Showing posts with label தொண்டு. Show all posts
Showing posts with label தொண்டு. Show all posts

Monday, 11 April 2022

பெரியாரை சிறு வயதில் இருந்து படித்திருந்தாலும் இந்த வரிகளை படித்த போது தொண்டை கட்டிக் கொண்டது...

பெரியாரை சிறு வயதில் இருந்து படித்திருந்தாலும் இந்த வரிகளை படித்த போது தொண்டை கட்டிக் கொண்டது...*

*1879ஆம் ஆண்டு பிறந்த பெரியார்
1973ஆம் ஆண்டுவரை 
நீண்டநெடிய பெருவாழ்வு 
வாழ்ந்தார்!*

*கடவுள் உண்டு என்று 
உறுதியாக நம்பியவர்கள்,
கடவுளின் பாதாரவிந்தங்களை பற்றியவர்கள்,
கடவுளுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்*
*கடவுளின் தூதுவர்கள்,
கடவுளின் நேரடி முகவர்கள்
இவர்களின் வாழ்நாட்களை விட
தந்தைபெரியாரின் வாழ்நாள் அதிகமாகவும்
அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.*

இதில், பல நடமாடும் தெய்வங்களை அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து உயிரோடிருப்பதை உறுதி செய்யவேண்டியிருந்தது. 
*ஆனால், பெரியார் இறுதிவரை இயங்கிகொண்டேயிருந்தார்.*

*தொண்ணூறு வயது கடந்தும்,*
*முதுமையும் - தள்ளாமையும்* பின்னால்
விரட்டிக் கொண்டுவர...*
*சாவு கையை பிடித்து முன்னால்*
*இழுத்துக்* *கொண்டிருக்க...*
தமிழ்நாட்டின் வீதிகளில்
கிழட்டுச் சிங்கம் போல, 
பிடறிமயிர் அசைந்தாட 
வீரகர்ஜனை புரிந்தவர் பெரியார் ஒருவரே!

*இத்தனைக்கும் அவர் உடல்நிலை முழுமையாக அவருக்கு 
ஒத்துழைத்ததுமில்லை.*
ஒரே சீராக இருந்ததுமில்லை.*

*ஒரே நாளில் பல மைல்கள் பயணம்*
காலையில் ஒரு ஊர்*
மாலையில் வேறு ஊர்,
*இரவு இன்னொரு ஊரில் பொதுக்கூட்டம்.*
இத்தனை அலைச்சலால்...
திடீரென வரும் *காய்ச்சல்,* 
*வயிற்றுப் போக்கு,*
*ஒவ்வாமை* *காரணமாக வாந்தி*,
*குடலிறக்கத்தால்* *ஏற்படக்கூடிய
உயிர்போகும்* வலி...*
*ஒவ்வொரு சொட்டு சிறுநீர் வெளியேறும்போது*  *உண்டாகும்*
*ஊசிகுத்துவது* *போல எரிச்சல்...*
*சிறுநீர் வெளியேற சொருகப்பட்டிருக்கும்*
ரப்பர் குழாய் சிறிது அசைந்தாலும்
அடிவயிற்றில் இடி இறங்கியது போல வலி...
*இத்தனையும் பொறுத்துக்கொண்டுதான்*
*பெரியார் எனும் இயந்திரம்* 
*இயங்கி கொண்டிருந்தது. எதற்காக?*

எனக்கு ஒட்டுபோடுங்கள் என்று கேட்பதற்காக அல்ல...
என்னைப் பதவிக்கு அனுப்புங்கள் என்று கேட்பதற்காக அல்ல...
தன் உறவுகளை, தன் சாதிக்காரர்களை
உயர்த்துவதற்காக அல்ல...🔥🔥🔥

அவரால் உருவாக்கப்பட்டவர்கள்,
ஆதரிக்கப்பட்டவர்கள் அனைவரும்
பெரிய பதவிகளை எட்டிப் பிடித்தபோதும் தனக்கோ, தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ
பட்டம், பதவி, பாராட்டு என எதையும் எதிர்பாராமல், 
வசைச்சொல்லுக்கு அஞ்சிடாமல் 
தொண்டு செய்தே 
பழுத்தபழம்,
அந்த ஈரோட்டு கிழம்!🔥🔥🔥

குளித்து முடித்து, ஒப்பனை செய்து,
முகத்தை திருத்திக் கொண்டு, 
வாசனாதி திரவியங்களை பூசிக்கொண்டு,
உயர்வான உடையணிந்து
மக்களிடத்தில் வலம் வந்தவரல்ல அவர்.

