Showing posts with label இராஜாஜி. Show all posts
Showing posts with label இராஜாஜி. Show all posts

Monday, 28 October 2024

இராஜகோபாலாச்சாரி யார்?

 


 2016உண்மை இதழ் 

– கி.தளபதிராஜ்

“ஆச்சாரியார்’’

“மூதறிஞர்’’

“சக்கரவர்த்தி’’ என்று பார்ப்பனப் பரிவாரங்களால் பட்டப்பெயர் சூட்டப்பட்ட இராஜகோபாலாச்சாரியார் 10.12.1878இல் சேலத்தில் பிறந்து. தனது 94ஆம் வயதில் 25.12.1972இல் சென்னையில் மறைந்தார். தந்தை பெரியார் அவர்களின் அன்பிற்குரிய நண்பராய் இருந்தபோதிலும் வாழ்நாள் முழுதும் தனது இனத்திற்கு நல்ல விசுவாசியாக, சேவகராக வாழ்ந்தார் என்பதையும் தாண்டி பார்ப்பன தர்மத்தைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால்தான் பெரியாரை தன் அன்பார்ந்த எதிரி என்றார்.  அவரின் உண்மை உருவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும். சில தகவல்கள் அவரை மட்டுமன்றி ஆரியத்தையும் தோலுரித்துக் காட்டும்.

மனுதர்மவாதி:

சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலக் கட்டங்களிலேயே அதன் செயல்பாடுகளைக் கண்டு கொதித்தவர் இராஜாஜி. இந்துமத, வேத, புராண, சாஸ்திரக் குப்பைகளை சுயமரியாதை இயக்கம் கேள்விக் குறியாக்கி, பார்ப்பனர்களின் வர்ண பேத சூழ்ச்சிகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை தீயிட்டுப் பொசுக்கிய நேரத்தில் மனுதர்மத்திற்கு ஆதரவாக வக்காலத்து போட்டவர் இராஜாஜி. “மனுதர்மம் அருமையான நீதியைக் கொண்டது. மனுசாஸ்திரத்தை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம்’’ என்று சொல்லி சுயராஜ்யப் பத்திரிக்கையிலே தொடர் கட்டுரைகளைத் தீட்டியதோடு, திருவில்லிப்புத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் தாலுக்கா மாநாட்டில் “சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாக குற்றப்பத்திரிக்கை வாசித்து இவர்களின் ஜாதி துவேஷத்தை ஒழிக்க வேண்டும்’’ என தன் தலைமை உரையில் குறிப்பிட்டவர்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டி காங்கிரசால் ஒதுக்கப்பட்ட நிதியை தனது பெயரில் வைத்துக்கொண்டு அதனால் ஒரு காரியமும் செய்யாமல், மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுத்ததாக ‘குடியரசு’ பத்திரிக்கை குற்றம் சாட்டியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி “பிறவியில் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது’’ என இயற்றிய தீர்மானத்தை எதிர்த்து இராஜினாமா கடிதம் கொடுத்ததோடு தனது நண்பர்களையும் இராஜினாமா கடிதம் கொடுக்க வற்புறுத்தியவர் இராஜாஜி. பால்ய விவாக தடைச்சட்டத்தை பார்ப்பனர்கள் எதிர்த்துபோது, பிராமணர் -_ பிராமணர் அல்லாதார் சண்டை இல்லாதுபோனால் தென்னாட்டு பிராமணர்கள் அந்தச் சட்டத்தை எதிர்த்திருக்க மாட்டார்கள் என்று சூழ்ச்சியாகப் பேசியவர்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் (26.6.1952) கலந்துகொண்டு, “அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்ய வேண்டும். சலவைத் தொழிலாளர்களாகிய நீங்கள், துணியைக் கிழிக்காமல் சலவை செய்வது எப்படி என்பதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் படிக்க ஆரம்பித்தால் இந்தத் தொழிலை வேறு யார்தான் செய்வார்கள்?’’ என்று சமூகநீதிக்கு எதிராய் தன் பிறவித் திமிரை வெளிப்படுத்தியவர்.

