Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

Friday, 5 December 2025

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சரித்திரச் சாதனை! ‘ஏதுமற்ற’ இடத்திலிருந்து 69% இடஒதுக்கீடு வரை கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசும், அதன் நீட்சிகளான ஆட்சிகளுமே! அடித்தளமிட்ட ஆளுமைகளுக்கு வீரவணக்கம்!

 


ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

“ஜஸ்டிஸ் பார்ட்டி” என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட “நீதிக்கட்சி’’ 1916ஆம் ஆண்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கமாகத் (Non-Brahmin Movement) தொடங்கப்பட்ட ‘தென்னிந்திய நல  உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Association) என்ற அமைப்பு, திராவிடர்களின் வாழ்வுரிமையின் முக்கிய அம்சமான, கல்வி, உத்தியோகம் ஆகியவற்றை – ஆரியப் பார்ப்பனர்கள் தங்களது ஏகபோக உரிமையாக ஆக்கிக் கொண்டதிலிருந்து, அவர்களது மீட்சிக்காகவே உருவானது. இவ்வியக்கத்தை சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் போன்ற வர்கள் சென்னையில்,  பல பார்ப்பனரல்லாதார் பிரமு கர்கள், கல்வி அறிஞர்களை அழைத்துக் கூட்டம் நடத்தி விவாதித்து உருவாக்கினர். அரசியல் ரீதியாக உரிமைப் போருக்கு வழிவகுத்தனர்.

முன்னோடிகள்

அதற்கு முன்பாகவே, இதனை 1912லேயே பல முக்கிய பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்கள் இதற்குரிய தொடக்கப் பணியை ஆரம்பித்தார்கள். திருவல்லிக்கேணியில், வசதி வாய்ப்பற்ற பார்ப்ப னரல்லாத திராவிட, ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ‘திராவிடன் இல்லம்’ என்ற விடுதியை அமைத்து, அவர்களுக்கு அடைக்கலம் தந்து, கல்விக் கண்ணைத் திறந்தவரான டாக்டர் சி.நடேசனார், பின்னர் நீதிக்கட்சி உதயத்திற்கு முக்கிய முன்னோடியாவார்! மிகப் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத மக்களுக்கு அறிவு கொளுத்தி, விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, “பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை” (The Non-Brahmin Manifesto) எழுதினர்.

அனைத்திலும் பார்ப்பனர் ஆதிக்கம்

அதில் மக்கள் தொகையில் 100க்கு மூன்று சதம் கூட முழுமையாக இல்லாத ஆரியப் பார்ப்பனர்கள் கல்வி, உத்தியோகங்களைக் கைப்பற்றி வெள்ளைக்கா ரர்களுக்கு “நல்ல வேலைக்காரர்களாகி”, அவர்களைத் தம் வயப்படுத்தி, முந்திக் கொண்டு ஆங்கிலத்தைக் கற்று விட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி பதவிகளைத் தாங்களே ஆக்ரமித்து ‘ராஜ்ய பாரத்தை’ உண்மையாக நடத்தினர்.

இதை விளக்கித்தான் ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ தக்க புள்ளி விவரங்களைத் தந்தது!

1919ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாண்டேகு செம்ஸ்போர்டு குழு அறிக்கைப்படி – இந்தியாவின் மாகாணங்களில் இரட்டை ஆட்சி (Dyarchy) நடத்திட ஒப்புக் கொண்டு மே 1920இல் மாகாண சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்தியது.

வென்றது நீதிக்கட்சி

அதில் நீதிக்கட்சி போட்டி போட்டு, வென்று, ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.

அதன் தலைவர் வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி.தியாகராயரை பிரதம அமைச்சர் பதவியேற்கக் கவர்னர் அழைத்தார்!

அவரோ, தான் பதவியேற்காமல், கடலூர் சுப்பராயலு (ரெட்டியாரை) அப்பொறுப்பை ஏற்கும்படி செய்து, அந்நாளைய அரசியல் அதிசயமானார்! என்னே அவரது பெருந்தன்மையின் உச்சம் (majurity)!

மொத்தம் மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

  1. கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்)
  2. பானகல் அரசர் இராமராய நிங்கார்
  3. சர். கே.வி. ரெட்டி (நாயுடு)

சுப்பராயலு அவர்கள் இடத்திற்குப் பின்னர் ஏ.பி.பாத்ரோ நியமிக்கப்பட்டார். அவர்  கருநாடகப் பகுதியைச் சேர்ந்தவர்.

அவ்வியக்கம், திராவிடர்களின் பறிக்கப்பட்ட கல்வி உரிமை, உத்தியோக உரிமை முதலியவற்றிற்கு சீரிய ஏற்பாடுகளை விரைந்து செய்து மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான விடியலைத் தரத் தொடங்கின!

சமூகப் புரட்சியாளர் பானகல் அரசர்

திராவிடர் கழகம்

பதவியேற்ற சில மாதங்களில் முதல மைச்சர் கடலூர் சுப்பராயலு (ரெட்டி) அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுப் பதவி விலகிட, பானகல்அரசர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்தார்.

(இவர் 1912–லேயே மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்து Central Legislative Assembly-யிலேயே தீண்டாமை ஒழிப்புக்குத் தீவிரமாகக் குரல் கொடுத்தார். மானக்ஜி தாதாபாய் அவர்களின் மனிதநேய குரலுக்குத் (தாதாபாய் நவ்ரோஜி அல்ல) துணையாக நின்று, தீண்டாமை ஒழிப்பு மசோதாவிற்குத் இந்தியாவின் சட்டமன்றத்தில் கால் கோள் இட்ட மனித உரிமைப் போராளி (பானகல் அரசர்) என்பது பலரும் அறிந்திராத அரிய உண்மையாகும்).

