Sunday, 10 May 2020

நுண்ணுயிர் முதல் நாவல் கரோனா வரை

செ.ர.பார்த்தசாரதி,           
செயலாளர்,
தென் சென்னை.
திராவிடர் கழகம்



உயிரணு (செல்) தோற்றம்
உயிரற்ற பொருள்களின் சில கூட்டுறவின் மூலமாக வேதிவினைகள் ஏற்பட்டு குறைந்த பட்சம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உயிருள்ள ஒரு பொருள் உருவாகியிருக்கும் என அறியப்படுகின்றது. இதை உயிரணு (செல்) என்கின்றனர்.
உயிரணுமெய்க்கருவுயிரி,, நிலைக் கருவிலிஎன இரண்டு வகைப்படும். நிலைக் கருவிலி  உயிரணு கருவைக் கொண்டிருக்காது.. ஒற்றை உயிரணுவாக மட்டுமே இருக்கும். மெய்க்கருவுயிரி உயிரணு கருவை கொண்டிருக்கும். இவை ஒற்றைக் உயிரணு முதல் பல்உயிரணு அங்கிகள் வரைக் கொண்டிருக்கும்.
பாக்டீரியா
பாக்டீரியா எனப் படுபவை  நிலைக் கருவிலி  உயிரணு வகையைச் சேர்ந்தது.. இது மெய்க்கருவுயிரி உயிரணுவை விட பத்தில் ஒரு பங்கு கொண்டது.
முதலில் தோன்றிய இந்த உயிரணு தாவர உயிரணு, விலங்கு உயிரணு. பூஞ்சை உயிரணு.என மூன்று வகைப்படும்.
புரிதலுக்காக உயிரணு என்பதை செல் என இனி தொடருவோம்.
அல்காக்கள் (Algae)
மெய்க்கருவுயிரி உயிரணுவகையை சேர்ந்த தாவர ஒரு செல் உயிரியான அல்காக்கள் (Algae)அல்லது பாசி  எனப்படும் வகையிலிருந்து பச்சை பாசி உருவாகி கடற்நீரிலிருந்து நிலத்திற்கு இடம்பெயர்ந்து வந்து பல செல் தாவர உயிரிகளாக படிம வளர்ச்சி பெற்று நிலப்பகுதி முழுக்க தாவரங்களாக மண்டிக்கிடக்கின்றன.
யூகார்யோட்டியா
மெய்க்கருவுயிரி உயிரணுவகையை சேர்ந்த விலங்கு ஒரு செல் சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பல செல் உயிரிகளாக படிம வளர்ச்சி பெற்று நீர், நிலப்பகுதி முழுக்க புழு, பூச்சி, நீந்துவன, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என பல்கி பெருகி வலம் வருகின்றன. இதில் படிம வளர்ச்சியின் உச்சியில் இருக்கும் விலங்கு தான் மனிதன். மனித உடல் 6,50,00,000 செல்களால் ஆனது.
செல்களின் இயக்கம்
ஒரு செல் உயிரியான பாக்டீரியா உண்டு செரித்து கழிவுகளை வெளியேற்றும், இனப்பெருக்கம் செய்யும். இதே போல் தான் மனித உடலிலிள்ள ஒவ்வொரு செல்லும் உண்டு செரித்து கழிவுகளை வெளியேற்றும், இனப்பெருக்கம் செய்யும். ஆனால் உடல் முழுக்கவுள்ள செல்கள் எல்லாம் வேலைகளை பிரித்துக்கொண்டு ஒருங்கிணைந்து செயல்படும்.
தீநுண்மி (வைரசு)
 வைரசு தமிழில் தீநுண்மி  என்று அழைக்கப்படுதிறது. இது தொற்றுநோய் நுண்ணுயிரியாகும்மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றனதாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும்தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும்அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதனால் இதை உயிரற்றவை என்று கருதுகின்றனர். இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கிஅவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.
வைரசு செயல்பாடு
அதாவது பாக்டீரியா, தாவரம் மற்றும் விலங்கு செல்களால் உண்ண முடியும் இனப்பெருக்கம் செய்யமுடியும், வைரசு செல்களில் உண்ணும் அமைப்பும், இனப்பெருக்கம் செய்யும் அமைப்பும் இல்லாததால் இந்த அமைப்பு உள்ள செல்களுக்குள் புகுந்து அந்த செல்லை பயன்படுத்தி தன்னை போன்ற பல செல்களை நகல் எடுப்பது போல் இனப்பெருக்கம் செய்துகொள்கிறது. இதனால் தாக்குதலுக்கு ஆளான செல் உடைந்து அழிந்துவிடுகிறது. இது போன்ற வைரசுகளில் தனது செல்லுக்குள் அறை குறை மரபணுக்களை (RNA வகை) கொண்ட ஒருவகை வைரசு தான்  கரோனா வைரசு.
