Showing posts with label நீட். Show all posts
Showing posts with label நீட். Show all posts

Monday, 9 January 2023

நீட்"க்குக் காரணம் தி.மு.க.வா - பா.ஜ.க.வா?

 நீட்"க்குக் காரணம் தி.மு.க.வா - பா.ஜ.க.வா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

நீட் தேர்வு செயல்பாட்டுக்கு வந்தது பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான். காங்கிரஸ் தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் செயல் பாட்டுக்கு வந்தது என்பது வீண் பொய்யே.

நீட் தேர்வைப்பற்றிப் பேசும் பொழுதெல்லாம் அது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது - காங் கிரஸ் தலைமையில் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. எனவே, நீட் கொண்டு வந்தது பிஜேபி ஆட்சியல்ல, காங்கிரஸ் தலைமையில் அமைந்த தி.மு.க. இடம்பெற்ற அந்த ஆட்சிதான் நீட் தேர்வைக் கொண்டுவந்தது என்று கீறல் விழுந்த கிராமஃபோன் பெட்டிப் பாடல் போல பாடிக் கொண்டு இருக்கிறார்கள்,

ஆனால் உண்மை நிலை என்ன? 21.12.2010இல் இந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தபோது திரா விட முன்னேற்றக் கழக அரசு கடுமையாக எதிர்த்து, அப்போது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத்துக்குக் கடிதம் எழுதி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் உடனடியாக வழக் குத் தொடர்ந்து நீட் தேர்வுக்குத் தடை பெற்று, தமிழ் நாட்டில் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்தவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அன்றைக்கு, தி.மு.க. அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்குதான் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீட் தேர்வு செல்லாது என்று 18.7.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி இருந்த வரையிலும், ஒன்றியத்தில் தி.மு.க. பங்கேற்றிருந்த அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரையி லும், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தமிழ் நாட்டிற்குள் நுழைய விடவில்லை. ஆனால், ஒன்றியத் தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சி யிலிருந்த அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வேரறுக் கவும், மாநில உரிமைகளில் சமாதானம் செய்து கொள் ளவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை தகர்க்கவும் இந்த நீட் நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாக மாணவர்கள் மீது நுழைத்தன.

18.7.2013 இல் வழங்கப்பட்டhristian Medical College Vellore & Ors Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305)  வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட சிலர் மறு ஆய்வு (Review Petitions) மனு தாக்கல் செய் கின்றனர். அந்த வழக்கில் 2013 முதல் வழக்கின் தரப்பினர்களுக்கு அறிவிப்பு (Court Notice) அனுப்ப சார்பு செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதிகள் திரு. அல்டாமஸ் கபீர் மற்றும் திரு. விக்ரமஜீத் சென் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் திறமையாகக் காய்களை நகர்த்தி யது. மறு ஆய்வு மனுவை இதனை ஒத்த வேறு ஒரு Civil Appeal No.4060/2009 என்ற வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டி 21.1.2016 அன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணை மாற்றப்படுகிறது. அந்த அமர்வுக்குத் தலைவர் மேற்படி Christian Medical College Vellore & Ors Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305) வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த அதே நீதிபதி திரு. அனில்தவே அவர்களேதான் - மற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே. அகர்வால், ஆதர்ஸ் குமார் கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட இந்த அமர்வுதான் நீட்டுக்குப் பச்சை கொடி காட்டியது.

ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது, நீட் செல்லாது, மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன் பிறகு பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில்தான் வேக வேகமாக நீட்டைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மருத்துவக் கவுன்சிலின் ஒத்துழைப்போடு நடந்தன என்பதுதான் உண்மை.

'நீட்'டுக்குக் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்பது பச்சைப் பொய்யே யாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நரேந்திர தாமோதரதாஸ் மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது நீட்டை எதிர்த்தவர் என்பதுதான்!

Wednesday, 27 March 2019

பொய்ப் பிரச்சாரத்துக்கு மறுப்பு : 'நீட்'டை தி.மு.க. ஆதரித்ததா...?"

காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட்' கொண்டு வந்தது - அந்த அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!

*உண்மை நிலை என்ன?*

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (யு.பி.ஏ.) இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று 'நீட்' கொண்டு வரப்பட்டது (21.12.2010).

இதனை எதிர்த்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்  குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு கடிதம் எழுதியது. கடிதத்தோடு நின்றுவிடாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி வழக்கும் தொடுத்தது. அந்த வழக்கு பின் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

நீட்'  செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது (18.7.2013). மருத்துவக் கவுன்சிலின் வேலை தேர்வு நடத்துவதல்ல என்றும் உச்சநீதிமன்றம் மண்டையில் அடித்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், விக்ர மஜீத் சென், அனில்தவே ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில், அனில் தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மைத் தீர்ப்பின் அடிப்படையில் நீட்' செல்லாது என்று ஆக்கப்பட்டது.