அவர்தான் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்று மளமளவென்று, உரிமைகளைக் கிள்ளி அல்ல, அள்ளித் தந்து வரலாற்றின் புதிய பொன்னேட்டைத் திராவிடர் எழுச்சியில் முத்திரை பதித்த நம் அனைவரின் மகத்தான நன்றிக்குரியவர்.

இவருக்குக் கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராயர் முழு ஆதரவு தந்து இவரை முடுக்கி விடச் செய்தார்.

அதுபோலவே டக்டர் சி.நடேசனார் போன்ற தலைவர்களும்!

வகுப்புவாரி ஆணை வரலாறு

அந்த ஆட்சி 17 ஆண்டுகள் நேரடியாகவும், ஆதரவு தந்த ஆட்சியாகவும் 1920 முதல் 1937 வரை நீடித்து புதிய திராவிடர் எழுச்சியினை வரலாற்றுக் கல்வெட்டாகப் பதித்தது.

பதவியேற்ற ஓராண்டிலேயே வகுப்பு வாரி உரிமை (கம்யூனல் ஜி.ஓ. – Communal G.O.) ஆணையை 16 செப்டம்பர் 1921இல் (Order No. 613) “அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதவர்களின் வகுப்புவாரி முறையில், பிரதிநிதித்துவம் போதிய அளவில் இருக்க வேண்டும்” (Adequate Proportional Representation) என்று அந்த அரசு ஆணை போடப்பட்டது.

ஆனால் அன்று அரசுச் செயலகத்தில் முக்கிய கேந்திரப் பதவி அதிகாரிகளாக உயர் ஜாதிப் பார்ப்ப னர்களே பெரிதும் நிரம்பி இருந்த காரணத்தால், இந்த ஆணையைச் செயல்படுத்த விடாமல் பலவாறு கேள்விகள், திருத்தங்கள் – முதலியவற்றை எழுப்பினர். தங்களது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அந்த ஆணையை செயலுக்கு வராமலே தடுப்பதில் பெரிய பார்ப்பனர்கள் தங்களது அதிகாரத்தை முழு வீச்சில் பயன்படுத்தினர்.

எத்தனைத் தடைகள்?

பல மேல் அதிகாரிகள், வெள்ளைக்கார மேல் அதிகாரிகளைக் குழப்பியும், தம் வயப்படுத்தியும் அந்தச் சமூக நீதி ஆணை – கைக்கெட்டியது வாய்க்கெட்டா நிலையை உருவாக்கி மகிழ்ச்சி அடைந்தனர்!

1921ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு மற்றொரு புது ஆணை Second Commual G.O. No. 658 dated 15.8.1922 வெளியிடப்பட்டது. 12 அம்ச ரோஸ்டர் சிஸ்டத்தை உள் அடிக்கற்றையாகப் போட்டு போதிய விளக்கத்தை தந்தும், மீண்டும் அந்நாளைய ‘‘அக்கிரகார நந்திகள்’’ – தங்களது ‘‘Red Tape Juggary’’ – தங்களது ‘‘சிவப்பு நாடா’’ வித்தக ஜால விளையாட்டு மூலம் செயல்பட விடவே இல்லை – சில வெள்ளைக்கார மேல் அதிகாரிகள் பார்ப்பனரது ஆசைக்கும், எண்ணத்துக்கும் துணை போய் பலியாகி, திராவிட இனத்தை வஞ்சித்தனர்.

ஆர்.ஏ.கிரஹாம் (R.A.Graham) என்பவர் இந்த துரோகத்திற்கு ஆரிய – பார்ப்பன மேலான் மக்களுக்குப் பெரிதும் வயப்பட்டவர் ஆனார். ஜி.ஜி.டாட்டன்ஹாம் என்பவர் பார்ப்பனர் நலத்திற்கு, குறிப்பாக ஓய்வு பெற்ற பார்ப்பனர் பென்ஷனைப் பாதிக்கும் என்று அவாளுக்குப் பரிந்து வாதாடி, இந்த ஆணை மறுபடியும் “ஊறுகாய் ஜாடி”க்கு அனுப்பப்படுவதற்கான காரணஸ்தரானார்!

முத்தையா (முதலியார்) சாதனை!

திராவிடர் கழகம்

ஊறுகாய் ஜாடியி லிருந்து வெளியே கொண்டு வந்து அதற்கு மீண்டும் உயிர் ஊட்டி ‘‘புதுப் பிறப்பாக’’ 1928இல் நீதிக்கட்சி ஆதரவுடன் செயல்பட்ட  டாக்டர் சுப்பராயன், சுயேச்சை அமைச்சரவையின் அமைச்சரான முத்தையா முதலியாரால்தான் G.O./071/4.11.1927, and 1129/15.12.1928 ஆகியவை செயலாக்கத்திற்கு வந்தன.

நீதிக்கட்சி, திராவிடர் ஆட்சியின் பெருத்த விளைச்சல் – சமூகநீதிச் சரித்திரமாகத் தொடங்கியது இதிலிருந்துதான்.

இந்த வகுப்புரிமைப் படிக்கட்டு மூலம்தான் ஒடுக்கப்பட்ட நம் மக்கள் கல்வி, உத்தியோகம் மற்றும் அதன் காரணமாக வாழ்வாதாரம் பெற்று புலம் பெயர்ந்து அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முன்பு கூலிகளாகச் சென்ற அதே சமூகம் அதே நாடுகளுக்கு நல்ல ஊதியத்துடன் இன்று மதிப்புறு பணி வாய்ப்புகளோடு செல்வது வியக்கத்தக்கது.

இந்த வகுப்புரிமையை ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் அன்று 1928இல் தொடங்கிய சதிச் செயலில் 1950இல் அவர்களுக்கு – “சுயராஜ்ய இந்தியாவின்” அரசமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி, பொய் உரிமையை முன்வைத்து நடத்தப்பட்ட செண்பகம் – துரைராஜன் வழக்கு மூலம் வெற்றி பெற்றனர்.

முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும் –

76 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும்!

தந்தை பெரியார் களம் கண்டு வகுப்புரிமைக் கிளர்ச்சியை 1950-1951இல் மக்களைத் திரட்டி நடத்தி பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் வந்து வகுப்புரிமை வேறு சமூகநீதி வடிவத்துடன செயலுக்கு வந்தது – திராவிடம் வென்றது! அந்த முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடங்கி அந்த நீதிக்கட்சி விதைத்து பெரும் விளைச்சலாகி 69 சதவிகித இடஒதுக்கீடு என்று பெரியார் மண்ணில், பூத்துக் குலுங்க 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு என்று இரும்பு வேலி அதனை எந்த மாடும் மேயாதபடி காத்தது.

பெரியார் தொண்டர்கள், திராவிடர் கழகத்தின் அயராத முயற்சியால் மூன்று பார்ப்பனர் தலைமையினாலும் தடுக்க இயலாது தலைவணங்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தால் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வெற்றி பெற்றது.

76 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத் தின்படி சட்டமானது. ஒன்றிய – மத்திய அரசில் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு முன்பு கிடைக்காத இடஒதுக்கீடு, மண்டல் பரிந்துரை மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள ஓ.பி.சி.(OBC)யினருக்குக் கிடைத்தது.

திராவிட மாடலே எல்லாம்!

இதை இன்றும் கண்காணித்து நிலைக்க வைக்கும் அரசாக, தமிழ்நாடு மாநிலமாகிய, பெரியார் மண்ணில் திமுக அரசுகளும் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகளும் முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஆட்சியிலும் கூட – முன்பு ஓமந்தூரார் ஆட்சி, காமராசர் ஆட்சி என்ற நிலைமையிலும் அனைத்துமே சமூக நீதியைச் செயல்படுத்திய ஆட்சிகளாக அமைந்ததற்குக் காரணம் நீதிக்கட்சி ஏற்படுத்திய தாக்கம்தானே!

மகளிருக்கு வாக்குரிமை (1922), தேவதாசி ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமணச் தடைச் சட்டம், ஆதி திராவிட மக்களின் கல்வி உரிமை, சமத்துவ உரிமை, அதிகாரப் பங்களிப்பு, இழிவு ஒழிப்புச் சட்டம், கோயில் பார்ப்பனர் சர்வ கொள்கைகளைத் தடுத்த – பானகல் அரசின் இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்.

இவை ஒவ்வொன்றையும் தங்களுக்குத் தரப்பட்ட குறுகிய அதிகார எல்லைக்குள்ளயே இவ்வியக்கம் சாதித்துக் காட்டியது.

நீதிக்கட்சியின் நீட்சியே தி.மு.க. ஆட்சி!

1956இல் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்து இரண்டு பொதுத் தேர்தல்களில் 1956, 1962 – பத்தே ஆண்டுகளில் 1967இல் ‘‘சென்னை ராஜ்யத்தில்’’ அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்து அரிய சாதனை செய்தபோது, அவரிடம் செய்தி யாளர் கேட்ட கேள்விக்கு, “இது பழைய நீதிக்கட்சி ஆட்சியின் நீட்சிதான். ஜஸ்டிஸ் கட்சியின் பேரன் ஆட்சி” என்று பொருத்தமாகப் பதிலைச் சொல்லி வியக்க வைத்தார்!

பிறகு கலைஞர் ஆட்சி, இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சி! (இடையிடையே அதிமுக ஆட்சி –
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி என்றாலும், எல்லாம் இந்த எல்லையைத் தாண்ட முடியாதவைகள்.) அதற்குப் பிறகு அது அடமானக் கட்சியாகியது அரசியல் கொடுமை!

அறிஞர் அண்ணாவின் ஆட்சி ஓராண்டு தான் என்றாலும் அதன் முப்பெரும் சாதனைகளாக பல நூறாண்டு நிலைத்து நிற்கும் சமூக கலாச்சார அரசியல் புரட்சியை அமைதி வழியில் சாதித்தார்.

இப்போது உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி நீதிக்கட்சி, தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் – தாய்க்கழகமான திராவிடர் கழகம் – ஆகியவற்றின் அடிச்சுவட்டில் அந்த பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதிச் சுடரை ஏந்தி, அடுத்த பல தலைமுறைகளை ஆயத்தப்படுத்திடும் கொள்கை வழி நிற்கும் சரித்திரச் சாதனை அரசாகத் தொடர்ந்து இன எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் கலங்கடித்துக் களத்தில் சளைக்காத ஓர் உரிமைப் போர் நடத்தும் சாதனை அரசாக திராவிட நாயகன், சமூக நீதிகாத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமையில் சிறப்பாக பீடு நடை போடுகின்றது. 2026–லும் மீண்டும் வெற்றி மகுடம் சூடி வரலாறு படைப்பது உறுதி.

பல தலைமுறைகளைக் காக்கும் தலைமுறை ஆட்சிதான் என்பதைத் தலை நிமிர்ந்து பெருமை பொங்க, முரசொலித்து, சமூக விடுதலைக் கொடி பறக்கப் பார் புகழும் ஆட்சி! ‘‘திராவிட மாடல் ஆட்சி’’ தனது பாட்டனாரின் தோளில் ஏறி நின்று இன்றும் சாதித்துக் கொண்டே தொடருகிறது!

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சிறப்புகள்!

படைக்கட்டும் புதியதோர் இணையற்ற இமாலயச் சாதனைகள்!!