நாவல் கரோனா வைரசு
கரோனா வைரசு இப்பொழுது திடீரென வந்துவிடவில்லை, இந்த தொகுப்பில் பல கரோனா வைரசுகள் உள்ளன. இப்பொழுது  உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்   கரோனா வைரசு SARS-CoV-2  என்பதாகும். வைரசுகள் அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்கின்றன. அதே போல் தன்னை மாற்றிக் கொண்டு 2019 இல் தோன்றிய கரோனா வைரசு என்பதால் இதை கோவிட் 19 (COVID-19) என்கின்றனர்.
கரோனா வைரசு பரவிய முறை
வவ்வால் போன்ற உயிரினத்திலிருந்து வேறு இடைப்பட்ட உயிரினத்திற்கு பரவி பிறகு மனிதனுக்கு தொற்றியிருக்கலாம். மனிதருக்குள் வீரியமற்று உலவிக்கொண்டிருந்த இந்த கரோனா வைரசு பிறகு வீரியம் பொற்றிருக்கலாம். ஏன் என்றால் கரோனா வைரசின் மரபணு தொடரை ஆராய்ச்சி செய்தபோது அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதிக்குள் பிறந்துள்ளது என தெரியவருகிறது. ஆனால் டிசம்பர் 2019க்கு முன்னர் SARS-CoV-2 தொற்றுக்கான தடயங்கள் ஏதுமில்லை என தெரியவருகிறது.
ACE2 வகை ஏற்பிகள்
உயினங்களிலுள்ள செல்களில் மற்ற செல்கள் புகும் வகையில் வழி இருக்கும் இதை ஏற்பிகள் (Receptors) என்பர். இந்த ஏற்பிகள் ஒத்துபோகும் செல்களை மட்டுமே ஏற்கும்.  ACE2 வகை ஏற்பிகளுடன் மட்டுமே SARS-CoV-2 பற்றிக்கொண்டு செல்களுக்குள் புக முடியும்எனவே ACE2 ஏற்பிகள் இல்லாத செல்கள் மூலம் இந்த வைரஸ் உடலில் புக முடியாது. பல விலங்குகளுக்கு இந்த வகை ஏற்பி கிடையாது.  நாய், பூனை, கோழி, ஆடு, மாடுகளில் வாழ முடியாது.
மனித உடலிலுள்ள செல்களில்  தொண்டை மற்றும் நுரையீரல் புறத்தோல்களில் உள்ள செல்களில் மட்டுமே ACE2 ஏற்பிகள் உள்ளன. இதனால் தான் இப்பகுதிகளில் உள்ள செல்களில்  SARS-CoV-2 வைரசு தொற்ற முடிகிறது.
நோய் எதிர்ப்பு அமைப்பு (immune system)
நமது உடல் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு அமைப்பை (immune system) கொண்டது.. தோல் பகுதி, உமிழ் நீர், கண்ணீர், சளி, காது குறும்பி, மூக்கில் இருக்கின்ற நுண் முடி போன்றவையும் நுண்கிருமிகளை எதிர்த்து அழிக்கும் அமைப்பே.
இதே போன்று உடலின் உட்பகுதியிலும் புரதங்கள் (proteins), உயிரணுக்கள் (cells), நிணநீர் நாளங்கள் (lymph vessels) என நுண்கிருமிகளை எதிர்த்து அழிக்கும் அமைப்புகள் உள்ளன.
இவைகளையும் மீறி செல்லும் நுண்கிருமிகளால் தான் நோய் தீவிடமடைகிறது.. கரோனா வைரசு  இந்த அமைப்பையும் தாண்டி செல்களுக்குள் புகுந்து தன் இனத்தை பெறுக்கிக்கொள்வதால் மனித செல்கள் உடைந்து அழிந்து நுறையீரலில் நீர் சேர்ந்து இறப்பு நேரிடுகிறது.
எச்சரிக்கை மண்டலம்
வைரசுகளோ அல்லது  பாக்டீரியா நுண்ணுயிர்களோ நம்முடைய உடம்பில் ஒரு செல்லை தாக்கினால்அந்த பாதிக்கப்பட்ட செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு தான் பாதிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கிறதுஉடனே நோயெதிர்ப்பு மண்டலம் எச்சரிக்கை சமிக்சையாக இன்டர்ஃபெரான் ஆல்பா (1) மற்றும் இன்டர்ஃபெரான் பீட்டாவை (2) வெளியிட்டு எச்சரிக்கிறது
இந்த எச்சரிக்கை சமிக்சையால் தூண்டப்பட்டு இரத்த வெள்ளை அணுக்கள் இன்டர்ஃபெரான்-காமாவை (3) வெளியிடுகிறதுஇந்த இன்டர்ஃபெரான்-காமாவானது வைரசுகள்சில பாக்டீரியாக்கள்புரோட்டோசோவன்  நோய்த்தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான காரணியாக இருக்கிறதுஇது மாக்ரோபாஜ்களை (macrophage) தூண்டுகிறது

