Friday 2 February 2018

வேதனையிலும் பெரியாரின் தொண்டு

வேதனையாக இருக்கிறது!

எனக்கு 90 வயதாகிவிட்டது. கால் விரலெல்லாம் மடங்கி விட்டது. எழுதினால் கை நரம்பெல்லாம் சுருங்கி வலி எடுக்கிறது. அப்படி இருக்கும் நான் எதற்காக இப்படி அலைய வேண்டும்? இதன் மூலம் பொருள் சேர்த்துக் கொண்டேனா? அல்லது பங்களா கட்டிக் கொண்டேனா? எனக்கிருந்த பங்களா, சொத்துகளை  விற்று இயக்கத்திற்குப் போட்டு விட்டு அலைகிறேன் என்றால், ஒரு மனிதன் சோற்றைத் தின்றுவிட்டு எதற்காக வீட்டில் சும்மா இருந்து கொண்டு இருக்க வேண்டும். நம் சமுதாய இழிவைப் போக்க நம்மால் இயன்றதைச் செய்துவிட்டுப் போவோமே என்று தானே அலைகின்றேன். இதைப் புரிந்து கொள்ள நம் இனத்தைச் சார்ந்தவர்களால் முடியவில்லையே  என்பதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.

(பெரியார், விடுதலை-29.07.1968)

No comments:

Post a Comment