- விடுதலை நாளேடு, 20.11.25

Thursday, 21 October 2021

கலைஞர் வந்தது முதல் செய்தது வரை

*கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?*

*பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.*

*கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக  வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் கோவைக்குத்தான் சென்றார்.சென்னைக்கு அல்ல)*

*மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.*

*அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில்  நடித்தவர் எம்ஜிஆர்.*

*கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.*

*1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார்(படம் பார்க்க) கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955)*

*அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.*

*எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார்.*

*எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950)*

*அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.*

*ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.*

*அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.*

*இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்*

*இன்னொன்று சொல்கிறேன்.*

*திமுக தொடங்கப்பட்டது 1949ல்*

*முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல்*

*வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.*

*1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.*

*அது மட்டுமல்ல. எம்ஜிஆர், சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.*

*அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.*

*இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார்.*

*கலைஞரும் இந்து மத விரோதமும்* 

*கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே!*
 
*எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று.*
 
*அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்!*
 
*அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். அப்போது தான் தெரியும் அவரின் உயரம்.*
 
*அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடந்தவை:*
 
*♦️  முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு, 1996*
 
*♦️  புரவலர் விருது & தங்க நிற அட்டை திட்டம் - ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருக்கோயில் புரவலர் என்ற பட்டமும், அரசு சான்றிதழும், தங்க நிறத்திலான அட்டையும் வழங்க அரசு உத்தரவு. அவர்கள் குடும்பத்தினர் 5 பேருக்கு அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களில் 20 வருடங்கள் சிறப்பு தரிசன அனுமதி வழங்கவும் உத்தரவு. 48 புரவலர்கள் மூலம் ரூ.2.40 கோடி நிதி திரட்டல், 2006-2011*

*♦️  திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்*
 
*1. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், 1996*
*2. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், 1997*
*3. திருநீர்மலை ரங்கநாத சுவாமி திருக்கோயில், 1997*
*4. திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், 1997*
*5. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 1997*
*6. கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், 1997*
*7. தஞ்சை பெரிய கோயில், 1997*
*8. சென்னை மல்லீஸ்வரர் திருக்கோயில், 1997*
*9. வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1997*
*10. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், 1998*
*11. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், 1998*
*12. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், 1998*
*13. ஆழ்வார் திருநகரி அரவிந்தலோசனர் திருக்கோயில், 1998*
*14. சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், 1999*
*15. வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், 1999*
*16. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், 1999*
*17. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 1999*
*18. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், 1999*
*19. ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோயில், 2000*
*20. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், 2000*
*21. மதுரை காளமேக பெருமாள் திருக்கோயில், 2000*
*22. அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2000*
*23. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், 2000*
*24. தொட்டியம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில், 2000*
*25. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், 2000*
*26. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், 2000*
*27. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 2000*
*28. பவானி சங்கமேசுவரர் திருக்கோயில், 2000*
*29. காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 2000*
*30. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், 2000*
*31. திருமுட்டம் பூவராகசுவாமி திருக்கோயில், 2000*
*32. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், 2000*
*உள்ளிட்ட 2459 கோயில்களில் குடமுழக்கு,* 
*33. தமிழகம் முழுவதும்  842 கோயில்களில் பல்வேறு திருப்பணிகள்.*
*34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள்*
*35. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு ரூ.85000/- நிதி உதவி*   
 
 *♦️  கோயில் சுற்றுப்புற மேம்பாடு*
 
*1. நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு அரசின் சார்பில் இலவச மின்விளக்கு* 
*2. திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரல், படிக்கட்டுகள் செப்பனிடல் & மழை நீர் சேமிப்பு ஏற்படுத்துதல்*
*3. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருகுளத்தை சீரமைக்க ரூ.43.90 லட்சம், அருள்மிகு அஷ்டபூஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரங்கசாமி குளத்தினை சீரமைக்க ரூ.22.50 லட்சம் நிதி ஒதுக்கல்*
*4. இந்து அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 50 முக்கிய திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை ஓவியங்களை பாதுகாக்க ரூ.20 லட்சம் செலவில் நடவடிக்கை* 
 
*♦️  கோயில்களில் தமிழ்* 
 
*1. தமிழில் வழிபாடு, தமிழில் வேள்வி  1998*
*2. சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்விய பிரபந்த பயிற்சி மையங்கள், 1998-99*
*3. திருக்கோயில் ஆகம விதிகள் அடங்கிய உத்ரகாமிக ஆகமம் நூலை, 1999*
*4. தமிழ் போற்றி அர்ச்சனை புத்தகங்கள் வெளியீடு, 1999*
*5. சைவத் திருக்கோயில்கள் 5-ல் தேவார இசைப் பள்ளிகள்* 
*6. வைணவத் திருக்கோயில்கள் 4-ல் பிரபந்த இசைப் பள்ளிகள்* 
*7. 8 திருக்கோயில்களில் நாதஸ்வரம் & தவில் பயிற்சி*
*8. 75 திருக்கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்* 
*9. சிதம்பரம் நடராசர் தமிழ் திருமுறைகள் இசைத்தல்*
 
 *♦️  தங்க விமானங்கள், தங்கத்தேர் & மரத்தேர் பணிகள்* 
 
*1. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக 34 தங்கத் தேர்கள்* 
*2. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007*
*3. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007*
*4. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2010*
*5. திருக்கோயில்களின் 241 மரத் தேர் புதுப்பிப்பு* *
*6. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் அம்பாளுக்கு புதிய திருத்தேர் அமைத்தல் & தேரோட்டம், 2008*
 