மாக்ரோபாஜ்ன் வேலை
மேக்ரோபாஜ் என்பது ஒரு பெரிய வெள்ளை இரத்த அணுஇது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி.
நுண்ணுயிர் தாக்கிய செல்களை கண்டுபிடித்து அதை “சாப்பிட்டு” அழிப்பது இதன் வேலைகிருமி தாக்கிய செல்களை முழுமையாக விழுங்கிஅதனை சீரணித்துஅதோடு சேர்த்து கிரிமிகளையும் அழிக்கின்றது.இந்த முறைக்கு பாகோசைட்டோசிஸிஸ்-னு (phagocytosis) பெயர்இப்படியாக நோய் தாக்குதலுக்கு உள்ளான நம் உடல் செல்களை அழித்துநோய் கிருமிகள் நல்ல செல்களை தாக்காத வண்ணம் பாதுகாக்கிறதுஆனால் கரோனா வைரசு இந்த சமிக்கைகளின் செயல்களின் குறுக்கிட்டு குழப்பத்தை ஏற்படுத்ததுவதால் தான் மருத்துவம் பார்ப்பது கடினமாக உள்ளது.

பி.சிஆர் சோதனை
பி.சிஆர் சோதனை என்பது, மூக்கின் வழியாக எடுக்கப்படும் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பி.சிஆர் சோதனை கருவியில் இட்டு வைரசை பெருக்கி பகுப்பாய்வு செய்து RNAவை அறிந்து நோய் தொற்றை அறிகின்றனர். முடிவு தெரிய சில நாள்கள் ஆகும்.

ரேபிட் கிட் சோதனை
உடலில் வைரசின் தாக்கம் மிகுதியானவுடன் வைரசை அழிப்பதற்காக உடல் வெப்பத்தையும் சளியையும் கூட்டுகிறது. இதே போல் உடலுக்குள் நோய் எதிர்பு பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. இரத்த மாதிரியை எடுத்து ரேபிட் சோதனை கருவியில் செலுத்தும்போது, இரத்தத்தில் உள்ள நோய் எதிர்பு பொருள்களால்  ஏற்படும் மாற்றத்தால், வைரசு இருப்பதாக கண்டறியப்படுகிறது. இதன் முடிவு சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். ஆனால் இதில் வரும் முடிவு சரியில்லாமலும் போகலாம். இதற்கு காரணம் நோய் தொற்று ஏற்பட்டு சில வாரங்கள் கழித்து தான் நோய் அறிகுறியே தெரியவருகிறது.

நோய் கண்டறியப்பட்ட 90% க்கு மேற்பட்டோருக்கு வெளிப்புற நோய் அறிகுறிகளே இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.

தொற்றிலிருந்து பாதுகாப்பு
தொற்று இருப்பவர் தும்பும் போதும் இருமும் போதும் வெளியேறும் சளித் துளிகள் சுமார் 1.5 மீட்டர் தொலைவு பயணிக்கக்கூடியது.. ஆகையால் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளிவிட்டு நபருக்கு நபர் இருப்பதுவும், முக கவசம் அணிவதுவும் பாதுகாப்பனது.
கரோனா வைரசின்.தோல் பகுதி கொழுப்பு பொருளால் ஆனது.. எண்ணெய் மற்றும் கொழுப்பை சோப்பு, கரைக்கக்கூடியது; ஆகையால் கைகளை நன்றாக சோப்புப் போட்டு கழுவ் வேண்டும். இதனால் கொழுப்பால் ஆன  கரோனா வைரசின்.தோல் பகுதி  கரைந்து அழிந்துவிடும். கூடுமானவரை கைப்பிடிகளை தொடக்கூடாது. கைகளால் மூக்கு, கண்களை தொடக்கூடாது.
பாதுகாப்பாய் இருப்போம்! கரோனாவை விரட்டுவோம்!

- விடுதலை நாளேடு, 09.05.2020
  

No comments:

Post a Comment