Friday 22 May 2020

சமணர் என்போர் சைனரா?

திராவிடர் இயக்க எழுத்தாளர், ஆய்வாளர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் ஆய்வுரை நூலான "சமணர் என்போர் சைனரா?' என்ற மனிதம் பதிப்பகம் வெளியிட்ட நூலை இன்று படித்துமுடித்தேன்.

இன்றைய நிலையில் குஜராத்தில் உள்ள மார்வாடி, சேட்டுகளின் மதமான ஜைன மதமும் சமண மதமும் ஒன்றே என பொதுவாக கூறப்பட்டுவருகிறது. இதன் அடிப்படையில் கடை சங்க நூல்களை ஜைனர்களே எழுதியதாக கூறப்படுகிறது.

இக் கருத்தை சுக்குநூறாக்குகிறார், அவர்கள் அனைவரும் ஆசீவக சமயத்தை சேர்ந்த தமிழர்கள் என்கிறார்.

ஆசீவக சமயமும் ஜைன சமயமும் ஒன்றுபோல் இருந்ததால் பிற்காலத்தில் ஒன்றுபோல் ஆகிவிட்டது.

பல சமயங்கள் இப்படித்தான் ஒன்றாகி இந்து மதம் என்ற போர்வையில் உள்ளது
- 15.4.20

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்"இயேசு என்றொரு மனிதர் இருந்தார் " என்ற தலைப்பில் சேவியர் என்பவர் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன்.

இன் நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

கிருத்தவர்களின் வேத நூலான 'புதிய ஏற்பாடு' என்ற நூலை படிப்பவர்களுக்கு இயேசுவின் கதை தெளிவில்லாமல் இருப்பதை அறிவார்கள். இயேசுவின் கதையை மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்பவர்கள் எழுதியதாக புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் ஒருத்தவருக்கு ஒருத்தர் முரண்பாடாக கூறியுள்ளனர்.

இந் நூலில் முறையாக தொகுத்து தெளிவாக படிக்கும் வகையில் எழுதியுள்ளார். யோவான் தான் இயேசுவை கடவுளாக காண்பிக்கும் வகையில் சிறப்பித்து எழுதியுள்ளதாக கூறியுள்ளார். 

- எனது முக நூல் பக்கம்,12.4.20

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்"யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற எஸ். செண்பகப் பெருமாள் அவர்கள் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன். இது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

குலதெய்வ வழிபாடாக தொடங்கிய யூதமதம் பரிணாம வளர்ச்சி பெற்று பெருந் தெய்வ வழிபாடாக மாறியது குறித்து விளக்கிக் கூறுகிறது இந்நூல். யூதர்கள் சமாரியர்கள் என இரு பிரிவாக பிரிந்தது குறித்தும், பைபிள் படி இயேசு யூதர்கள் இடத்தில் பிறந்து யூதர்களுக்கான வழிகாட்டியாக அறியப்பட்டார் என்றும், பிறகு வந்த பவுல் இயேசுவை கிறிஸ்துவாக மாற்றி அனைத்து தரப்பு மக்களுக்கான கடவுளாக மாற்றும் வகையில் பைபிளை மாற்றினார், என புதிய ஏற்பாடு-பழைய ஏற்பாடு ஆகியவற்றிலிருந்து ஏராளமான ஆதாரங்களை எடுத்து விளக்கிக் கூறியுள்ளார். 
- எனது முகநூல் பக்கம், 10.4.20

பாரபாஸ் - நோபல் பரிசு பெற்ற நாவல்இயேசுவை கடவுளாக நம்பலாமா நம்பக்கூடாதா என்பதை நடுவாகவைத்து இயேசுவிற்கு பதிலாக சிலுவை தண்டணையிலிருந்து தப்பித்ததாக சொல்லப்படும் பாரபாஸ் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கும்வகையில் 1950ல் 'பேர் லாகர் குவிஸ்ட்' எனும் தெற்கு சுவிடனை சேர்ந்த எழுத்தாளரால் எழுதப்பட்ட 'பாரபாஸ்' என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை இன்று படித்து முடித்தேன்.

