட்டது.
மூன்று தொகுதிகளும் சேர்த்து ரூ 750/-
- 24.6.20
Friday, 22 May 2020
சமணர் என்போர் சைனரா?
திராவிடர் இயக்க எழுத்தாளர், ஆய்வாளர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் ஆய்வுரை நூலான "சமணர் என்போர் சைனரா?' என்ற மனிதம் பதிப்பகம் வெளியிட்ட நூலை இன்று படித்துமுடித்தேன்.
இன்றைய நிலையில் குஜராத்தில் உள்ள மார்வாடி, சேட்டுகளின் மதமான ஜைன மதமும் சமண மதமும் ஒன்றே என பொதுவாக கூறப்பட்டுவருகிறது. இதன் அடிப்படையில் கடை சங்க நூல்களை ஜைனர்களே எழுதியதாக கூறப்படுகிறது.
இக் கருத்தை சுக்குநூறாக்குகிறார், அவர்கள் அனைவரும் ஆசீவக சமயத்தை சேர்ந்த தமிழர்கள் என்கிறார்.
ஆசீவக சமயமும் ஜைன சமயமும் ஒன்றுபோல் இருந்ததால் பிற்காலத்தில் ஒன்றுபோல் ஆகிவிட்டது.
பல சமயங்கள் இப்படித்தான் ஒன்றாகி இந்து மதம் என்ற போர்வையில் உள்ளது
- 15.4.20
Sunday, 7 April 2019
மையில் கற்களில் இந்தி
2004ல் முதல் முறையாக தமிழ்நாட்டு மையில் கற்களில் தமிழும் ஆங்கிலமும் நீக்கப்பட்டு இந்தியில் மட்டுமே எழுதப்பட்டது.இதை கண்டித்து 27.10.04ல் படத்துடன் விடுதலை நாளேட்டில் எழுதினேன்.
27.11.04ல் தஞ்சையில நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் இந்த இந்தித் திணிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாடு சட்டசபையிலும் நடுவண் அரசின் அவையிலும் விடுதலை நாளேட்டை காண்பித்து வாதிடப்படடது. அன்றைய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
21.12.04ல் இந்தி திணிப்பை நீக்க அன்றைய தமிழ்நாடு முதவ்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நடுவண் அரசுக்கு கடிதம் அனுப்பினார். 24.12.04ல் அன்றைய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் தமிழ் இடம்பெற நடவடிக்கை எடுத்தார்.
மீண்டும் பழையபடி பாஜக ஆட்சியில் இந்தி மட்டுமே என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- 4.4.17 முகநூலில் நான்