அதன்பின் பி.ஜே.பி. ஆட்சியில் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (21.1.2016) அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப்பட்டது. இதில் வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், எந்த நீதிபதி - மூவர் கொண்ட அமர்வில் 'நீட்'டுக்கு ஆதரவாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கினாரோ, அந்த அனில் தவேதான் இந்த அய்வர் கொண்ட அமர்வுக்குத் தலைவராம் - (நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாகி விட்டது!)

நீட்' தேர்வு செல்லும் என்று இந்த அமர்வு தீர்ப்பளித்துவிட்டது (16.3.2016).

உண்மை இவ்வாறு இருக்க தி.மு.க. 'நீட்'டை ஆதரித்தது என்று சொல்லுவது பித்தலாட்டப் பிரச்சாரமே!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், 'நீட்' நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தது - போராடியது திராவிடர் கழகமும்,  திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டின் சமுகநீதி சக்திகளும்!

18.12.2016 இல் எடுத்த முடிவின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அடங்கிய முத்தரப்பினரையும் இணைத்து திருவாரூர், நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன (31.1.2017). அதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களைக் கழகத் தலைவர் சந்தித்துப் பாராட்டியதுடன், இதனை எதிர்த்து யாரேனும் வழக்குத் தொடரக்கூடும் என்பதால், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி, மத்திய அரசை அணுகினால் நடப்பாண்டில் 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் அழுத்தமாகவே குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இரு மசோதாக்களை நிறைவேற்றியும், மத்திய இராணுவ அமைச்சர் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவே இல்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். 'நீட்' தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன; அதன் நிலை என்ன? என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து வந்த பதில் (8.5.2017) பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. நீட் தொடர்பான எந்த மசோதாவும் குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு வரவில்லை என்ற அந்தப் பதில்தான் அந்த அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதக்கள் - அவை தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே மத்திய பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு முடக்கி விட்டது - சதி செய்தது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கைக் காப்பாற்றத் தவறியவர் என்பதும் புரியவில்லையா? சமுகநீதிக்கு எப்பொழுதுமே பி.ஜே.பி. எதிரானதுதானே!

அதைவிடக் கொடுமை - கடிதங்களை அனுப்பியதோடு அ.இ.அ.தி.மு.க. அரசின் கடமை முடிந்துவிட்டதா? மேற்கொண்டு மத்திய அரசிடமிருந்து ஒப்புதலைப் பெற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றியது  - அ.இ.அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை வெறும் சடங்குதானா?

தமிழ் மண்ணுக்கே உரித்தான சமுகநீதிப் பிரச்சினையில்கூட அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை - மத்திய அரசை வலியுறுத்தும் திராணியில்லை.

பா.ஜ.க. ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்வதே தங்களின் திருப்பணி' என்று அ.இ.அ.தி.மு.க. முடிந்த முடிவுக்கு வந்து விட்டதைத்தானே இது காட்டுகிறது.

இந்த நிலையில், தொடக்க முதலே நீட்'டுக்குப் பல வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க.மீது பழி போடுவது பச்சைப் பித்தலாட்டம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

*- கருஞ்சட்டை-*

*http://www.viduthalai.in*

*நன்றி : "விடுதலை" நாளிதழ் 26.03.2019*

Monday, 23 July 2018

தகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா?

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை!