கர்ப்னையாக சொல்லப்பட்ட செய்திகளை (அற்புதங்கள்) நம்பி வெறித்தனமாக பரப்பப்பட்ட மதம் கிருத்தவ மதம் என்பதை நேரடியாக சொல்லாமல் கதையாக சொல்கிறார் நாவலாசிரியர்!
- எனது முகநூல் பக்கம், 7.4.20

திராவிடமும் வட பகுதி தமிழ்ச் சொல்லே!

சேர நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் பாண்டிய நாட்டில் வழங்கப்பட்ட சொற்களில் பல சேர, சோழ பகுதிகளில் புழக்கத்தில் இல்லை. இதே போல் தான் ஒவ்வொரு பகுதியின் நிலையும். இலக்கியங்களை படைப்பவர்களுக்கு மட்டுமே இவற்றை பற்றி தெரியும். அதனால் பல பகுதி சொற்களை கையாள்வர். தொல்காப்பியர் கேரளாவை அதாவது சேர நாட்டை சேர்ந்தவராதலால் தொல்காப்பியத்தில் சேர நாட்டில் புழக்கத்தில் இருந்த சொற்கள் சிலவற்றை கையாண்டிருப்பார். சோழ, பாண்டிய பகுதிகளில் புழக்கத்தில் இல்லாத சொற்கள் என்பதால் அவற்றை தமிழ் சொற்கள் கிடையாது என சொல்லமுடியாது. தொல்காப்பியரை தமிழர் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. முற் காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் வழங்கிவந்த்து. இதேபோல் நமக்கு தெரியாத பல சொற்கள் இந்தியா முழுவதும் இருந்த தமிழில் இருந்திருக்கலாம். வட பகுதியில் இருந்த தமிழ் மாற்றமடைந்து பிராகிருதம் என மாறியது. அதிலிருந்து பாலி தோன்றியது. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த சந்தசு என்ற மொழியுடன் பிராகிருதம், பாலி போன்றவற்றை கலந்து சமசுகிருதம் என்று ஒன்றை உண்டாக்கினர். இதனால் தான் பல தமிழ் சொற்களை வடமொழி என சொல்லிக்கொண்டுள்ளோம். வெள்ளம் என்றால் நீர் இதை திருவள்ளுவர் கையாண்டுள்ளார். ஆனால் தமிழ் நாட்டில் வழங்கப்படுவதில்லை, ஆனால் மலையாளத்தில்(கேரளம்) புழக்கத்தில் உள்ளது. வெள்ளம் தமிழ்ச் சொல் இல்லை என சொல்லமுடியுமா? திராவிடமும் வட பகுதி தமிழ்ச் சொல்லே!

- செ.ர.பார்த்தசாரதி

திராவிடமென்றால் என்ன?படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்


நான் நேற்று முன் நாள் படித்து முடித்த நூல்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ந.சி.கந்தையா அவர்கள் 1948ல் எழுதிய நூல்- திராவிடமென்றால் என்ன?
2008ல் 'தையல் வெளியீடு' சென்னை-14 வெளியிட்டுள்ளது.'திராவிட மொழிகள் தோன்றிய வரலாறு, தமிழ் மொழி வளர்ச்சி,திராவிடம் பற்றிய ஆய்வு, ஆரிய மொழி கலப்பு, வட நாட்டு மொழிகளின் தோற்றம், தமிழை கெடுக்கவந்த ஆரியம் மற்றும் ஆரியமொழி, ஆரிய பண்பாட்டு படையெடுப்பு' என நிறைய ஆதாரங்களுடன் விளக்கி கூறியுள்ளார். படித்து பயன்பெறவேண்டிய நூல். விலை 50ரூ
-22.5.14

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறறு

இந்த நூல் தந்தை பெரியாரின் வாழ்க்கையை ஒரளவு சுருக்கமாக கூறுகிறது. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படிப்பதற்கு முன் இதை படித்தால் முன்னோட்டமாக இருக்கும். ஆசிரியர்- பட்டத்திமைந்தன்,
கௌரா ஏஜென்சி வெளியீடு, விலை- ரூ 80.00
-எனது முகநூல் பக்கம், 22.5.17