*தன் சட்டை துவைத்து 
எத்தனை நாளாயிற்று?*
*அனிந்திருக்கும் சட்டையில் 
பொத்தான்கள்இருக்கிறதா?* 
பொத்தல்கள் இருக்கிறதா?*

*இடுப்பிற்கு கீழே...*
*இறங்கிய* *குடலையும்,*
*பெருத்த* *விதைப்பையையும்* 
*மறைத்துக்கட்டிய* *கைலி* 
*சொட்டுகின்ற சிறுநீரால்*
*ஈரமாகிறதே...*

முன்னறிவிப்பின்றி 
வெளியேறும் மூத்திரத்தை 
வாளியில் பிடித்து வைத்துக்
கொண்டு மேடையில் பேசுகிறோமே?
மக்கள் முகம்சுளித்தால் 
மவுசு போய்விடுமே? 
என்றெல்லாம் 
அவர் கவலைப் பட்டதே இல்லை!
இறுதிவரை இயங்கிகொண்டே இருந்தார்.

அவர் கவலைப்பட்டதெல்லாம்....
வீழ்ந்து கிடக்கும் இந்த மக்களின் விடுதலைக்கு வழி எது? 
என்பதைப் பற்றித்தான்

பெரியாருக்கு சிகிச்சையளித்த 
வேலூர் சிஎம்சி மருத்தவமனையின் மருத்துவர் ஜான்சன் பெரியாரின் உடல் நிலையை பரிசோதித்துவிட்டு சொன்னார்;
"முற்றிலும் பழுதடைந்த கடிகாரம்
நம்ப முடியாத வகையில் சரியான நேரத்தைக் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது"

இந்த கடிகாரத்தை இறக்குமதி கடிகாரம் என்று கூறி ஏற்க மறுப்பவர்கள்,
எண்கள் தமிழாக இல்லையென்று
இடக்கு பேசுபவர்கள்,
கடிகார முட்களின் நிறம் கருப்பாக இருக்கிறதே என்று வெறுப்பவர்கள்,
கடிகாரத்தின் ஓசை இனிமையாக இல்லையெனும் இன்னிசை விரும்பிகள் எவரும்...

ஏற்கனவே இருந்த கடிகாரங்கள் ஏன் ஓடவில்லை என்பது பற்றியோ,
சாவி கொடுத்தும் இயங்காத 
காரணம் பற்றியோ,
இந்தக் கடிகாரம் தான் நமக்கு சரியான நேரத்தை காட்டிக் கொண்டிருந்தது
என்பது பற்றியோ அறிவுபூர்வமாக சிந்திக்கலாமே..❤❤❤

Friday, 12 February 2021

பெரியாரின் மானம் பாரா நொண்டு

பெரியாரை சிறு வயதில் இருந்து படித்திருந்தாலும் இந்த வரிகளை படித்த போது தொண்டை கட்டிக் கொண்டது எழுதிய தோழருக்கு வணக்கங்கள் பல ....... 
1879ஆம் ஆண்டு பிறந்த பெரியார்
1973ஆம் ஆண்டுவரை 
நீண்டநெடிய பெருவாழ்வு 
வாழ்ந்தார்!

கடவுள் உண்டு என்று 
உறுதியாக நம்பியவர்கள்,
கடவுளின் பாதாரவிந்தங்களை பற்றியவர்கள்,
கடவுளுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்,
கடவுளின் தூதுவர்கள்,
கடவுளின் நேரடி முகவர்கள்
இவர்களின் வாழ்நாட்களை விட
தந்தைபெரியாரின் வாழ்நாள் அதிகமாகவும்
அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.

இதில், பல நடமாடும் தெய்வங்களை அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து உயிரோடிருப்பதை உறுதி செய்யவேண்டியிருந்தது. 
ஆனால், 
பெரியார் இறுதிவரை இயங்கிகொண்டேயிருந்தார்.

தொண்ணூறு வயது கடந்தும்,
முதுமையும் - தள்ளாமையும் பின்னால்
விரட்டிக் கொண்டுவர...
சாவு கையை பிடித்து முன்னால்
இழுத்துக் கொண்டிருக்க...
தமிழ்நாட்டின் வீதிகளில்
கிழட்டுச் சிங்கம் போல, 
பிடறிமயிர் அசைந்தாட 
வீரகர்ஜனை புரிந்தவர் பெரியார் ஒருவரே!