புள்ளி விவரங்களுடன்  திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது


புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக் கல்லூரி யில் சேர்வதற்குத் தகுதி வேண்டும்; அதற் காகத்தான் நீட் தேர்வு என்று சொல் லுகிறார்கள்; அதேநேரத்தில், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சம் ரூபாய் கொடுத்து சேர்கிறார்களே, அப்பொழுது மட்டும் தகுதி திறமை பாதிக்கப்படாதா என்ற கேள்விக்கு என்ன பதில்? தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (16.7.2018) புள்ளி விவரங்களுடன் வெளி யிட்ட தகவல்கள் இதோ:
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப் பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலமாக நடைபெற்று வந்தது-.
நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதன் பின்னர், அதன்படியே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியபாடங்களில்போதுமானமதிப் பெண்களைப் பெறாத மாணவர்கள் மருத் துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2017ஆம் ஆண்டில் நீட் தேர்வெழுதிய மாணவர்களில் மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 400 பேர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில்10-க்கும்குறைவானமதிப் பெண்களைபெற்றுள்ளனர். 110மாண வர்கள்மதிப்பெண்களையேபெறாதவர் களாகவும், தவறான விடைகளால் எதிர் மதிப்பெண்களைப் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பான்மையோர் தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாடங்களில் பூச்சியம் மதிப் பெண்கள் பெற்றவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு தகுதியில்லாமலேயேஅனுமதி அளிக்கப் பட்டதுஎப்படி?என்கிற கேள்வி தற் பொழுது எழுந்துள்ளது. நீட் தேர் வில் பாடங்களின் அடிப்படையில் மதிப் பெண்கள் பெறுவது குறித்து அக்கறை காட்டப்படவில்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாடவாரியாக குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று முதல் அறிவிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆய்வுத்தகவல்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வின்படி,
2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வின்படி, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட  1,990 மாணவர்கள் பாட வாரியாகப் பெற்ற மதிப்பெண்களை ஆராய்ந்தபோது, 720 பேர் 150-க்கும் குறைவாக  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10-க்கும் குறைவான மதிப்பெண்களை, இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது இரண்டு பாடங்களிலும் பூச்சியம் மதிப் பெண்கள் பெற்றவர்களாக  530 பேர் உள் ளனர். வசதியான மாணவர்கள் மதிப்பெண் களைப் பற்றிய கவலையின்றி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அனுமதியைப் பெறுகிறார்கள். இதுபோன்று 530 பேரில் 507 மாணவர்கள்  தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான விடுதி, உணவு, நூலகம் உள்ளிட்ட இதர செலவினங்களுக்கான கட்டணங்களில்லாமல், கல்விக்கட்டணம் மட்டும் ரூ17 லட்சம் ஓராண்டில் பெறப் படுகிறது. மதிப்பெண்களைப்பற்றி கவலையின்றி வசதிபடைத்த மாணவர்கள் மருத்துவக்கல்விக்கான இடங்களை விலை கொடுத்து வாங்கிட முடிகிறது. நீட் தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில் என்று கூறப்பட்டாலும், அதற்கு எதிராகவே இது போன்ற நிலைகள் உள்ளன.
தனியார்வசமுள்ளஅக்கல்லூரிகளில்சரி பகுதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களாக உள்ளன. மருத்துவக் கல்விக்கான இறுதி ஆண்டுக்கான தேர்வை அவர்களே நடத்திக்கொள்கிறார்கள். இறுதியாண்டு  தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்துகொண்டு பணியாற்றிட முடி கிறது.
அதிர்ச்சிகர பட்டியல்

கீழ்க்கண்ட மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மருத்துவக்கல்வியில் சேர அனுமதி வழங்கப்பட்டது
இயற்பியலில்  -2, வேதியியலில்  -4, உயிரியலில் 139 மதிப்பெண் பெற்றவர்கள் 5.3 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் -2, வேதியியலில் 0, உயிரியலில் 131 மதிப்பெண் பெற்றவர்கள் 5.4 லட்சத்தையும் தாண்டி தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 9, வேதியியலில்  -2, உயிரியலில் 113 மதிப்பெண் பெற்றவர்கள் 5.8 லட்சத் தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 5, வேதியியலில் 0, உயிரியலில் 110 மதிப்பெண் பெற்றவர்கள் 6 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 3, வேதியியலில் 10, உயிரியலில் 118 மதிப்பெண் பெற்றவர்கள் 6.2 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 54, வேதியியலில் 40, உயிரியலில் 15 மதிப்பெண் பெற்றவர்கள் 6.3 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள் ஆகியோருக்கு மருத்துவக் கல்வியில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2010இல் நீட் அறிமுகம்

நீட் தேர்வு குறித்து 2010ஆம் ஆண்டு டிசம்பரில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு அரசிதழில் முதல்முறையாக வெளியிட்டது. மருத்துவம் (எம்பிபிஎஸ்) பயிலுவதற்கான மாணவர் சேர்க் கையில் நீட் தேர்வின் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்ச மதிப்பெண்களாக 50 விழுக் காடு பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் (அல்லது இடஒதுக்கீட்டுப்பிரிவினர் 40 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்) என்று கூறப்பட்டது.
2012இல் பாடவாரியாக இல்லாமல் மொத்த விழுக்காடு தகுதிக்கு நிர்ணயம்

இந்திய மருத்துவக்கவுன்சில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில்  வெளியிட்ட அறிவிப்பில், பாடவாரியாக 50 விழுக்காடு, இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு என்பதை மொத்த மதிப்பெண்களில் பெறுகின்ற 50 விழுக்காடு மற்றும் 40 விழுக்காடாக மாற்றியது. பாடவாரியாக குறைந்த பட்ச மதிப்பெண் என்பதையும் நீக்கிவிட்டது.
2013இல் நீட் தேர்வு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் 18.7.2013 அன்று அப்போதைய தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விக்ரம்ஜித் சென், அனில் ஆர்.தவே ஆகிய இரண்டு நீதி பதிகள் இடம்பெற்றனர். அனில் ஆர்.தவே தவிர இரண்டு நீதிபதிகளும் நீட் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டநிலையில் பெரும்பான்மை நீதிபதி களின் கருத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகப் பிறப் பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நீட் தேர்வு செல்லாமல் இருந்தது. நீட் தேர்-வு அரசமைப்புச்சட்டத்துக்கு விரோமானது என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
2016இல் கட்டாயம் என தீர்ப்பளித்த நீதிபதி அனில் ஆர்.தாவே