கொலையாளி:

மோட்டார் கார்கள் பயன்படுத்தப்படாத காலம். நாமக்கல்லிற்கு ஒரு வழக்கு தொடர்பாக சென்று குதிரைவண்டியில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார் இராஜாஜி. நள்ளிரவு நேரம். வரும் வழியில் சுங்கச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட, சுங்கப் பணத்தை வசூல்செய்வதற்காக வண்டியின் பின்புறமாக வந்து இராஜாஜியை எழுப்ப முயன்ற காவல்காரரை வழிப்பறிக் கொள்ளையன் என நினைத்து இராஜாஜி தன் கைத்துப்பாக்கியால் சுட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்தக் காவல்காரர் இறந்துவிட்டார். தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்திக்கு ஆதரவு:

1937இல் சென்னை மாகாண பிரதமராக பதவி வகித்தபோது இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்த எந்த மாகாணத்திலும் கொண்டு வரப்படாத இந்தி மொழி கட்டாயப் பாடத் திட்டத்தை கொண்டு வந்தவர். 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது, பொப்பிலி அரசர் விலகுவதன் மூலம் நீதிக்கட்சியையே செயலிழக்கச் செய்துவிடலாம் எனக் கருதி, பதவி விலக வில்லையெனில் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதாவைப் பயன்படுத்தி உங்கள் ஜமீன் சொத்துக்களை அரசுடமையாக்கி விடுவேன் என்று அவரை மிரட்ட, பொப்பிலி ராஜா பதவி விலகியதும், நீதிக்கட்சித் தலைவர்களால் பெல்லாரி சிறையில் அடைபட்டிருந்த பெரியார் நீதிக்கட்சித் தலைவராக்கப்பட்டதால் ஆச்சாரியார் ஆப்பசைத்தக் குரங்கானார்.

இந்தி எதிர்ப்புப் போரில் கைதாகி சிறையில் மாண்ட தாளமுத்து குறித்து சட்டமன்றத்தில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியபோது, “தற்குறி தாளமுத்து தேவையில்லாமல் சிறைபட்டு மாண்டார்’’ என தன் அதிகார மமதையை வெளிப்படுத்திய சக்கரவர்த்தி!

மொழிவாரி மாநில எதிர்ப்பு:

மொழிவாரி மாநிலக் கோரிக்கை வலுவடைந்த நேரத்தில் அதை வீழ்த்தும் விதமாக பசல்அலி கமிஷன் பரிந்துரைப்படி இந்தியாவை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தியப் பகுதியாகக் கொண்டு தட்சிணப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என அய்ந்து பிரதேசங்களாகப் பிரிக்கப் போவதாக பிரதமர் நேரு அறிவித்தார். நேருவின் இந்தப் பிரகடனத்தை இராஜாஜி ஆதரித்ததோடு அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், “மொழிவாரி மாநில அரசு கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள்’’ எனக் கூச்சலிட்டார். அய்தராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையிலும் இதே கருத்தை வெளியிட்டார்.

1952இல் ஆந்திரம் தனி மாநிலமாக பிரிந்துவிட்ட நிலையில், சென்னை ராஜதான்ய அரசவையை தமிழில் நடத்த வேண்டும் என ஒரு மசோதா மேல்சபையில் கொண்டு வரப்பட்டபோது காங்கிரஸ் ஆதரவுடன் அந்த மசோதாவை எதிர்த்து தோற்கடித்தவர் இராஜாஜி.

சக்கரவர்த்தி திருமகன்:

திராவிடர் இயக்கம் இராமாயணத்துக்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது ‘கல்கி’ வார இதழில் ‘சக்ரவர்த்தித் திருமகன்’ என்று இராமாயணக் கதை எழுதியவர் இராஜாஜி. மூகாஜி என்ற பெயரில் முரசொலியில் இராஜாஜிக்குப் பதிலடி கொடுத்தார் கலைஞர். டெல்லியில் ராமலீலா என்ற பெயரில் இராவணன் உருவப் பொம்மைகளை எரிப்பது தொடர்ந்தால் தென்னாட்டிலும் இராமனை எரித்து இராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும் என அதில் எச்சரித்தார். இது நடந்ததோ 1954இல். சரியாக இருபது வருடங்களுக்குப் பின்னர் டெல்லியில் ‘இராமலீலா’ நிகழ்வில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கலந்துகொள்ள; ‘இராவண லீலா’வை, அன்னை மணியம்மையார் தன் தலைமையில் சென்னை பெரியார் திடலில் தோழர்களின் உணர்ச்சிப் பிழம்பாய் நடத்தினார். இராமன், இலட்சுமணன், சீதை உள்ளிட்ட உருவ பொம்மைகளை தீக்கிரையாக்கி தோழர்கள் கைதாகினர்.

குலக்கல்வித் திட்டம்:

1954இல் தமிழக முதல்வராகப் பதவிவகித்த இராஜாஜி ஒரு கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். கிராமப்புற மாணவர்களின் பள்ளிப் படிப்பை மூன்று மணி நேரமாக குறைத்து மீதி நேரத்தில் அவரவர் பாரம்பரியத் தொழிலை செய்யலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வைத் தடுக்கும் இந்தத் திட்டத்தின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்ட பெரியார், 24.1.1954 அன்று ஈரோட்டில், “ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு’’ மாநாட்டைக் கூட்டினார். ஆச்சாரியா£ர் தொடர்ந்து அத்திட்டத்தைக் கைவிட மறுக்கவே சென்னையில் 31.1.1954இல் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி அதில் ஆச்சாரியாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

ஆச்சாரியார் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாக இருக்கப் போகிறது. “தோழர்களே! பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். நாள் குறிக்கிறேன்’’ என அக்கிரஹார கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். நாகையிலிருந்து குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை சென்னையை நோக்கி புறப்பட்டது. பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் ராஜாஜி பதவியை விட்டே ஓடினார். அந்தத்  திட்டம் கைவிடப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

ராஜாஜி – காமராஜர் – நேரு:

நாகர்கோவில் மக்களவை இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றபோது அவர் இந்தியாவின் துணைப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பத்திரிக்கைகள் எழுதின. அதைக் கண்டு பொறுக்க இயலாத இராஜாஜி, “டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா வேலைக்குத்தான் காமராஜ் லாயக்கே தவிர வேறு எந்த பொறுப்புக்கும் லாயக்கற்றவர்’’ என தன் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டினார்.

“இன்று இராஜாஜிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் ஏமாற்றம்தான் அவரை காங்கிரஸ் எதிரியாக்கியிருக்கிறது. இராஜாஜிக்கு வேதனை தருவது இதுதான். அதாவது நாகரீகமற்ற, படிப்பில்லாத, பட்டிக்காட்டுப் பேர்வழி (மிறீறீவீtமீக்ஷீணீtமீ றிஷீஷீக்ஷீ) என தாம் கருதிக் கொண்டிருக்கும் ஒருவர், தாம் முன்பு இருந்த இடத்தில் அமர்ந்து-கொண்டு நன்றாக நிர்வாகம் நடத்திக்கொண்டு வருகிறாரே? என்ற மனவேதனைதான் ராஜாஜியை வாட்டுகிறது’’ என காங்கிரஸ் பார்லிமென்ட் கூட்டத்திலேயே பிரதமர் நேரு இராஜாஜியை விமர்சித்து எதிர்த்தார்.

(‘தினமணி’ சித்தூர் பதிப்பு: 25.3.1960)

பொதுச் சொத்தை தனதாக்க முயற்சி:

முதலமைச்சர், ஆளுநர், கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர் என சகல பதவிச் சுகத்தையும் சொட்டச்சொட்ட அனுபவித்த இராஜாஜி தான் நெடுங்காலம் வாழப்போவ-தாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத் தொகையை கணக்கிட்டால், தான் வசிக்கும் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும், எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுவதும் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து-விட்டது.

(இந்தச் செய்தி ஆச்சாரியாரின் பென்ஷன் குறித்த தகவல் புத்தகத்தில் உள்ளது.)

ஆரியத்தின் அசல் வடிவம் இராஜகோபாலாச்சாரியார்!