*♦️  கோயில் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள்* 

*1. கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை என்ற கொள்கை முடிவு*
*2. தமிழகம் முழுவதும் 8325 கோயில் சொத்து பதிவேடுகள் உருவாக்கம், 1996*
*3. தனியார் ஆக்ரமிப்பில் இருந்த திருத்துறைப் பூண்டியில் 621 ஏக்கர், பேரூரில் 250 ஏக்கர் உள்ளிட்ட கோயில் நிலங்கள் மொத்தம் 2745 ஏக்கர் கோயில் நிலங்கள் நேரடி மீட்பு* 
*4. நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக 1414 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு* 
*5. திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாத்திட திருவொற்றியூர், திருத்தணி, விருதுநகர், விழுப்புரம் & தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம்*
*6. மொத்தம் 532 திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்துதல்*
*7. மொத்தம் 59  திருக்கோயில்களில் CCTV  பொருத்துதல்*
*8. திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் நீதிமன்ற கட்டணம் சொத்து மதிப்பில் 7.5 சதவிகிதம் என்று இருந்ததை மாற்றி அனைத்து வழக்குகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.100/- என நிர்ணயித்து அரசு ஆணை, 2010*
*9. கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பருத்தி நூல் புடவை & வேட்டிகளை ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, அவற்றை முதியோர், ஆதரவற்றோர் & கைம்பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்*
  
*♦️  பணியாளர் நியமனம் & நலன்*
 
*1. ஓய்வூதிய நல நிதி, 1996*
*2. பணியாளர் சேமநல நிதி, 1997*
*3. பணியாற்றும் காலத்தில் இயற்கை எய்தும் பணியாளர்களுக்கு ரூ.2000/- இறுதி சடங்கு நிதி, 1997*
*4. பணியாளர்களின் மகன் திருமணத்திற்கு ரூ.6000, மகள் திருமணத்திற்கு ரூ.10000/-, 1997*
*5. மருத்துவப்படி, சீருடை சலவைப் படி, இருசக்கர வாகனம் வாங்க கடன், 1997*
*6. கோயில்களுக்கான 200 புதிய செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல், 1998*
*7. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களின் அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படி, 1998*
*8. திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, 1999*
*9. ஆண்டுக்கு ஒரு லட்சமும் அதற்கு மேலும் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம், 1999*
*10. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மடிக்கணனி வழங்குதல், 2010*
*11. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி பயில நிதி உதவி, 2010*
*12. திருக்கோயில் பணியாளர்கள் 2575 பேருக்கு ஒரே சீருடை & அடையாள அட்டை, 2010*
*13. கிராம பூசாரிகள் 1146 நபர்களுக்கு ஓய்வூதிய திட்டம்*
*14. ஒரு காலப் பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர் & பூசாரிகள்10,000 பேருக்கு இலவச சைக்கிள், 2010*
*15. மொத்தம் 49,240 கிராம பூசாரிகள் அடங்கிய நலவாரியம், 2010*
*16. திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள் நியமனம்* 
*17. மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில் 14 தவில், 30 நாதஸ்வரம், 4 தாளம் ஆகிய இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்* 
*18. சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்*
 
*♦️  கோயில்கள் சார்ந்து மக்கள் நலப் பணிகள்* 
 
*1. திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி மைய நிதியை உருவாக்கி திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நிதி வசதி* 
*2. திருக்கோயில்களில் ஆதரவற்ற இளம் சிறார்கள் கருணை இல்லம் திட்டத்தின் கீழ் 38 திருக்கோயில்கள் மூலம் 43 கருணை இல்லங்கள், 1975*
*3. திருக்கோயில் கருணை இல்ல மாணவ, மாணவியர்களுக்கு இலவச கணினி, தட்டச்சு & தையல் பயிற்சி* 
*4. திருக்கோயில்களால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை*
*5. நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கிய திருக்கோயில்களில் நூல் நிலையங்கள் அமைத்தல்* 
*6. பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம்*
*7. திருவேற்காடு, சமயபுரம் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் திருமண மண்டபங்கள், 2007 & 2009*
 
*♦️  திருவாரூர் ஆழித் தேர்*

*அனைத்து துறைகளிலும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும்படியான ஓர் சிறப்பு முத்திரையை பதித்துள்ள தலைவர் கலைஞர், அறநிலையத் துறையில் அப்படியான ஒரு முத்திரையை தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் பதித்துள்ளார்.*

*அது தான் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் ஆழித் தேர்.*

*நீண்ட நெடுங்காலமாக ஆத்திகர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் திருவாரூர் தேர் ஓட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது.  எண்கோண வடிவத்தில் நாலு நிலைகளுடன் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மரத்தால் ஆன ஆழித்தேரை, நாத்திகரான இவர் 1969ல் முதல்வரானவுடன் திருச்சி Bhel நிறுவனத்தின் உதவியுடன் செப்பனிட்டு, இரும்பு அச்சுகள், சக்கரங்கள் & Hydraulic Brake System எல்லாம் கொண்டதாக நவீனமயப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு ஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தார்.*

*இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் அவர் மறைவுக்கு பின்னரும் ஏன் தொடர்ந்து இந்து மத விரோதி என்று தூற்றுகிறது?* 

*அதற்கு காரணம்  கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள் தான்.* 

*தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,*

*1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்*
*2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்*
*3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்* 
 
*பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சர்கர் பணி, இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு  குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அவர் மீதான வன்மமாக வளர்ந்து அவர் மறைவுக்கு பின்னரும் அவரை தூற்ற காரணமாகிவிட்டது.*

*கலைஞரின் வார்த்தைகளே தான் அவர்களுக்கான பதில்*

*கடவுளை கலைஞர் ஏற்கிறாரா இல்லையா என்பதல்ல கேள்வி.*
*கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் கலைஞரை ஏற்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி.*
*அந்த கேள்விக்கான பதில் தான் அவர் செய்துள்ள, மேலே பட்டியிலடப்பட்டுள்ள பணிகள்*