2013ஆம் ஆண்டில் மூவர் கொண்ட அமர்வில் இடம்பெற்று நீட் தேர்வை ஆதரித்து எழுதியவரான நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையில்,  2016ஆம் ஆண்டில் நீட் தேர்வு குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான அய்வர் கொண்ட அமர்வு நீட் தேர்வைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டது.
நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய நீதிபதி அனில் ஆர்.தவே கூறும்போது, மருத்துவ மாணவர் சேர்க் கையில் தனியார் கல்லூரிகள் கொள்ளை லாபம் பெறுகின்றன'' என்று குற்றம் சாற்றியிருந்தார்.
தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வுத் தகவல்
நீட் தேர்வைக் கட்டாயமாக்கியபின்னர் தற்பொழுது தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வின்படி, நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள், பூச்சியம் மற்றும் எதிர்மதிப்பெண்கள் பெற்று பூச்சியத்துக்கும் கீழ் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
எம்சிஅய் ஆட்சி மன்றக் குழு மேனாள் தலைவர் கே.கே.தல்வார்

2012 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன் சில் ஆட்சிமன்றக் குழுத்தலைவராக இருந்தவரான கே.கே.தல்வார் கூறியதாவது:
முதலில் நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. பின்னர் கட்டாயம் என்பதால் ஏற்கவேண்டிய நிலைக்கு உள்ளாயின. ஓராண்டுக்கு மேலாகியும்  நீட் தேர்வில் விழுக்காட்டின்படி மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருக்கும்நிலையில், பாடவாரியாக குறைந்த பட்ச மதிப்பெண்கள் பெற்றிட வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில்  விதிகளில்  தேவையான திருத்தங்களைச் செய்வதை எதுவும் தடுத்திட முடியாது என்றார்.
தகுதிநிலைகள் நீர்த்துப்போகச் செய்வதைத் தடுத்திட, தேவையான திருத்தங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் செய்யாமல் இருப்பது குறித்து கேட்கும்போது, தற்போதைய முறையின்படி, 2017ஆம் ஆண்டில் 60ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு 6.5 லட்சம் மாணவர்கள் தகுதி பெறுகிறார்கள். சரிபாதி இடங்கள் தனியார் கல்லூரிகள் கட்டணங்களை சார்ந்து உள்ளன. தகுதியான மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் கல்லூரிகளில் சேர்வதில்லை. 2017ஆம் ஆண்டில் 6 லட்சம் பேர் மருத்துவக்கல்வி சேர்க்கையில் 380 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றனர். 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள்  4 லட்சம் தொடங்கி 5 லட்சம் வரை தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நீட் தேர்வும், தமிழ்நாடும்

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மேலும், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கூடாது என்பதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையும் தொடர்ச்சியாக பின்பற்று வந்தது.
இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில், சிபிஎஸ்இ நடத்துகின்ற நீட்தேர்வின்படி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தது. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வை கட்டாயமாக்கியது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இரு சட்ட வரைவுகளை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியது. மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட அச்சட்ட வரைவுகள் முதலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்படவே இல்லை என்கிற தகவல் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி வெளியுலகுக்கு தெரிய வந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னால், தமிழக அரசுக்கு அச்சட்டவரைவுகள் காரணமேதும் கூறப் படாமலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக (with held) தமிழக அரசுக்கு தகவல் வந்தததாக சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்தார்.
ஒரே தேர்வு என்று கூறப்பட்ட தேர்வான நீட் தேர்வில் கேள்வித்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறானதாக இருந்தன. இந்த ஆண்டில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 196  மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட வேண்டும். தரவரிசை பட்டியல் அதன் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவானது.
நீட் உயிரிழப்புகள்

நீட் தேர்வால் மாணவர்கள் அரியலூர் குழுமூர் அனிதா, பெருவளூர் பிரதீபா, திருச்சி சுபசிறீ ஆகிய மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களில் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிவகங்கை சிங்கம்புணரி கண்ணன் ஆகியோரும் உயிரிழந்தார்கள்.
தொடரும் போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் வரை போராட்டம் ஓயாது என்று சமூகநீதிக்கான போராளிகள் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு, 17.7.18