Sunday, 25 July 2021

சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?

 ‘புளுகு’ மலருக்கு பதிலடி!

சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?

21.7.2021 நாளிட்ட ‘தினமலரில் (பக்கம் 11) நாஞ்சில் நாடு கண்ட நம் டி.வி.ஆர்எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளதுஅதில் ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது.

சென்னையை - ஆந்திராவின் தலைநகராக்குவது குறித்த பிரச்சினை அதுஎன்ன எழுதுகிறது தினமலர்?

ஆந்திரர்களின் ஆர்ப்பாட்டங் களுக்கும்போலிக் கண்ணீருக்கும் மத்திய சர்க்கார் பணிந்து சென்னையை ஆந்திராவின் தற்காலிகமாக தலைநகராக்கத் தீர்மானித்திருக்க ராஜாஜி ஒருவர் முழு பலத்தோடு எதிர்த்ததன் பலனாக, “பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது போலசென்னையைத் தமிழர்களுக்கு கொண்டு வந்தார்” என்று தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் உண்மை நிலை என்ன என்பது விளக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சென்னை தலைநகரப் பிரச்சினை தொடர்பாக நீதிபதி வாஞ்சு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953 இல் வாஞ்சு குழுவின் அறிக்கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்அவர் தம் பரிந்துரையில்,சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம்ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமை யும் இல்லைவிருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம்அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாதுஅதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும்இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை” என்பதை வாஞ்சு உதாரண மாகக் காட்டியுள்ளார்இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக். 5)

சென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத் தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றும் கூறியுள்ளார். “ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும்சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன்.” (பக். 8) அதற்கு உதாரணத்தையும் வாஞ்சு காட்டியுள்ளார். “ஒடிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது” என்கிறார். (பக். 9) “ஆந்திராவின் தலைநகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னையை விட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாத வர்கள் கூறுகிறார்கள்அது உடனே முடியக் கூடிய காரியமல்ல”. (பக். 10)

சென்னை மருத்துவக் கல்லூரிபொறியியல் கல்லூரிசட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36 இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித்தரவேண்டும்அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும்“. (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கருநாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங் களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது.சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக். 26)`

சென்னை பிரமுகர்கள் ஆலோசனை

அனைத்துக் கட்சிக்கூட்டம்வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்கண்டனம் அனுப்புவதற்காக சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகரா யர் கட்டிடத்தில் 13.02.1953இல் மாலை 4 மணிக்கு சென்னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.

அக்கூட்டத்திற்கு தந்தை பெரியார்,  சர்.முகமது உஸ்மான்,  மேயர் டி.செங்கல்வராயன்மாஜி மந்திரிகள்எம்.பக்தவச்சலம்டி.பரமேஸ்வரன்எஸ்.முத்தையா முதலியார்மாஜி மேயர்கள்ராமநாதன் செட்டியார்ராதா கிருஷ்ணபிள்ளைசிக்யதுல்லா சாயுபுமாஜி அய்க் கோர்ட் ஜட்ஜ் பிபாஷ்யம் அய்யங்கார்மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல்கரையாளர்பார்லிமென்ட் மெம்பர் பி.எம்லிங்கேஸ்வரன்எம்.எல்.சி., .பொ.சிவஞான கிராமணிகேவிநாயகம்டாக்டர் வி.கேஜான்எம்.பிதாமோதரன்லக்கபராய்நஜீர் உசைன்தெபொமீனாட்சி சுந்தரம்மீனாம்பாள் சிவராஜ்செரியன் ஆகிய தமிழ்கேரளகருநாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள்வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்துபண்டித நேருவுக்கு ஒரு அறிக்கை அனுப்புவது என்றும்அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும்ஒருமனதாக முடிவு செய்தனர்அதில் மேற்கண்டவர்கள் கையெழுத்திட்டனர்பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்திய சர்க்காருக்கு வேண்டுகோள்!

அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-நீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தகவல்கள் பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றனஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம் சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றனஆந்திர  மாநிலத்தின் தலைநகரமானதுஉயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட சென்னை நகரத்தில் இருக்கக்கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம்ஆந்திரத் தலைநகரையும்உயர்நீதி மன்றத்தையும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் விருந்தாளியாகக்கூட இருப்பதற்கு அனுமதிப்பதால் அநாவசிய மான தொல்லைகளும் சர்ச்சைகளும் ஏற்படும்இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும்ஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சவுகர்யமாகவும் நேச மனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம்ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகையிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்ததால் அநாவசியமான தகராறுகள்சர்ச்சைகள் ஏற்படுகிறதுஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின்தமிழ்கன்னடம்மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்பகாலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப்ராயப்படுகிறார்கள்ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்இந்த நிலையில் ஆந் திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிக வும் ஆட்சேபகரமானதுசென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை மாநிலத்தின் தலைநகராக இருக்கும்ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்துஆந்திர தலை நகரையும்உயர்நீதி மன்றத்தையும்தற்காலிகமாகக்கூட சென்னை நகரத் தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யா மலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானிக்கப்பட்டது. (‘விடுதலை’, 14.02.1953)

தந்தை பெரியார் வேண்டுகோள்

சென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் தந்தை பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டதுவிரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.சென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதாவதுமாட்சிமிக்க மேயர் அவர்களேதாய்மார்களேதோழர்களேநான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.ஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட் டத் தகுந்த காரசாரமான பேச்சை எதிர்பார்த்து ஏமாற்ற மடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காதுஇந்தக் கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும்இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறதுகாங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலை காட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாய்ப்பென்றே கருதுகிறேன்ஆதலால் இந்தக் கூட்டத் தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன்வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோசங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன்அப்படி எதை யாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என் னைக் கூப்பிட மாட்டார்கள்அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற முறையில் நமது குறை பாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.நம் காரியம்நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறதுஅதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றனசந்தர்ப்பங்களும் இருக்கின்றனநாம் கடிவாளம் இல்லாத குதிரைகள்மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர் பார்க்கக் கூடுமா?இந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசிஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்ட டமாகும்ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அளவுக்கே நமது எல்லை இருக்க வேண்டும்.ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அளவுக்குப் பேசுகிறேன் என்றார்.

சென்னை நகரம் தமிழ்நாட்டுக்குரியதே என்பதை வலியுறுத்தி 1.2.1953 அன்று பிற்பகல் சென்னை ராபின்சன் பூங்கா அருகிலிருந்து புறப்பட்டன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்ட அந்த ஊர்வலத்தில் தந்தை பெரியார் அமர்ந்து வர சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது - சென்னை தமிழ்நாட்டுக்கு உரியது என்றும்மொழிவாரி மாநிலம் என்று ஆன பிறகு நிர்வாக வசதிக்காக ஆந்திராவோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் வலியுறுத்திப் பேசினார்.

15.2.1953 சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியிலும்சென்னையில் தற்காலிகமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தை வைத்துக் கொள்ளலாம்அரசு அலுவலகங்களையும் சென்னையில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி வாஞ்சு குழுவின் அறிக்கையை கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதமிழக உரிமை பாதுகாப்பு நாள் (22.2.1953) தமிழ்நாடெங்கும் கொண்டாடுவது என்று குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத்துக்கு கறுப்புக் கொடி கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வளவு நிகழ்வுகளும் (அனைத்துக் கட்சிக்கூட்டம் உட்படதலைநகரைக் காப்பாற்றுவதற்காக நடைபெற்றுள்ளனஇவற்றுள் எதிலும் தலைகாட்டாத ராஜாஜிதான் சென்னையை மீட்டாராம் - சொல்லுகிறது பூணூல் மலரான ‘தினமலர்’. (21.7.2021, பக்கம் 11)

ஒரு எழுபது ஆண்டுகளுக்குள் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வையே தலைகீழாக புரட்டிபார்ப்பனர்களால் அவர்களின் ஊடகங்களால் திரிக்க முடிகிறது என்பதை கவனிக்க வேண்டும்புளுகுப் பூணூல்கள் எச்சரிக்கைஎச்சரிக்கை!!