Showing posts with label சாதி சான்றிதழ். Show all posts
Showing posts with label சாதி சான்றிதழ். Show all posts

Sunday, 8 August 2021

பள்ளிகள் மூலம் ஜாதி, வருமான சான்றுகள் - அமைச்சர் தகவல்


சென்னை,ஆக.7- பள்ளி,  கல்லூரிகளில் சேரும் மாணவர் களுக்கு ஜாதிவரு மானச் சான்றுகளை பள்ளிகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித் துள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சென்னை மாவட் டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்வருவாய்பேரிடர் மேலாண்மைத் துறைஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் 5.8.2021 அன்று நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3  மாவட்டங்களில் பட்டாவழங்குவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றனஅதை ஒழுங்குபடுத்த வேண்டும்விரைவாக பட்டாவழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்ஆற்றின் கரையோரம் வசிப் போருக்கு உரிய இடவசதி செய்து கொடுத்த பின்னர்தான் ஆக்கிர மிப்புகள் அகற்றப்படும்அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டு வரு கின்றன.

ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தால்பாதிக்கப்படுவோர் உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர்இதுபோன்ற சிக்கல்களை தடுக்க ஆக்கிரமிப்பை அகற்றிய அடுத்த நாளே,நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகல்லூரி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறதுஇவர்களுக்கு தேவையான ஜாதிவருவாய்சான்றுகளை விண்ணப்பித்த ஒருசில நாட்களில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇதை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் தர வாய்ப்புஉள்ளதா எனவும் ஆராயு மாறு முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிசென்னை ஆட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Thursday, 22 July 2021

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சான்றிதழ் வழங்க பெற்றோரின் வருமானத்தை கணக்கிட வேண்டாம்

 

தமிழ்நாடு அரசு அறிவுரை

சென்னைஜூலை 21 இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்கும்போது பெற்றோ ரின் ஆண்டு வருமானத் தில் ஊதியம் மற்றும் விவ சாய வருமானத்தை கணக் கில் கொள்ளாமல் தாம தமின்றி சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது,

இதுதொடர்பாக தமிழ் நாடு அரசின் பிற்படுத்தப் பட்டோர்மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மை செயலர் .கார்த்திக்அனைத்து மாவட்ட ஆட் சியர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

ஒன்றிய அரசு பணிகளி லும்ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசிவளமான பிரிவினரை நீக்கி 27 சதவீத இடஒதுக் கீடு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில்வள மான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை (ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்ஊதியம் மற்றும்விவசாய வருமானத்தை சேர்க்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கப் பட்டுள்ளது.

எனவேஒன்றிய அர சின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள்சான்றிதழ் வழங்கும் போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் எவ்வித தாமதமின்றி இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பின ருக்குச் சான்றிதழ் வழங்கு மாறு சம்பந்தப்பட்ட வரு வாய்த் துறை அதிகாரிக ளுக்கு தகுந்த அறிவுரை கள் அளிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் ஆணை




அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ.கருணாநிதியுடன் நேர்காணல்






Thursday, 28 February 2019

ஜாதி மதமற்றவர் என அரசு சான்று பெற்ற திருப்பத்தூர் சிநேகா



ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி இணையரின் மூத்த மகள் நான். காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா என  எனக்குப் பெயரிட்டனர்.  அம்மா பெயரின் முதல் எழுத்தை முதலிலும், அடுத் தது அப்பா பெயரின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனேன்.

முதல் வகுப்பு சேர்க்கை யில் தான் பள்ளி நிர்வாகம்  முதலில் நான் என்ன ஜாதி என்று கேட்டது. எனக்கு ஜாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தை யாவது சொல்லுங்கள் என் றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர்.

இப்படி தான் தொடங் கியது என் முதல் பிரச்சாரம்.

பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் ஜாதி மதம் குறிப்பிட்டதில்லை. ஜாதி சான்றிதழும் இல்லை.

என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் அவ்வண் ணமே வளர்த்தனர்.