1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் 
2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் 
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் 
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் 
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் 
7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் 
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் 
9. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர் 
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர் 
11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர் 
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் 
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர் 
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர் 
15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர் 
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர் 
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர் 
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர் 
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் 
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
23. கோவில்களில் குழந்தைகளுக்கான " கருணை இல்லம் " தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர் 
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர் 
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர் 
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர் 
28. SIDCO உருவாக்கியது கலைஞர் 
29. SIPCOT உருவாக்கியது கலைஞர் 
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர் 
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் 
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர் 
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர் 
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர் 
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபட்டோரில் இணைத்தது கலைஞர் 
36. மிகவும் பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர் 
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் 
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர் 
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர் 
44. பெண்ணுக்கு சொத்தில்  சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் 
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர் 
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர் 
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் 
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர் 
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர் 
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் 
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர் 
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர் 
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர் 
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு 
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர் 
61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர் 
62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர் 
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர் 
64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர் 
65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர் 
66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர் 
67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு 
68. சமத்துவபுரம் தந்தது கலைஞர் 
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர் 
70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர் 
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர் 
73. உருது அக்காடமி தந்தது கலைஞர் 
74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர் 
75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர் 
76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர் 
77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர் 
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தது கலைஞர் 
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர் 
80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
81. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர் 
82. ஆசியாவிலே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்தது கலைஞர் 
83. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
84. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் 
85. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர் 
86. 20 அணைகள் கட்டியது கலைஞர் 
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர் 
88. 9 மாவட்டங்களில் புதிய மாவத்டாட்சியர் அலுவலகம் கட்டியவர் கலைஞர் 
89. மதுரை நீதிமன்றம் கட்டியது கலைஞர் 
90. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர் 
91. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர் 
92. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர் 
93. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர் 
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர் 
95. 13000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர் 
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர் 
97. சென்னையில் 9 மேம்பாலங்கள் தந்தது கலைஞர் ச
98. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர் 
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர் 
*100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்* 
*101. வேலூர், தூத்துகுடி, கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்தது கலைஞர்*
*102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்* 
*103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்னை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்*
*104. 10 சமையல் பொருட்க்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர்* 
*105. விவசாய கடன் 7000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்*
*106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர்* 
*107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1050 ஆக உயர்த்தியது கலைஞர்*
*108. வகைபபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1100 ஆக உயர்த்தியது கலைஞர்* 
*109. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர்* 
*110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2000 ஆக உயர்த்தியது கலைஞர்*
*111. மாவட்டத்திற்க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்* 
*112. ரூ 189 கோடி செலவில் காவிரி - குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்* 
*113. ரூ 369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்*
*114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்* 
*115. பொது நுழைவு தேர்வு ரத்து செய்தது கலைஞர்* 
*116. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்* 
*117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனராமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தது கலைஞர்*
*118. அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர்* 
*119. 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்*
*120. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான " நலமான தமிழகம் திட்டம் " தந்தது கலைஞர்* 
*121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர்*
*122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தது கலைஞர்.*
*123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்* 
*124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர்*
*125. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர்*
*126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்* 
*127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகள் தந்தது கலைஞர்* 
*128. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்*
*129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்*
*130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி " அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர்*
*131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர்* 
*132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்*
*133. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்* 
*134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தது கலைஞர்* 
*135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்தது கலைஞர்*
*136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்* 
*137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்* 
*138. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்* 
*139. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்* 
*140. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர்* 
*141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்* 
*142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர்* 
*143. 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்* 
*144. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்* 
*145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில் உருவாக்கியது கலைஞர்* 
*146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்*
*147. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்*
*148. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்* 
*149) முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.*
*150) இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்..*
*151) இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.*
*152) பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.*
*153) மாவட்ட தலை நகரங்களில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்*
*154) மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி வழங்கியவர் கலைஞர்.*

*சேப்பாக்கம் அன்புகுமார் மு.துணை செயலாளர் 115.வது வட்டம்*

Thursday, 12 August 2021

கலைஞர் நினைவுநாள் சிந்தனைகள் (1924-2018) (சாதனை)

 


கலைஞர் எழுதிய புதினங்கள்

1. வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968

2. சுருளிமலை (அய்ந்தாம் பதிப்பு) 1968

3. வான்கோழி 1978

4. புதையல் 1975

5. ஒரே ரத்தம் 1980

6. ஒரு மரம் பூத்தது

7. அரும்பு (குறும் புதினம்) 1983

8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)

9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)

10. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953

வரலாற்று புதினங்கள்

1. பலிபீடம் நோக்கி 1947

2. ரோமாபுரிப் பாண்டியன் 1974

3. பொன்னர் - சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988

4. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991

5. தென்பாண்டிச் சிங்கம் 1983

6. தாய் - காவியம்

உரை ஓவியங்கள்

1. குறளோவியம் (குறுநூல்) 1956

2. குறளோவியம் (முதல் பதிப்பு) 1985

3. தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982

4. சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்)

(முதல் பதிப்பு) 1987

5. திருக்குறள் கலைஞர் உரை

(முதல் பதிப்பு) 1996

6. தொல்காப்பியப் பூங்கா 2003

கடிதங்கள்

1. கலைஞர் கடிதம் தொகுதி -1 1986

2. கலைஞர் கடிதம் தொகுதி -2 1986

3. கலைஞர் கடிதம் தொகுதி -3 1986

4. கலைஞர் கடிதம் தொகுதி -4 1986

5. கலைஞர் கடிதம் தொகுதி -5 1986

6. கலைஞர் கடிதம் தொகுதி -6 1986

7. கலைஞர் கடிதம் தொகுதி -7 1986

8. கலைஞர் கடிதம் தொகுதி -8 1986

9. கலைஞர் கடிதம் தொகுதி -9 1986

10. கலைஞர் கடிதம் தொகுதி -10 1986

11. கலைஞர் கடிதம் தொகுதி -11 1996

12. கலைஞர் கடிதம் தொகுதி -12 1996

13. கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்

கவிதைகள்

1. கவிதையல்ல 1945

2. முத்தாரம்

(சிறையில் எழுதிய

கவி வசனங்களின் தொகுப்பு)