Thursday 21 May 2020

குமரிக்கண்டமா! சுமேரியமா? -நூல் திறனாய்வு


தற்போது நான் படித்து முடித்த நூல் ''குமரிக்கண்டமா! சுமேரியமா!'' என்பதாகும்.
தமிழர்களின் தாயகம் 'சுமேரியா' என்றும், சுமேரியாவிலிருந்து தான் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர் என்றும், குமரிக்கண்டம் என்பது 'சுமேரியா' தான் என்றும், 'சுமேரியா' குறிப்புகளில் சொல்லப்படும் 'தில்முன்' தான் தமிழ் நாடு என்றும் மெய்ப்போலாக்க, பார்ப்பன கருத்தை நிலைனாட்ட இலாவகமாக கையாண்டு இதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.
-17.5.2014

அய்யா அரிச்சுவடி

1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சுமாறிகள் பேச்சு . 
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி . 
3. இதிகாசமென்பது மதிமோச விளக்கம் . 
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே ! 
5. ஊழ்வினை எள்பது - ஊக்கத்தைக் கெடுப்பது . 
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம் . 
7. கல்லைத் தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம் . 
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது . 
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம் . 
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல் . 
11 சூத்திரன் என்றால் - எட்டி உதை 
12. திதி கொடுப்பது - நீதியைக் கெடுப்பது . 
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்குக் கேடு ,
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க 15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற்கொள்ளைக்காரர்கள் . 
16. புராணங்கள் - பொய்க்களஞ்சியங்கள் . 
17. பேதகமென்பது - வேதியருக்கணிகலம் 
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம் 
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள் . 
20. மதக்குறி என்பது - மடையர்க் கறிகுறி . 
21 முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே . 
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது . 
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது . 
24. ஜாதி வேறுபாடு -ஜன சமூகத்திற்குக் கேடு 
25 ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு
- விடுதலை நாளேடு, 10. 5. 2003

Friday 15 May 2020

பார்ப்பன பசு

மோடி ஆட்சி செய்யும் குஜராத்தின் மெஹசனா [Mehsana dist] மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு நிறுவனங்கள் தலித் மக்களிடமிருந்து பாலினை வாங்குவதில்லை. காரணம், மேல் ஜாதியினர் தலித்கள் வளர்க்கும் தலித் பசுக்களிடம் இருந்து பெறப்படும் பாலினை வாங்க மாட்டார்களாம்.
ஜாதிவெறி மாடுகளைக்கூட விட்டு வைக்காம தலித் கோமாதா பார்ப்பன கோமாதானு பிரிக்கப்படும் கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்து மதத்தைக் காக்க புது அவதாரம் எடுத்திருக்கும் மோடியின் ராஜ்ஜியத்தில்தான் இந்தக் கூத்து நடப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தலித், முஸ்லிம், பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
#மோடி வித்தை காட்டும் கூலி வேலை கேடிகளே, இவைதான் மோடியின் குஜராத் வளர்ச்சி என்னும் வேதனை உண்மைகள்?

விடுதலைப் புலிகள் இயக்கம்காரல் மார்க்ஸ் பிறந்த நாளில், 5.5.1976ல் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்பு சோசலிச தமிழீழத்தை அமைக்கவே விரும்பினர்.
மாவீரன் லெனினை தனது கொள்கை வழிகாட்டியாக கொண்டனர்.
போரில் வெற்றி தோல்வி என்பது ஏதோ ஒரு பக்கம் நடந்தே தீரும்! இதில் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது.