இத்தனைக்கும் அவர் உடல்நிலை முழுமையாக அவருக்கு 
ஒத்துழைத்ததுமில்லை.
ஒரே சீராக இருந்ததுமில்லை.

ஒரே நாளில் பல மைல்கள் பயணம்
காலையில் ஒரு ஊர், 
மாலையில் வேறு ஊர்,
இரவு இன்னொரு ஊரில் பொதுக்கூட்டம்.
இத்தனை அலைச்சலால்...
திடீரென வரும் காய்ச்சல், 
வயிற்றுப் போக்கு,
ஒவ்வாமை காரணமாக வாந்தி,
குடலிறக்கத்தால் ஏற்படக்கூடிய
உயிர்போகும் வலி...
ஒவ்வொரு சொட்டு சிறுநீர் வெளியேறும்போது உண்டாகும்
ஊசிகுத்துவது போல எரிச்சல்...
சிறுநீர் வெளியேற சொருகப்பட்டிருக்கும்
ரப்பர் குழாய் சிறிது அசைந்தாலும்
அடிவயிற்றில் இடி இறங்கியது போல வலி...
இத்தனையும் பொறுத்துக்கொண்டுதான்
பெரியார் எனும் இயந்திரம் 
இயங்கி கொண்டிருந்தது. எதற்காக?

எனக்கு ஒட்டுபோடுங்கள் என்று கேட்பதற்காக அல்ல...
என்னைப் பதவிக்கு அனுப்புங்கள் என்று
கேட்பதற்காக அல்ல...
தன் உறவுகளை, தன் சாதிக்காரர்களை
உயர்த்துவதற்காக அல்ல...

அவரால் உருவாக்கப்பட்டவர்கள்,
ஆதரிக்கப்பட்டவர்கள் அனைவரும்
பெரிய பதவிகளை எட்டிப் பிடித்தபோதும்
தனக்கோ, தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ
பட்டம், பதவி, பாராட்டு என எதையும் எதிர்பாராமல், 
வசைச்சொல்லுக்கு அஞ்சிடாமல் 
தொண்டு செய்தே 
பழுத்தபழம்,
அந்த ஈரோட்டு கிழம்!

குளித்து முடித்து, ஒப்பனை செய்து,
முகத்தை திருத்திக் கொண்டு, 
வாசனாதி திரவியங்களை பூசிக்கொண்டு,
உயர்வான உடையணிந்து
மக்களிடத்தில் வலம் வந்தவரல்ல அவர்.

தன் சட்டை துவைத்து 
எத்தனை நாளாயிற்று?
அனிந்திருக்கும் சட்டையில் 
பொத்தான்கள்இருக்கிறதா? 
பொத்தல்கள் இருக்கிறதா?

இடுப்பிற்கு கீழே... 
இறங்கிய குடலையும்,
பெருத்த விதைப்பையையும் 
மறைத்துக்கட்டிய கைலி 
சொட்டுகின்ற சிறுநீரால்
ஈரமாகிறதே...

முன்னறிவிப்பின்றி 
வெளியேறும்மூத்திரத்தை 
வாளியில் பிடித்து வைத்துக்
கொண்டு மேடையில் பேசுகிறோமே?
மக்கள் முகம்சுளித்தால் 
மவுசு போய்விடுமே? 
என்றெல்லாம் 
அவர் கவலைப் பட்டதே இல்லை!
இறுதிவரை இயங்கிகொண்டே இருந்தார்.

அவர் கவலைப்பட்டதெல்லாம்....
வீழ்ந்து கிடக்கும் இந்த மக்களின் விடுதலைக்கு வழி எது? 
என்பதைப் பற்றித்தான்

பெரியாருக்கு சிகிச்சையளித்த 
வேலூர் சிஎம்சி மருத்தவமனையின் மருத்துவர் ஜான்சன் பெரியாரின் உடல் நிலையை பரிசோதித்துவிட்டு சொன்னார்;
"முற்றிலும் பழுதடைந்த கடிகாரம்
நம்ப முடியாத வகையில் சரியான நேரத்தைக் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது"

இந்த கடிகாரத்தை இறக்குமதி கடிகாரம் என்று கூறி ஏற்க மறுப்பவர்கள்,
எண்கள் தமிழாக இல்லையென்று
இடக்கு பேசுபவர்கள்,
கடிகார முட்களின் நிறம் கருப்பாக இருக்கிறதே என்று வெறுப்பவர்கள்,
கடிகாரத்தின் ஓசை இனிமையாக இல்லையெனும் இன்னிசை விரும்பிகள்
எவரும்...