3. அண்ணா கவியரங்கம் 1968

4.  Pearls (Translation) 1970

5. கவியரங்கில் கலைஞர் 1971

6. கலைஞரின் கவிதைகள் 1977

7.வாழ்வெனும் பாதையில்,

கவியரங்கக் கவிதை

8. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989

9. கலைஞரின் கவிதை மழை 2004

கட்டுரை நூல்கள்

1. உணர்ச்சி மாலை 1951

2. பெருமூச்சு 1952

3. விடுதலைக்கிளர்ச்சி

(இரண்டாம் பதிப்பு) 1952

4. களத்தில் கருணாநிதி 1952

5. பேசும் கலை வளர்ப்போம் 1981

6. பூந்தோட்டமும் - இனமுழக்கமும் 1986

7. யாரால்யாரால்யாரால்?

(முதல் பதிப்பு) 1981

8. மலரும் நினைவுகள் 1996

9. இலங்கைத் தமிழாஇது கேளாய்! 1981

10. திராவிடசம்பத்து 1951

11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985

12. உரிமையின் குரலும் - உண்மையின் தெளிவும்

13. இருளும் ஒளியும்

14. சரித்திரத் திருப்பம்

15. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983

16. மயிலிறகு 1993

17. அகிம்சா மூர்த்திகள் 1953

18. அல்லி தர்பார் 1953

19. இன முழக்கம்

20. உணர்ச்சி மாலை

21. கருணாநிதியின் வர்ணனைகள் 1952

22. சுழல் விளக்கு 1952

23. துடிக்கும் இளமை

24. நாடும் நாடகமும் 1953

25. விடுதலைக் கிளர்ச்சி 1952

சிறுகதைகள்

1. சங்கிலிச் சாமியார் 1945

2. கிழவன் கனவு 1948

3. பிள்ளையோ பிள்ளை 1948

4. தப்பிவிட்டார்கள் 1952

5. தாய்மை 1956

6. கண்ணடக்கம் 1957

7. நாடும் நாடகமும் 1953

8. முடியாத தொடர்கதை 1982

9. கலைஞரின் சிறுகதைகள்

1977, 1982

10. கலைஞரின் சிறுகதைகள்

(நான்காம் பதிப்பு) 1991

11. 16 - கதையினிலே 1995

12. நளாயினி

13. பழக்கூடை 1979

14. வாழ முடியாதவர்கள்

15. தேனலைகள் 1985

16. ஒருமரம் பூத்ததுசிறுகதைகள், 1979

வரலாறுதன் வரலாறு

1. இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973

2. இந்தியாவில் ஒரு தீவு 1978

3. ஆறுமாதக் கடுங்காவல் 1985

4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

முதல் பதிப்பு 1975

5. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)

முதல் பதிப்பு 1987

6. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம் -

முதல் பதிப்பு) 1997

7. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)

முதல் பதிப்பு 2003

8. நெஞ்சுக்கு நீதி (அய்ந்தாம் பாகம்)

முதல் பதிப்பு ஜூன் 2013

9. நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)

முதல் பதிப்பு அக்டோபர் 2013

10. கையில் அள்ளிய கடல்

(பேட்டிகளின் தொகுப்பு) 1998

பொன்மொழிகள் சிந்தனைக் கருத்துகள்

1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு) 1978

2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982

3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996

4. கலைஞரின் நவமணிகள் 1984

5. சிந்தனை ஆழி 1953

6. கலைஞரின் கருத்துரைகள்

(முதல் தொகுப்பு) 1967

7. கலைஞரின் கருத்துரைகள் 1971

8. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978

9. கலைஞரின் சொல்நயம் 1984

10. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு 1994

11. கலைஞரின் முத்தமிழ் - சிந்தனைத்துளிகள்

12. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்

13. கலைஞரின் உவமை நயங்கள் 1972

நாடக உலகம்

(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)

1. சாந்தா (பழனியப்பன்

(நான்காம் பதிப்பு) 1943

(நச்சுக்கோப்பை) 1985

2. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953

3. மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956

4. தூக்கு மேடை 1951

5. உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959

6. ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964

7. திருவாளர் தேசியம்பிள்ளை

(இரண்டாவது பதிப்பு)1967

8. சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967

9. பரதாயணம் 1978

10. புனித இராஜ்யம் 1979

11. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)

12. காகிதப்பூ 1966

13. பரப்பிரம்மம் 1953

14. நானே அறிவாளி 1971

15. அனார்கலி 1967

16. சாக்ரடீஸ் 1967

17. உன்னைத்தான் தம்பி

18. சேரன் செங்குட்டுவன் 1978

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

1.கலைஞரின் சட்டமன்ற உரைகள் - 1

2. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -2

3. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -3

4. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -4

5. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -5

6. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -6

7. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -7

8. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -8

9. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -9

10. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -10

11. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -11

12. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -12

திரையுலக படைப்பில்

கலைஞரின் பங்களிப்பு

1.  ராஜகுமாரி (வசனம்) 11.4.1946

2.  அபிமன்யூ (வசனம்) 6.5.1948

3. மருதநாட்டு இளவரசி

  (கதைவசனம்) 2.4.1950)

