Showing posts with label கருமை. Show all posts
Showing posts with label கருமை. Show all posts

Friday, 4 September 2026

கருமையின் பெருமை! - செ.ர.பார்த்தசாரதி சென்னை -34



அறிவியல் பகுதி


கருமையின் பெருமை!


கருப்பு என்றாலே மக்களில் பெரும்பான்மையினருக்கு வெறுப்புதான் வரும். அப்படிப்பட்ட கருப்பு நிறத்தையுடைய சட்டையை. வெறுக்காமல் தன்னுடைய தன் இனத்தினுடைய இழிவு நீங்குவதற்காக ஒவ்வொரு திராவிடர் கழகத்துக்காரர்களும் பெருமையாக அணிந்து கொள்கின்றனர்.


நீதியின் சின்னம் கருப்பு


நீதி துறையைச் சார்ந்தவர்கள் அணிவதும் கருப்புச் சட்டை தான்! நீதிக்காக பாடுபடுபவர்கள் (திராவிடர் கழகத்தினர்) அணிவதும் கருப்புச் சட்டை தான்! நீதியின் சின்னம் கருப்பு என்றே சொல்லலாம்.


கருப்பு என்றால் என்ன?


பெருமை மிக்க கருப்பு நிறத்தை பற்றி சிறிது ஆராய்வோம்.


நிறங்களைப் பற்றி சொல்லும் போது கருப்பையும் ஒரு நிறமாக பட்டியலில் சேர்ப்பார்கள். ஆனால் உண்மையில் கருப்பு என்பது ஒரு நிறம் கிடையாது.


அனேகமாக வெள்ளை நிறத்தை தான், நிறமற்றதாக நினைக்கத் தோன்றும். எந்தப் பொருளையும் தூய்மை செய்தல், அதாவது வெண்மையாக்கினால் தான், நிறங்களை நீக்கி சுத்த மாக்கி விட்டதாக நினைக்கத்கத தோன்றும் ஏந்த  பொருளையும் தூய்மை செய்தல், அதாவது வெண்மையாக்கினால் தான். நிறங்களை நீக்கி சுத்த மாக்கிவிட்டதாக நினைக்கத் தோன்றும்.


உதாரணத்திற்கு வெள்ளை துணியிலோ, வெள்ளை காகி தத்திலோ தான் அனைத்து நிறங் களையும் அச்சிடுகின்றனர். அப் பொழுதுதான் பளிச்சென்று தெரிகின்றது. ஆகையினால் நிற மற்ற பொருள் வெள்ளை என்று நினைக்கிறோம். ஆனால் வெள்ளை என்பது ஏழு நிறங்களின் கூட்டு நிறமாகும். அதாவது ஏழு நிறங்கள் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறம் வரும்


ஒரு வட்ட வடிவ தகட்டில் ஏழு சம பாகமாக பிரித்து ஒவ்வொன்றிலும் வானவில்லின் ஏழு நிறங்களையும் தீட்டி, அந்த தகட்டை ஒரு அச்சில் பொருத்தி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழலவிட்டால் அந்த தகடு வெள்ளை நிறமாக தெரியும்.

                                                                  நியூட்டனின் வட்டு

காரணம் குறிப்பிட்ட வேகத்தில் சுற்றும் போது ஏழு நிறங்களும் எல்லா இடத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் வரும். அப்படி வரும்போது ஏழு நிறங்களும் கலக்கப்படுவதால் வெள்ளை நிறமாக தெரிகிறது. ஏழு நிறங்களையும் (பெயிண்ட்) சம அளவில் கலந்தால் வெள்ளை நிறமாகி விடும்.


சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருக்கின்றன. இவை ஒன்று சேர்ந்து இருப்பதால்தான் சூரியனியிருந்து சிறிது பழுப்பான வெள்ளை ஒளி வெளி வருகின்றன.


இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் முப்பட்டக கண்ணாடியின் மூலமாக சூரிய ஒளியைப் பிடித்தால், ஒளி தனித்தனியாகப் பிரிந்து ஏழு நிறங்களாகத் தெரியும்'



அடுத்து ஓர் உண்மை என்னவென்றால், எந்தப் பொருளுக்கும் நிறம் கிடையாது என்பதுதான். அதாவது எல்லா பொருளும் கருப்பு என்பதுதான்.