என் இணையர் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழாவை ஜாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற ஜாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம்.

ஆதிரை நஸ்ரீன், ஆதிலா அய்ரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு எங்கள் மகள்களை ஜாதி மத அடையாளங்கள் இன்றி வளர்கிறோம்.

ஜாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் இந்த அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம்.

ஜாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் ஜாதி சான்றிதழ் போல், ஜாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

நீண்ட முயற்சியில்....... என்ன ஜாதி என்று சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு, ஜாதி இல்லை மதம் இல்லை என சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன்.....

எனினும் இறுதியில் வெற்றி பெற்றோம். ஜாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றேன்.....

“மதம் மக்களின் அபின்” - என்றார் மார்க்ஸ்

மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது....... என்றார் அம்பேத்கர்.

ஜாதி, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்க வில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? - என்றார் பெரியார்.

ஜாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

இதோ இவர்களின் ஜாதி மத வர்க்கம் அற்ற சமூகத்திற்கான கனவின் முதல் புள்ளி.



லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல. போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும்.

ஜாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

கொள்கை காற்றில் கரையும் வெற்று முழக்கமல்ல. சமூக புரட்சிக்கான வலுவான விதை.

தோழமையுடன்,  ம.ஆ.சிநேகா.

நன்றி: இந்த புரட்சிகரமான சான்றிதழை அளிக்க பரிந்துரை செய்த திருப்பத்தூர் சார் ஆட்சியர் திருமிகு.பிரியங்கா பங்கஜம் அவர்கள், சான்றளித்த திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமிகு.சத்தியமூர்த்தி அவர்கள், அனைத்து விதங்களிலும் பேருதவியாக இருந்த தோழர்.அறவேந்தன் அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தகவல்: கோ.திராவிடமணி விடுதலை மாவட்ட செய்தியாளர், கிருட்டினகிரி.

-  விடுதலை ஞாயிறு மலர், 16.2.19

Wednesday, 24 October 2018

பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி மதங்களைக் குறிப்பிட வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா?

சென்னை உயர் நீதிமன்றம்

தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன்கௌல் 
நீதிபதி ஆர். மகாதேவன்
நீதிப் பேராணை மனு கீ.றி. 18488-2016
15.6.2016

ஜி.பாலகிருஷ்ணன்     மனுதாரர்
தமிழ்நாடு அரசு அதன் சார்பாக 
அரசுச் செயலாளர் உயர் கல்வித்துறை
தலைமைச் செயலகம் சென்னை - 600009 மற்றும் ஒருவர்

எதிர் மனுதாரர்கள்

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: எஸ். சத்யசந்திரன்

எதிர் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்: டி.என்.ராஜகோபால் அரசு வழக்கறிஞர் (கல்வி)

நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப்பட்டது செலவுத் தொகை இல்லை.

கோரிக்கை: இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 226இன்படி செயலுறுத்தும் நீதிப் பேராணை தாக்கலாகி,

(அ) மேல் நிலைக் கல்வித் துறையோ, பள்ளிக் கல்வித் துறையோ, அரசாணை எண் நி.ளி. விஷி 205 நாள்: 31.7.2000 கல்வித்துறை (சி2) ஐ முழு அளவில் அமல் செய்து இத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்துப் பள்ளிகளும் பெற்றோரிடமிருந்தோ அவர்களது பிள்ளைகளிடமிருந்தோ கல்வி நிலையங்களில் சேரும்போது ஜாதி, மதத்தைக் கூறுமாறு வற்புறுத்தக் கூடாது என்று பணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் ஜாதி, மதம் எனும் இடத்தில் எந்த ஜாதியும், மதமும் கிடையாது என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

(ஆ) மேலே சொன்ன வகையில் பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் எநதச் சாதியும் மதமும் இல்லை என்று குறிப்பிட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இது மனுதாரர் கோரிய 5.5.2016 தேதி முதல் நீதிமன்றம் வரையறுத்துக் கூறும் நாளிலிருந்து பின்பற்றப்பட வேண்டும் என ஆணை வழங்கக் கோரப்பட்டிருக்கிறது.

