Tuesday, 11 August 2026

விரும்பியபடியே குழந்தை பெறலாம்! மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி

 விரும்பியபடியே குழந்தை பெறலாம்!

- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி



பிறக்கப் போகும் குழந்தையை நம் விருப்பப்படியே ஆணாகவும், பெண்ணாகவும் உண்டாக்கலாம்.


ஆணின் விந்துவில் உள்ள 'உயிரணு'வும் (ஆணின் ஒரு துளி விந்துவில் பல இலட்சக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன) பெண்ணின் 'அண்ட முட்டையும் (பெண்ணிற்கு மாதந்தோறும் அதாவது 28 நாள்களுக்கு ஒரு அண்ட முட்டை தான் உண்டாகும்) இணைந்து கருவாக மாறி வளர்ந்துதான் குழந்தையாக பிறக்கிறது.


ஆணின் விந்துவில் இரண்டு வகையான உயிரணுக்கள் உள்ளன. அவை 'X' பால் குரோமோசோமை கொண்ட உயிரணுக்களும், Y பால் குரோமோசோமை கொண்ட. உயிரணுக்களும் ஆகும்.


ஆனால் பெண்ணின் அண்ட முட்டைகள் ஒரே வகையை சேர்ந்ததாகும். அதாவது 'X' பால் குரோமோசோமை மட்டுமே கொண்ட உயிரணு (அண்ட முட்டை) வாகும்.


ஆண் விந்துவிலுள்ள ×' பால் குரோமோசோமை கொண்ட உயிரணு ஒன்றும்; பெண் அண்ட முட்டையான ' 'X' பால் குரோமோசோம் கொண்ட உயிரணுவும் இணைந்தால் 'XX' என்றாகி பெண் குழந்தையாக உண்டாகும்.


இதற்கு மாறாக ஆண் விந்து விலுள்ள குரோமோ Y' சோமை கொண்ட உயிரணு ஒன்றும் பெண் அண்ட முட்டையான 'X' பால் குரோமோசோம் கொண்ட உயிரணுவும் இணைந்தால் 'XY' என்றாகி ஆண் குழந்தையாக உண்டாகும்.


அதாவது ஆணின் உயிரணு தான் (சேர்வதைப் பொருத்து) ஆணா? பெண்ணா? என்பதை உறுதிப்படுத்துகின்றது.


ஆணின் விந்துவிலுள்ள இரண்டு வகையான உயிரணுக் களையும் தனித்தனியாக பிரித்து எடுத்து நமக்கு எந்த குழந்தை வேண்டுமோ அதற்கு தேவையான உயிரணுவை மட்டும் அண்ட முட்டையுடன் இணைய விட்டால் வெற்றிகரமாக தேவையான குழந்தையைப் பெறலாம்.

இதற்கான ஆராய்ச்சி பல ஆண்டுகாலமாக பல நாடுகளில் நடந்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் 'ஜப்பானில்'  கால்நடைகளின் பால் 'குரோமோசோம்களை தனித்தனியாக பிரித்து வெற்றி கண்டனர்.


அதே போல் 1986-ல் ஜப்பானியர்கள் மனிதனின் உயிரனுக்களையும் பிரித்து வெற்றிகண்டனர்.


இம்முறையில் இணைத்து 40 பேருக்கு பரிசோதனை செய்ததில்; 24 பேர் பெண் குழந்தை கேட்டதில் 22 பேருக்கு பெண் குழந்தையும்: 18 பேர் ஆண் குழந்தை கேட்டதில்; அவர்கள் அனைவருக்கும் ஆண் குழந்தையும் பிறந்தது.


(செய்தி ஆதாரம்: 'தினந்தந்தி'

நானேடு 22.6.86)


8-ம் பக்கம் பார்க்க...


தொடர்ச்சி.....


தற்போது வெர்ஜீனியாவின் ஃபேர்பேக்ஸில் உள்ள ஜெனிடிக்ஸ் "AVF" பசுக்கள் போன்ற விலங்குகளிடத்தில் பரிசோதித்து விட்டு மனிதர்களுக்கும் சோதித்து வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் 'லேசர்' கருவிகள் மூலம் ஆணின் விந்துவிலுள்ள இரண்டு வகையான குரோ மோசோம்களைக் கொண்ட உயிரணுக்களுக்கு தனித்தனி வண்ணங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.