சூரியனிலிருந்து வரும் ஒளியினாலேயே, குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஒளியினாலேயே (எந்த ஒளியானாலும்) தான் பொருள்கள் பல நிறங்களாகத் தெரிகின்றன.


பொருள்கள் அனைத்தும் நிற ஒளிகளை எதிரொளிப்பவை யாகவும் எதிரொளிக்காதவையா கவும். நிற ஒளிகளை உமிழ்பவை களாகவும், உமிழாதவைகளாகவும் இருக்கின்றன.


கண்பார்வை


இடையில் கண்பார்வை பற்றி சிறிது பார்ப்போம். நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமானால் ஒளியை உமிழ்வதாகவோ அல்லது ஒளியை எதிரொளிப்பதாகவோ இருக்க வேண்டும்.


ஒளி பொருள் மீது பட்டு எதிரொளிக்கப்பட்டு நம் கண்ணை அடையும் போது, அந்த பொருள் இருப்பதை கண் உணர்கிறது. அந்தப் பொருள் தன் மீது படும் ஒளியை எதிரொளிக்கவில்லையானால் அந்தப் பொருளை கண் உணராது. இதனால் அந்த பொருள் கருப்பாகத் தெரியும். ஒளியே இல்லையானால் பொருள் மீது பட்டு ஒளி எதிரொளித்து நம் கண்ணை அடைய முடியாததால், அந்தப் பொருளை நாம் உணர முடியாது. இதனால்தான் இரவில் (இருட்டில்) எந்தப் பொருளையும் பார்க்க முடிவதில்லை.




ஏழு நிறங்களை கொண்ட ஒளி ஒரு பொருளின் மீது படும்போது அந்தப் பொருள் எந்த ஒளியை மட்டும் (மற்ற ஒளிகளை ஈர்த்துக் கொள்ளும்) எதிரொளிக்கிறதோ அந்தப் பொருள், அந்த நிறமாகத் தெரியும்.


உதாரணமாக எழு நிறம் கொண்ட ஒளி (சூரிய ஒளி) மாங்காய் மீது படும்போது, அந்த மாங்காய் மற்ற நிறங்களை எல்லாம் ஈர்த்துக் கொண்டு, பச்சை நிறத்தை மட்டும் வெளியே விட்டு விடும். அதாவது எதிரொளித்து விடும். வெளியேற்றப்பட்ட பச்சை நிற ஒளி நம் கண்களை அடையும் போது, மாங்காய் பச்சையாகத் தெரிகிறது.


மாங்காய் பச்சை நிறத்திற்குப் பதில் சிவப்பு நிறத்தை எதிரொளிக்குமானால் மாங்காய்

சிவப்பாகத் தெரியும். 


ஒளியிலிருக்கும் எந்த நிறத்தையும் ஒரு பொருள் எதிரொளிக்காமல் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளுமானால் அந்தப் பொருள் கருப்பாகத் தெரியும்.


கண்ணுக்குப் புலப்படாத விண்மீன்கள்



விண்வெளியில் எண்ணிக்கையிலடங்கா கோள்கள் (விண்மீன்கள்) இருக்கின்றன. அவற்றில் சில கோள்களை கண்களால் பார்க்க முடியாது. காரணம், அவை ஒளிகளை எதிரொலிக் காததும், ஒளிகளை உமிழாததும் தான் ஆகும்.


அந்த கோள்களின் மீது படும் ஒளிகளை எல்லாம் தடுத்துக் கொண்டு எந்த ஒலியையும் அது எதிரொளிப்பதில்லை. 

அதனால் அந்த கோள்கள் கருப்பாக தெரிகின்றன. கருப்பாகத் தெரிவதால், வானவெளியில் அந்த கோள்கள் இருப்பதே கண்களுக்கு புலப்படுவதில்லை. பார்ப்பதற்கு வெட்ட வெளியாக தான் தெரியும்.

கோள்கள் இருப்பதை மற்ற ஆதாரங்களை வைத்து தான் கண்டுபிடிக்கின்றனர். 


நாளுக்கு நாள் பொருள்கள் அழுத்தப்பட்டு கொண்டே செல்கின்றன, இப்படி அழுத்தப் பட்டுக் கொண்டே சென்றால் குறிப்பிட்ட காலத்தில் அழுத்தம்

அதிகரிப்பதால், அந்தப் பொருள்கள்,  ஒளியை உமிழ்வதையோ, எதிரொளிப்பதையோ நிறுத்தி விடும். இதேபோல் ஆனவைகள் தான் கருப்புக் கோள்கள்.