தீர்ப்புரை

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கௌல்

சாதி, மத பேதமற்ற சமுதாயம் அமைப்போம் எனும் உயரிய எண்ணத்துடன் தமிழ்நாடு மாநில அரசு பின்வரும் அரசாணையை 31.7.2000 அன்று பிறப்பித்திருக்கிறது. அது பின்வருமாறு:

தமிழ்நாடு அரசு சுருக்கக் குறிப்பு

ஆரம்பக் கல்வி - பள்ளிச் சான்றிதழில் ஜாதி, 
மதத் தகவல்களைக் குறிப்பிடாமல்
தவிர்க்கும் உரிமையை வழங்குதல் 
- ஆணை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை (சி2)

அரசாணை எண் 205     நாள்: 31.7.2000
படிக்க: அரசாணை எண் 120 கல்வித்துறை நாள் : 2.7.1973

ஆணை:

மேலே படிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் பணிக்கப்பட்டதாவது: இடைநிலைக் கல்விச் சான்றிதழிலும், பள்ளி மாற்றுச் சான்றிதழிலும் ஜாதி, மதம், பற்றிக்குறிப்பிட விரும்பாதோர் அவ்வாறு ஜாதி இல்லை. மதமும் இல்லை என்று குறித்துக் கொள்ளலாம் அல்லது அந்தப் பகுதியை நிரப்பாமல் விடலாம். பள்ளிக் கல்வி இயக்குனராலும், ஆரம்பக் கல்வி இயக்குனராலும் இது முழு அளவில் பின்பற்றப்படுவதில்லை என்று அரசுக்குத் தெரிய வந்தது. எதிர்வரும் நாட்களில் அரசாணைப்படி இதனை முழுமையாகப் பின்பற்றுமாறு சம்மந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போதோ வேறு சூழ்நிலைகளிலோ, மாணவர்களின் பெற்றோர் ஜாதி, மதம் பற்றித் தெரிவிக்க மறுப்பு தெரிவித்தால், அவர்களால் அதைக் கூற இயலாமல் போனால் அதுபற்றி அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை.

/ஆளுநரின் ஆணைப்படி/
(ஒப்பம்) எம்.ஏ. கௌரிசங்கர்
அரசுச் செயலாளர்

பெறுநர்:

இயக்குநர், ஆரம்பக் கல்வி இயக்ககம்
சென்னை-6
இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம்
சென்னை-6

2. இந்நிலையில் மனுதாரர் சமர்ப்பிப்பதாவது: அரசாணை சரிவரப் பின்பற்றப்படுவதில்லை. அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.,

3. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்ததை நாங்கள் ஏற்கிறோம். எனவே எதிர் மனுதாரர் இந்த அரசாணையினை மக்கள் மத்தியில் சென்று சேரும் வகையில் விரிவான வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வகையில் பள்ளிச் சான்றிதழ் களில் ஜாதி, மதம் பற்றிப் பதிவு செய்ய விரும்பாதோர் அதைக் குறிப்பிடும்படி வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

4. ஆனால் அதே சமயத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழில் இது கட்டாய நடைமுறையாகப் பின் பற்றப்பட வேண்டும் என்று ஆணையிட எங்களால் இயலாது; ஏனெனில் சிலர் அதைக் குறிப் பிட ஆர்வம் காட்டலாம். அரசாணையைக் கவனத்தில் கொண்டு பார்த்து ஒருவர் ஜாதி மதப் பெயரைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்களிக்கப்படலாம். அதே நேரத்தில் இதனைக் கட்டாயப் படுத்தமுடியாது.

5. இவ்வகையில் நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப் படுகிறது. செலவுத் தொகை இல்லை.
மொழியாக்கம்:

திருவேங்கடம் அரங்கநாதன்

நன்றி: சட்டக்கதிர், செப்டம்பர் 2017

- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17