பிறகு இந்த வண்ண வேறு பாட்டை வைத்து (மைக்ரோ ஸ்கோப்) 'நுண்ணோக்கி' மூலம் அந்த ஆணின் விந்துவிலுள்ள 'X' 'Y' பால் குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களை தனித்தனியாக பிரித்திருக்கிறார்கள்.


இந்த முறையில் முதல் கட்ட மாக ஆய்வு செய்ய பதினான்கு பேர்களை தேர்ந்தெடுத்தார்கள், அந்த பதினான்கு பேரும் தங்களுக்கு பெண் குழந்தைதான் வேண்டுமென்று முழு மனதாக கூறினார்களாம்.


இவர்களில் பதிமூன்று பேருக்கு விரும்பியபடியே பெண் குழந்தை பிறந்ததாம். இது அறுபத்தைந்து விழுக்காடு வெற்றி என்று அந்த அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.


ஒரு வகையில் பார்க்கப்போனால் இந்த ஆராய்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் முதலில் நன்மைக்காகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவை தீய விளைவுகளுக்குப் பயன்பட்டு விடுகின்றன.


முன்னாளில் பெண் குழந்தையை பெற்றவுடன் கொன்று விடும் பழக்கம் பல நாடுகளில் இருந்து வந்தது. தற்போது ஓரளவு குறைந்துள்ளது. குறைந்துள்ளதாக சொல்லப்படும் எண்ணிக்கையை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது.


கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்கும் கருவி வந்தவுடன் பல பெண் கருக்கள் கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை நீடித்ததால், இதை சட்டப்படி தடுக்க வேண்டியதாகிவிட்டது.


1981-க்கு முன் இந்தியாவில்' ஆண்கள் 972-ம் பெண் கள் 1000-மும் இருந்தனர். 1981-இல் தலைகீழ் மாற்றம் ஆண்கள் 1000-மும் பெண்கள் 935முமாக ஆகியுள்ளது. கேரளாவில் மட்டும் பழைய நிலை 1000 ஆண்கள், 1034 பெண்கள்.


குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர். ஒரிசா, பஞ்சாப். இராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகம்.


பம்பாய் நகரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 8000 கருச் சோதனைகள் நடத்தப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. (பத்தாண்டுக்கு முன்) இந்த 8000-த்தில் 7999 பெண் குழந்தைகள்.


ஆகையால் தற்போது பால்குரோமோசோம்களைப் பிரித்துள்ளதால் எல்லோரும் ஆண் குழந்தைகளையே கேட்டு பெற்றுக்கொள்வார்கள். இதனால் சமுதாயத்தில் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.


இவையெல்லாவற்றுக்கும் காரணம்; பெண் என்றாலே ஓர் இழிவான பொருளாகவும், போன பிறவியில் பாவம் செய்தவர்கள் என்றும்; மற்றும் தாழ்ந்தவர்களாகவும், அடிமைகளாகவும் கருதப்படுவதே ஆகும். இந்து மதம் பெண்களை ஆடு, மாடுகளைப் போல் ஓர் அஃறிணை பொருளாகத்தான் குறிப்பிடுகிறது. 


ஆணாகவும், பெண்ணாகவும் பிறப்பது ஆண்டவன் செயல் அன்று. 'XY' XX என பால் குரோமோசோம்கள்' (உயிர் அணுக்கள்) இணையும் விதத்தில்தான் உள்ளது.


ஆண் பிள்ளை பிறந்தாலென்ன? பெண் பிள்ளை பிறந்தாலென்ன? எந்த பிள்ளையும் உயர்ந்ததோ; தாழ்ந்ததோ கிடையாது. எந்த பிள்ளை பிறந்தாலும் அதைப் பேணி வளர்ப்பதுடன், கல்வியைக் கொடுப்பது பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.


- விடுதலை ஞாயிறு மலர்






No comments:

Post a Comment