4. மந்திரி குமாரி

  (கதைவசனம்பாடல்) 24.6.1950

5. தேவகி(கதைவசனம்) 21.6.1951

6. மணமகள் ( திரைகதைவசனம்) 15.8.1951

7. பராசக்தி

  (திரைக்கதைவசனம்பாடல்) 17.10.1952

8. பணம் (திரைக்கதைவசனம்) 27.12.1952

9. நாம் (கதை வசனம்) 05.03.1953

10. திரும்பிப் பார் (கதைவசனம் ) 10.7.1953

11. மனோகரா (திரைக்கதைவசனம்) 03.3.1954

12. மலைக்கள்ளன்

  (திரைக்கதைவசனம்) 22.7.1954

13. அம்மையப்பன் (கதைவசனம்) 24.9.1954

14. ராஜா ராணி (கதைவசனம்) 25.2.1956

15. ரங்கோன்ராதா

(திரைக்கதைவசனம்பாடல்) 1.11.1956

16. புதையல் ( கதை வசனம்) 16.5.1957

17. புதுமைப்பித்தன் (கதைவசனம்) 2.8.1957

18. குறவஞ்சி (கதைவசனம்பாடல்) 4.3.1960

19. எல்லாரும் இந்நாட்டு மன்னர்

   (வசனம்)1.7.1960

20. அரசிளங்குமரி (கதைவசனம்) 1.1.1961

21. தாயில்லாப் பிள்ளை

   (திரைக்கதைவசனம்) 18.8.1961

22. இருவர் உள்ளம்

(திரைக்கதைவசனம்) 29.3.1963

23. காஞ்சித் தலைவன்

   (கதைவசனம்பாடல்) 26.10.1963

25. பூம்புகார்

   (திரைக்கதைவசனம்பாடல்) 18.9.1964

26. பூமாலை (கதைவசனம்பாடல்)23.10.1965

27. அவன் பித்தனா?

   (திரைக்கதைவசனம்பாடல்)12.8.1966

28. மறக்க முடியுமா

  (திரைக்கதைவசனம்பாடல்) 12.8.1966

29. மணிமகுடம்(கதைவசனம்) 9.12.1966

30. தங்கத்தம்பி (கதைவசனம்) 9.1.1967

31. வாலிப விருந்து (கதைவசனம்) 2.6.1967

32. எங்கள் தங்கம் (கதை) 9.10.1970

33. பிள்ளையோ பிள்ளை

    (கதைவசனம்) 23.6.1972

33. அணையாவிளக்கு (கதை) 15.8.1975

34. வண்டிக்காரன் மகன்

    (திரைக்கதைவசனம்) 30.10.1978

35. நெஞ்சுக்கு நீதி

(கதைவசனம்பாடல்) 27.4.1979

36. ஆடு பாம்பே (கதைவசனம்) 30.6.1979

37. குலக்கொழுந்து (கதைவசனம்) 23.1.1981

38. மாடிவீட்டு ஏழை

    (திரைக்கதைவசனம்)22.8.1981

39. தூக்குமேடை

    (கதைவசனம் பாடல்) 28.5.1982

40. காகித ஓடம்

    (திரைக்கதைவசனம்) 14.1.1986

41. பாலைவன ரோஜாக்கள்

   (திரைக்கதைவசனம்) 1.11.1986

42. நீதிக்குத் தண்டனை 1.5.1987

43. ஒரே ரத்தம்

   (கதைவசனம்பாடல்) 8.5.1987

44 மக்கள் ஆணையிட்டால்

   (திரைக்கதைவசனம்பாடல்) 29.1.1988

45. பாசப்பறவைகள்

   (திரைக்கதைவசனம்) 29.4.1988

46. இது எங்கள் நீதி

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

47. பாடாத தேனீக்கள்

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

48. தென்றல் சுடும்

   (திரைக்கதைவசனம்) 10.3.1989

49 பொறுத்தது போதும்

    (திரைக்கதைவசனம்) 15.7.1989

50. நியாயத் தராசு

    (திரைக்கதைவசனம்) 11.8.1989

51. பாசமழை (கதைவசனம்) 28.10.1989

52. காவலுக்குக் கெட்டிக்காரன்

   (திரைக்கதைவசனம்) 14.1.1990

53 . மதுரை மீனாட்சி

    (திரைக்கதைவசனம்பாடல்) 24.2.1993

54. புதிய பராசக்தி

   (திரைக்கதைவசனம்) 23.3.1996

55. மண்ணின் மைந்தன்

   (திரைக்கதைவசனம்) 4.3.2005

56 பாசக்கிளிகள்

   (திரைக்கதைவசனம்) 14.1.2006

57. உளியின் ஓசை

   (திரைக்கதைவசனம்) 4.7.2008

58. பெண்சிங்கம்

   (திரைக்கதைவசனம்) 3.6.2010

59. இளைஞன்

   (திரைக்கதைவசனம்)14.1.2011

60. பொன்னர் சங்கர்

   (திரைக்கதைவசனம்) 9.4.2011

பாடல்கள் இடம்பெற்ற படங்கள்

1950 - மந்திரி குமாரி

1952 - பராசக்தி

1953 - நாம்

1954 - அம்மையப்பன்

1956 - ராஜா ராணி

1956 - ரங்கோன் ராதா

1960 - குறவஞ்சி

1963 - காஞ்சித்தலைவன்

1964 - பூம்புகார்

1965 - பூமாலை

1966 - மறக்க முடியுமா ?

1979 - நெஞ்சுக்கு நீதி

1982 - தூக்கு மேடை

1987 - வீரன் வேலுத்தம்பி

1987 - ஒரே ரத்தம்

1988 - மக்கள் ஆணையிட்டால்

1988 - இது எங்கள் நீதி

1993 - மதுரை மீனாட்சி

தொலைக்காட்சித் தொடர்கள்

தொலைக்காட்சித் தொடராக வெளியான கலைஞரின் நாவல்

1. தென்பாண்டிச் சிங்கம்

2. இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்

(கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி - கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)

குறளோவியம்

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில்திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரைகலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும்திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில்பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

178 நூல்கள்

சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்

நெஞ்சுக்கு நீதி

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில்தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.

92 வயதில் வசனகர்த்தா

கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர்கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘சிறீ ராமானுஜர்’ ஆகும். ‘சிறீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காகதனது 92ஆவது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.