கருப்பு குடை குளிர்ச்சியா?


வெயில் காலங்களில் கருப் புக்குடையை வெப்ப தாக்கத்தி லிருந்து தப்பிக்க கையில் பிடித்துச் செல்கின்றனர். ஆனால் வெப்பம் அதிகமாகவே தெரியும். இதற்குக் காரணம், கருப்பு நிறம் அனைத்து ஒளியையும் ஈர்த்துக் கொண்டு எந்த ஒளியையும் எதிரொளிக்காததேயாகும். அனைத்து ஒளியையும் ஈர்த்துக் கொள்வதால் குடையின் கீழ் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் குடைபிடித்து செல்பவருக்கு வெப்பம் அதிகமாக தெரிகிறது.


அதே நேரத்தில் வெள்ளை நிற குடை பிடித்துச் சென்றால் வெப்பக் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம் காரணம் வெள்ளை நிற குடை, அதன் மீது படும் ஒளி எதனையும் ஈர்க்காமல், அப்படியே எதிரொளித்து விடுவதே ஆகும். இதனால் குடை பிடிப்பவருக்கு வெப்பம் தெரிவ தில்லை. சிவப்பு குடை பிடித்தால், சிவப்பு நிறத்தை மட்டும் எதிரொலித்து விடுவதால் சிறிதளவு வெப்பம் தெரியும். இதே போல்தான் மற்ற நிறங்களுக்கு மாகும்.


பெட்ரோல் (டேங்க்) தொட்டி, பெட்ரோல் வண்டிகளுக்கு வெள்ளை நிறமோ, அலுமினிய நிறமோ அடிப்பதற்கு காரணமும் இதுவே! வெள்ளை நிறத்தை அடிப்பதால் ஒளி அனைத்தும் எதிரொளிக்கப்படுகிறது. வெப்பமாக இருக்கும் ஒளி எதிரொளிக் கப்பட்டுவிடுவதால் தொட்டி சூடேறுவதில்லை, இதனால் பெட்ரோல் தீப்பற்றாது. அதே அந்த தொட்டி கருப்பு நிறமாக இருந்தால் ஒளி அனைத்தும் ஈர்க்கப்பட்டு தொட்டி சூடேறி பெட்ரோல் தீப்பற்றி எரிந்து விடும்.

சூரிய அடுப்பு இயங்கும் விதம்

சோலார் குக்கர் எனப்படும் சூரிய அடுப்பும் இதே தத்துவத்தில் தான் இயங்குகிறது. சூரிய அடுப்புக்குள் அனைத்துப் பகுதிகளிலும் கருப்பு நிறம் பூசப்பட்டிருக்கும். உணவுப் பொருள் வைக்கும் குப்பிக்கும் சேர்த்து. இதனால் சூரிய அடுப்பில் உள்ள கருப்பு நிறத்தின் மீது சூரிய ஒளி படும் போது; சூரிய ஒளி ஈர்க்கப்பட்டு குப்பிகள் சூடேறி அதிலுள்ள உணவுப் பொருள்கள் வேக வைக்கப்படுகிறது.


கருப்பை தாங்கும் பெரியார் படை

கருப்பு சட்டை காரர்களுக்கு வெயில் என்றால் ஒரே எரிச்சல்தான். கருப்புச்சட்டை வெப்பத்தை உடைய ஒளியை ஈர்த்து உடலை சூடாக்கும். ஆனால் இந்த வெப்பத்தை தாங்கிக் கொண்டு கருப்பு

சட்டை போடுவது மாத்திரமல்லாமல், கொளுத்தும் வெயிலில் கருப்புச் சட்டையுடன் எவ்வளவு உடல் வருத்தம் வந்தாலும் அதையும் தாங்கிக்கொண்டு. சமுதாய இழிவை நீக்க, பல கிலோமீட்டர் தூரம் ஊர்வலமும் செல்லுகிறார்கள் என்றால் பெரியார் பெரும்படையை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை! 


- செ.ர.பார்த்தசாரதி


சென்னை -34


குறிப்பு: இது தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன.


-  விடுதலை ஞாயிறு மலர்,10.11.91