Sunday, 6 September 2026

மாணவர் சேர்க்கையின்போது ஜாதி, மதத்தைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை!

 

தமிழ்நாடு அரசு

மதுரை, செப். 6- பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடுவது கட்டாயம் இல்லை என உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டி யபட்டியைச் சேர்ந்த விக்ரமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தனியார் கல்வி நிறுவனங்களில் ஆரம்ப கட்டத்தில் மாணவர்களிடம் ஜாதி கேட்கக் கூடாது என விதி உள்ளது. இதை மீறி கல்வி நிறுவனங்களில் மாண வர் சேர்க்கையின்போது விண்ணப்ப தாரர்களின் ஜாதி மற்றும் சமூக விவ ரங்களை கட்டாயமாகக் கேட்கப்படு கிறது. இது மாணவர்கள் தேர்வு மற்றும் சேர்க்கை செயல்முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப படிவங்களில் ஜாதி அல்லது சமூக விவரங்களை கட்டாய மாக சேகரிக்கத் தடை விதித்தும், தனியார் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாத சூழலை உறுதிசெய்ய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் ஜாதி விவரங்கள் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘பள்ளிகளைத் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், கல்லூரி, தனியார் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை யின்போது ஜாதி, மாத அடையாளங்களை கட்டாயம் கேட்கக் கூடாது என சுற்ற றிக்கை அனுப்பப்பட்டு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘இதே போன்ற மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பள்ளிகளில் ஜாதி, மாத அடையாளங்களை குறிப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

-விடுதலை நாளேடு,6.9.26

No comments:

Post a Comment