Sunday 10 May 2020

சிந்தனையாளர் வரிசையில் "எபிகூரஸ்'


'பிரேமா பிரசுரம்' வெளியிட்ட சிந்தனையாளர் வரிசையில் "எபிகூரஸ்" என்ற நூலை இன்று படித்து முடித்தேன்.
மலர்மன்னன் என்பவர் இந்நூலை எழுதியுள்ளார்.
பெரும்பகுதி இயற்பியல் நூலை படித்தது போலிருந்தது. வானியலும், அணுவியலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் மெட்டீரியலிசம் அல்லது பிருகிருதிவாதம் என்ற நூலின் ஒரு பகுதியையும் படித்தது போன்று இருந்தது.
2360 ஆண்டுகளுக்கு முன்பாக (கி.மு. 341) கிரேக்கத்தில் சுவர்ல சாமோஸ் என்கிற சின்னஞ் சிறு தீவில் பிளாட்டோ மறைந்து ஐந்து ஆண்டுகள் கழித்து அரிஸ்டாட்டில் காலத்தில் எபிகூரஸ் பிறந்துள்ளார்.
இவரது தாயார் மந்திரம் தந்திரம் என்ற பெயரில் நோய்களை தீர்க்கும் போது உடன் இருந்ததால் மந்திரம் என்பதெல்லாம் பொய் என்பதை புரிந்து கொண்டார்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்பில்லை; கடவுள் அவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார், நம்மை பார்க்க அவருக்கு நேரமில்லை நாம் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கடவுளின் பேரால் நடப்பதாக சொல்லப்படுபவை அனைத்தும் இட்டுக்கட்டபட்டவைகளே!
கோள்கள், விண்மீன்களால் மனித வாழ்க்கையில் எந்த விளைவும் உண்டாகாது!
விதி என்றும் மறுபிறப்பு என்றும் எதுவும்கிடையாது!
இந்த வாழ்க்கையே உண்மை; இன்பமாக வாழவேண்டும்; எளிமையாக வாழவேண்டும்; தேவையான அளவே உண்ணவேண்டும்; மது அருந்துவது கூடாது, மிதமிஞ்சிய கேலிக்கை கூடாது. இன்பமாக இருந்தால் உடலும் இன்பமாக(நல) இருக்கும்! என அறிவுரைகளை கூறியுள்ளார்.
இந்த உலகமும் கோள்களும் விண்மீன்களும் பேரண்டமும் அணுக்கலாளும் அணுக்களின் திரட்சியாளுமே உண்டாகியுள்ளன என்கிறார்.
நாம் காணும் பொருள்களும் உயிரினங்களும் ஏன் மனிதனும் கூட அணுக்களின் கூட்டணியினால் உண்டானது என்கிறார்.
பேரண்டம் முழுக்க கண்ணுக்கு தெரியாத அணுக்களால் நிரப்பப்பட்டுள்ளது.
அனைத்து பொருள்களும் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களுக்குள்ளுள்ள அணுக்கள் ஒரு வரையரைக்குள் இயங்குகின்றன.
எந்த பொருளும் தடை இல்லாதவரை இயங்கிக்கொண்டே இருக்கும். அப்படியே தடையுண்டானாலும் மறுதிசையில் பயணிக்கும்.
அணுக்கள் சிதைந்தாலும் வேறு வடிவத்தில் தோன்றும், இல்லாததிலிருந்து எதுவும் தோன்றாது.
நம் புவியைப் போல் வேறு புவிகளும் இருக்கக்கூடும், அதில் இங்குள்ள உயிரினங்கள் போலவோ அல்லது வேறுவகையிலே கூட இருக்கலாம்.
இப்படி பல கொள்கைகளை எந்த கருவிகளும் இல்லாத நிலையில் ஆய்ந்துணர்ந்து கூறியுள்ளார்.
தனியாக பயிற்சி கூடம் அமைத்து இக் கொள்கைகளை பயிற்றுவித்துவந்தார்.
தமது 72வது வயதில்(கி.மு. 270) முதுமையாலும் சிறுநீரக கல் நோயாலும் எபிகூரசு மறைவுற்றார்.
நூலின் விலை ரூ 25/-
பக்கங்கள் - 125

No comments:

Post a Comment