க.அயோத்திதாச பண்டிதர்இன்று பண்டிதர்அயோத்திதாசரின் 106வது நினைவு நாள்- 5.5.20
சாகித்திய அகாதமி சார்பில் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற வரிசையில் ' "க.அயோத்திதாச பண்டிதர்" என்ற பெயரில் 'கௌதம சன்னா' என்பவரை கொண்டு அயோத்திதாசர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
பக்கங்கள் - 107
விலை - ரூ 40.00
நூலிலிருந்து...
1914 மே மாதம் 5ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தன் முடிவு நெருங்கிய தன் கடைசி இரவில் அவரது குடும்பத்தினர் , நண்பர்கள் , இயக்கத் தோழர்கள் சூழ்ந்திருக்க , படுக்கையில் இருந்த பண்டிதர் தன் இறுதியான வாக்காக
' நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே , அதாவது உங்களுடைய தருமமும் , கருமமுமே உங்களைக் காக்கும் '
என்று கூறினார் .

காரல்மார்க்ஸ் வாழ்க்கை சுருக்கம்காரல் மார்க்ஸ் அவர்களின் 202வது பிறந்தநாள். 5.5.20
காரல்மார்க்ஸ் வாழ்க்கை சுருக்கம் என்ற இந்நூலை எ.ஸ்தெபானவா என்பவர் எழுதியுள்ளார். தமிழில் நா. தர்ம ராஜன்
1985ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் முன்னேற்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பக்கங்கள் -190
இந் நூலின் முன்பகுதியில்
மெய்யியல் அறிஞர் மார்க்சை பற்றி ஏங்கல்சும், வி.இ.லெனினும் கூறிய பகுதி....
' ' எங்கள் எல்லோரையும் விட மார்க்ஸ் உயரே நின்றார் , வெகு தொலைவிற்கும் பார்த் தார் , மேலும் விரிவான , விரைவான பார்வை பெற்றிருந் தார் . மார்க்ஸ் ஒரு மேதை . நாங்கள் எல்லோரும் , அதிக பட்சமாகச் சொன்னால் , திற மைசாலிகளே . அவரில்லாமல் இந்தத் தத்துவம் இன்றிருப் பது போல் இவ்வளவு தூரம் வந்திருக்காது . எனவே அது அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது சரியே . ''
- பி . எங்கெல்ஸ்
' ' . . . மனித குலத்தின் முன் னணிச் சிந்தனையாளர்கள் ஏற் கெனவே எழுப்பியிருந்த கேள்வி களுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில் தான் குறிப் பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது . தத்துவ ஞானம் , அரசியல் பொரு ளாதாரம் , சோஷலிசம் ஆகிய வற்றின் தலைசிறந்த பிரதிநிதி களுடைய போதனைகளின் நேரடி யான , உடனடியான தொடர் ச்சியாகத்தான் மார்க்சின் போதனை எழுந்தது . ' '
- வி . இ . லெனின்

Tuesday 12 May 2020

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படக் கதை


தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படக் கதையாக விளக்கும் நூல். படங்கள் செம்மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த இ.வி.சிங்கன் அவர்கள் இவிஎஸ் பப்ளிஷர்ஸ் என்ற வெளியீட்டாளர் மூலம் சிங்கப்பூரிலிருந்து வெளியிட்டுள்ளார்.

இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட நூல் ஆகும்
பக்கங்கள் - 32 பெரிய அளவு நூல்

இந்த நூலை பார்த்து படிக்க வேண்டுமென்றால் கவலைப்பட வேண்டாம் தியாகராயர் நகரிலிருக்கும் எஸ் எஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள பெரியார் ஈ வே ராமசாமி என்ற படக்கதை நூலை வாங்கி படித்துக் கொள்ளலாம். ஏனென்றால் சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட இந்த படக்கதையை மாதிரியாக வைத்து தான் இந்த பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

தொலைபேசி :9444280158திராவிடத்தால் எழுந்தோம்!

தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி அதன் பெயராலேயே குளிர்காய நினைக்கும் குணா என்பவர் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற பெயரில் பொய்யும் புரட்டும் உள்ள, ஆதாரமும் அற்ற ஒரு நூலை எழுதியுள்ளார்.
குணாவின் புரட்டு களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து ஆதாரங்களுடன் "ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!" என்ற பெயரில்திராவிடர் கழகத்தின் மாநில இலக்கியத்துறை செயலாளரான மஞ்சை வசந்தன் அவர்கள் ஒரு சிறப்பான ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
இந்நூலை புரட்சிக்கனல் வெளியீடு வெளியிட்டுள்ளது.
பக்கங்கள் - 248
விலை - ரூ150.00

குணாவுக்கு பாவாணர் பதிலடி

ஆரிய கொள்கையும் பண்பாடும் புத்த ஜைன மதங்கள் தமிழகத்திற்கு வந்தன - குணா

ஆரிய மதத்திற்கு எதிராய் வந்தவை புத்தமும், சமணமும்! - பாவாணர் (ஒப்பியன் மொழி நூல்)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Muthu Dvk

தந்தை பெரியாரின் வாழ்க்கை சிறுவர்களுக்காக படக்கதை


தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்காக படக்கதை மூலம் சிறப்பாக வரைந்து மனதில் பதியும்படி பெரியார் ஈ.வெ.இராமசாமி என்ற பெயரில் எஸ் எஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. குழந்தை இலக்கிய மாமணி முனைவர் சு. சௌந்தர்ராஜன் அவர்கள் கதை உரையாடல் எழுதியுள்ளார் படங்களை தக்சின் என்பவர் வரைந்துள்ளார்.
விலை ரூ35.00
முதல் சுயமரியாதை மாநாடு 1929இல் நடைபெற்றது; ஆனால் இதில் 1927 என எழுதப்பட்டுள்ளது. எழுத்துப் பிழையாக கூட இருக்கலாம் என நினைக்கையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சிங்கன் என்பவர் வெளியிட்ட பெரியார் ஈ.வெ.ரா என்ற படக்கதையை மாதிரியாக கொண்டு வரைந்து வெளியிடப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். அதிலும் தவறாக 1927 என்று தான் உள்ளது.

Sunday 10 May 2020

'தமிழ்வாணன் எழுதி வெளியிட்ட தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு


'பெரியார்' என்ற பெயரில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1965 ஆம் ஆண்டு 'தமிழ்வாணன்' அவர்கள் மணிமேகலைப் பிரசுரம் என்ற தமது பதிப்பகத்தின் மூலம் கேள்வி பதில் வடிவில் எழுதி வெளியிட்டார்.
இந்நூலில் 14 ஆம் பக்கத்தில் உள்ள கேள்வி பதில் நடையில் உள்ள பகுதி வருமாறு
கே: பெரியாரிடம் உள்ள சிக்கனத்தை நீங்கள் விரும்புகிறீர்களா?
ப: பெரியார் பெரும் செலவாளியாக இருந்திருப்பாரானால் , இன்று திருச்சியில் பெரியார் கல்லூரி என்று ஒன்று உருவாகியிருக்கிறதே . அதை கண்ணால் கண்டிருக்கவே முடியாது ! மற்ற தலைவர்களிடம் இந்த சிக்கன புத்தியில்லாததால் தான் தங்கள் சொந்தப் பொறுப்பில் , ஒரு தண்ணீர் பத்தல்கூட அமைக்கமுடியாத நிலையிலிருக் கிறார்கள் !
கே ; பெரியார் எப்போதாவது பணத்தைப் பணம் என் பாராமல் வழங்கியதுண்டா ?
ப : இவ்வளவு நீண்ட வரலாற்றில் , ஒரே ஒரு நிகழ்ச்சிதான் குறிப்பிட்டுச் சொல்ல இருக்கிறது கலைவாணர் என் . எஸ் கிருஸ் கிருஷ்ணன் சிறையிலிருந்த பொழுது வழக்கு நடத்த ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது . அப்போது , பெரியார் ஆயிரக்கணக்கில் பணம் கடனாகக் கொடுக்க முன்வந்தாரே!
இந்த வகையில் நூல் முழுக்க தந்தை பெரியாரை ஒரு சிறந்த தலைவராக வெளிக்காட்டியுள்ளார்.
பக்கங்கள் 68
1994ல் விலை ரூ 9.50