ஏற்கனவே இருந்த கடிகாரங்கள் ஏன் ஓடவில்லை என்பது பற்றியோ,
சாவி கொடுத்தும் இயங்காத 
காரணம் பற்றியோ,
இந்தக் கடிகாரம்தான் நமக்கு சரியான நேரத்தை காட்டிக் கொண்டிருந்தது
என்பது பற்றியோ சிந்திப்பதில்லை

#தமிழ்நாசர்!

Tamil Sivakkannu

- ரவிசங்கர் ரவிசங்கர், முகநூல் பதிவு, 13.2.2017

பெரியாரைப் பாராட்டிய தினமலர் (சிக்கனமும் தொண்டறமும்)


ஈ.வெ.ரா. 25 ஆயிரம் ரூபாயை மடியில் 
கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்குப் போய் இதோ பணம் இருக்கிறது… என்று சொன்ன சம்பவம் ஒன்று நடந்தது.

 என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, ஒரு வழக்கில்
தண்டனை கொடுத்துவிட்டனர் (1945). அன்று தீர்ப்பு சொன்னபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம்.

 ஜாமினில் எடுப்பதானால் பணம் வேண்டி இருக்கும் என்று யாரோ கூறினர். அதைக் கேள்விப்பட்ட  ஈ.வெ.ரா., 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்தார். 

" இதோ பணம், 25 ஆயிரம் நான் தருகிறேன். ஜாமினில் எடுங்கள் " என்றார். ஆனால் , ஜாமினில் 
எடுக்க முடியவில்லை. தவித்துப் போனார், ஈ.வெ.ரா.

. அண்ணாதுரை முதல்வரான பின், அவருக்குச் சிகிச்சை அளிக்க அமெரிக்கா செல்ல வேண்டும் 
என்று தீர்மானிக்கப்பட்டது. பெரும் அளவில் பணம் செலவாகும் என்று பேச்சு எழுந்தது. அதெல்லாம் அரசு செலவுதான். 

ஆனாலும், ஈ.வெ.ரா. பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக, எவ்வளவு செலவானாலும், நான் தருகிறேன்…என்று மன்றாடியபோது, கலங்காத கண்களும் கலங்கின..

ஒருபுறம் பொதுப்பணத்தில் ஒரு காசுகூட
தொடாத சிக்கன சிகாமணி. 

மறுபுறம், உற்றவருக்கு ஓடி வந்து உதவும் மனிதாபிமானம்.

இவை, ஈ.வெ.ரா., எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

- ”தினமலர்” வார மலர் 20.1.2013 பக்கம் 15

நன்றி : Sirpi Rajan

Friday, 2 February 2018

வேதனையிலும் பெரியாரின் தொண்டு

வேதனையாக இருக்கிறது!

எனக்கு 90 வயதாகிவிட்டது. கால் விரலெல்லாம் மடங்கி விட்டது. எழுதினால் கை நரம்பெல்லாம் சுருங்கி வலி எடுக்கிறது. அப்படி இருக்கும் நான் எதற்காக இப்படி அலைய வேண்டும்? இதன் மூலம் பொருள் சேர்த்துக் கொண்டேனா? அல்லது பங்களா கட்டிக் கொண்டேனா? எனக்கிருந்த பங்களா, சொத்துகளை  விற்று இயக்கத்திற்குப் போட்டு விட்டு அலைகிறேன் என்றால், ஒரு மனிதன் சோற்றைத் தின்றுவிட்டு எதற்காக வீட்டில் சும்மா இருந்து கொண்டு இருக்க வேண்டும். நம் சமுதாய இழிவைப் போக்க நம்மால் இயன்றதைச் செய்துவிட்டுப் போவோமே என்று தானே அலைகின்றேன். இதைப் புரிந்து கொள்ள நம் இனத்தைச் சார்ந்தவர்களால் முடியவில்லையே  என்பதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.

(பெரியார், விடுதலை-29.07.1968)